|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 June, 2011

இதே நாள்...


  • ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)

  •  இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பிறந்த தினம்(1973)

  •  அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பிறந்த தினம்(1980)

  •  இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)

  •  இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)

  • Many Indian maids at risk of sexual abuse - காத்துல பறக்கவிடுது அல் அசிரா

    The 100th conference of the International Labour Organisation is underway in Switzerland. The future of the world's millions of domestic workers is at the top of the agenda. India has a staggering amount of female domestic workers and many face daily verbal and sexual abuse. Al Jazeera's Prerna Suri reports from New Delhi, India.

    Sexiest Women in the World 2011 - Top 25

    Sri Lanka War Crimes Interview with Donald Gnanakone of Tamils For Justice on Al Jazeera


    வாஞ்சிநாதன் நூற்றாண்டு நினைவு தினம்!

    சுதந்திர போராட்ட தியாகி வீரர் வாஞ்சிநாதன் நூற்றாண்டு நினைவு தினம் வரும் ஜூன் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை செங்கோட்டையில் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தமிழகத்தில் முதன் முதலாக ஆயுதம் ஏந்திய மாவீரன் வாஞ்சிநாதன் செங்கோட்டையை சேர்ந்தவர். சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் 1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17 – ம் நாள் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டு கொன்று விட்டு தானும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டு வீரமரணம் அடைந்தார் வாஞ்சிநாதன்.

    இதனையடுத்து ஆண்டுதோறும் ஜூன் 17ம் தேதி செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. வாஞ்சிநாதன் தனது இன்னுயிரை தியாகம் செய்து இந்தாண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி அவரது நினைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், தென்காசி எம்பி லிங்கம், கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் மற்றும் ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், உள்ளாட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வீரவாஞ்சிநாதனுக்கு மரியாதை, செலுத்தி அவரது தியாகத்தை நினைவு கூறுகின்றனர்.

    இந்நிலையில் செங்கோட்டை முத்துசாமி பூங்கா அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாஞ்சிநாதன் மணி மண்டப பணிகள் வேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம்

    சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ், சுட்டுக்கொல்லப்பட்ட நூறாவது ஆண்டையொட்டி, சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, அயர்லாந்தில் வசிக்கும் ஆஷ் குடும்பத்தினர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். "பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது' என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். சுதந்திரப்போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக இது பதிவானது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆஷின் குடும்பத்தினர் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் குறித்து, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்த பேராசிரியர் எ.ஆர். வெங்கடாசலபதி கடந்த 2006 ம் ஆண்டு ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷை சந்தித்து, ஆஷ் கொலை தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பெற்றார்.

    இன்று ஆஷ் கொலையின் நூறாவது ஆண்டு நினைவுநாள். இதையொட்டி வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு, சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பேராசிரியர் வெங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுபேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள், அவர்கள் ஆட்சியாளர்கள் ஆனாலும், ஒடுக்கப்படுபவர்கள் ஆனாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இப்போது உயிர் வாழும் வாய்ப்பை பெற்றுள்ள நாம், பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது. அன்புடன், ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப்பின், இப்படி ஓர் கடிதம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மோனிகா பெலுச்சி...!

    40 வயதைத் தாண்டியும் கவர்ச்சியில் கிறங்கடித்துவரும் இத்தாலியைச் சேர்ந்த ஹாலிவுட் நாயகி மோனிகா பெலுச்சி, டாப்லெஸாக போஸ் கொடுத்து ரசிகர்களை துள்ள வைத்துள்ளார். எல்லே என்ற பத்திரிகையின் அட்டைப்படத்துக்காகத்தான் இந்த அரைநிர்வாண போஸ் கொடுத்துள்ளார் பெலுச்சி.

    கவர்ச்சி, ஆடையில்லாமல் நடிப்பது போன்றவையெல்லாம் மோனிகாவுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. 'ஷூட் எம் எப்' படத்தில் கூட அவர் கிட்டத்தட்ட அரைநிர்வாண காட்சியில் நடித்திருந்தார். அஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் போன்ற நகைச்சுவை படங்களிலும் கூட அவர் கவர்ச்சி ததும்ப நடித்திருப்பார்.

