தூத்துக்குடியில்
ஏகாம்பரேஸ்வரர் எண்ணெய் மில் உள்ளது. இந்த மில்லில் இருந்து 1979ம்
ஆண்டில், தலா 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 டின்களில் தேங்காய் எண்ணெய்,
மதுரை திருமங்கலத்தில் உள்ள குடோனுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த லாரி
நெல்லை&கோவில்பட்டி இடையே விபத்தில் சிக்கி, டின்கள் உடைந்து எண்ணெய்
கொட்டியது. பின்னர், மீதி எண்ணெய் டின்கள் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கொண்டு வரப்பட்ட தேங்காய் எண்ணெய் விற்பதற்கு உகந்ததாக இல்லை
என்றும், இதனால் அதற்கு இழப்பீடாக 8,142
வழங்குமாறு லாரி புக்கிங் ஏஜென்ட் வரம்பெற்றானுக்கு, எண்ணெய் மில் நிர்வாகி பாஸ்கரபாண்டியன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.வரம்பெற்றான் பணம்
வழங்க மறுத்ததால், எண்ணெய் நிறுவனம் தூத்துக்குடி சப்& கோர்ட்டில் மனு
தாக்கல் செய்தது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மாவட்ட கோர்ட்டில்
மேல்முறையீடு மனுவும் தள்ளுபடியானது. அந்த உத்தரவை எதிர்த்து பாஸ்கரபாண்டியன், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார்.மனுதாரர் வழக்கில்
எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி உரிமையாளரை சேர்க்கவில்லை. லாரி ஏஜென்டிடம்
பணம் கேட்பது முறையல்ல. காலம் கடந்து விட்டது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்க
முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’என்று நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment