- வங்கதேச விடுதலை தினம்(1971)
- ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்(1953)
- முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது(2006)
- மியான்மரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் ராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது(2006)
- இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கையெழுத்தானது(1979)
- 1199 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான்.
- 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
- 1552 - குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.
- 1812 - வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 March, 2011
இதே நாள் 26 மார்ச் 2011
துங்கிய விமான கட்டுப்பாட்டு அதிகாரி
அமெரிக்கா வாசிங்க்டன் D.C இல் பணி புரியும் விமான கட்டுப்பட்டு அதிகாரி பணியில் தூங்கியதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இலவசத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
வாக்காளர்களக்கு லஞ்சம் தருவதுபோல் அமைந்துள்ள கட்சியின் இலவச அறிவிப்பு என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
மனு மீது விசாரணை முடியும் வரை தேர்தல் முடிவை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இலவச அறிவிப்புகள் கண்டனத்திற்குரியது: எஸ்.ஒய்.குரேஷி
மாவு அரைக்கும் இயந்திரம், லேப் டாப், திருமணத்திற்குத் தாலி என்று தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளும் வாக்காளர்களுக்கு தருவதாக உறுதியளித்துள்ள இலவசங்கள் கவலையளிக்கக்கூடிய தேர்தல் போக்குகள் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார்.
டெல்லியில், ‘தேர்தல் முறைகளை காப்பது - இந்தியாவின் முன்னெடுப்பு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இலவச உறுதிமொழி அறிவிப்புகள் வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக ஈர்க்கவே செய்யப்படுகின்றன என்றாலும், அதனை தடுக்க தேர்தல் ஆணையத்தால் முடியாது என்று கூறியுள்ளார்.
மிக்சி முதல் லேப் டாப் வரை வழங்குவதாக வாக்காளர்களை கவரும் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும், இதனை பொதுமக்களும் உணர்ந்துள்ளார்கள். வாக்காளர்களை கவரும் இப்படிப்பட்ட அறிவிப்புகள் கண்டனத்திற்குரியவை” என்று கூறியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இந்த உறுதிமொழிகள் அளிக்கப்படுவதால் அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆனால், தேர்தல் செலவில் ஏதேனும் குற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டில் வேட்பாளர் ஒருவர் பிரியாணி செய்து போட ஒரு வண்டி நிறைய கோழிகளை ஏற்றிச் சென்றார். அதனை தேர்தல் பார்வையாளர்கள் தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர். வாக்காளர்களைக் கவர இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மின்சாரத்தை சிக்கனப்படுத்திய தமிழக டாக்டருக்கு துபாயில் விருது: தமிழர்கள் பாராட்டு
துபாய் அரசின் மின்சாரத் துறை சார்பில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டிற்கான விருதுக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் இருந்து சிறப்பான முறையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்திய தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது பர்வீன் பானு – பொறியாளர் ஜாபர் அலி குடும்பத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மின்சாரத் துறை அதிகாரிகள் விருது வழங்கி கௌரவித்தனர்.
குளியல் அறையில் ஷவருக்கு பதிலாக வாலிகளை உபயோகப்படுத்துதல், கழிவு நீரை தோட்டத்திற்குப் பயன்படுத்துதல், தண்ணீர் வேகமாகப் பாய்வதைத் தடுக்க குழாயின் மீது மூடி உபயோகித்தல், ஏசியை 26 டிகிரியில் உபயோகப்படுத்தல், விளக்குகளை தேவையற்ற போது அணைத்து விடல், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் விளக்குகளைப் உபயோகித்தல் உள்ளிட்டவை தங்களுக்கு இவ்விருது கிடைக்க காரணமாக இருந்தது என டாக்டர் முஹம்மது பர்வீன் பானு தெரிவித்துள்ளார்.
விருது பெற்ற டாக்டர் பர்வீன் பானு குடும்பத்தினரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டினர்.

ஐ.சி.ஆர்.சி வெளியேறுகிறது'
இலங்கையின் வடக்கே வவுனியாவில் செயற்பட்டு வந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பில் இருந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக வவுனியா அலுவலகம் மூடப்படுகின்றது. எனினும் அதன் மனிதாபிமான பணிகள் தடைப்பட மாட்டாது''
அத்துடன் யுத்த மோதல்களில் இறந்தவர்களின் உடல்களையும், யுத்தக் கைதிகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கும். கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு உதவி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக வவுனியா அலுவலகம் மூடப்படுகின்றது. எனினும் அதன் மனிதாபிமான பணிகள் தடைப்பட மாட்டாது''
யுத்த மோதல்களில் சிக்கியிருந்த பொதுமக்களின் அவசர வைத்திய தேவைகள், அவர்களுக்கான உணவு விநியோகம் என்பவற்றை மேற்கொள்வதில் வழித்துணையையும், போர்ப் பிரதேசத்தில் இருந்த மக்களுக்கான வைத்திய சேவைகளையும் அது வழங்கி வந்தது.
அத்துடன் யுத்த மோதல்களில் இறந்தவர்களின் உடல்களையும், யுத்தக் கைதிகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கும். கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு உதவி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. அமோக வெற்றி பெரும் - கருத்துக்கணிப்பில்!
இந்த வாரம் விகடன் இதழில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிடப்பட்டுள்ளது. வைகோ அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய பரபரப்பான சூழ்நிலை ஒரு பக்கம், கிரைண்டர் அல்லது மிக்ஸி என தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் ஒரு பக்கம் தேர்தல் சூடு பரவிய சூழலில் 19.20 தேதிகளில் விகடன் குழுவினர் சுமார் 1000 பேர்களிடம் மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம் என தமிழகம் முழுவதும் புகுந்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து சர்வே கேள்வித்தாளை வைத்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக விகடன் எழுதியுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் பணம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று 54 சதவிகித்தினர் கூறியுள்ளனர். பணம் வாங்கினாலும் விரும்பிய கட்சிக்கு ஓட்டு போடுவேன் என்று 36. சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
தேர்தல் கமிஷன் விதிமுறைகள் கட்டுபாட்டுடன் மிக நல்ல விஷயம் என்று 50.8 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். (நடவடிக்கைகளை கருணாநிதி எதிர்ப்பது ஊரறிந்த விஷயம்)
ம.தி.மு.க. வுக்கு வாக்குகள் இல்லை என்பதை 35 சதவிகிதத்தினர் ஒத்துக்கொண்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து ஓட்டு போடுவேன் 46 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் இலவச திட்டங்கள் சாதனையல்ல மக்கள் வரிபணத்தைதானே கொடுத்துள்ளனர் என்று 47 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். ஏமாற்றுவேலை என்று 25 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். காங்கிரஸை தி.மு.க. மிரட்டி தொகுதிகளை வாங்கியது என்று 50 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருப்பது கூட்டணிக்கு பலம் என்று 70.7 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். தி.மு.க. கூட்டணியை விட அ.தி.மு.க. கூட்டணி பலமானது என்று 53.68 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். கருணாநிதியை விட ஜெயலலிதா நல்லாட்சி தருவார் என்ற பெரும்பான்மையினோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 44.26 சதவிகிதத்தினரும் தி.மு.க. கூட்டணிக்கு 34 சதவிகிதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யார் நல்லாட்சி தருவார்கள் என்பதில் ஜெயலலிதாவிற்கும், யாருக்கும் வாக்களிப்பீர்கள் சென்ற கேள்விக்கும் தி.மு.க. கூட்டணியை விட அ.தி.மு.க. கூட்டணியே அதிக சதவிகிதம் வாங்கி இருப்பது ஏதோ ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடிகிறது என்று விகடன் முடிவாக எழுதியுள்ளது.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு மக்கள் ஆதரவு இன்னும் பெருகிய நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என்பது திண்ணம்.
தலை தப்பினால் போதும் என்று கருணாநிதியே தலைநகரைவிட்டு திருவாரூக்கு ஓடுகிறார் என்று கமெண்ட் வந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த பிறகு ஜெயலலிதாவிற்கு வரும் கூட்டம், கூட்டணி கட்சிகள் பிரச்சாரம், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மார்ச்.31 அன்று சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தாக்கல் செய்யப்போகும் மனு, டி.ஜி.பி. மாற்றம் என பல்வேறு நிகழ்வுகளும் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் காரணமாக பெரும்பாலனா தொகுதிகளில் போட்டியிடுவதும் காங்கிரசுக்கு எதிர்ப்பலை கட்சிக்குள்ளேயே பெருகி வருவதும், மேலும் மக்கள் மனதை மாற்றப்போகிறது. அதற்கு விகடன் முன்னுரை எழுதியுள்ளது.
