|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 December, 2011

வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய...


உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம்.

எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது.

மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதெல்லாம் அங்க சாதாரணம்மப்பா ...






புணிதமாக பார்க்கப்படும் சாண்டகிலஸ் துணியை போட்டுகிட்டு எப்படியெல்லாம் ?

சாம்பலே இது மெய்யடா!

இறந்தவர் உடலை அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது என்பது எல்லா நாட்டிலும் உள்ள சடங்கு. ஆனால் தென்கொரியாவில் சற்று வேறுபட்ட முறையில் இறந்தவர் உடலுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர். இறந்தவர் உடலை அடக்கம் செய்து அதற்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது அங்குள்ள மரபு. ஆனால் இப்போது உடல் தகனம் செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கின்றனர். இதனால் சாம்பல் துகள்கள் மற்றும் எலும்புகள் உருகி, இறுகி சிறு சிறு உருண்டைகளாக, படிக மணி போல வெளிர்நீல நிறத்தில் உருமாறுகிறது. அதனைப் புத்தர் சிலையுடன் கூடிய கண்ணாடி குடுவையில் வைத்து மூடிவிடுகின்றனர். இதனைச் செய்வதற்கென்று தனி நிறுவனம் செயல்படுகிறது. உடல் சாம்பலில் இருந்து சுமார் 200-க்கும் அதிகமான உருண்டைகள் உருவாகின்றன. இதனால் முன்னோர்கள் இறந்த பின்னரும் தங்களுடன் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கின்றனர். இறந்து 20, 30 ஆண்டுகள் ஆனபிறகும் தோண்டி எடுத்து இதுபோன்ற மணிகளாக உருவாக்கி, வீட்டின் பூஜையறையில் வைத்துக்கொள்கின்றனர். தென்கொரிய நாட்டில் கல்லறைகளுக்கு 60 ஆண்டுகள் மட்டுமே அனுமதி. 60 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். இதனால் அந்நாட்டு அரசும் இந்தப் புதிய திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. ஆனால் இது போன்ற மணிகளை உருவாக்க சுமார் ரூ. 50 ஆயிரம் செலவாகிறது.

இதே நாள்...


  • இந்திய கடற்படை தினம்
  •  தாய்லாந்து தேசிய சுற்றுசூழல் தினம்
  •  உலகின் முதலாவது ஞாயிறு இதழான தி அப்சர்வர்-ன் முதலாவது இதழ் வெளிவந்தது(1791)
  •  இந்தியாவில் சதி முறையை ஒழிக்க கவர்னர் வில்லியம் பெண்டிங் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1829)
  •  பிரெஞ்ச் அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது(1958)

உளவுத்துறை முத்திரையுடன் நடிகை நிர்வாண போஸ்.


பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்,  இந்திய டி.வி.யின் பிக்பாஸ் டி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனார். இந்த நிலையில் அவர் இந்தியாவில் இருந்து வெளிவரும் எப்.எச்.எம். என்ற ஒரு பத்திரிகையின் டிசம்பர் மாத இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். அதில் தனது வலது கையின் தோள்பட்டை அருகே பாகிஸ்தானின் உளவுத்துறை முத்திரையான ஐ.எஸ்.ஐ. என்று பச்சைகுத்தியுள்ளார். இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது.  

அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்.   

மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது. வீணாமா லிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.   நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது, வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

மு.க.ஸ்டாலின் மீது நில அபகரிப்பு வழக்கு ஆந்திராவில் விசாரணை!

சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரிகுமார், தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து சேஷாத்திரி குமார் அளித்த புகாரில், எனது வீட்டுக்கு பத்திர பதிவு அதிகாரியை அழைத்து வந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவரது பெயருக்கு எனது வீட்டை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டனர். தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஒப்பந்தம் போடப்பட்ட அந்த வீட்டில் ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார். எனது வீட்டை மிரட்டி வாங்கி அதற்காக ரூ. 5 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்தனர்.

 பின்னர் ஸ்டாலினுக்கு நெருக்கமான சீனிவாசன் என்பவர் ரூ. 1 கோடியே 15 லட்சம் பணத்தை தந்து இது கருப்பு பணம். வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினார். இதனை மீறி செயல்பட்டால் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் மூலம் வருமான வரித்துறை சோதனை நடத்துவோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஜேசுராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   சேஷாத்திரி குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டி வரும் போலீசார் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டியின் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேஷாத்திரிகுமார் புகாரில் கூறியுள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். 

