ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 November, 2011
பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூ
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று
மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம்.
வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே.
வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட
நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை
உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை
கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும்.
கிருமியும் அண்டாது.
தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
மூன்று நோய்களுக்கு மருந்து பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.
வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும். வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.
உடல் பருமன் குறையும் வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும். வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.
சருமநோய்கள் நீங்கும் வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.
காதுகோளாறுகளுக்கு மருந்து வேப்பம்பூவை பறித்து வந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காது வலியாக உட்செல்லும்படி தலையை வைத்திருந்தால் காதுவலி, காது இரைச்சல், சீழ் வடிதல், யாவும் நீங்கி காது நன்கு கேட்கும்.எனவே இனிமேல் வேப்ப மரத்தைப் பார்த்தால் பேய் இருக்குமோன்னு பயப்படாதீங்க, அது ஒரு அருமையான டாக்டர் என்பதை புரிந்து கொண்டு, கொண்டாடுங்கள்.

இந்திய சமையலில் இடம்பெறும்...
ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு,
வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில்
எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலுணர்வு திறனும்
சிதைந்து விடும். அதனால்தான் நம் முன்னோர்கள் உணர்வுகளை தூண்டும் உணவுகளை
சமைத்து உட்கொண்டுள்ளனர். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து
தம்பதியர் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கினர். இந்திய சமையலில் இடம்பெறும்
மையலை அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களை தெரிந்து கொள்வோம்.
ஆண்மையை அதிகரிக்கும் பொட்டாசியம் பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோன் உற்பத்திக்கு இன்றியமையாதவை. காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ள பொட்டாசியம் ஆண்மையை அதிகரிக்கின்றன. வாழைப்பழம் ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.
மங்கனீஸ் சத்துக்கள் மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக பாதாம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
வைட்டமின்கள் வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள் உணர்வை தூண்ட உதவுகின்றன.பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள்.இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது.
வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். பாலுணர்வை தூண்டுவதில் வெள்ளைப்பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
மீன், நண்டு,முத்துச்சிப்பி செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகளாகும். மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.
வாசனைப் பொருட்கள் கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய் உணர்வுகளை தூண்டும் முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

அமெரிக்க மியூசியத்தில் ஐன்ஸ்டீனின் மூளை!
மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை அமெரிக்க அருங்காட்சிகயத்தில்
பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின்
ஈடு இணையற்ற விஞ்ஞானியாக போற்றப்பட்ட ஐன்ஸ்டீனின் மூளையை ஏராளமான
பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஆல்பர்ட்
ஐன்ஸ்டைன் பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல்
அறிஞர். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கியமான விஞ்ஞானி இவர்.
புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் ஐன்ஸ்டீன் செய்துள்ளார். இவரது E=MC2 எனப்படும் “Theory of Relativity” சித்தாந்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.
நோபல்பரிசு விஞ்ஞானி ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
ஐன்ஸ்டீன் மூளை ஐன்ஸ்டீன் தனது 76-வது வயதில் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட நோயினால் 1955-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவரது உடலை தாமஸ் ஹார்வே என்ற டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். அவரது அறிவு மிக்க மூளையை யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்து கொண்டார். இதனை அறிந்த ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் தாமஸ் ஹார்வே மீது வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்து கொள்ள அவரது மகன் அனுமதி அளித்ததாக கூறினார். இதை தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இருந்தும் ஐன்ஸ்டீனின் மூளையை தானே வைத்து கொண்டார்.
முதன் முறையாக மக்கள் பார்வைக்கு இந்த நிலையில், விஞ்ஞானியின் மூளையை ஆய்வு செய்வதற்காக நரம்பியல் விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து பல வருடங்களுக்கு பிறகு அவரது மூளையின் சில பகுதிகளை பரிசோதனைக்காக நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். தற்போது மூளையின் 46 மெல்லிய அடுக்குகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலடெல்பியாவின் முட்டர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்ட இந்த மூளையின் துகள்களை லென்ஸ் மூலமாகத்தான் பார்க்க முடியும். 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற மூளை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடையது. இது இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பெருமைக்குரியது என்கின்றனர் அருங்காட்சியக நிர்வாகிகள். முதன் முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஐன்ஸ்டீனின் மூளையை எண்ணற்றோர் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

தானம் கொடுக்க உயிரை விட்ட காதல் ஜோடி!
சென்னையை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று வேளாங்கண்ணிக்கு சென்று
சுற்றிப்பார்த்தனர். அதன்பிறகு தங்கள் உடலை மருத்துவக் கல்லூரிக்கு
அளிக்கும்படி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(40). அவர் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணை காதலித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த பெண்ணுடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றார். அங்கு ஒரு தனியார் விடுதியி்ல் அறை எடுத்து தங்கிய 2 பேரும் வேளாங்கண்ணியை சுற்றிப் பார்த்தனர்.
நேற்று முன்தினம் மதியம் சுற்றுலா முடித்துவிட்டு, விடுதி அறைக்கு திரும்பிய இந்த ஜோடி பின்னர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. நேற்று காலை வரை அறை கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதிப் பணியாளர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வேளாங்கண்ணி போலீசார் விடுதிக்கு சென்று காதல் ஜோடி தங்கிருந்த அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது அறை படுக்கையில் அருள்ராஜும், அந்த இளம்பெண்ணும் பிணமாகக் கிடந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாங்கள் ஓடி வந்து திருமணம் செய்து கொண்டோம். 2 பேருக்கும் வயது வித்தியாசம் உள்ளது. ஒரே இடத்தில் வசித்த போது, எங்களுக்குள் இல்லாத உறவை இருப்பதாக கூறி எங்களை கேவலமாக பேசினர். இதனால் கோபமடைந்த நாங்கள் ஓடி வந்தோம். இது தப்பு என்று தெரிந்தே வந்தோம்.
