ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
18 November, 2011
இந்த வார ராசி பலன்(18-11-11 முதல் 24-11-11 வரை)
மேஷம்
பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மற்றவர்களால் முடியாத காரியங்களைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். உடல்நலம் மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பெண்களுக்கு: குடும்பம் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக முடியக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
ரிஷபம்
பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. வழக்குகள் சாதகமாக முடியும். வீண் பேச்சைக் குறைக்கவும். மனதில் புது தெம்பு பிறக்கும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கடன் தொல்லை தீரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.
மிதுனம்
பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்களை எளிதில் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கடகம்
பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உடல் நலனில் கவனம் செலுத்தவும். எதிலும் நிதானம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளால் சந்தோஷம் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பட்டிருந்த சிக்கல் தீரும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும்.
சிம்மம்
பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டே இருந்த ஒரு காரியம் நடக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். ஆலய வழிபாடு நிம்மதி அளிக்கும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். கொடுக்கும் வேலைகளை திறம்படச் செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
கன்னி
பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். இருப்பினும் வீண் செலவுகளைக் குறைக்கவும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உறவினர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. சுப நிகழ்ச்சிகள் தடையைத் தாண்டி நல்லபடியாக நடக்கும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.
துலாம்
பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாக்குறுதியளிக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்.
விருச்சிகம்
பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டு
பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடத்தி சந்தோஷப்படுவீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
தனுசு
பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெரியோர் ஆசி கிடைக்கும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம்விட்டு பேச வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
மகரம்
பொது: ஆனந்தமான வாரம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பண வரவுக்கு குறைவிருக்காது. நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். உங்கள் வேலைகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
கும்பம்
பொது: சிறப்பான வாரம். எடு்ககும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். வீண் செலவுகளைக் குறைக்கவும்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செலுத்தவும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்துகொள்ளத் திட்டமிடுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் பாராமுகமாகவே இருப்பார்கள். எதிலும் நிதானம் தேவை.
மீனம்;
பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். எதையும் யோசித்து நிதானமாகச் செய்யவும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது.
தமிழர்கள் மறு குடியமர்த்தும் பணி ...!
இலங்கைத் தமிழர்களை குடியமர்த்துவதற்காக, அந்நாட்டு அரசு, 1,336 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இலங்கையில், அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது, திரிகோணமலை, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான மக்கள் வெளியேறி, அகதிகள் முகாமில் தங்கினர். புலிகளுடனான சண்டை முடிந்து விட்டதால், குடிபெயர்ந்த தமிழர்களை, மீண்டும் அவரவர் இடங்களில் குடியமர்த்தும்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகள், இலங்கை அரசை வற்புறுத்தி வருகின்றன. கடந்த 2009ம் ஆண்டு நடந்த சண்டையின் போது, 3 லட்சம் தமிழர்கள் அகதிகள் முகாமில் தங்கினர். படிப்படியாக, இவர்களை குடியமர்த்தும் பணி நடக்கிறது. இது குறித்து, இலங்கை தகவல் தொடர்பு அமைச்சர் ராம்புக்வெலா குறிப்பிடுகையில், "இன்னும் 10 ஆயிரம் பேரை குடியமர்த்த வேண்டியுள்ளது. முல்லைத் தீவில் 1,672 குடும்பங்களும், திரிகோணமலையில் 1,272 குடும்பங்களும், மன்னார் பகுதியில் 116 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்கு, 1,336 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை கொண்டு, தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும்' என்றார். "தமிழர்களுக்கு அதிகாரப் பங்களிப்பு குறித்து, அமைப்பு ரீதியான பேச்சு வார்த்தை, அடுத்த மாதம் மூன்று நாட்கள் நடக்கும்' என, இலங்கை அரசின் பிரதிநிதியும் எம்.பி.யுமான, ராஜிவா விஜேசிங்கா தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3% ஒதுக்கீடு!
தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வீட்டு வாரிய குடியிருப்புகள் மூலம் கட்டப்படும் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், மற்றும் மனைகள் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள், ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவிகிதம் மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமூகநலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி முதலமைச்சருக்கு வேண்டுதல் விடுக்கப்பட்டது.
அரசாணை வெளியீடு அந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்த சலுகையை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம்!
தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.
இந்தியா இரண்டாவது இடம் உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்.