பத்ம பூஷ விருதுகள்.
டெல்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டில் பத்ம பூஷ விருதுகளை வணங்கினார். பத்ம பூசன் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது
நேற்று ஜனாதிபதி மாளீகையில் வழங்கப்பட்டது
Satyadev Dubey | Art-Theatre | Maharashtra | India |
Mohammed Zahur Khayyam Hashmi | Art-Cinema-Music | Maharashtra | India |
Shashi Kapoor | Art-Cinema | Maharashtra | India |
Krishen Khanna | Art-Painting | Haryana | India |
Madavur Vasudevan Nair | Art-Dance-Kathakali | Kerala | India |
Waheeda Rehman | Art-Cinema | Maharashtra | India |
Rudrapatna Krishna Shastry Srikantan | Art-Music-Vocal | Karnataka | India |
Arpita Singh | Art-Painting | Delhi | India |
Sripathi Panditharadhyula Balasubrahmanyam | Art-Playback Singing, Music Direction & acting | Tamil Nadu | India |
C. V. Chandrasekhar | Art-Classical Dance-Bharatanatyam | Tamil Nadu | India |
Dwijen Mukherjee | Art | West Bengal | India |
Rajashree Birla | Social work | Maharashtra | India |
Shobhana Ranade | Social work | Maharashtra | India |
Suryanarayanan Ramachandran | Science and Engineering | Tamil Nadu | India |
S. (Kris) Gopalakrishnan | Trade and Industry | Karnataka | India |
Yogesh Chander Deveshwar | Trade and Industry | West Bengal | India |
Chanda Kochhar | Trade and Industry | Maharashtra | India |
K. Anji Reddy | Trade and Industry-Pharmacy | Andhra Pradesh | India |
Analjit Singh | Trade and Industry | Delhi | India |
Rajendra Singh Pawar | Trade and Industry | Haryana | India |
Gunapati Venkata Krishna Reddy | Trade and Industry | Andhra Pradesh | India |
Ajai Chowdhary | Trade and Industry | Delhi | India |
Surendra Singh | Civil Services | Delhi | India |
M. N .Buch | Civil Services | Madhya Pradesh | India |
Shyam Saran | Civil Services | Delhi | India |
Thayil Jacob Sony George | Literature and Education | Karnataka | India |
Ramdas Madhava Pai | Literature and Education | Karnataka | India |
Sankha Ghosh | Literature and Education | West Bengal | India |
K. Raghavan Thirumulpad† | Medicine-Ayurveda | Kerala | India |
Keki Byramjee Grant† | Medicine-Cardiology | Maharashtra | India |
Dashrath Patel† | Art | Gujarat | India |
தேர்தல் கமிஷன் திகைப்பு தமிழகத்தில் இதுவரை பதிவான வழக்குகள் 48 ஆயிரம்!
தமிழகம் முழுவதும் இதுவரை, 48 ஆயிரத்து 350 வழக்குகள், அரசியல் கட்சிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. பூத் ஸ்லிப் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்தே ஓட்டுப் போட முடியும்,'' என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். விறுவிறுப்பாக வேட்பு மனு தாக்கல் நடக்கும்போது, அதை மிஞ்சும் வகையில் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திகைத்துள்ளனர்.