தப்புக்கு தண்டனையாக தான் இந்த முடிவை எடுத்தோம். இதற்கு நாங்கள் யாரையும் குறைக் கூற தயாராக இல்லை. எந்த முடிவு எடுக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் கடைசி விருப்பத்தை இந்த கடிதம் மூலம் உறுதிப்படுத்துகிறோம்.நாங்கள் இறந்த செய்தியை எங்கள் வீட்டாரிடம் தெரிவித்துவிடுங்கள். ஆனால்
எங்கள் உடலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எங்கள் உடல்கள் பயன் உள்ளதாக இருக்க வேண்டும். எங்கள் உடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையி்ல் மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையி்ல் செல்கிறோம். எங்கள் துணிகளை ஏழைகளுக்கு கொடுத்து விடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

2012 மும்மொழி ஆண்டாம் இலங்கையில்!
வரும் 2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக கடைபிடிக்கப் போவதாக இலங்கை
அறிவித்துள்ளது. இது தொடர்பான மாநாட்டில் பங்கேற்க வரும் ஜனவரி மாதம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை செல்கிறார். கொழும்பில்
உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு மையத்தில் நடந்து வரும் நல்லிணக்கமும்
போருக்குப் பின்னரான நிலைமையும் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறுகையில்,
2012ம் ஆண்டை மும்மொழிகள் ஆண்டாக அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கை மக்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 2012ம் ஆண்டில் அரசு அமலாக்கவுள்ளது. இதற்கான செயல் திட்டத்தை தொடங்கி வைக்க இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார். இந்த மாநாட்டில் இந்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபலும் பங்கேற்பார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், நாட்டின் வட கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தப் பகுதிகளில் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட வருமாறு சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளனர். அதே போல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு 17%
மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான மின்வாரியத்தின் மனுவை
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டது.
இந்த மனுவில் வீடுகளுக்கான மின் கட்டணம் உள்பட குறைந்த அழுத்த மின் விநியோகம்
செய்யப்படும் பிரிவுகள் அனைத்துக்கும் சராசரியாக 17 சதவீதமாக கட்டணத்தை உயர்த்த
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுபோல தொழிற்சாலைகள் உள்பட உயர் அழுத்த மின் விநியோகம் செய்யப்படும்
பிரிவுகளுக்கு சராசரியாக 18 சதவீத கட்டண உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய உத்தேச கட்டண உயர்வு மனு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்
தலைவர் எஸ். கபிலன் தலைமையிலான அமர்வு முன்னிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு
வந்தது. விசாரணையின் முடிவில் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த உத்தேச கட்டணப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக இப்போது தமிழ்நாடு
மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்திலும், தமிழ்நாடு மின்வாரிய இணையதளத்திலும்
வெளியிடப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 2-ம் தேதி பத்திரிகைகளில் விளம்பரமாக இந்தப் பட்டியல்
வெளியிடப்படும். பொதுமக்கள் கட்டணம் குறித்த தங்களது கருத்துக்களை டிசம்பர் 31-ம்
தேதி வரை தெரிவிக்கலாம்.
இந்த உத்தேச கட்டணப் பட்டியல் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்
அலுவலகங்களில் விற்பனைக்காக வைக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ. 300-ஐச் செலுத்தி
பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் உயர்த்தப்பட வேண்டிய புதிய மின்
கட்டணம் இறுதி செய்யப்படும்.
உத்தேச கட்டண உயர்வு விவரம்: வீடுகள் உள்பட குறைந்த அழுத்த மின் விநியோகம் 17
சதவீதம் வரை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் உள்ளிட்ட அனைத்துப்
பிரிவுகளுக்கும் படி நிலைகளின் (ஸ்லாப்) எண்ணிக்கையிலும் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு இதுவரை 7 ஸ்லாப்புகளாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்பட்டது.
இப்போது 4 ஸ்லாப்புகளாக பிரித்து கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதாவது 100
யூனிட் வரை ஒரே ஸ்லாப்பாக கணக்கிடப்பட உள்ளது.
முன்னர் 0-50 யூனிட்களுக்கு ஒரு யூனிட் ரூ. 1.10 எனவும், 51-100
யூனிட்களுக்கு ஒரு யூனிட் ரூ. 1.30 எனவும் கணக்கிடப்பட்டது. இதில் அரசு வழங்கும்
மானியம் 45 பைசாவைக் கழித்துவிட்டு யூனிட்டுக்கு 65 பைசா என கணக்கிட்டு
நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்டது.
இனிமேல், 0-100 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 ஆக உயர்த்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் மானியம் ரூ. 1.50-ஐ கழித்துவிட்டு ஒரு
யூனிட்டுக்கு ரூ. 1.50 நுகர்வோர் செலுத்த வேண்டும்.
வீடுகளில் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களில் 0-200 யூனிட்கள்
வரை பயன்படுத்துபவர்கள் ஒரே ஸ்லாப்பில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் மானியம்
ரூ. 1-ஐ கழித்துவிட்டு யூனிட்டுக்கு ரூ. 2 வீதம் கணக்கிட்டு இவர்கள் செலுத்த
வேண்டும்.
201-500 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கான மின் கட்டணம் ரூ. 4 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மானியம் 50 பைசாவைக் கழித்துவிட்டு
யூனிட்டுக்கு ரூ. 3.50 வீதம் கணக்கிட்டு செலுத்த வேண்டும்.
501 யூனிட்டுகள் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் ஒரே ஸ்லாப்பில்
கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் யூனிட்டுக்கு ரூ. 5.75 வீதம் கணக்கிட்டு செலுத்த
வேண்டும். இந்தப் பிரிவினருக்கு அரசு மானியம் கிடையாது.
விவசாயத்துக்கு...: விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 7 மடங்கு
உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ஒரு குதிரைத் திறனுக்கு ரூ. 250
வசூலிக்கப்பட்டது, இப்போது ரூ. 1,750-ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால்,
விவசாயத்துக்கு அரசு 100 சதவீத மானியம் வழங்குவதால் விவசாயிகளுக்கு இதனால் எந்த
பாதிப்பும் வரப்போவதில்லை. மின் வாரியத்துக்கு அரசிடமிருந்து கூடுதல் வருமானம்
(மானியத் தொகை) கிடைக்கும்.