பாதிப்பிற்கு காரணம் இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
குழந்தைகளுடன் விவாதியுங்கள் தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.
கண்காணிப்பு அவசியம் சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை. கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள்.
பெண் குழந்தையா கூடுதல் கவனம் பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை.தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய "குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:
இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன. உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.
தூதுவளைப் பூ!
கணீரென்ற குரல் வேண்டுமென்றால் தூதுவளை தாவரத்தை பறித்து கசாயம் செய்து உட்கொள்வர். அதற்கு மாற்றாக இப்பொழுது தூதுவளை சாக்லேட் விற்பனைக்கு வந்து விட்டது. இருந்தாலும் இயற்கைக்கு ஈடாகுமா? தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். சித்தமருத்துவத்தில் தூதுவளையின் பங்கு முக்கியமானது. இது காயகல்ப மருந்து என்று அழைக்கப்படுகிறது.
இளமையை தக்க வைக்க வயதானலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும். தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.
உடல் வலுவடையும் தூதுவளைப்பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல செய்து சாப்பிட ருசியாக இருக்கும், உடல் வலுவடையும். தூதுவளைப் பூக்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒருவேளை மட்டும் அருந்தவும். இதனால் நரம்புகள் இறுகும். உடல் உறுதி பெறும். ஆண்மை பெருகும்.
இனி அந்த கண்களும் தெரியாத அளவுக்கு...?
சவூதி அரேபியாவில் உள்ள பெண்கள் கண் தெரியும் வகையில் பர்தா அணிகின்றனர். இனி அந்த கண்களும் தெரியாத அளவுக்கு பர்தா அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கக்கூடும் என்று தெரிகிறது.சவூதி அரேபியாவில் பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது. ஆனால் அவர்கள் கண்கள் தெரியும் வகையில் பர்தா அணிவது உண்டு.
காந்தக் கண்களால் மற்றவர்கள் கவனத்தை பெண்கள் கவர்வதாகக் கூறி, அதை தடுக்கும் வகையில் இனி கண்களும் வெளியே தெரியாத வகையில் பர்தா அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கவிருக்கிறது அந்நாட்டின் நன்னெறி காப்பு மற்றும் தீய எண்ணங்கள் தடுப்புக் குழு.பிக்யா மஸ்ர் என்று இணையதளம் கூறியதாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது,
பெண்கள் பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் கண்கள் தெரியும்படி பர்தா அணியக்கூடாது என்று உத்தரவிடும் உரிமை இந்த குழுவுக்கு உள்ளது என்று நன்னெறிகளைக் காப்போம், தீய எண்ணங்களை தடுப்போம் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோத்லப் அல் நபெத் தெரிவித்துள்ளார். சவூதியில் பெண்கள் பொது இடங்களுக்கு பர்தா இல்லாமல் வரக்கூடாது. அப்படி வந்தால் அபராதம், கசையடி போன்ற தண்டனைகள் விதிக்கப்படும். நன்னெறிகளை காப்போம், தீய எண்ணங்களை தடுப்போம் குழு கடந்த 1940ம் ஆண்டு துவங்கப்பட்டது. சவூதியில் இஸ்லாமியச் சட்டங்கள் மீறப்படாமல் இருக்கிறதா என்று அந்த குழு கண்காணித்து வருகிறது.
தேசியக்கொடி அவமதிப்பு மபி முதல்வர், சுஷ்மாவுக்கு பிடிவாரண்ட்!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றம் தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான், பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் 2 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் துவாரகா பிரசாத் ஜாட் என்பவர் நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, 31-3-2010 அன்று செஹோர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்சில் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது பாரத மாதா போன்று ஒரு சிறுமியை அலங்கரித்து அவள் கையில் தேசியக் கொடி கொடுத்து ஊர்வலமாக கூட்டி வந்தனர். அந்த சிறுமி கையில் இருந்த தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. அப்போது நடந்த பேரணியில் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் வாகனங்களுக்கு முன்பு சிறுமி இருந்த வாகனம் சென்றது. ஆனால் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இந்த விழா மற்றும் பேரணியில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், அப்போதைய செஹோர் கலெக்டர் சந்தீப் யாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜாபர் இக்பால் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், சந்தீப் யாதவ் மற்றும் செஹோர் மாவட்ட பாஜக தலைவர் ரகுநாத் சிங் பாட்டி ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த 4 பேர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி விஜய் மால்வியா பிடிவாரண்ட் மீது தடை உத்தரவு பிறப்பித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, 31-3-2010 அன்று செஹோர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்சில் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது பாரத மாதா போன்று ஒரு சிறுமியை அலங்கரித்து அவள் கையில் தேசியக் கொடி கொடுத்து ஊர்வலமாக கூட்டி வந்தனர். அந்த சிறுமி கையில் இருந்த தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. அப்போது நடந்த பேரணியில் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் வாகனங்களுக்கு முன்பு சிறுமி இருந்த வாகனம் சென்றது. ஆனால் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இந்த விழா மற்றும் பேரணியில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், அப்போதைய செஹோர் கலெக்டர் சந்தீப் யாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜாபர் இக்பால் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், சந்தீப் யாதவ் மற்றும் செஹோர் மாவட்ட பாஜக தலைவர் ரகுநாத் சிங் பாட்டி ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த 4 பேர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி விஜய் மால்வியா பிடிவாரண்ட் மீது தடை உத்தரவு பிறப்பித்தார்.
ஆயுள் தண்டனை அனுபவிக்கும் மன நலம் குன்றிய பெண்!
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள மன நலம் பாதித்த பெண்ணை முன்னதாக விடுதலை செய்யும் வழக்கில் இரண்டு வார காலத்திற்கு பதிலளிக்க கோரி தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் இயக்குனர் பி.புகழேந்தி தாக்கல் செய்த ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
புகழேந்தி தாக்கல் செய்த மனுவின் விபரம்: கடந்த செப்டம்பர் மாதம் வேலூர் சிறையில் உள்ள நளினியை பார்க்க சென்றிருந்தேன். அப்போது அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பக்கா என்ற விஜயா (52) என்ற பெண்ணைப் பற்றி தெரியவந்தது. அந்தப்பெண்ணும், அவரது கணவர் சுப்பிரமணியும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 10.4.90 அன்று முதல் சிறையில் இருக்கின்றனர். கடந்த 21 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளதால் விஜயாவின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. யாரிடமும் அவரால் பேச முடியவில்லை. அவரது கணவருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உறவினர்களின் உதவியும் இல்லை.
ஆஜர்படுத்த வேண்டும் எனவே விஜயாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு மனு கொடுத்தேன். விஜயாவுக்கு முன்கூட்டியே விடுதலை அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான தகுதியை விஜயா பெற்று 19 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. எனவே விஜயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு நோட்டீஸ் இந்த மனு நீதிபதிகள் சி.நாகப்பன், டி.சுதந்திரம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த்து. மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆஜர்படுத்த வேண்டும் எனவே விஜயாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு மனு கொடுத்தேன். விஜயாவுக்கு முன்கூட்டியே விடுதலை அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான தகுதியை விஜயா பெற்று 19 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. எனவே விஜயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு நோட்டீஸ் இந்த மனு நீதிபதிகள் சி.நாகப்பன், டி.சுதந்திரம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த்து. மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கேள்வித்தாள் அவுட்: 4 அரசு அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை!
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில், மத்திய அரசு பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட தேர்வும் ஒன்று. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த சி.பி.எஸ்.இ. தேர்வின்போது, அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேரில் தேர்வுக்கு முன்னதாகவே கணிதம், அறிவியல் ஆகிய தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் அவுட்' ஆயின. இந்த கேள்வித்தாள்கள் பல லட்சம் ரூபாய்க்கு அங்கு விற்பனையானது. அந்தமான் தீவுகளில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட மண்டலத்தில் இணைந்தவை ஆகும்.
ஆகவே, இந்த கேள்வித்தாள் அவுட்' ஆன விவகாரம் சென்னை உள்பட தமிழ் நாட்டின் பல நகரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து அவுட்' ஆன கேள்வித்தாள்கள் அந்தமானில் வைக்கப்பட்டு இருந்த லப்பாத்தி பள்ளிக்கூடத்தின் முதல்வர் கிருஷ்ணம் ராஜபு, அரசு உதவிப் பொறியாளர் ரஷீத், போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் சலாம், காட்டிலாகா அதிகாரி ஒருவர், போலீஸ்காரர் அருண் ஆகிய 5 பேர் மீது போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது அரசு ரகசியங்களை திருடி விற்றது, நம்பிக்கை மோசடி செய்தது, சதித்திட்டம் தீட்டியது, ஊழல் செய்தது உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் மீது போர்ட்பிளேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.16.11.2011 இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் போலீஸ்காரர் அருண் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட்' ஆன வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு கல்வி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வியாழன் கிரகத்தில் தண்ணீர்!