ஓட்டுப் போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய, விழிப்புணர்வு போஸ்டர்களை, தலைமைத் தேர்தல் அதிகாரிபிரவீன்குமார் வெளியிட்டார். அதேபோல, ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்பது பற்றி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் நடிகர்கள், நடிகைகள் பேசிய, "சிடி'யும் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச் சியில்,இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திரன், அமுதா, பூஜா குல் கர்னி கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மொத்தம், 62 ஆயிரம் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இவை, மாவட்டத்துக்கு 2,000 வீதம் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர, போஸ்டர்களை அச்சடித்துக் கொள்ள, மாவட்டத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். "சிடி'களை இலவசமாக ஒளிபரப்புவதாக, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், பல்வேறு பகுதிகளிலும் ஒளிபரப்பப்படும். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், வீடு வீடாக பூத் ஸ்லிப்கள் வழங்கப்படும். பூத் அளவிலான அலுவலர்கள், இவற்றை வழங்குவர். இதில் பிரச்னை இருந்தால், பூத்அளவிலான அதிகாரியை அணுகலாம். மொத்தம், 51 ஆயிரம் பூத் அளவிலான அலுவலர்கள் உள்ளதால், பத்து நாட்களில் இவை வினி யோகிக்கப்பட்டு விடும். பூத் ஸ்லிப் அல்லது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சான்றாக காண்பித்து தான் ஓட்டுப் போட முடியும். தமிழகத்தில் 1 சதவீத வாக்காளர்களது புகைப்படங்கள் மட்டுமே, பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, பட்டியலில் புகைப்படம் இல்லாதவர்கள் மட்டும், இதர 13 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து ஓட்டுப் போடலாம். தமிழகத்தில் இதுபோல, 60 ஆயிரம் வாக்காளர்கள் தான் உள்ளனர்.
பணம் பறிமுதல் செய்வது தொடர்பாக, ஒரே சீரான நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் இருந்தால், விட்டுவிடுவர். சிறு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம், கணக்கு காட்டியதும், இரண்டு நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் இதுவரை, 20 கோடி ரூபாய் பணம், 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு எதிராக மொத்தம், 48ஆயிரத்து 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடுவது, சட்ட விரோதமானது அல்ல. அது ஒரு உறுதிமொழி தான். எனவே, நன்னடத்தை விதிகளின் கீழ் அது வராது. பணம் பறிமுதல் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக, வரும் திங்கள்கிழமை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை வரும் போது, தனது கருத்தை தேர்தல் கமிஷன் தெரிவிக்கும். பிரசாரங்களில் ஈடுபடும் நடிகர், நடிகைகளது படங்களை, தூர்தர்ஷனில் மட்டும் ஒளிபரப்பக் கூடாது. திருப்பூர் வடக்கு தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தாலும், வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த பின்பே, எந்த முறையில் தேர்தல் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

நம் சினிமா மழுங்கி போய் கிடக்கிறது தங்கர்பச்சான்.
யார் மீதுதான் உங்களுக்கு கோபம்? நல்ல சினிமாக்களும் வருகிறதே?
சிற்பம், இசை, சினிமா என எல்லாமே வாழ்வின் பாதிப்புதான். ஆனால் நம் சினிமாக்களில் எந்த மக்களின் வலி, வாழ்வு இருக்கிறது. ÷ஒரே கதைதான். அது என்னவாக இருந்தாலும் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் நம் சினிமாக்களின் பாடுபொருள். விதை நெல்லை விற்று வயிறு நிரப்பும் விவசாயி. கஞ்சி தொட்டி திறக்கப்படாதா? என காத்திருக்கும் நெசவாளி என யாருடைய பதிவு இங்கு இருக்கிறது? குப்பை சினிமாக்களுக்கே இங்கு முதலிடம். நல்ல சினிமாக்களுக்கு தியேட்டர் இல்லை. விவசாயி போல, நெசவாளி போல நல்ல படைப்பாளியும் திணறுகிறான். 52 ஆண்டுகளாக ஈழத்தில் ஒரு போராட்டம் நடக்கிறது. அது சார்ந்த ஒரு பதிவு நம்மிடம் இருக்கிறதா? ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் யூத இனத்தின் அழிவை "ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற பெயரில் படமாக எடுத்தார். அப்போதுதான் மீதம் இருந்த யூதர்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தார்கள். பின் பெரிய மாற்றமே அங்கு வந்தது. ஆனால் இங்கு போராட்ட குரல் மட்டும் ஒலித்து கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில் நம் உறவுகள் பஞ்சம் பிழைப்பது பற்றி யாருக்கு கவலை இருக்கிறது. ஆனால் காசு வைத்திருக்கும் உலகத் தமிழனை தேடி வாரத்துக்கு ஒரு சினிமா வெளியாகிறது. ஈழத்தமிழனின் வாழ்க்கையை ஒரு சினிமாவில் பதிவு செய்திருந்தால் நம் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. ஆனால் நாம் என்ன செய்தோம் வெறும் பொழுதுபோக்கு குப்பைகளை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறந்த நடிகர்களை வைத்து நாம் என்ன செய்வது? ""எம் இனத்தின் அழிப்பை பற்றி ஒரு சினிமா இருக்கா'' என கேட்க வரும் தலைமுறைக்கு என்ன பதில் இருக்கிறது?