விசைத்தறி பயன்பாட்டுக்கான அரசு மானியத்தில் மாற்றம்: விசைத்தறி
பயன்பாட்டுக்கான மின் கட்டணம் முன்னர் 3 ஸ்லாப்புகளின் கீழ் கணக்கிடப்பட்டு வந்தது,
இப்போது 2 ஸ்லாப்புகளின் கீழ் கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
0-500 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு அரசின் 100 சதவீத மானியம் தொடர
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 501-1000 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு அரசு வழங்கி வந்த 100
சதவீத மானியம் ரத்துசெய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் 501 யூனிட்கள் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் ஒரே ஸ்லாப்பாக
கணக்கிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 5 கட்டணமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசின் மானியம் ரூ. 1-ஐ கழித்துவிட்டு
யூனிட்டுக்கு ரூ. 4 வீதம் கணக்கிட்டு செலுத்த வேண்டும்.
சினிமா தியேட்டர்களுக்கு...: சினிமா தியேட்டர்கள் முன்னர் கல்வி
நிறுவனங்களின் பட்டியலில் வைக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது. இது
இப்போது மாற்றப்பட்டுள்ளது.
அதாவது முன்னர் யூனிட்டுக்கு ரூ. 5.50-ஆக கணக்கிடப்பட்டது இப்போது
யூனிட்டுக்கு ரூ. 7 வீதம் கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறைந்த அழுத்த
மின்சாரம் பயன்படுத்தும் தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை ஒரே
ஸ்லாப்பாக நிர்ணயித்து யூனிட்டுக்கு ரூ. 5.50 என கணக்கிட்டு வசூலிக்க
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடை உள்ளிட்ட வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடுகளையும் இப்போது ஒரே ஸ்லாப்பாக
கணக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 7 வீதம் கணக்கிட்டு
வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்போது இவர்களிடம் 0-100 யூனிட்டுகளுக்கு ஒரு
யூனிட்டுக்கு ரூ. 4.30 வீதமும், 0-200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு
ரூ. 5.30 வீதமும், 201 யூனிட் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு
யூனிட்டுக்கு ரூ. 6.50 வீதமும் கணக்கிட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு...
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் முன்பிருந்ததைக்
காட்டிலும் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு ரூ. 4.80 என்று
இருந்தது இப்போது ரூ. 5-ஆக வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 1
உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது யூனிட்டுக்கு ரூ. 5.50 வசூலிக்கப்பட்டு வருவது ரூ.
6.50-ஆகக்கூடும்.
உயர் அழுத்த மின் கட்டணம்: உயர் அழுத்த மின் கட்டணத்தை சராசரியாக 18 சதவீதம்
உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களிடம் இணைப்புக் கட்டணமாக (மாத கணக்கீட்டின் கீழ்) ஒரு கிலோ
வோல்டுக்கு ரூ. 300 செலுத்த வேண்டும். பயன்பாட்டுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 5
வீதம் கணக்கிடப்படும்.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இணைப்புக் கட்டணமாக ஒரு கிலோ
வோல்டுக்கு ரூ. 300 செலுத்த வேண்டும். பயன்பாட்டுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.
4.50 வீதம் கணக்கிடப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் இணைப்புக் கட்டணமாக ஒரு கிலோ
வோல்டுக்கு ரூ. 300 செலுத்த வேண்டும். பயன்பாட்டுக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 5.50
வீதம் கணக்கிட்டு வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வீட்டு பயன்பாடு மின் கட்டணம்
யூனிட் இப்போதைய கட்டணம் உத்தேச உயர்வுக் கட்டணம்
0 - 50 65 பைசா ரூ. 1.50
51-100 75 பைசா ரூ. 1.50
100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு
0 - 50 75 பைசா ரூ. 2
51-100 85 பைசா ரூ. 2
101-200 ரூ. 1.50 ரூ. 2
201-500 ரூ. 2.20 ரூ. 3.50
501 - 600 ரூ. 1.80 ரூ. 5.75 (மானியம் ரத்து)
601 -அதற்கு மேல் ரூ. 4.05 ரூ. 5.75 (மானியம் ரத்து)
சரத் பவாரை கன்னத்தில் அறைந்தவரை கைது செய்து திகார் சிறையில் அடைப்பு!
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில்
அறைந்தவரை போலீஸôர் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.
÷மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான
சரத் பவார், இலக்கிய விழா ஒன்றில் வியாழக்கிழமை பங்கேற்றார்.
அப்போது, ஹர்வீந்தர் சிங் (27) என்பவர் பவாரின் கன்னத்தில் அறைந்தார்.
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பவாரை அறைந்ததாகத் தெரிவித்த அவர்,
சீக்கியர்கள் வைத்திருக்கும் "கிர்பான்' என்ற கத்தியால் தனது கை நரம்புகளை
அறுத்துக் கொண்டார்.
÷அவரைக் கைது செய்த தில்லி போலீஸôர், பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். பொது ஊழியரைத் தாக்கியது, தற்கொலைக்கு முயற்சித்தது,
சமுதாயத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஆகிய குற்றச்சாட்டுகளை போலீஸôர்
முன்வைத்தனர்.
÷இதையடுத்து ஹர்வீந்தர் சிங்கை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு
மாஜிஸ்திரேட் ஜஸ்ஜீத் கெüர் உத்தரவிட்டார்.
÷கடந்த வாரம் தொலைத் தொடர்புத் துறை ஊழல் தொடர்பாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை
விதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமையும் நீதிமன்ற வளாகத்தில்
ஹர்வீந்தர் சிங் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
மறியல்:÷ஹர்வீந்தர் சிங்கை திகார் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, நீதிமன்ற
வளாகத்தில் அவரைத் தாக்க முயற்சித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை
போலீஸôர் தடுத்தனர்.
இதற்கிடையே நீதிமன்றத்துக்கு அருகே இந்தியா கேட் பகுதியில் அக்கட்சியினர்
சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸôர், அனைவரையும்
கலைந்து போகச் செய்தனர்.