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன், இங்கு பல சந்திரன்கள் உள்ளன. எனவே, வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது. அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர். இந்த நிலையில், வியாழன் கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. “யூரோப்பா”வில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி தெரிவித்துள்ளார்.
நிர்வாண படம் வெளியிட்ட பல்கலைக்கழக மாணவி!
எகிப்தில் கருத்துகளை வெளியிடும் உரிமை உள்பட பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கெய்ரோ பல்கலைக்கழக மாணவி அலியா மக்டா எல்மாடி, இன்டர்நெட் ‘பிளாக்’கில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு மதவாதிகளும், முற்போக்காளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்தில் கலை கண்ணோட்டத்துடன் கூட நிர்வாண படங்கள் வெளிவருவதை விரும்புவதில்லை. பொது இடங்களில் செல்லும் பெண்கள், முகத்தை மறைத்தபடி செல்ல வேண்டும். கைகள், கால்கள் தெரியும்படி ஆடை அணிய கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.
இந்நிலையில் மாணவி தனது நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வரும் 28ம் தேதி எகிப்து நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கிறது. இதில் பழமைவாத கட்சிகளை தோற்கடிக்கும் முயற்சியாகவே நிர்வாண படங்கள் வெளியிடப் பட்டுள்ளது. தேர்தலில் இந்த படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முற்போக்காளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், ‘எகிப்தில் வன்முறை, இனமோதல், செக்ஸ் சித்ரவதை, மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நிர்வாண படங்கள் வெளியிட்டேன்’ என்று அலியா தனது பிளாக்கில் விளக்கம் அளித்துள்ளார். ‘பிளாக்’கில் படங்கள் வெளியான ஒரு வாரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அதை பார்த்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்கல் முன்பதிவு முறையில் மாற்றம்!
ரயில் டிக்கெட் முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ளலாம் என்றாலும், கடைசி நேரத்தில் அவசர வேலையாக செல்பவர்களுக்கு வசதியாக, கூடுதல் கட்டணத்துடன் தட்கல் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி ரயிலில் பயணம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக தட்கல் முன்பதிவு தொடங்கப்பட்டது. ஆனால் தட்கல் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தட்கல் முன்பதிவு ஒரு நாளுக்கு முன்பு தான் செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை ரெயில்வே அறிவித்தது. இந்த நிலையில் வரும் 21-ந் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.
கென்யா - கடவுளின் நாடு!
நான் கென்யா செல்கிறேன்' என்றதும் என் நண்பர்கள் பலரும் கேட்டனர்: "கென்யாவா அங்கே என்ன இருக்கு?' என்று. அங்கு என்ன இல்லை? பரந்து விரிந்த காடுகளும், பயமின்றித் திரியும் விலங்குகளும், நட்போடு பழகும் மனிதர்களும் நிறைந்த அற்புத நாடு கென்யா! நானும் என் மகள்கள் இருவரும், சிறு தூறல் விழுந்து கொண்டிருந்த அதிகாலையில் நைரோபி ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில் கால் பதித்தோம். ஜாகாரண்டா மரங்கள் ஊதாப்பூக்களை வாரிக் கொட்டியிருந்தன. எங்கள் விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம் வாகனங்கள் மெதுவாகவே சென்று கொண்டிருந்தன. யாரும் யாரையும் முந்தவில்லை. காது கிழிகிற மாதிரி ஹாரன் ஒலிக்கவில்லை. சாலையின் இரு புறங்களிலும் பெரிய மரங்கள். அவற்றின் உச்சியில் பெரிய கொக்குகள் கூடு கட்டியிருந்தன. சாலையில் இத்தனை பரபரப்பு இருந்தும் அவை பாட்டுக்குப் பயமின்றி உலவின.
