ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
23 September, 2011
இதே நாள்...
உங்கள் கனவில் பாம்பு தோன்றினால் நன்மையா? தீமையா?
ஒரு சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டேயிருக்கும். காரணம் அவர்களுக்கு ராகுதிசை, கேதுதிசை அல்லது ராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக இருக்கலாம். கனவில் பாம்பு வந்தால் அவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை தான். ராகு-கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாகச் செய்வது நல்லது. கனவில் பாம்பு கடித்து விட்டுச் சென்றால் தோஷம் விலகியதாக அர்த்தம். கனவில் ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பின்னப் பிணைந்த காட்சியைக் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.
பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர்!
பிளஸ் 2 தனித் தேர்வில், "பிட்' அடித்து, பறக்கும் படையினரிடம்
சிக்கிக்கொண்ட இரண்டு தலைமை ஆசிரியர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,
தேர்வு மையத்தில் பரபரப்பு நிலவியது.பத்தாம் வகுப்பு படித்து, அதன்பின் ஆசிரியர் பயிற்சி முடித்து,
ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம்
பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று வந்தனர். பிளஸ் 2
படிக்காமல், திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர் களை அரசு பணியில்
சேர்க்கவும், ஏற்கனவே அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு
வழங்கவும் தடை விதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு
உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், "அரசு உத்தரவு சரியே' என, கோர்ட் தீர்ப்பு கூறியது. இதன் காரணமாக,
திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு
பெற்றவர்கள், பதவி உயர்வை தக்க வைத்துக் கொள்ள பிளஸ் 2 தேர்வு எழுதி
வருகின்றனர்.
நேற்று முன்தினம் துவங்கிய பிளஸ் 2 தனித் தேர்வில், கடலூர்
மாவட்டம், விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி
மையத்தில், இதுபோன்ற ஆசிரியர்கள் தேர்வெழுதினர். பறக்கும் படையினர் திடீரென
ஆய்வு செய்தபோது, புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதிய வேப்பூர் அரசு
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், மங்களூர் அடுத்த வடபாதி
கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர்
பிடிபட்டனர். இவர்களுடன், "பிட்' அடித்த ஐந்து மாணவர்களும் பிடிபட்டனர்.
பிடிபட்ட தலைமை ஆசிரியர்கள், "நாங்கள் தலைமை ஆசிரியர்கள். எங்களையே, "பிட்'
அடித்ததாக பிடிக்கிறீர்களா?' என, வாக்குவாதம் செய்தனர். மாணவர்களுக்கு
வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே, இப்படி வழி தவறிய அவலம், கல்வித்துறைக்கு
களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் சிக்கிக் கொண்ட விவகாரம் கடித நகல்கள்!
மத்திய நிதி
அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடித
நகல். தகவல் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட இந்தக் கடித நகல்கள்தான்
பிரச்னையை பெரிதாக்கியுள்ளன.
வைத்தியம் பார்க்கப்போய் நோயுடன் திரும்பும் இந்தியர்கள்!
இந்திய மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பொது
வார்டுகளில் நோய் தொற்று அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
குளோபல்
ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பார்ட்னர்ஷிப் (ஜிஏஆர்பி) மற்றும் சென்டர் பார்
டிசீஸ் டைனிமி்க்ஸ், எகனாமிக்ஸ் அன்ட் பாலிசி(சிடிடிஇபி) சேர்ந்து ஒரு
ஆய்வை மேற்கொண்டது. அதில் இந்திய மருத்துவமனைகளில் உள்ள ஐசியு அறைகளில்
வான்கோமைசின் ரெசிஸ்டன்ட் என்டரோகாக்கஸ் என்னும் நோய் தொற்று ஏற்பட அதிக
வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த நோய் தொற்று மிகக் கொடியது.