புயல் சின்னம் தமிழகத்தில் கனமழை நீடிக்கும்!
வங்கக்கடலில் கன்னியாகுமரி பகுதியில் புதிய காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை
நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 200
மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தென்மேற்கு
ஆந்திர கடற்கரை வரை கடந்த 2 நாள்களாக நீடித்திருந்தது. இதனால் கடற்கரை மாவட்டங்கள்,
புதுவையின் பெரும்பாலான இடங்கள், தமிழகத்தின் உள்பகுதியில் பெரும்பாலான இடங்களில்
மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் கன்னியாகுமரி பகுதியில் உருவாகியுள்ள புதிய
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை
வெள்ளிக்கிழமையும் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
வானிலை முன்னறிவிப்பு: கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான புதிய
காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது
வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும்
புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். உள்
தமிழகத்தில் அனேக பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும். ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில்...தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டுவிட்டு
கனமழை பெய்யும். அவ்வப்போது தரைக்காற்று வேகமாக வீசும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: கன்னியாகுமரி பகுதியில் உருவான காற்றழுத்தத்
தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், கடல் கொந்தளிப்புடன்
காணப்படும். இதனால் தென் தமிழகம், லட்சத்தீவு, கேரள மாநில பகுதியைச் சேர்ந்த
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: காரைக்காலில் தொடர்ந்து 5-வது நாளாக
வெள்ளிக்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுமார் 2,000 மீனவர்கள்
கடலுக்குள் செல்லவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பிற
பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): முத்துப்பேட்டை 180, கொள்ளிடம் 170,
காட்டுமன்னார்கோவில் 160, மரக்காணம், பட்டுக்கோட்டை 150, சிதம்பரம்,
பரங்கிப்பேட்டை, கடலூர் 140, பேராவூரணி, தொண்டி, சேத்தியாத்தோப்பு, திருவாரூர்,
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மீனம்பாக்கம் 100, சென்னை டிஜிபி அலுவலகம்,
விருத்தாசலம், பண்ருட்டி 90, சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம், கள்ளக்குறிச்சி 70.
காஞ்சிபுரம், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், விழுப்புரம், ஒரத்தநாடு, ஆரணி
60, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, முதுகுளத்தூர்,
செய்யாறு, பெரம்பலூர், லால்குடி, சமயபுரம், காரைக்குடி, அருப்புக்கோட்டை 50,
சிவகங்கை, வந்தவாசி, கமுதி, கடலாடி, புதுக்கோட்டை 40, செங்குன்றம், பொன்னேரி,
பூந்தமல்லி, பாம்பன், ராமேஸ்வரம், வாணியம்பாடி, மருங்காபுரி, சாத்தூர், சிவகாசி,
திண்டுக்கல், நத்தம், திருச்சி 30, திண்டிவனம், பாபநாசம், கொடைக்கானல், விருதுநகர்,
திருச்சுழி, மதுரை, சோழவந்தான், கோவில்பட்டி 20, ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை,
ராஜபாளையம், வேடசந்தூர், பாடலூர், கரூர், ஏற்காடு 10 என தமிழகத்தில் பெரும்பாலான
இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
விடுமுறை நாட்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி.யில் சேர முடியாது!
வார விடுமுறை நாட்களில் படிக்கும் வகையிலான முதுநிலை பட்டப்படிப்பில்
சேர்ந்து படித்தவர்கள் பிஎச்.டி. மேற்கொள்ள இயலாது என்று பல்கலைக்கழகங்கள்
தெளிவுபடுத்தியுள்ளன. தனியார் நிகர்நிலைப்
பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர், பிஎச்.டியில்
சேர்க்கை கிடைக்காத காரணத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பல்கலைக்கழகங்கள்
தெளிவான முடிவினை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தன.இந்த விவரத்தை அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை அண்ணா
தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களிடம்
கேட்டு பெறப்பட்டது.
அதில் பிஎச்.டி. மேற்கொள்ள வார விடுமுறை நாட்களில் படித்து பெற்ற பட்டம்
செல்லாது. இந்த கல்வியாண்டில் அவ்வாறு படித்தவர்கள் யாரும் பிஎச்.டி.யில்
சேர்க்கப்படவில்லை என்று சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
தெரிவித்துள்ளது.அதுபோல, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பிஎச்.டி. மேற்கொண்டு
வரும் எந்த மாணவரும் வார விடுமுறை நாட்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள்
இல்லை. இந்த கல்வியாண்டில் மட்டுமல்ல, 2001 முதல் 2010 வரை
பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படித்த எவருமே வார விடுமுறை நாட்களில்
முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இல்லை என்பது தெளிவுபடுத்தியுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சச்சின், தோனிக்கு ஓய்வு கேப்டனாக சேவக்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள்
தொடருக்கான இந்திய அணியில், சச்சின், தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக சேவக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ்
அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி
வரும் 29ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது. மற்ற போட்டிகள் விசாகபட்டினம்
(டிச., 2), ஆமதாபாத் (டிச., 5), இந்தூர் (டிச., 8), சென்னை (டிச., 11) ஆகிய
இடங்களில் நடக்கவுள்ளது. முதல் மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட
வீரர்களை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு நேற்று
அறிவித்தது.
சச்சின் இல்லை: இதில்
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு
அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கு பின், இதுவரை ஒரு ஒருநாள்
போட்டியில் கூட சச்சின் விளையாடவில்லை. இதன்மூலம், வெஸ்ட் இண்டீசுக்கு
எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது சர்வதேச சதத்தை நழுவவிட்ட சச்சின்,
ஒருநாள் தொடரில் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக
அமைந்தது.
