ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
03 October, 2011
இதே நாள்...
ஐஐடிகளுக்கு தகுதி குறைவான மாணவர்கள் வருகின்றனர் நாராயணமூர்த்தி!
ஐஐடிகளில்
படித்துவிட்டு வெளியேறும் பொறியாளர்களின் தகுதி குறித்து அதிருப்தியை
வெளிப்படுத்திய இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, இதுபோன்ற மதிப்புவாய்ந்த
தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை அனுமதி கோரும் மாணவர்களைத் தேர்வு
செய்யும் நடைமுறையை மறுஆய்வுசெய்வது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
நியுயார்க்கில் 'பான் ஐஐடி' உச்சிமாநாட்டில் முன்னாள் ஐஐடி மாணவர்களிடையே நாராயணமூர்த்தி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். சமீபகாலமாக
பொறியியல் மாணவர்களைத் தயார்செய்யும் பயிற்சி வகுப்புகள் காரணமாக
ஐஐடிக்களில் நுழையும் மாணவர்களின் தகுதி மிகவும் மோசமடைந்துள்ளது என
நாராயணமூர்த்தி தெரிவித்தார். பெரும்பாலான மாணவர்கள் தங்களின்
பணிகளிலும், உயர் வகுப்பு பயிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகுதி
குறைந்தவர்களாகவே உள்ளனர் என அவர் கூறினார்.
80 சதவீத மாணவர்கள்
கூட்டு நுழைவுத் தேர்வு மூலமாக எப்படியோ இடங்களைப் பெற்றுவிடுகின்றனர்.
ஆனால் ஐஐடிக்கள், பணியிடங்கள் அல்லது உயர்கல்விக்காக அமெரிக்கா உள்ளிட்ட
நாடுகளின் நிறுவனங்களுக்கு அவர்கள் வரும்போது அவர்கள் திறமை
பயன்படுத்தப்படக்கூடிய அளவில் நன்றாக இல்லை. இந்த நிலைமை மாற்றப்பட
வேண்டும். ஐஐடிக்கு மாணவர்களைத் தேர்வுசெய்வதில் புதிய முறையை ஏற்படுத்த
வேண்டும் என அவர் கூறினார்.
ரத்தசோகையை குணமாக்கும் வாயுவிளங்கா வேர்!
இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் வளரும் கொடி வகையினைச் சேர்ந்த மூலிகைத்
தாவரம் வாயுவிளங்கா. இது வெண்மை மற்றும் பச்சை வண்ணமுடைய மலர்களைக்
கொண்டது. இதன் இலைகள், வேர், வேர்பட்டை மற்றும் கனி விதைகள் மருத்துவப்
பயன் கொண்டவை. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: விதைகளில்
எம்பிளின் எனும் ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எஸ்ட்ரோஜென்
மற்றும் புரோஎஸ்ட்ரோஜென் போன்றவற்றை உருவாக்க எம்பெளின் உதவுகிறது.நிமோனியாவிற்கு மருந்து: இளம்
இலைகள் இஞ்சியுடன் சேர்ந்து வாய்ப்புண் மற்றும் நாட்பட்ட புண்களுக்கு
கொப்பளிப்பாக உதவுகின்றன. வேர்பட்டையின் தூள் பல்வலிக்கு சிறந்த
மருந்தாகும். வேர்ப்பட்டையின் களிம்பு நிமோனியா காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்பில் பூசப்படுகிறது. வேரின் கஷாயம்
இருமல் மற்றும் வயிற்றுப் போக்கினைச் சரிப்படுத்தும். கனிகள் ஜீரணம்
மற்றும் உடலின் நலம் தேற்றுதல், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றல்,
சீதபேதியினை கட்டுப்படுத்தல், தசைகள் சுருக்கியாக பலவகைகளில்
பயன்படுகின்றன. ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றிலும்
உதவுகிறது.குளுமை தரும் கனி: விதைகளின்
பொடி வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. விதைகளின் வடிநீர்
காய்ச்சல், தோல்நோய்கள், மற்றும் மார்புவலி போன்றவற்றில் பயன்படுகிறது.
கருத்தடையாகவும் பயன்படுகிறது.கனியின் சதைப்பகுதி பேதி தூண்டும். கனியின்
சாறு குளுமை தருவதுடன் வியர்வை தூண்டுவியாகும் மலம் இளக்கியாகவும்
செயல்படுகிறது.
பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம்!
பிரியமானவளே' திரைப்பட பாணியில், 2 ஆண்டு தற்காலிக திருமண ஒப்பந்த
சட்டத்தை, மெக்சிகோ நாட்டில் விரைவில் அமல்படுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் திருமணம் செய்து கொள்வதும்,
உடனே விவகாரத்து கேட்பதும் சர்வசாதாரணம். விவகாரத்து வழக்கு
நீதிமன்றங்களில் குவிந்து, கால விரயம் ஏற்படுகிறது. மெக்சிகோவில் ஒரின
சேர்க்கை திருமணங்களையும் அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதால்,
திருமணங்கள் எதுவுமே அதிக ஆண்டுகள் நிலைத்து நிற்பதில்லை என்ற குற்றசாட்டு
எழுந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் அமெரிக்காவை போலவே 50 சதவீத
திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்த நிலையை களைய மெக்சிகோ நாட்டின்
திருமண சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி
திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் முதலில் 2 ஆண்டுகள் சேர்ந்து
வாழ்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். அந்த 2 ஆண்டுகள் சேர்ந்து
வாழ்ந்த பின்னும் சுமூகமான உறவு தொடந்தால், அந்த திருமண ஒப்பந்தத்தை
மேலும் நீட்டித்து கொள்ளலாம். தம்பதியரிடையே சண்டை, சச்சரவுகள் எழுந்து
மனமுடையும் நிலை ஏற்பட்டால், அந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாங்களாகவே
பிரிந்து சென்றுவிடலாம். விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு வர வேண்டிய அவசியம்
இல்லை.
