2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்தி அளிப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பெருமிதம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஊழல் கண்காணிப்பு ஆணையாளர் பிரதீப் குமார், உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும். தீர்ப்பை மதிக்கிறோம். இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை கண்காணிப்பகத்திடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.2ஜி ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பகத்திடம் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. மேலும் ஊழல் கண்காணிப்பகம் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கில் உதவி புரியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதை ஊழல் கண்காணிப்பகம் முதலில் கண்டறிந்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment