|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

சந்திரபாபு வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெற்றேன் டைரக்டர் பாக்யராஜ்!

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள `பேம் நேஷனல்' தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது சாப்ளின் சாமந்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை இந்த படத்தின் டைரக்டர் பிரகாஷ் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தபோது, படத்தின் கதையை சொன்னார்.

கதையை கேட்டு முடித்ததும், அவர் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. இப்படி ஒரு கதையை நாம் யோசிக்கவில்லையே என்பதால் ஏற்பட்ட பொறாமை அது.எப்போதுமே நிஜ வாழ்க்கையில் நாம் சந்தித்த கதாபாத்திரங்களை படமாக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை கருவாக வைத்துதான் `அந்த 7 நாட்கள்' படத்தை எடுத்தேன். சந்திரபாபு முதல் இரவு அன்றே மனைவியின் காதல் பற்றி கேள்விப்பட்டு, மனைவியை காதலருடன் அனுப்பி விடுவார். அந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த `அந்த 7 நாட்கள்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும்’’என்று பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...