சேவக் கேப்டன்: இந்த
ஆண்டு இதுவரை 11 டெஸ்ட், 24 ஒருநாள், மூன்று சர்வதேச "டுவென்டி-20'
போட்டியில் விளையாடிய கேப்டன் தோனி, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக்
உள்ளிட்ட தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
தொடர்ச்சியாக விளையாடி வரும் இவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக ஓய்வு
அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேப்டன் பொறுப்பு அதிரடி துவக்க வீரர்
சேவக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு போட்டிகளுக்கு கேப்டனாக
செயல்பட்டுள்ள சேவக், நான்கு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றுத்
தந்துள்ளார். துணைக் கேப்டனாக மற்றொரு துவக்க வீரர் கவுதம் காம்பிர்
நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பருக்கு பார்த்திவ் படேல் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
யுவராஜ் காயம்: சமீபத்திய உலக கோப்பை தொடரில்
"தொடர் நாயகன்' விருது வென்ற யுவராஜ் சிங், போதிய உடற்தகுதி இல்லாததால்,
தாமாகவே விலகிக் கொண்டார். விரைவில் இவர், நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள
பிரச்னைக்கு "ஆப்பரேஷன்' செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக "பார்மின்றி' தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்
சிங்கிற்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடரில் சுழலில்
அசத்திய அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரக்யான் ஓஜா தேர்வு
செய்யப்படவில்லை. இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக ராகுல் சர்மா தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
ரகானே வாய்ப்பு: இங்கிலாந்துக்கு
எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய அஜின்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர
ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் தொடரில்
வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோரும்
இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பிரவீண் குமார், வினய் குமார் வாய்ப்பு
பெற்றுள்ளனர். 15 பேர் கொண்ட இந்திய அணி: சேவக் (கேப்டன்), காம்பிர்
(துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), சுரேஷ் ரெய்னா,
விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரவிந்திர
ஜடேஜா, பிரவீண் குமார், வினய் குமார், வருண் ஆரோன், உமேஷ் யாதவ், அஷ்வின்,
ராகுல் சர்மா.
ஹர்பஜன் தேர்வு செய்யப்படுவாரா? அடுத்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி டெஸ்ட், சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் தேர்வு இன்று மும்பையில், பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் நடக்கிறது. இதில் "பார்மின்றி' தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், பிரக்யான் ஓஜா சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இருப்பினும், ஆஸ்திரேலிய மண்ணில் ஹர்பஜன் சிங்கின் முந்தைய செயல்பாடு நன்றாக இருப்பதால், வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல உடற்தகுதியை நிரூபித்து அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு டெண்டர் திறப்பு!
பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் மருத்துவக் காப்பீடு திட்டம்
செயல்படுத்த வெளியிடப்பட்ட டெண்டரில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
நிறுவனம், ஆண்டுக்கு 499 ரூபாயை பிரிமியம் தொகையாக குறிப்பிட்டுள்ளது.
எனவே, இத்தொகை குறித்து இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
"கலைஞர் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு' மாற்றாக, புதிய இன்சூரன்ஸ்
திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அ.தி.மு.க., அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின்படி, நான்கு ஆண்டுகளில், நான்கு லட்சம் ரூபாய்க்கு, ஒரு
குடும்பம் மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும்,
முந்தைய மருத்துவக் காப்பீடு திட்டம் போல், 400 வகையான சிகிச்சைகளுக்கு
என்றில்லாமல், 900 வகையான சிகிச்சைகளை இதில் பெற்றுக்
கொள்ளலாம்."முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டம்' என்ற
இத்திட்டத்துக்கு, கடந்த ஜூலை மாதம் டெண்டர் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் மாதம்
திறக்கப்பட்ட டெண்டரில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், மிகக்
குறைந்த தொகையாக, ஆண்டுக்கு 510 ரூபாய் என பிரிமியம் தொகையை
குறிப்பிட்டிருந்தது. ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடன் தமிழக அரசு, மூன்று
சுற்று பேச்சு வார்த்தை நடத்தியது. அதில், 508 ரூபாய் வரை, அந்நிறுவனம்
இறங்கி வந்தது. எனினும், இந்த தொகை கட்டுப்படியாகவில்லை என்று கூறி, தமிழக
அரசு அந்த டெண்டரையே ரத்து செய்தது.
புதிய டெண்டர், குறுகிய கால அளவில் வெளியிடப்பட்டது. இதில், பொதுத் துறை
நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு
விதிக்கப்பட்டது. கடந்த 21ம் தேதி டெண்டர் தேதி முடிந்ததும், தொழில்நுட்ப
டெண்டர் திறக்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த, நான்கு பொதுத் துறை
நிறுவனங்களின், விலை டெண்டர் நேற்று திறக்கப்பட்டது.இதில், குறைந்தபட்ச
தொகையாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு 499 ரூபாய் என
பிரிமியத் தொகையை குறிப்பிட்டுள்ளதாக, இன்சூரன்ஸ் நிறுவன வட்டாரங்கள்
தெரிவித்தன. இந்த தொகையை மேலும் குறைப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்த, அரசு
முடிவு செய்துள்ளது. விரைவில் இறுதி தொகை முடிவு செய்யப்படும்.இதையடுத்து,
யுனைடெட் இந்தியா நிறுவனத்துக்கு, தமிழகத்தில் மருத்துவக் காப்பீடு
திட்டத்தை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்படுமென, இன்சூரன்ஸ் நிறுவன
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே நாள்...
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
- நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
- நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
- சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் தனது முதலாவது செய்மதியான ஆஸ்டெரிக்ஸ்-1 ஐ விண்ணுக்கு அனுப்பியது(1965)
மொபைல்' அனுமதி இல்லை!
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும்
உறவினர்கள், கோர்ட்டுக்குள் இனி மொபைல் போன்களை பயன்படுத்தினால், அவை
பறிமுதல் செய்யப்படும்' என, நீதிபதி ஓ.பி.சைனி எச்சரித்துள்ளார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை, டில்லி பாட்டியாலாவில் உள்ள
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. நீதிபதி ஓ.பி.சைனி இந்த
வழக்கை விசாரித்து வருகிறார். விசாரணை நடக்கும்போது, இந்த வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் கோர்ட் அறையில் ஆஜராகி
விடுகின்றனர். இதனால், கூச்சல் அதிகரிப்பதால், விசாரணை பாதிக்கப்படுகிறது.
