ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
01 March, 2012
காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்- உயர்நீதிமன்றம்.
கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளை பிரிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கலப்புத் திருமண தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.கண்ணகி (வயது 20), பி.விஜய் ஆனந்த் (22) ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நான் (கண்ணகி) ஓசூரில் அதியமான் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். எனது கணவர் விஜய் ஆனந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர். நாங்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ஒருவரை ஒருவர் காதலித்து 6.3.11 அன்று திருமணம் செய்துகொண்டோம். ஓசூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் எங்கள் திருமணத்தை 24.3.11 அன்று பதிவு செய்தோம். எனவே நாங்கள் செய்த திருமணம் சட்டப்பூர்வமானது. இருந்தாலும், பிரிந்து வாழ்ந்து வந்தோம். விஜய் ஆனந்த் ஓசூரில் கேன் பின்ஸ் ஹோம் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எங்கள் திருமணத்தை எனது பெற்றோர் எதிர்த்தனர். ஆனால் கணவரின் வீட்டார் ஆதரித்தனர். கடந்த ஜனவரி மாதம் என்
வீட்டுக்கு எனது கணவர் தனது தந்தையுடன் வந்து, எனது தந்தை திம்மராயப்பாவிடம் திருமண வரவேற்பு பற்றி பேசினர். அவர்கள் முன்னிலையில் எங்கள் திருமணத்தை ஒப்புக்கொள்வதுபோல் எனது தந்தை பேசினார். ஆனால் அவர்கள் போனபிறகு என்னை திட்டி ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார். மறுநாளில் (16.1.12) அங்கிருந்து தப்பிச்சென்று எனது கணவரிடம் போய்விட்டேன். பின்னர் பாதுகாப்பு கேட்டு 2 பேரும் ஓசூர் நகர போலீஸ் நிலையத்துக்குச் சென்றோம். ஆனால் அவர்கள் பாதுகாப்பு அளிக்காமல், எனது தந்தையை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி என்னிடம் கட்டாயமாக கையெழுத்து வாங்கினர். எனது கணவரையும், அவரது தந்தையையும் சட்ட விரோதமாக ஒருநாள் காவலில் அடைத்தனர்.
பின்னர் என்னை வலுக்கட்டாயமாக கர்நாடகா மாநிலம் தர்மசாலாவுக்கு கொண்டு சென்று, மற்றொருவரை திருமணம் செய்ய வற்புறுத்தினர். ஆனால் அங்கிருந்தும் நான் ஜனவரி 19-ந் தேதி தப்பி எனது கணவரிடம் சேர்ந்தேன். அதன் பின்னர் பாதுகாப்புக்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம். என் மீது, எனது தந்தை மிகவும் கோபமாக இருக்கிறார். என்னை எரித்துக் கொன்றுவிடுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் என்னை கடத்திச் சென்றதாக என் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி, எனது தாயார் பிரபுல்லா வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில், எனது கணவர் மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்தான் அவரிடம் சென்று சேர்ந்தேன். அவர் என்னை கடத்தவில்லை. தற்போது போலீசாராலும் எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
இந்த வழக்கால் எனது கணவரின் வேலையும் போய்விடும் நிலை உள்ளது. நானும் எனது படிப்பை தொடர முடியவில்லை. எனது தந்தையின் பேச்சைக் கேட்டு எங்களை பிரிக்கவும், என்னை எனது தந்தையிடம் ஒப்படைக்கவும் ஓசூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரும் முயற்சி செய்கிறார். எனவே எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரையும் தலையிட அனுமதிக்கக் கூடாது. எனது கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். கலப்புத் திருமணத்தை ஆதரித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே கலப்புத் திருமணம் செய்துள்ள இந்த ஜோடியை பிரிக்கக்கூடாது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை காவல்துறைவழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முட்புதரில் தொப்புள் கொடியுடன்... பெண் குழந்தை... நாய்கள் கடித்துக் குதறி...!!!
முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்டாத பெண் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் அது பரிதாபமாக இறந்தது. கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் அப்பாஜி கார்டன் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் யாரோ பிறந்து சில மணி நேரமேயான தொப்புள் கொடி கூட அறுக்கபடாத பெண் குழந்தையை போட்டுச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த தெரு நாய்கள் குழந்தையை கடித்துக் குதறின. அப்போது ஏராளமான நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் முட்புதருக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் நாய்களை விரட்டியடித்துவிட்டு குற்றுயிரும், குலை உயிருமாய் கிடந்த குழந்தையை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.அந்த பகுதியைச் சேர்ந்த யாராவது தான் குழந்தையை முட்புதரில் வீசியிருக்க வேண்டும் என்றும், அது தவறான வழியில் பிறந்ததால் வீசப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் கர்ப்பிணிகளில் யாராவது குழந்தை பெற்றுள்ளார்களா என்று மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா வெல்ல இந்திய ரசிகர்கள் ஆர்வம்!
முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் போட்டி நாளை நடைபெறுகின்றது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. மாறாக இலங்கை வென்று விட்டால் மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். போட்டி டை ஆனாலும் நமக்குத்தான் சிக்கல். இதனால் இந்திய ரசிகர்கள் இடையே நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மெல்போர்ன் நகரில் நாளை நடைபெற உள்ள கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெறும் நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெறுவதை பார்க்க ஆர்வமாக உள்ளனர். முத்தரப்பு தொடரை சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் கை முதலில் இருந்தே ஓங்கிய நிலையில் உள்ளது. இதுவரை 7 லீக் போட்டிகளில் விளையாடி உள்ள ஆஸ்திரேலியா, 19 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிகள் 15 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணி இந்த நிலையில் நாளைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக பங்கேற்பது சந்தேகம் என்று அணித் தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர் போட்டியில் பங்கேற்காத பட்சத்தில் ஷான் வாட்சன் கேப்டனாக செயல்படுவார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜேம்ஸ் பேட்டின்சன் முழு உடல்தகுதியை எட்டி உள்ளார். இதனால் நாளைய போட்டியில் அவர் பங்கேற்கலாம் என்று எதிப்பார்க்கப்படுகின்றது. மேலும் ரெயன் ஹரீஸ் நீக்கப்பட்டு, இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பந்துவீச்சில் பிரட் லீ தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், பந்துவீ்ச்சு, பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதால் இலங்கைக்கு கடும் நெருக்கடியாக அமையலாம்.
இலங்கை அணி இலங்கை அணி நாளை கட்டாய வெற்றியை முன்வைத்து களமிறங்குகின்றது. பேட்ஸ்மேன்கள் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, தில்ஷன் ஆகியோர் சிறப்பான 'பார்மில்' இருப்பது இலங்கைக்கு கூடுதல் பலம். ஆல்- ரவுன்டர்களாக கடைசி ஓவர்களில் வந்து ரன்களை குவிக்கும் ஆஞ்சிலோ மேத்யூஸ், பெரேரா போன்றவர்கள் இலங்கையின் ஸ்கோரை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பந்துவீச்சில் ஜொலித்து வந்த மலீங்கா, இந்தியாவுடனான போட்டியில் அதிக ரன்கள் கொடுத்தது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நாளை போட்டியில் இலங்கை குறைந்த ரன் ரேட் உடன் தோல்வி அடைந்தால், இந்தியாவுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் இலங்கை அதிக கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.
இதே நாள்...
- தென்கொரியா விடுதலை தினம்
- திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த தினம்(1953)
- தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்(1910)
- ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(2002)
- ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது(1565)
பூமிக்கு அருகில் செவ்வாய்.
பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறினார். அவர் கூறியதாவது : சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு, பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது. இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே வேறுபடும். 26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது, இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், சிவப்பு நிறத்தில், செவ்வாய் கிரகம் தெரியும். இதை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம். நாளை முதல், 4ம் தேதி வரை, இரவு 7 மணி முதல், 9 மணி வரை, இந்த நிகழ்வை பொதுமக்கள் தொலை நோக்கியில் காண, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு முன், 2003 ஆக., 27ம் தேதி, செவ்வாய் கிரகம், பூமிக்கு, 5.5 கோடி கி.மீ., தொலைவிலும், 2010 ஜன., 29ம் தேதி, 9.95 கோடி கி.மீ., தொலைவிலும் வந்தது. இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார். ஆன்மீகத்தில் செவ்வாய்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை பூமியின் மகனாக கூறுவார்கள். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்றும் பாடுகிறார். தற்போது பூமிக்கு அருகில் வந்திருக்க கூடிய செவ்வாயை மார்ச் 2 முதல் 4ம் தேதி வரை இரவு 7 முதல் 9 மணிவரை வானத்தில் வெறும் கண்ணால் நாம் பார்க்கலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் இந்த நாட்களில் செவ்வாயை வழிபாடு செய்வது சிறந்தது.
பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா!
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவராம் பாடப்பெற்றதுமான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா இன்று காலை 7.00 மணிக்கு ரோஹிணி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு சுவாமி வீதியுலா காட்சி நடக்கிறது. நாளை இரவு சூரிய சந்திர மண்டல காட்சியும், 3ம் தேதி பூத, சிம்ம வாகன காட்சியும், 4ம் தேதி புஷ்ப விமான காட்சியும் நடக்கின்றன. வரும் 5ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன், ரிஷப வாகனத்தில் திருமுருகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 6ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை, அன்ன வாகன காட்சி நடக்கிறது. வரும் 7ம் தேதி மக நட்சத்திரத்தில் விநாயகப் பெருமான், திருமுருகநாத சுவாமி, ஸ்ரீசண்முகநாதர் உட்பட மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்றைய தினம் இரவு 9.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 8ம் தேதி மீண்டும் தேரோட்டம், 9ம் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சி நடக்கிறது. வரும் 10ம் தேதி இரவு 7.00 மணிக்கு கூப்பிடு விநாயகர் கோவிலில், பூண்டி கோவில் தல வரலாற்றில் இடம் பெற்ற ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடக்கிறது. வரும் 11ல் பிரம்மதாண்டவ தரிசன காட்சி, 12ம் தேதி மஞ்சள் நீர் விழா, இரவு மயில் வாகன காட்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் தினமும் இரவு 7.00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெற உள் ளது.
இடைத்தேர்தலில் 13 பேர் போட்டி.
சங்கரன்கோவில், மார்ச்.1: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 33 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 20 பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 13 பேர் போட்டி இட உள்ளனர்.
மோட்டார் வாகன சட்ட திருத்தம் அபராதத் தொகைகள் அதிகரிக்கிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகள் அதிகரிக்க உள்ளன. இந்த புதிய சட்ட மசோதா, நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவில், வாகனத்தில் சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, சிவப்பு நிற சிக்னலை மதிக்காமல் சென்றாலோ ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். இந்த சட்ட மசோதாவில், மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த சட்ட திருத்த மசோதாவின்படி, தற்போதுள்ள அபராதத் தொகைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்கவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ.5,000ம் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்க சட்டம் வழி செய்யும். தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படலாம். முதல முறையாக செல்போன் பேசிக் கொண்டு சென்றால் ரூ.500ம், தொடர்ந்து அவ்வாறு செய்தால் அவர்களுக்கு ரூ.5,000 வரையும் அபராதம் விதிக்க சட்ட மசோதா வகை செய்கிறது. அபராதத் தொகைகள் அதிகரிப்பதன் நோக்கமே, சாலையில் போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்றவும், சாலை விபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சட்ட திருத்த மசோதாவின்படி, தற்போதுள்ள அபராதத் தொகைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்கவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ.5,000ம் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்க சட்டம் வழி செய்யும். தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படலாம். முதல முறையாக செல்போன் பேசிக் கொண்டு சென்றால் ரூ.500ம், தொடர்ந்து அவ்வாறு செய்தால் அவர்களுக்கு ரூ.5,000 வரையும் அபராதம் விதிக்க சட்ட மசோதா வகை செய்கிறது. அபராதத் தொகைகள் அதிகரிப்பதன் நோக்கமே, சாலையில் போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்றவும், சாலை விபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 5 இலங்கைத்தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மா.கம்யூ ஜி.ராமகிருஷ்ணன்.