மனதில் உள்ளதை பளிச்சென போட்டு உடைப்பதால் பல பேரோட பொல்லாப்புக்கும் ஆளாகின்றீர்களே?
நல்லவர், வல்லவர் என ஒருத்தரை ஒருத்தர் பாரட்டிக் கொள்கிற எத்தனையோ பேட்டிகளைப் படிக்கிறேன். வெளி நாகரிகத்துக்காக அவர்கள் அப்படி பேசினாலும், உண்மை என்னவென்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். பந்தி வைக்கிற இடத்தில் நான் எதையும் பதுக்கி வைக்க கூடாது என நினைக்கிறேன்.
தமிழ் சினிமாவின் சமீபத்திய நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பயமாக இருக்கிறது. ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கற்பனைகளை மட்டுமே மனசு முழுவதும் நிரப்பி, கோடம்பாக்கத்தில் அலைகிறவர்களை நினைத்து பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஜெயிக்கிற மாதிரியான நிலை இனி தமிழ் சினிமாவில் இல்லை. தமிழ் சினிமாவை நிறைய பேர் ஆக்கிரமித்து விட்டார்கள். கற்பனைகளுக்கு இனி இடம் இல்லை. காசு இருந்தால் பார்க்கலாம் என சொல்லும் நிலை வந்திருக்கிறது. அத்தனை படைப்பாளிகளும் அவசரமாக கூடி பேச வேண்டிய தருணம் இது.
பாகிஸ்தானுடனான அரையிறுதி ஒரு கனவு ஆட்டம்: யுவராஜ் சிங்
ஸ்திரேலியாவுடனான காலிறுதி ஆட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தானுடனான ஆட்டம் ஒரு கனவு ஆட்டம் என்று இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு பற்றி எங்களுக்குத் தெரியும். இந்திய அணியைப் பற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கும் தெரியும். மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியுள்ளோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஆட்டமிழந்தபோது பதற்றம் ஏற்பட்டது. ரெய்னா விளையாட வந்தபோது 20 முதல் 30 ரன்கள் வரை இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டும் என்று கூறினேன். அவர் சிறப்பாக விளையாடியது நம்பிக்கையை அதிகரித்தது. சிறப்பாக ஆடி வெற்றிபெற்றோம். கம்பீரும், நானும் விளையாடியபோது, சரியான புரிதல் இல்லாததால் கம்பீர் ரன்அவுட் ஆகிவிட்டார். அதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவர் ஆட்டமிழந்ததற்கு என்னுடைய தவறே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.
மியான்மரில் நிலநடுக்கம்: 75 பேர் வரை பலி
மியான்மரில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்துக்கு 75 பேர் பலியாகியுள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் மியான்மர் நாட்டின் மீட்பு பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ராணுவம், போலீஸார் மற்றும் உள்ளூர் அரசு நிர்வாக பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடலில் பணி செய்தால் வருமான வரி கிடையாது - நிபுணர் நரசய்யா
நாட்டின் பொருளாதாரம் ஐந்து சதவீதம் உயர வேண்டுமெனில், கடல்வழி பொருளாதாரம் 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும். உலக வரிசையில் இந்தியா, சீனா மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்தாலும், சீனாவில் ஆங்கில மொழியறிவு குறைவு. எனவே சீனர்களால் கடல்பணிகளில் சேர இயலவில்லை. கடல்பணிகளில் சேசருவதற்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். வெளிநாட்டு கப்பல்களில் மாலுமிகளாக, சேவையாளர்களாக இந்தியர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்.
மரைன் இன்ஜினியரிங் படிப்பதற்கு பிளஸ் 2 வில் குறைந்தபட்சம் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தனித்தனியாக 60 சதவீதமும், மொத்தமாக 60 சதவீத மதிப்பெண்ணும் பெறவேண்டும். நல்ல உடற்திறன், கண்பார்வை வேண்டும். நாட்டிகல் சயின்ஸ் படிப்பில் மூன்றாண்டுகள் கல்லூரியிலும், ஓராண்டு கப்பலிலும் செய்முறை பயிற்சி பெற வேண்டும். மதுரையில் ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கல்லூரியில் இப்படிப்பு உள்ளது.