கடந்த 23ம் தேதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர்கள்
ஐந்து பேருக்கு, சுப்ரீம் கோர்ட் ஜாமின் அளித்தது. இந்த தகவலை கேட்டதும்,
பாட்டியாலா கோர்ட்டில் கூடியிருந்தவர்கள், உற்சாகக் குரல் எழுப்பினர்.
இதனால், விசாரணை பாதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்
ஒருவர் மொபைல் போனில் பேசியதால், நீதிபதி ஓ.பி.சைனி எரிச்சல் அடைந்தார்.
அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். நேற்றைய விசாரணையின்போதும், இந்த இடையூறு
தொடர்ந்தது. இதுகுறித்து நீதிபதி சைனி கூறியதாவது: விசாரணையை பார்ப்பதற்காக,
குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் கோர்ட் அறைக்கு வருகின்றனர். இன்று
கூட, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மனைவி, கோர்ட் நடவடிக்கைகளை மொபைல்
போனில் படம் பிடித்தார். இது போன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இது,
கோர்ட் ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயல். விசாரணை நடக்கும் போது, இனிமேல்
யாரும் மொபைல் போன், லேப்-டாப், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மீறி
பயன்படுத்தினால், அவர்களிடம் இருந்து இந்த கருவிகள் பறிமுதல்
செய்யப்படும். இவ்வாறு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் கோச்சடையான்!
ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த ராணா' படம், கடந்த ஏப்ரல் மாதம்
தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய முதல்நாளே அவருக்கு உடல்நலக்குறைவு
ஏற்பட்டது. 2 மாதங்கள் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்றபின், அவர் குணம்
அடைந்தார். ராணா' படத்தில்,
குதிரை சவாரி உள்பட கடினமான சண்டை காட்சிகள் இடம்பெற்றிருப்பதால்,
இப்போதைக்கு அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது அவருடைய உடல்நலனுக்கு
உகந்தது அல்ல என்று கருதுகிறார்கள். எனவே, ராணா' படத்துக்கு முன்பாக வேறு
ஒரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார்.
இந்த படத்துக்கு, கோச்சடையான்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, இந்தியாவில் தயாராகும் நடிப்பை பதிவிறக்கம்' செய்யும் முதல் 3டி படம் ஆகும். உலகிலேயே அதிக வசூலை வாரிக்குவித்த, ஜேம்ஸ் கேமரூன் டைரக்ஷனில் வெளியான ஹாலிவுட்' திரைப்படம், அவதார்' மற்றும் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைரக்டு செய்த திரைப்படம் டின் டின்' ஆகிய படங்கள் இதே புதிய தொழில்நுட்பத்த்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி, டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். இந்த படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள்.டைரக்ஷன் பொறுப்பை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் ஏற்றுள்ளார். ஆகஸ்டு 2012 ல் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. கோச்சடையான்' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், ராணா' படத்தில் நடிப்பார் என்று ஈராஸ் நிறுவனமும், சவுந்தர்யா அஸ்வினும் ரஜினிகாந்த் சார்பாக தெரிவித்தனர்.
பெண்களை தாக்கி பாடவில்லை தனுஷ்...?
3’ படத்தில் இடம்பெறும் ‘ஒய் திஸ் கொல வெறிடி..’ பாடலில் பெண்களை தாக்கி பாடவில்லை என்று தனுஷ் கூறினார். தனுஷ்,
ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘3’. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார்.
இப்படத்திற்காக ‘ஒய் திஸ் கொல வெறிடி’ என்ற பாடலை எழுதி சொந்த குரலில்
பாடி இருக்கிறார் தனுஷ். இப்பாடல் பெண்களை தாக்கி எழுதப்பட்டுள்ளதாக புகார்
எழுந்தது.
இந்த பாடலை சரியான பார்வையில் பார்க்க வேண்டும். பெண்களை தாக்கும் வகையில்
அதை எழுதவில்லை. ஐஸ்வர்யா என்னிடம் பாடலின் சூழலை விளக்கினார். இதற்கு புதிய பாணியில் ஒரு பாடல் வேண்டும் என்றார். இதற்கான டியூனை இரண்டு முறை கேட்டேன். பின்னர் மனதுக்கு தோன்றியபடி எழுதி, பாடலை பாடினேன். டம்மி வார்த்தைகளில்தான் பாடல் பாடப்பட்டது. ஆனால்
அதுவே ஓகே ஆகிவிட்டது. இப்பாடலில் ‘ஒயிட் ஸ்கின் கேர்ள்’ என்று
ஒருமையில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கேர்ள்ஸ்’ என்று பன்மையில்
குறிப்பிடப்படவில்லை. எனவே இது படத்தில் வரும் ஹீரோயினை மட்டும்தான் குறிக்கும். இது எல்லா பெ
மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் ‘இம்மார்ட்டல்’ என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
வசீகரிக்கும் குரலாலும் அதிரடி நடனத்தாலும் உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்களை வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன்.கடந்த
2009&ம் ஆண்டு ஜூன் 25&ம் தேதி 50&வது வயதில் இறந்தார்.
அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ‘இம்மார்ட்டல்’ (இறவாப் புகழ்
கொண்டவன்) என்ற பெயரிலான ஆல்பம் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் சோனி மியூசிக் குழுமத்தை சேர்ந்த எரிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. இதில் மைக்கேல் ஜாக்சனின் 20 பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லே, பாடகி ரிஹானா ஆகியோரும் இதில் பாடியுள்ளனர். உலகின் பல நாடுகளிலும் கடந்த 18&ம் தேதி தொடங்கி நேற்று வரை இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது. ஜாக்சன் இறந்த பிறகு வரும் 8&வது ரீமிக்ஸ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 60 பாடல்களை ரீமிக்ஸ் செய்து நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்க விண்கலம் நாளை பயணம்!