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரம் பேர் இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதும், கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாததும், பலத்த காயமுற்றவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதும் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் மீது யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, இலங்கையில் ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேசத்தரத்திலான, சுயேச்சையான விசாரணை காலதாமதமின்றி நடத்தப்படவும், போர்க்குற்றங்கள் நிகழ்த்திய போர்க்குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, இயல்பு வாழ்க்கை தொடர்வதை உறுதிப்படுத்திடவும், இலங்கைத்தமிழர்களுக்கு சம அந்தளிது, சம உரிமை உள்ளிட்ட சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வை ஏற்படுத்திடவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திடவும் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்டவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசையும், இந்திய அரசையும் வலியுறுத்தி மார்ச் 5 அன்று காலை 11 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத்தூதரகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கட்சி அணிகளும், ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்க மார்க்சிளிட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
பார்த்ததில் பிடித்தது!
அன்னக்கிளி - தமிழ் திரை இசை வரலாற்றில் ஒரு மைல் கல் படம்
இளையராஜா என்னும் இசை ஜாம்பவான் உருவான படம் .
பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் பிரபலம் அடைந்து படம் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது .இந்த படம் வெளி வந்த போது வந்த விகடன் விமர்சனத்தில் இளையராஜா பற்றியோ பாடல்கள் பற்றியோ ஒரு வார்த்தை கூட இல்லை என்பது ஆச்சரியமான உண்மை . அது ஏன் ?
What a shot.
Mr.Innovative Rat..
சென்னை தமிழுக்கு பெயர் பெற்றது . ஆனால் சென்னை என்ற தமிழ்
வார்த்தையை கூட சரியாக எழுதத்தெரியாத ஆட்களை ரயில்வே department -
இல் பயன் படுத்திவருவது வருந்தத்தக்கது .இந்தப் புகைப்படம் சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழினத்தின் துரோகியாக நஜிப் ?????????? “மலேசியாவில் சுமார் 17 இலட்சம்
தமிழர்கள் உள்ளனர் என்பதை நஜிப் மறக்கக்கூடாது” என்ற டாக்டர் என்.
ஐயங்கரன், ஐக்கிய நாட்டுச் சபையில் கொண்டு வர உள்ள இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிப்பதுதான் மனிதகுல நீதிற்குத் தீர்ப்பாக
அமையும், இல்லையேல் அது நமது உணர்ச்சிகளை அவமதிப்பதாக அமையும்
என்றார், தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் EWRF எனப்படும் கல்வி
சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான அவர்.
தோ இத்தாலி மாலுமி மே, ஏக் கௌவ் மே ராகுல் தாத்தா. தமிழக மீனவர்களை
சுட்டுக்கொல்லும் உரிமையை இலங்கைக்கு மட்டும் தான் கொடுத்துருக்கோம்..
இளையராஜா என்னும் இசை ஜாம்பவான் உருவான படம் .
பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் பிரபலம் அடைந்து படம் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது .இந்த படம் வெளி வந்த போது வந்த விகடன் விமர்சனத்தில் இளையராஜா பற்றியோ பாடல்கள் பற்றியோ ஒரு வார்த்தை கூட இல்லை என்பது ஆச்சரியமான உண்மை . அது ஏன் ?
What a shot.
Mr.Innovative Rat..
சென்னை தமிழுக்கு பெயர் பெற்றது . ஆனால் சென்னை என்ற தமிழ்
வார்த்தையை கூட சரியாக எழுதத்தெரியாத ஆட்களை ரயில்வே department -
இல் பயன் படுத்திவருவது வருந்தத்தக்கது .இந்தப் புகைப்படம் சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழினத்தின் துரோகியாக நஜிப் ?????????? “மலேசியாவில் சுமார் 17 இலட்சம்
தமிழர்கள் உள்ளனர் என்பதை நஜிப் மறக்கக்கூடாது” என்ற டாக்டர் என்.
ஐயங்கரன், ஐக்கிய நாட்டுச் சபையில் கொண்டு வர உள்ள இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிப்பதுதான் மனிதகுல நீதிற்குத் தீர்ப்பாக
அமையும், இல்லையேல் அது நமது உணர்ச்சிகளை அவமதிப்பதாக அமையும்
என்றார், தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் EWRF எனப்படும் கல்வி
சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான அவர்.
தோ இத்தாலி மாலுமி மே, ஏக் கௌவ் மே ராகுல் தாத்தா. தமிழக மீனவர்களை
சுட்டுக்கொல்லும் உரிமையை இலங்கைக்கு மட்டும் தான் கொடுத்துருக்கோம்..
Subscribe to:
Posts (Atom)