இந்தியாவில் மும்பை, கோல்கட்டாவில் உள்ள நான்கு அரசு பயிற்சி மையங்களில் படிக்கலாம். பயிற்சிக்கு பின் இளநிலை பொறியாளராகலாம். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தால், ஓராண்டு மரைன் பயிற்சி பெற்று மரைன் இன்ஜினியர்களாகலாம். கடல் பணிக்கு சென்ற பின், விருப்பமில்லை என சொல்லக் கூடாது என்பதால் இப்படிப்பிற்கு உளவியல் ரீதியாக மனதை அறிந்து கொள்ளும் "சைசக்கோமெட்ரிக்" தேர்வு நடத்தப்படுகிறது.
மாலுமியாவதற்கு எல்லா நிலைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இந்திய மாலுமிகளையே விரும்புகின்றனர். கப்பலில் ஆறுமாதங்கள் மாலுமியாக பணியாற்றினால், ஆறுமாத விடுப்பு கிடைக்கும். தற்போது மனைவி, இரண்டு குழந்தைகள் கப்பலில் செல்லலாம் என்ற சலுகையும் உள்ளது. ஆனால் கப்பலில் பணி செய்வது சற்றே கடுமையான விஷயம். கடின உழைப்பிருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
கப்பல் போக்குவரத்து, ஆண்டுதோறும் ஏழு சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் போது சேவையாளர்களின் பணியிடங்களும் அதிகரிக்கும். எனவே பணிவாய்ப்பு அதிகமுள்ள துறையாக உள்ளது.
இந்தியாவில் கடல்துறை அலுவலர்கள் 8900 பேரும், வெளிநாடுகளில் 18 ஆயிரம் பேரும், இந்தியாவில் 21ஆயிரம் சேவையாளர்களும், வெளிநாடுகளில் 34 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். கடலில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கினாலும், வருமான வரி பிடித்தம் செய்வதில்லை. 2015ல் பணியிடத்தின் தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும். பெண்களுக்கு கல்வி கட்டணத்தில் 30 சத சலுகை வழங்கப்படுகிறது. கடல்துறையிலிருந்து வெளியே வந்த பின் பல்வேறு நிறுவனங்களில் தொடர்ந்து பணி வாய்ப்பு பெறலாம், என்றார்.
பாகிஸ்தானையும் இந்தியா வீழ்த்தும்; பாண்டிங்
உலக சாம்பியனான ஆஸ்திரேலிய கால் இறுதியில் வெளியேற்றப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி “லீக்” ஆட்டத்திலும், இந்தியாவுக்கு எதிரான கால் இறுதியிலும் தோற்றோம். கால் இறுதியில் ஏற்பட்ட இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம். 250 அல்லது 260 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் இந்திய வீரர்கள் சிறப்புடன் செயல்பட்டனர்.
இந்திய அணி ஒருங்கிணைந்து விளையாடியது. ஜாகீர்கானின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. குறிப்பாக பவர்பிளேயில் நன்றாக வீசினார். காம்பீர், தெண்டுல்கர், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தனர். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. வெற்றிக்கு தகுதியான அணி தான்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் பெற்று காணப்படுகிறது. அரை இறுதியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும். ஒருநாள் போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற மாட்டேன். ஆனால் எனது கடைசி உலக கோப்பை இது தான். உலக கோப்பையின் கடைசி ஆட்டத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி தான்.
ஜப்பானில் வெடித்த அணு உலையில் பணிபுரியும் 3 பேருக்கு கதிர்வீச்சு பாதிப்பு
பணியில் ஈடுபட்டு வரும் 3 பேருக்கு அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 2 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை டோக்கியோ மின் சக்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே, புகு ஷிமாவில் வெடித்து சிதறிய அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறாமல் தடுக்கும் முயற்சியை ஜப்பானின் அணு மற்றும் தொழிற் பாதுகாப்பு துறை மேற்கொண்டுள்ளது.
The containment vessel is designed to prevent radioactive material from escaping into the atmosphere, even if other parts of the reactor are damaged. A rupture in the containment vessel could pose problems for workers who are trying to prevent that, depending on its severity.
Subscribe to:
Posts (Atom)