உலக
மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் இந்திய மருத்துவமனைகளில் நோய் தொற்று
ஏற்படும் வாய்ப்பு 5 சதவீதம் அதிகம். இந்த தொற்று ஒருவரிடம் இருந்து
இன்னொருவருக்கு பரவுகிறது. இது தான் மருத்துவமனைகளில் அதிகரி்த்து வரும்
பிரச்சனையாகும். இந்த நோய் தொற்று ஏற்பட்டால் மருத்துவமனையில்
நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும்; வைத்தியத்திற்கு அதிக செலவு ஆகும்; ஏன்
மரணமே நேரும். ஆனால் இந்த பிரச்சனை தவிர்க்கக்கூடியது தான் என்று கூறப்படுகிறது.
ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி!
காலையில் எழுந்தவுடன் காப்பி அருந்த வேண்டும் என்று பலருக்கும் தோன்றுவது
இயல்பு. அந்த காபியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் கலக்கப்படும் சிக்கரி
எனப்படும் வேர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது. சிக்கரி தாவரம் பஞ்சாப் மற்றும்
ஆந்திரபிரதேசத்தில் காட்டியல்பாக வளரும். பீகார், பஞ்சாப்,
இமாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா,
உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள், வேர்
போன்றவை மருத்துவப் பயன் உடையவை.
போதி தர்மன்'... சில குறிப்புகள்!
போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்! காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்! முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம். கிபி
5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின்
மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து,
பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.
புத்த மத குருவாக மாறியபிறகு,
சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப்
பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு
கூறுகிறது. ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக்
கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக்
கோயிலில் இன்றும் உள்ளது.
புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி
குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும்
உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில்
மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர். அதுமட்டுமல்ல, அவர் கால்
தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள
முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு
ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.
போதிதர்மன்
மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன்
நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில்
ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில்
கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன்,
என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து
எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்...
இப்படிப் போகிறது போதியின் கதை.
இந்தக் கதைதான் சூர்யா நடிக்கும்
ஏழாம் அறிவு படத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. போதியின் ஜீன்களைப்
பயன்படுத்தி, நவீன மருத்துவமுறையில் சாதனைகளைச் செய்வதாக இந்தக் கதை
அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் முக்கிய காட்சிகளை சீனா, தாய்லாந்து என போதி தர்மன் வாழ்ந்த இடங்களிலேயே எடுத்திருப்பதுதான் ஏழாம் அறிவின் சிறப்பு. தகவல்களைப்
படிக்கும்போதே படம் குறித்து ஏக எதிர்ப்பார்ப்பு உருவாகிறதல்லவா...
எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் முருகதாஸ் என நம்புவோம்!
ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் கர்ணல் ரமேஷின் மனைவி வழக்கு!
தனது கணவரைக் கொன்ற ராஜபக்சேவைக் கைதுசெய்து விசாரித்து தண்டனை வழங்கக்
கோரி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியான கர்ணல் ரமேஷின் மனைவி வழக்குத்
தொடர்ந்துள்ளார்.அவரது சார்பில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வழக்கைப்
பதிவு செய்தார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக
நியூயார்க் வந்து தங்கியுள்ள ராஜபக்சே, இந்த வழக்கைத் தொடர்ந்து அதிர்ச்சி
அடைந்துள்ளார். இலங்கைத் தரப்பும் இந்த திடீர் வழக்கால் பீதியடைந்துள்ளது.
ரமேஷின்
மனைவி அளித்துள்ள வழக்கில், இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சிப்
படத்தில், ரமேஷ், இலங்கைப் படையினரால், அடையாளம் தெரியாத இடம் ஒன்றில்
வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும்
ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை
ஆகியவை சாட்சியங்களாக் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின்
முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் அந்த நாட்டின் அதிபரான ராஜபக்சவே
ரமேஷின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு
பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய
நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு,
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம்
பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட
மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத
இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன கூடுதல் சாட்சியங்களாக
இணைக்கப்பட்டுள்ளன.