நைரோபியில் ஒட்டகச்சிவிங்கிக் காப்பகத்திற்குச் சென்றோம். அங்கே நெடிய அழகிய ஒட்டகச்சிவிங்கிகள் பெரிய கண்களுடன் நிதானமாக நடைபோட்டுக்கொண்டிருந்தன. காப்பகத்தின் காப்பாளர் எங்களிடம் சிறிது உணவைக்கொடுத்து அதைச் ஒட்டகச்சிவிங்கிகளுக்குக் கொடுக்கச் சொன்னார். அவை சிறிதும் பயப்படாமல் எங்கள் கைகளிலிருந்த உணவை கவ்விச் சாப்பிட்டன. மறுநாள் நக்குரு ஏரியை நோக்கிப் பயணித்தோம். இந்த ஏரி ஃப்ளமிங்கோ பறவைகளுக்குப் பிரசித்தம். வனப் பகுதிக்குள் நுழைந்ததும் வரிக்குதிரைகளும் "கசல்' என்னும் மான்களும் கூட்டம் கூட்டமாய்த் தென்பட்டன. எங்கள் வழிகாட்டி யூசுப், ""எல்லா வகையான விலங்குகளையும் நீங்கள் பார்க்கலாம்... ஆனால் சிறுத்தையைப் பார்ப்பது மட்டும் கடினம். அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம்'' என்றார்.
அதிர்ஷ்ட தேவதையின் காதில் அது விழுந்திருக்க வேண்டும்! விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மேல் ஒரு சிறுத்தை அரைத் தூக்கத்தில் படுத்துக் கிடந்தது. இன்னும் "டோப்பி' எனப்படும் பெரிய மான்கள், காட்டெருமைகள், வெள்ளை நிறக் காண்டாமிருகங்கள் ஆகியவற்றையும் பார்த்தோம். ஒரு நீண்ட வளைவில் சென்று திரும்பினோம்....... அடடா... அடடா... என்ன அற்புதம்! நீல நிறத்தில் ஏரி. அதன் ஓரங்களில் "பிங்க்' நிறத்தில் பார்டர் போட்டது போல் ஃப்ளமிங்கோப் பறவைக்கூட்டம். பறவைகளின் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. ஏகாந்தம்! "கிரேட் ரிப்ட் வேலி' என்று பூகோளத்தில் நாம் படித்திருப்போமே, அந்த அகண்ட பள்ளத்தாக்கினைக் கடந்து பயணித்தோம். "மவுண்ட் கென்யா சபாரி கிளப்' என்னும் விடுதியை நெருங்கும் நேரம், ஐந்து சிங்கங்கள் உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டிருந்த அரிய காட்சியைக் கண்டோம். விடுதியின் பரப்புக்குள் நுழையும்போது கூட்டம் கூட்டமாக வைல்ட் பீஸ்ட் நின்று எங்களை வியப்புடன் பார்த்தன. இம்மிருகங்களை டிஸ்கவரி சேனலில்தான் பார்த்திருக்கிறோம். இங்கே பத்தடி தூரத்தில் பார்க்கும்போது பரவசமாக இருந்தது.
மறுநாள் புதர்க் காடுகளிடையே பயணம். போகிறோம்... போகிறோம்... போய்க்கொண்டே இருக்கிறோம். ஒருவழியாக "கிகியோ கன்சர்வன்சி' என்னும் இடத்தை அடைந்தோம். அது தனியாருக்குச் சொந்தமான இடம். கென்யாவில் குடியமர்ந்துள்ள இந்தியருக்குச் சொந்தமான இடம். வன உயிரினங்களின் பாதுகாப்புக்கென்றே அவர் இந்த இடத்தை வாங்கிப் பாதுகாக்கவும் செய்கிறார் என்பதை அறிந்தபோது பெருமையாக இருந்தது. அங்கு ஏழே ஏழு குடில்கள்தான் இருந்தன. அவையும் வரவேற்பறையை விட்டுத் தள்ளி இருந்தன. ஒவ்வொன்றும் வெகு தொலைவில் இருந்தன. குடில்களுக்குப் போகும் பாதை நெடுகிலும் பெரிய, உயரமான புதர்கள். அருகில் அகன்ற ஆறு ஒன்று சத்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது. அவ்விடுதியில் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்தும் சூரிய சக்தியில் இயங்குபவை. ""அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் மொத்தமாக இருட்டில் கிடக்க வேண்டியதுதான்...'' என்று விடுதியின் பொறுப்பாளர் கூறினார். நாங்கள் பத்திரமாக இருப்பதை என் கணவரிடம் தெரிவிக்க வேண்டும். அந்தப் பகுதியில் எங்களிடம் செல்போனும் இல்லை. தொலைபேசி இல்லை. ""ஏதாவது ஆபத்து என்றால் எப்படித் தொடர்பு கொள்வது?'' என்று கேட்டேன். அவர் புன்னகையோடு, ""பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. சிறுத்தைகளும் காட்டுப் பன்றிகளும் மட்டும்தான் வரும். குடில்களுக்கு வெளியில் பழங்குடிகளான "மஸôய்' இனத்தினர் காவல் இருப்பார்கள்'' என்று கூறிவிட்டு, ஒரு டார்ச் லைட்டையும் கொடுத்தார்.
எங்களுக்குத் துணை ஒரே ஒரு சமையல் செய்யும் பெண்ணும், ஒரு சர்வரும் (கென்யாவில் விடுதிகளில் விருந்தினர் மட்டுமே தங்கலாம். வாகன ஓட்டுநர்கள் அருகில் 10,15 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராமங்களில்தான் தங்கிக்கொள்ள வேண்டும்!) இருள் நீங்கிவிட்டது. மசாய்க் காவல்காரர்கள் எங்களைக் குடில்களுக்கு அழைத்துச் சென்றனர். இரவு நேரத்தில் காடுகள் உயிர் பெறும் அதிசயத்தைக் கண்டேன். நேரம் ஆக ஆக ஏதேதோ பயமூட்டும் ஒலிகளும் திடீரென்று கிறீச்சிடும் பறவைகளின் சத்தங்களும் கிளம்பி பயமுறுத்த ஆரம்பித்தன. ஜிம் கார்பெட், ஆண்டர்சன் கதைகள் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தன. ரொம்ப நேரம் கழித்து என்னையறியாமல் தூங்கினேன். இரவு முழுதும் சிறுத்தைகள் என்னையும் என் பெண்களையும் "தரதர'வென்று இழுத்துப் போவதுபோல் கனவு கண்டேன். அத்துவானக் காட்டுக்குள்ளே நாங்கள் மூன்று பெண்கள் தன்னந்தனியாக, எங்களுடன் வந்த சக பிரயாணிகளோடு தொடர்பு கொள்ள முடியாத வகையில் இருந்ததை இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. மறுநாள் காலை, உலகப் புகழ் பெற்ற மஸôய் மாராவுக்குப் பயணித்தோம். ஆகா... கண்ணுக்குத் தென்பட்ட இடமெல்லாம் மஞ்சள் நிறப் புல்வெளி. மஸôய் மாரா முழுதும் புல்லும் குட்டையான மரங்களும்தான். ஒரே நாளில் எல்லா மிருகங்களையும் பார்த்தோம். கூட்டம் கூட்டமாக ஆப்ரிக்க யானைகள், காட்டுப்பன்றிகள், வரிக்குதிரைகள், மான்கள், ஒட்டகச் சிவிங்கிகள், காட்டெருமைகள், வைல்ட் பீஸ்ட், பபூன் குரங்குகள், கீரிப்பிள்ளைகள்,கழுதைப் புலிகள், நெருப்புக் கோழிகள், செக்ரெட்டரி பறவைகள் மற்றும் பெயர் தெரியாத பலவகைப் பறவைகளைப் பார்த்தோம்.
இன்னும் உள்ளே சென்றபோது 13 சிங்கங்கள் கூட்டமாக ஒரு வைல்ட் பீஸ்ட்டை வேட்டையாடிக் கொன்று சாப்பிட்டதைப் பார்த்தோம். "ஹிப்போ பூல்' என்னுமிடத்தில் நூற்றுக்கணக்கில் நீர்யானைகள் தண்ணீரில் அமிழ்ந்து எழும்பி மிதந்து கொண்டிருந்தன. முதலைகள் வெயிலில் இளைப்பாறிக் கொண்டிருந்தன. ஒரு மேடு ஏறிக் கீழே இறங்குகிறோம் - ஒரு புதருக்கு அருகில் ஒரு பெரிய ஆண் சிங்கம் உட்கார்ந்திருந்தது. புதரின் பின்புறம் பெண் சிங்கம் படுத்துக் கொண்டிருந்தது. யூசுப் காரை இரண்டடி தூரத்தில் கொண்டு நிறுத்தினார். நெஞ்சு படபடக்க காமிராவிலும் படபடவென்று படமெடுத்தோம். சிங்கங்கள் இரண்டும் எங்களைப் பொருட்படுத்தவேயில்லை! கென்யா தேசத்து மக்கள் காடுகளையும், விலங்குகளையும் நேசிப்பதோடு பூஜிக்கவும் செய்கின்றனர்.