தொழில் அதிபரான இவர் பஞ்சாரா என்ற இடத்தில் வசித்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. வீடு அபகரிப்பு தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தினால்தான் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது தெரியவரும். எனவே அவரிடம் விசாரித்த பின்னர் புகாரில் கூறப்பட்டுள்ள மற்றவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 25 பெண்கள் சிறையிலடைப்பு!

நெல்லையில் முக்கிய ரோடுகள், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், கோயில்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில் சரணாலய இயக்குநர், மாநகர குழந்தைகள் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் உட்பட குழுவினர் நேற்று முன்தினம் பொது இடங்களில் பிச்சை எடுத்து திரிந்தவர்களை பிடித்தனர். இவர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து நெல்லை ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் 10 குழந்தைகள், 11 பெண்கள் மீதும், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் 16 குழந்தைகள், 14 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட 25 பெண்களையும் கைக்குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கொக்கிரகுளம் கிளை சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய இடவசதி இல்லாததால் போலீசார் 25 பெண்களையும் திருச்சி சிறைக்கு வாகனத்தில் அழைத்து சென்று அடைத்தனர். இதுதவிர தனித்தனியாக பிச்சை எடுத்ததாக பிடிபட்ட 9 சிறுவர், சிறுமிகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இப்போது வராத ஒற்றுமை, இனி எப்போது தான் வருமோ ?


முல்லை பெரியாறு அணை விஷயத்தில், கேரள காங்கிரஸ் அரசின் முதல்வர் உம்மன் சாண்டியும், முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தனும், ஒரே குரலில் தமிழகத்திற்கு எதிரான பிரசாரங்களை துவக்கியுள்ளனர். தமிழகத்தில் நிலைமைக்கு மாறாக, வழக்கமான அரசியல் கொள்கைப்படி, தமிழக கட்சிகள் ஆளுக்கொரு அறிக்கை கொடுத்து, அரசியல் நடத்துகின்றன. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டு அனுமதி அளித்த, மத்திய அரசை எதிர்த்து, வணிகர் சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து, ஒரு நாள் கடையடைப்பை முழுமையாக நடத்தி விட்டன. வணிகர்கள் காட்டிய ஆர்வத்தை, ஈடுபாட்டை, ஒற்றுமையை, முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக கட்சிகளும், வணிகர் சங்கங்களும் காட்டவில்லை. தங்களது செல்வாக்கை எந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் உயர்த்திக் கொள்வது என்ற போட்டி தான் நிலவுகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் இதர கட்சிகள் எல்லாம், ஆளுக்கொரு திசையில் முல்லை பெரியாறு பிரச்னையில் செயல்படுகின்றன.

தி.மு.க., தனியாக, திருச்சி சிவா தலைமையிலான எம்.பி.,க்கள் குழுவினரை அனுப்பி, பிரதமரை சந்திக்க வைத்தது. அ.தி.மு.க., தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ளதால், பிரதமர், கேரள முதல்வர், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பி, எம்.பி.,க்கள் மூலம் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி வழக்கம் போல், இந்த பிரச்னையிலும், "கேரளாவிற்கு மவுனம் சம்மதம்' என்ற நிலைப்பாட்டில் வாய் மூடியுள்ளது. பா.ஜ., மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. இந்த விவகாரத்தில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பங்குக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள, தே.மு.தி.க., பெரும்பாலும் அறிக்கை கழகமாகவே செயல்படுகிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் அவ்வப் போது, ஆர்ப்பாட்டங்களை நடத்தும் வைகோ, தற்போதும் தனியாக மறியல் போராட்டம் அறிவித்துள்ளார். வரும் 7ம் தேதி, மதுரையிலிருந்து பிரசார பயணமும், 8ம் தேதி கம்பத்தில் உண்ணாவிரதமும், 21ம் தேதி திருச்சியில், கேரளா செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டத்தையும் அவர் அறிவித்து, கட்சியை வளர்க்க முயற்சிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், லிங்கம் எம்.பி., பார்லிமென்ட் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்களுடன் சேர்ந்து பிரதமரை சந்தித்து, இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசுங்கள் என்று, இரண்டு மாநிலங்களுக்கும் "ஆமாம்' போட்ட மகிழ்ச்சியில் திரும்பி விட்டனர். பா.ம.க.,வோ, உட்கட்சி பூசலை எப்படி தீர்ப்பது என்பதில், இன்னும் முடிவு எட்டாத நிலையில், முல்லை பெரியாறு விவகாரத்தில் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது. பெரிய கட்சிகளோ, தாங்கள் திரும்பிய திசைக்கு அறிக்கை, ஆர்ப்பாட்டம் என பிரிந்து கிடக்கின்றன. இப்போது வராத ஒற்றுமை, இனி எப்போது தான் வருமோ என்பதே, மில்லியன் டாலர் கேள்வி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...