ஐஐடி கான்பூர் மாணவன் தற்கொலை 5 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை!
ஐஐடி கான்பூரில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த மாணவன் விடுதி அறையில்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐஐடி பிடிக்காததால் தான்
தற்கொலை செய்து கொள்வதாக எழதி வைத்துள்ளார். உத்தர பிரதேச
மாநிலத்தில் உள்ள கன்னௌஜைச் சேர்ந்தவர் மெஹ்தாப் அகமது(19). அவர் ஐஐடி
கான்பூரில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர்
க்ல்லூரிக்குச் செல்லவில்லை. உடனே அவரது நண்பர்கள் விடுதிக்கு வந்து
பார்த்தபோது அவர் தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது
குறி்தது விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். ஐஐடி பிடிக்கவில்லை என்றும்
அதனால் தான் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி
வைத்துள்ளார்.
எது அவரை இந்த முடிவு எடுக்கத் தூண்டியது என்று
தெரிவியவில்லை. ஒரு வேலை ராகிங் கொடுமையாக இருக்குமோ என்று கேட்டால் அப்படி
ஒன்றும் இல்லை என்று கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர்.இது
குறித்து விசாரிக்க கல்லூரி நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
அந்த குழு இந்த வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்கவிருக்கிறது. அகமதின்
தற்கொலை பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த
2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஐஐடி கான்பூரில் 2 மாணவிகள், 6
மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 5 பேர் விடுதி அறையில் தற்கொலை
செய்து கொண்டனர். ஒருவர் கல்லூரிக் கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து
இறந்தார். இன்னொருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்
கொண்டார். மற்றொருவர் விஷம் குடித்து இறந்தார்.
கர்நாடகத்தின் ரெய்ச்சூரில் ஊட்டச்சத்து குறைவால் ஓராண்டில் 1,000 குழந்தைகள் பலி!
கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்டத்தில் கடந்த ஒராண்டில் ஊட்டச் சத்துக்
குறைவால் தவித்த சுமார் 1,000 குழந்தைகள் பலியாகியதாக கணக்கெடுப்புகள்
தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில்
அதிகளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட
இந்த மாவட்டத்தில் கடந்தாண்டு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால்
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களை பசியும், பட்டினியும் வாட்டி
வதைத்தது. இதில் முக்கியமாக தேவதுர்கா, சிந்தனூர், மான்வி பகுதிகள்
கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் சத்தான உணவு இல்லாமல், கடந்த
ஒராண்டில் மட்டும் ரெய்ச்சூர் மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட
குழந்தைகள் பலியாகி உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிகிறது. மேலும் 4,000க்கும்
மேற்பட்ட குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிய
வந்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநிலத்தின் பெண்கள் மற்றும்
குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் கூறியதாவது, ரெய்ச்சூர்
மாவட்டத்தில் உறவு முறையில் திருமணம் செய்யும் முறை அதிகம். இதனால் ரத்த
தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தான் அதிகளவில் மெலிந்து
காணப்படுகின்றனர். இந்த குழந்தைகளுக்கு தகுந்த ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதுகுறித்து மாநில முதல்வர் சதானந்த
கவுடா கூறியதாவது, ரெய்ச்சூரில் குழந்தைகள் இறப்பது குறித்து விசாரிக்க
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் ரெய்ச்சூர் மாவட்டத்தில்
ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தவிக்கும் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு
தகுந்த சிகிச்சை மற்றும் சத்துணவு அளிக்க உத்தவிட்டுள்ளேன். மாவட்டத்தின்
கிராமப்புறங்களில் மக்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை உடனடியாக வழங்க
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், என்றார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன!
உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதன்முலம்
10 மாநகராட்சி மேயர்கள், 755 மாநகராட்சி கவுன்சிலர்கள், 125 நகராட்சி
தலைவர்கள், 3697 நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 529 பேரூராட்சி
தலைவர்கள், 8303 பேரூராட்சி கவுன்சிலர்கள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள்,
655 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 385 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட
6470 ஊராட்சி கவுன்சிலர்கள், 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள் அதற்குட்பட்ட
99,333 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
நேற்று முதல் வேட்பு மனு தாக்கல்
தொடங்கி விட்டது. இம்மாதம் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி
நாளாகும். 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்.
அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன.
சென்னை
மாநகராட்சியில் மேயர், துணை மேயர், ஆளுங்கட்சி தலைவர், எதிர்க்கட்சி
தலைவர் ஆகியோருக்கு அரசு கார்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள்
அமலுக்கு வந்துவிட்டதால், மேயர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா,
ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் அரசு
கார்களை மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைத்து விட்டனர்.
இதேபோல் 155
கவுன்சிலர்களுக்கு அவர்களது வார்டுகளில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த
அலுவலகங்களை அவர்கள் காலி செய்ய ஆரம்பித்துள்ளனர். அதே போல பிற
மாநகராட்சிகளின் மேயர்களும் கார்களை திருப்பித் தர ஆரம்பித்துள்ளனர்.கடும் கட்டுப்பாடுகள்-சுவர் விளம்பரம் எழுத தடை: இந் நிலையில் சட்டசபை தேர்தலைப் போலவே, உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்பாளர்கள்
சாதி-மத பிரச்சனை உருவாகும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது,
வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது, அரசு, தனியார்
நிலம், கட்டிடம், சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது, சுவரொட்டிகள்
ஒட்டக்கூடாது, பிரசாரம் செய்வதற்கு செல்லும் இடம் குறித்து
முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்யக்
கூடாது, பிரச்சாரத்துக்கு அனுமதி பெற்று செல்லும் இடங்களில் போக்குவரத்து
இடையூறு செய்யக்கூடாது,அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சார
கூட்டம் நடத்தவேண்டும். இதில் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க
வேண்டும், அரசு சார்ந்த இடங்களை கட்சி சார்ந்த பணிகளுக்கு
பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது முதல்,
அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ, அரசு உதவிகளையோ,
மானியங்களையோ வழங்ககூடாது, பிரச்சாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள் அரசு
வாகனங்களை பயன்படுத்தக்கூடாது,அரசு திட்டங்களை தொடங்குதல், சாலை,
குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்யக்கூடாது, ஓட்டுப்
போட பணம் கொடுப்பது, வாக்காளர்களை திரட்டுவது, ஆள் மாறாட்டம் செய்து
ஓட்டுப் போடுவது போன்றவை கடும் குற்றமாக கருதப்படும்.ஓட்டுக்கு
பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் வரை சிறை தண்டனை
கிடைக்கும். வாக்குச் சாவடியில் இருந்து 100 அடி தூரத்துக்குள்
நின்று ஆதரவு கேட்பதும், வாக்காளர்களை ஓட்டுப்போட வாகனங்களில் அழைத்து
செல்வதும் ஊழல் குற்றமாக கருதப்படும்.வேட்பாளர்கள் தேர்தல்
ஆணையத்திடம் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும், வாக்காளர்
பட்டியலில் பெயர் படம் இருந்தாலும், மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள
வாக்காளர் அடையாள அட்டை, அல்லது மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஒன்றும் இருந்தால் மட்டுமே ஓட்டு
போட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
துண்டு துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் செயற்கைக்கோள்!
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த
தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் இன்று துண்டு, துண்டாக
பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பஸ் அளவு
பெரியதாகும். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991-ம்
ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில்
செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி
வந்தது. கடந்த 2005-ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது.
அதன்பின்
பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ்.
செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது
பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் சிலர்
கூறியதாவது, யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது.
இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து
கொண்டே பூமியை அடையும். இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே
எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை
ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம்
என தெரிகிறது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும்
செயற்கைக்கோளின் பாகங்கள் இன்று மதியம் முதல் நாளை காலை வரை வந்து விழும்
வாய்ப்புள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில்
செயற்கைக்கோளின் பகுதிகள் வந்து விழலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்
நேற்றைய நிலவரப்படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் அதிகளவில் அண்டார்டிக்கா
மற்றும் அதையொட்டிய பகுதிகளில் விழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில்
பெரும்பாலானவை கடலில் தான் விழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஏற்கனவே
தெரிவித்தபடி செயற்கைகோளில் இருந்த எரி பொருள் தீர்ந்துவிட்டதால் அதை
தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதும் இயலாத காரியம்.
இதுவரை
செயற்கைக்கோள் தாக்கி யாரும் இறந்ததாக தகவல் இல்லை. ஆனால் கடந்த 1997ல்
ஒக்லாவைச் சேர்ந்த வில்லியமஸ் என்பவர் மட்டும் காயமடைந்துள்ளாக தெரிகிறது.
செயற்கைக்கோள் ஒன்றின் சிறிய துண்டு அவரது தோளில் விழுந்ததால்
காயமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பூமியை நோக்கி வரும்
செயற்கைக்கோளின் துண்டுகள், 3,200 பேரில் 1 நபர் மீது விழ வாய்ப்புள்ளது.
அப்படி விழும் துண்டுகள் மின்னலை விட வேகமாக மேலே வந்து விழும் என
தெரிகிறது. பூமியில் வந்து விழும் செயற்கைக்கோளின் துண்டுகளையும் யாரும்
தொட வேண்டாம்.
செயற்கைக்கோள்களின் துண்டுகள், ராக்கெட்கள், மற்ற
பொருட்கள் என இதுவரை 22,000க்கும் மேலான வஸ்துக்களை பூமி தன்னிடம்
ஈர்த்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் விழும் மிகப்பெரிய செயற்கைக்கோள்
இதுதான். தற்போது விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் பூமிக்கு
திரும்பினால் அவற்றை கட்டுப்படுத்த எரிப்பொருள் மீதம் வைக்கப்படுகிறது
என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பூமிக்குத் திரும்பும்
செயற்கைக்கோள்களின் அசைவுகளை பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கும் பழக்கம்
கொண்ட கனடா நாட்டை சேர்ந்த டிடு மொல்சன் என்பவர் கூறுகையில், கடந்த
2004ல் பூமிக்கு திரும்பிய ரஷ்ய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பெரியளவில்
பார்த்திருக்கிறேன். அது மிகப் பெரிய வால்நட்சத்திரம் போல இருந்தது
என்றார்.
ஹெச்1 பி விசா அரிதாகிவிட்டது: அமெரிக்காவிடம் இந்தியா புகார்!
ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்போருக்கு ஹெச் 1 பி விசா அதிக அளவில் மறுக்கப்படுவதாக அமெரி்ககாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது. ஐடி
நிறுவனங்களில் பணிபுரிவோர் குறிப்பிட்ட சில புராஜெக்டுகளை முடிப்பதற்காக
அமெரி்க்கா செல்வது வழக்கம். அவ்வாறு செல்பவர்கள் ஹெச்1 பி விசா கேட்டு
விண்ணப்பிப்பார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் பெருமளவில்
நிராகரிக்கப்படுவதாக இந்தியா அமெரிக்காவிடம் புகார் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில்
நடந்த சிஇஓ-க்கள் கலந்தாய்வில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த்
ஷர்மா ஹெச்1 பி விசா நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட
எண்ணிக்கையை விட குறைந்த அளவில் தான் ஹெச் 1 பி விசா கொடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விசா விண்ணப்பங்கள் அதிக அளவில்
நிராகரிக்கப்படுகின்றது என்றார்.
இந்த கலந்தாய்வுக்கு டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவும், ஹனிவெல் சிஇஓ டேவிட் எம். கோட்டும் தலைமை வகித்தனர்.
Subscribe to:
Posts (Atom)