- மால்ட்டா விடுதலை தினம்(1979)
- ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)
- முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
- ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
30 March, 2012
இதே நாள்...
இலங்கை புனரமைப்பு அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழு 15ம் தேதிக்கு மேல்!
இலங்கைக்கு விரைவில் அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழு செல்ல உள்ளது. அனேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், இந்தக் குழு இலங்கை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, புனரமைக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கனவே, 500 கோடி ரூபாய் வரை, இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியைக் கொண்டு, வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை பார்வையிடுவதற்காக தேசிய அளவிலான அனைத்துக் கட்சிக்குழுவை அனுப்ப, மத்திய அரசு தயாராகி வருகிறது. இக்குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கவுள்ளார். தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் குழுவில் இடம்பெறவுள்ளார். அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரையின் பெயர் தேர்வாகியுள்ளது. அவரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டாலும், அவர் இடம்பெறுவாரா அல்லது வேறுயாரும் இடம்பெறுவரா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவே முடிவு செய்வார் என தெரிகிறது. இக்குழு அமைக்கப்படும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அநேகமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு மேல், இக்குழு இலங்கைக்கு பயணமாகி, வீடுகட்டும் பணிகளை பார்வையிட்டு திரும்பும் என, தகவல்கள்
108 ஆம்புலன்ஸ் சேவையில், முறைகேடு கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்திற்கான, 108 ஆம்புலன்ஸ் சேவையில், முறைகேடு நடந்ததாகவும், அதனால், கார்த்தி சிதம்பரம் உட்பட ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அம்மாநில கவர்னர் சிவராஜ் பாட்டீலிடம் நேற்று, பா.ஜ., கட்சி புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. பா.ஜ., தேசிய செயலர் கிரித் சோமய்யா தலைமையில், எம்.பி.,க் கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, கடந்த சில ஆண்டுகளாக, "சிகிட்சா ஹெல்த் கேர்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. ஆறு ஆம்புலன்ஸ்களுடன் சில வருடங்களுக்கு முன், இந்நிறுவனம் மும்பையில் தொடங்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினராக மத்திய தொலைத் தொடர்பு இணை அமைச்சர் சச்சின் பைலட் உள்ளார். இந்த நிறுவனத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ராகுலின் முன்னாள் செயலர் ஷாபிமாதர், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவிகிருஷ்ணா மற்றும் மருமகள் உட்பட, காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து, இந்த நிறுவனம் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் சேவைக்காக, போலி ரசீதுகளை அரசிடம் சமர்ப்பித்து, அரசை ஏமாற்றி வருகிறது. ஒரே நாளில் ஒரு ஆம்புலன்ஸ், 243 நோயாளிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றதாக கணக்கு காட்டியுள்ளது.இந்தத் திட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. தற்போது, இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்களில், ஆம்புலன்ஸ் சேவைக்கு அனுமதி பெற்றுள்ளது. இதனால், இன்னும் பல கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இணையதளத்தை முடக்க சதி!
உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை சனிக்கிழமை முடக்க சமூக விரோதிகள் (சைபர் கிரிமினல்) சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் - சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார். சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டார். "ஆபரேஷன் அன்மாஸ்க்' என்ற பெயரில் அவர் ஆற்றிய உரை:இணையதளங்களில் "அனானிமஸ்' (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012. யார், எவர் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளன. இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ""ஆப்பரேஷன் பிளாக் அவுட்'' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் அவர்.
அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012. யார், எவர் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளன. இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ""ஆப்பரேஷன் பிளாக் அவுட்'' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் அவர்.
செல்போன்களிலிருந்து தங்கம்?
சீனாவில் தூக்கியெறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல்போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது சீனா. இது குறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன. இதன்மூலம், சீனாவில் மட்டும் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ சில்வர் பிரித் தெடுக்கப் பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்வெர்ட்டர் கவனிக்க வேண்டிய விசயம்...
மின்சார
தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை
விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக்
கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான
கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது.
இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
என்னென்ன?
''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று,
சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு
வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு.
200வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு
விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது
நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான்.
இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட
இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும்
அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய
இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி.
அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம். பொதுவாக
இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன்
இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று
விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து
அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே
கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர்
வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான
பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட
வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம். நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம். இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை
வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத்
தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக்
பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி
பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில்
இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில்
கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.
பராமரிப்பது எப்படி?
இப்போது
மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து
கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு
ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை
நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும்
பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட்
வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை
செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும்
ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி
பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற
பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார். இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!
Subscribe to:
Posts (Atom)