செவ்வாய் கிரகத்தில்
மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா, தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து
ஆய்வு செய்ய புதிய விண்கலத்தை அமெரிக்கா நாளை அனுப்புகிறது.பூமியை தவிர, வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா என்பது குறித்த ஆய்வு நீண்டகாலமாக நடைபெறுகிறது.குறிப்பாக,
செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் (பனிக்கட்டி) இருப்பதாக
கருதப்படுகிறது. இது தொடர்பாக, 1970-ம் ஆண்டிலேயே வைகிங், வோயகர் போன்ற
விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் `நாசா' அனுப்பியது.
இது தவிர, 2004-ம் ஆண்டில் கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தும் வண்டி அளவிலான ரோவர் இயந்திரத்துடன் ஒரு விண்கலம் அனுப்பப்பட்டது. பூமத்திய
ரேகைக்கு எதிர்ப்புறத்தில் செவ்வாய் கிரகத்தில் அந்த விண்கலம் தரை
இறங்கியது. மூன்று மாதங்கள் அங்கு ஆய்வு நடந்தது. அப்போது தண்ணீர் படலங்கள்
இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக புதிய `ரோவர்' கருவியுடன் கூடிய விண்கலத்தை நாசா அனுப்புகிறது. கென்னடி
விண்வெளி ஆய்வு மையம் அருகேயுள்ள கேப் கார்னிவெல் விமானப்படை தளத்தில்
இருந்து சனிக்கிழமை காலை 10 மணி (அமெரிக்க நேரப்படி) அளவில் அந்த விண்கலம்
புறப்படுகிறது.
இந்த திட்டத்துக்காக ரூ.12 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. விண்கலத்தில் பொருத்தப்பட்ட ரோவர் கருவியானது, ஒரு சிறிய கார் அளவுக்கு உள்ளது. அணுசக்தியால் இயங்கக் கூடியது. விண்வெளியில் 9 மாத காலம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அது சென்றடையும். டிசம்பர் 18-ந் தேதி வரையிலும் விண்கலம் ஏவுவதற்கு சாதகமான பருவநிலை நிலவுகிறது. எனவே, தட்பவெப்ப நிலையால் விண்கலம் புறப்படுவதில் தாமதம் ஏற்படாது.
ஏற்கனவே, நிலாவுக்கு
அனுப்பிய அப்பல்லோ விண்கலம், சனி கிரகத்துக்கு அனுப்பிய காசினி விண்கலம்,
புளுட்டோவுக்கு அனுப்பிய நியு ஹரிசான் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக
கொண்டே இந்த விண்கலத்தையும் நாசா விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
விண்கலத்தில் உள்ள ரோவர் கருவியை இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விஞ்ஞானிகள்
வடிவமைத்தனர்.
செவ்வாய் கிரகத்தில் தரை
இறங்கி ஆராய்ச்சி செய்ய உள்ள இந்த ரோவர் கருவியில் ரோபாட் கைகள் உள்ளன. 10
கருவிகள் இருக்கின்றன. மலைப்பாங்கான பகுதியில் கூட 154 கி.மீட்டர்
அளவுக்கு விசாலமாக பயணம் செய்யக் கூடியது. மேலும், தரை தளத்தில் இருந்து
சுமார் 5 கிலோ மீட்டர் உயரம் வரை மேலெழும்பும் சக்தி கொண்டது. செவ்வாய் கிரகத்தில்
திரவ வடிவிலான தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழும் சூழ்நிலை இருக்கிறதா?
எவ்வளவு காலம் வரை மனிதர்கள் வாழ முடியும்? என்பது போன்ற ஆராய்ச்சியை இந்த
ரோவர் மேற்கொள்ளும்.
சந்திரபாபு வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெற்றேன் டைரக்டர் பாக்யராஜ்!
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள `பேம் நேஷனல்' தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது சாப்ளின் சாமந்தி
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை இந்த படத்தின் டைரக்டர்
பிரகாஷ் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தபோது, படத்தின் கதையை சொன்னார்.
கதையை கேட்டு முடித்ததும், அவர் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. இப்படி ஒரு கதையை நாம் யோசிக்கவில்லையே என்பதால் ஏற்பட்ட பொறாமை அது.எப்போதுமே நிஜ வாழ்க்கையில் நாம் சந்தித்த கதாபாத்திரங்களை படமாக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை கருவாக வைத்துதான் `அந்த 7 நாட்கள்' படத்தை எடுத்தேன். சந்திரபாபு முதல் இரவு அன்றே மனைவியின் காதல் பற்றி கேள்விப்பட்டு, மனைவியை காதலருடன் அனுப்பி விடுவார். அந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த `அந்த 7 நாட்கள்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும்’’என்று பேசினார்.

டேம் 999’ திருட்டு சிடி திடுக்கிடும் ரகசிய திட்டம்!
தமிழகத்தில் ‘டேம் 999’
படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருட்டு சிடிக்கள் மூலம் இப்படத்தை
மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டம் தீட்டியுள்ளனர். பணத்தை காட்டி சட்ட
விரோத கும்பல் உதவியுடன் இதை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.முல்லைபெரியாறு அணையை
மையமாக வைத்து, கேரளாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் சோஹன்ராய் என்பவர்,
‘டேம் 999’ எனும் படத்தை எடுத்துள்ளார். அணை உடைந்து, லட்சக்கணக்கான மக்கள்
மடிவது போன்ற காட்சிகள் இப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் தவிர இந்தியாவில் பிற மாநிலங்களில் இன்று இப்படம் வெளியாகியது.
தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால், ‘டேம் 999’ படத்திற்கு தமிழக அரசு தடை
விதித்தது.சட்டம் ஒழுங்கை
சீர்குலைக்கும் வகையிலும், தமிழக, கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கும்
நோக்கத்துடனும் எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்கு தடை விதிப்பதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கை ஊழல்வாதி போல் இப்படத்தில் சித்தரித்துள்ள தால் தென் தமிழக மக்களும் கொதிப்படைந்துள்ளனர்.
இயக்குனர் சோஹன்ராயோ, ‘டேம் 999’ படத்திற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு நிற்காமல், இப்படத்தை பார்த்த பின்னர் முல்லை பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட தமிழக அரசே ஒத்துழைக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அவரது விபரீத எண்ணம் தெளிவாகி உள்ளது.இந்நிலையில் இதுதொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கேரள மாநிலத் தில் அனைவரையும் இப்படத்தை பார்க்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்களுக்கு, இப்படத்தின் சிடிக்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக லட்சக்கணக்கில் சிடிக்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சிலர் இதற்கு மறைமுக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அப்படி என்ன தான் எடுத்துள்ளார்கள் என்று பார்க்கும் ஆர்வம் பலரிடையே ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தமிழகத்திலும் மெல்ல சிடிக்களை விற்பனைக்கு விட முடிவு செய்துள்ளனர். இதற்காக திருட்டு சிடி கும்பலுக்கு வலை விரிக்கப்பட்டு வருகிறது.
கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், திருட்டு சிடி கும்பல்களும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து ‘டேம் 999’ படத்தின் சிடிக்களை கொண்டு வந்து, தங்களுக்கு உள்ள ரகசிய தொடர்புகள் மூலம் விற்பனைக்கு விட இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. அரசு தடை செய்துள்ள படத்தை, எப்படியும் தமிழக மக்களை பார்க்க செய்து, அதன் மூலம் பிரச்னைகளை உருவாக்கி குளிர்காய சிலர் நினைக்கின்றனர். எனவே ‘டேம் 999’ படத்தின் திருட்டு சிடிக்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும். அதிரடி சோதனை நடத்தி, சிடிக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதற்கு உறுதுணையாக இருப்போர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
8 ஆயிரம் ரூபாய்க்காக 31 ஆண்டு நடந்த வழக்கு
தூத்துக்குடியில்
ஏகாம்பரேஸ்வரர் எண்ணெய் மில் உள்ளது. இந்த மில்லில் இருந்து 1979ம்
ஆண்டில், தலா 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 டின்களில் தேங்காய் எண்ணெய்,
மதுரை திருமங்கலத்தில் உள்ள குடோனுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த லாரி
நெல்லை&கோவில்பட்டி இடையே விபத்தில் சிக்கி, டின்கள் உடைந்து எண்ணெய்
கொட்டியது. பின்னர், மீதி எண்ணெய் டின்கள் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கொண்டு வரப்பட்ட தேங்காய் எண்ணெய் விற்பதற்கு உகந்ததாக இல்லை
என்றும், இதனால் அதற்கு இழப்பீடாக 8,142
வழங்குமாறு லாரி புக்கிங் ஏஜென்ட் வரம்பெற்றானுக்கு, எண்ணெய் மில் நிர்வாகி பாஸ்கரபாண்டியன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.வரம்பெற்றான் பணம்
வழங்க மறுத்ததால், எண்ணெய் நிறுவனம் தூத்துக்குடி சப்& கோர்ட்டில் மனு
தாக்கல் செய்தது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மாவட்ட கோர்ட்டில்
மேல்முறையீடு மனுவும் தள்ளுபடியானது. அந்த உத்தரவை எதிர்த்து பாஸ்கரபாண்டியன், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார்.மனுதாரர் வழக்கில்
எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி உரிமையாளரை சேர்க்கவில்லை. லாரி ஏஜென்டிடம்
பணம் கேட்பது முறையல்ல. காலம் கடந்து விட்டது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்க
முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரே ஒரு அரிசி 1000 ரூபாய்! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும்!
திண்டுக்கல்லைச்
சுற்றியுள்ள வடமதுரை, நத்தம், சாணார்பட்டி ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த சில ஆண்டுகளாக சட்டத்திற்குப் புறம்பான
செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.16 ஆண்டுகளுக்கு முன்
சிறுமலையில் மான்கள், கேளை ஆடுகள் மற்றும் அரிய வகைக் குரங்களை சமூகவிரோதக்
கும்பல் வேட்டையாடி வெளிமாவட்டங்களில் விற்பனை செய்து வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் நவரத்தின கற்களை குறைந்த விலையில் தருவதாக கூறி போலி கற்களை விற்பனை செய்து வந்தனர்.
இதனால் பணத்தை இழந்தோர் திண்டுக்கல் தாலுகா, வடமதுரை, நத்தம், சாணார்பட்டி காவல்நிலையங்களில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை சேர்ந்த பலரை கைது செய்தனர்.சமூக விரோத கும்பல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ குணம் கொண்ட மணியன் பாம்பு இருப்பதாக பலரை ஏமாற்றி பணம் பறித்தனர். சில மாதங்களுக்கு முன்பு கை, கால்கள் செயல் இழந்தவரை வலம்புரிசங்கு, நாகக்கல் மூலம் குணப்படுத்தமுடியும் என கூறி பணம் பறித்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஒரு கும்பல் ‘பூஜை அரிசி’ என்ற பெயரில் நூதன மோசடியை ஆரம்பித்துள்ளது. ஒரே ஒரு அரிசியின் விலை ரூ.1000 எனவும், இந்த அரிசியை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பொங்கும், வியாபாரம் பெருகும், குழந்தைகளுக்கு கல்வி அறிவு வளரும் என கூறி வருகின்றனர். இதை நம்பி பலரும் ஏமாந்து வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் சுப்புராஜ் கூறுகையில், திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள நத்தம், வடமதுரை, சாணார்பட்டி பகுதிகளில் தொடர்ந்து நூதனமோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக விரோத கும்பலால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.

பணத்தை இழந்த ஒரு சிலரே
புகார் கொடுக்கின்றனர். பலர் குடும்ப கவுரவத்திற்காக காவல்நிலையங்களில்
புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சமூக
விரோதக் கும்பல் ஏராளமானோரை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. இவர்கள் மீது
மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார். இதுகுறித்து
திண்டுக்கல் எஸ்பி ஜெயசந்திரன் கூறுகையில், “இதுபோன்ற புகார்கள் குறித்து
விசாரணை நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்களில்
ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
Subscribe to:
Posts (Atom)