நன்றி: இரா. கற்பகம், கோவை.
வாகன கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி!
போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் செலுத்தும் வசதியை ஒரு மாதத்துக்குள் துவக்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருமளவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், போக்குவரத்து துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலும், புதிய அலுவலகங்களை உருவாக்குதல், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், அனைத்து அலுவலகங்களையும் கணினிமயமாக்கல், போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. போக்குவரத்துத் துறையில் அனைத்து பணிகளும் தற்பொழுது கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இத்துறைக்கென தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக, அஞ்சல் குறியீட்டு எண் மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அறிந்து கொள்ளுதல்; பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்; ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்; பழகுநர் உரிமம் மற்றும் பல்வேறு போக்குவரத்துத்துறை தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் என பல்வேறு சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகத்திற்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் செலுத்துவதற்காக பொது மக்கள் அதிக அளவில் நாள்தோறும் வருகின்றனர். இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் தினந்தோறும் கூடுவதால், பொதுமக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருந்து கட்டணங்கள் மற்றும் வரி செலுத்த வேண்டியுள்ளது. இது பொதுமக்களுக்கு அதிக காலவிரயத்தை ஏற்படுத்துகிறது. எனவே பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கோ அல்லது பகுதி அலுவலகங்களுக்கோ நேரிடையாக செல்லாமல் வீடு அல்லது அலுவலகம் அல்லது கணினி மையம் ஆகிய ஏதாவது ஓரிடத்திலிருந்து கணினி மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ வாகன கட்டணங்கள் மற்றும் வரிகளை நேரிடையாக (Online Payment) போக்குவரத்துத்துறைக்கான இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டத்தினை உடனே துவக்கும்படி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனை செயல்படுத்தும் வகையில், 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகள் மற்றும் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த திட்டத்தினை ஒரு மாத காலத்திற்குள் செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்கள். இந்தப் புதிய திட்டம் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரிடையாக செல்லாமலேயே கட்டணங்கள் மற்றும் வரிகளை கணினி மூலம் செலுத்த வழிவகை செய்கிறது.
பஸ் பாஸ் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு!
பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து பஸ் பாஸ்களின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.30 கட்டணத்தில் ஒரு நாள் பாஸும், ஒரு வார பயன்பாட்டுக்கான ரூ.160-க்கான பாஸும், ஒரு மாத (30 நாள்கள்) பயன்பாட்டுக்கான ரூ. 600-க்கான பாஸும் வழங்கப்பட்டுவந்தது. இந்த ரூ.30-க்கான ஒரு நாள் பாஸ் வாங்குபவர்கள், குறிப்பிட்ட பஸ்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம். இதுபோல் மற்ற பாஸ்களையும், அந்தந்த கால அளவுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாஸ்களின் விலை இப்போது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் பாஸ் ரூ.60-ஆகவும், ஒரு வாரத்துக்கான பாஸ் ரூ.300-ஆகவும், ஒரு மாதத்துக்கான பாஸ் ரூ.1,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயர்வு பயணிகளின் பார்வைக்காக அனைத்து பஸ் டெப்போக்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், ஏற்கெனவே பாஸ் வைத்துள்ளவர்கள் கட்டண உயர்வுக்கான கூடுதல் கட்டணத்தை, ஞாயிற்றுக்கிழமைக்குள் செலுத்திவிடவேண்டும் என மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.
மாவோயிஸ்டுகளின் தாக்குதல் பட்டியலில் மமதா பானர்ஜி!
மேற்குவங்க முதல்வர் மம்தாமற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 12 பேரை படுகொலை செய்ய மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளனர் என்று புலனாய்வு அமைப்பு ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மேற்குவங்க அரசை உஷார்படுத்தியுள்ள ஐபி, மமதா பானர்ஜிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மமதாவைக் கொலைசெய்யும் நக்ஸல்களின் திட்டம் குறித்த துண்டறிக்கைகள் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நேற்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் புலனாய்வு அமைப்பின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கூட்டுப்படையினர் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தருவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவர் என்றும் மாயாவதி சமீபத்தில் அறிவித்திருந்தநிலையில் புலனாய்வு அமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)