இதற்கு யாரும் நீதிமன்றத்திற்கு சென்று விவகாரத்து கேட்டு
காத்திருக்க வேண்டியதில்லை. இதன்மூலம் நீதிமன்றத்தின் காலவிரயம்
தவிர்க்கப்படும். இந்த சட்டத் திருத்தத்தை விரைவில் கொண்டு வர, நாட்டின்
ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தரப்பில் ஆதரவு கிடைத்துள்ளது. சில
கிறிஸ்தவ சங்கங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டம்
கொண்டு வரப்பட்டால், கிறிஸ்தவ திருமணங்களில் ஏற்கப்படும் உறுதிமொழிகளில்
ஒன்றான, மரணம் நம்மை பிரிக்கும் வரை சேர்ந்து வாழ்வேன் என்ற வாக்கியம்
பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு சட்ட
வல்லுநர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள்
கூறியதாவது, இந்த சட்டத்திருத்தம் வந்தால், திருமண உறவின் தன்மை
சிதைந்துவிடும். சட்டசபை உறுப்பினர்களின் பொறுப்பற்ற தன்மையே இந்த
சட்டத்தின் மூலம் தெரிகிறது. ஒரின சேர்க்கை திருமண சட்டமே, திருமண உறவிற்கு
விரோதமானது. இந்நிலையில் ஒப்பந்த திருமண சட்டமும் அமலுக்கு வந்தால்,
திருமணத்தின் மொத்த சிறப்பும் இழந்துவிடும், என்றனர்.
நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாயின்!
மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள்,
மருந்து, விறகு, சுத்தமான காற்று போன்றவை கிடைக்கின்றன. மரங்களை விட மிக
அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப்
பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு
நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து,
செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’
இவை சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாயின் சொற்கள்.
இயற்கையை நேசித்து மரங்களின் அன்னையாக வாழ்ந்த வங்காரி மாத்தாய் கடந்த
ஞாயிறன்று மரணமடைந்து விட்டார் என்ற செய்தி இயற்கை ஆர்வலர்களுக்கு
அதிர்ச்சிகரமானதுதான்.
டீத் தூளில் கலப்படத்தை ஒழிக்க முடியாது தென்னிந்திய தேயிலை வாரியம்!
சில்லரை வணிகத்தில் தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க
முடியாது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து
செய்ய முடியும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன்
பேசினார். கோவை வெள்ளக்கிணறு தேயிலை வர்த்தக சங்க 29வது பொதுக்குழு
கூட்டம், தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தென்னிந்திய தேயிலை
வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் கலந்து கொண்டு பேசியதாவது, தென்னிந்திய
தேயிலைத் தூள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு ஏற்றுமதியாகும் தேயிலைத் தூளை
கேரளாவில் மதிப்பு கூட்டு வரி இல்லை என்பதால் கேரளாவில் உள்ள கொச்சியில்
இருந்து அனுப்புகின்றனர். தமிழகத்தில் ஏற்றுமதிக்கான மதிப்புக் கூட்டு வரி
(வாட்) நடைமுறையில் உள்ளதால், வர்த்தகர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல
கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சில்லரை வணிகத்தில்
தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. கலப்படம் செய்வது
கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும்.
நுகர்வோர்கள் தான் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நீலகிரி,
கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 1998ம் ஆண்டு பதியப்பட்ட
எஸ்டேட்டுகளில் தற்போது 9 விழுக்காடு நிலப்பரப்பு குறைந்து காணப்படுகிறது.
தேயிலை எஸ்டேட்டாக பயன்படுத்தப்பட்ட நிலத்தை சிலர் ரியல் எஸ்டேட்
தொழிலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு வர்த்தக நோக்கத்துடன்
பயன்படுத்தும் அந்த நிலங்களை தேயிலை வாரியம் திரும்ப எடுத்துக் கொள்ளும்.
இந்தியாவில் 6 தேயிலை கொள்முதல் மையங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் கொச்சி,
கோவை, குன்னூரில் உள்ளன. இதில் இந்திய அளவில் கோவை 5வது இடத்தில் உள்ளது,
என்றார்.
புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்!
நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அளப்பறிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய்
உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந்துள்ளது. வெள்ளை நிறப்
பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும் சுரைக்காயை பல
இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள்.
இந்தியச்
சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று
கூறப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது
இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.
சுரைக்காயில்
ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் பாட்டில்கார்டு
(Bottle Gourd) என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப்
பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை
இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப்
பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப்
பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சுரைக்காயின் இலை, கொடி, காய்,
விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
Subscribe to:
Posts (Atom)