    ஏற்கெனவே பலமுறை பத்திரிகைகளுக்கு பெரும் தொகை பெற்றுக்கொண்டு ஒளிவு மறைவுடன் கூட நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். சாப்ட் போர்ன் நடிகை என்று கூறும் அளவுக்கு அவர் இமேஜ் அடிபட்டாலும், மோனிகாவின் கவர்ச்சிக்கு இன்னமும் நல்ல வரவேற்பு இருப்பதால், அவரது படங்களைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டுகின்றன பத்திரிகைகள். அதனாலேயே, பிரபல பத்திரிகையான எல்லே-யின் இந்த ஜூன் மாத இதழின் அட்டைப்பட நாயகியாக டாப்லெஸ் போஸ் தந்துள்ளார் மோனிகா பெலுச்சி.

    Vijay at Shanghai Film Festival.





    பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் செட்டப்பா ?



    ஊழலை ஒழிக்கக் கோரி பத்து நிபந்தனைகளை விதித்து பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் ஒரு செட்டப் டிராமா என்று புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலா வர ஆரம்பித்துள்ள ஒரு வீடியோதான் ராம்தேவ் மீதான சந்தேகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. யூடியூபில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை ஜிபி ஜர்னலிஸ்ட் என்ற பெயரில் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஒருவருடன் தொலைபேசியில் பேசுகிறார். மறு முனையில் உள்ளவரை பாபுஜி என்று விளித்துப் பேசும் பொக்ரியால், பாபாவின் (ராம்தேவ்) உண்ணாவிரதத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறார் பொக்ரியால்.

    இந்த உரையாடல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. பாபா ராம்தேவ் தனது ஆசிரமத்தில் இருந்து வந்தது செட்டப் உண்ணாவிரதமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராம்தேவ் உண்ணாவிரதத்தில் குதிப்பதற்கு முன்பிருந்தே அவரை காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்து வந்தார். உண்ணாவிரதத்தில் குதித்து டெல்லி போலீஸாரால் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்ட போதும் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார் திக்விஜய் சிங். ராம்தேவை தாதா என்றும் கூலிப்படையினரை வைத்துக் கொண்டு மத்திய அரசை மிரட்டுகிறார் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

    டெல்லி உண்ணாவிரத முயற்சி தோல்வி அடைந்தாதல் ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்திற்குத் திரும்பிய ராம்தேவ் அங்கு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். பின்னர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ கிளிப்பிங்கால் ராம்தேவுக்குப் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

    அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் டிவி பார்ப்பதிலும் ...

    மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்பு கதியாக கிடப்பவர்களை இளம் வயதிலேயே மரணம் நெருங்குவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அமெரிக்கர்கள் முன்னிலை: அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் டிவி பார்ப்பதிலும் முன்னிலைதான். ஒரு நாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும், ஐரோப்பியர்கள் 3-லிருந்து 4 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    இளம் வயதில் மரணம்: ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் அமெரிக்காவின் “ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பக்ளிக் ஹெல்த்” என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சோம்பேறிகளுக்கு எச்சரிக்கை: இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல்வது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர்.
    1970-லிருந்து 2011 வரை டிவி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

    ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் நிச்சயம், நம்மூர் டிவி நேயர்களை கண்டிப்பாக பாதிக்க வாய்ப்பில்லை. அதிலும், காலை 10 மணிக்கு டிவியை ஆன் செய்து விட்டு அரிவாள் மனையும், காய்கறிகள் சகிதமுமாக உட்கார்ந்து, டிவியில் வரும் நாடகங்களின் கேரக்டர்கள் கதறி அழுவதைப் பார்த்து தாங்களும் குமுறி அழுது புலம்பும் நம்மூர் சீரியல் ரசிகைகளை நிச்சயம் இது ஒன்றும் செய்ய முடியாது. மரணமே இந்த 'சீரியல் கில்லர்'களைப் பார்த்து மரணம், 'தற்கொலை' செய்து கொள்ளும்!.

    யாதார்த்தமாய் வாழுங்கள் ...

    மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததுதான் வாழ்க்கை. இதனை உணர்ந்து கொள்பவர்களின் பயணம் தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் கண்டிசன் போடும் இன்றைய இளம் தலைமுறையினர்தான் செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றியின் ரகசியம்.

    புனிதமான பந்தம்: சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம் என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்குமே ஆசைகள், லட்சியங்கள் இருப்பது போல நம்மை திருமணம் செய்துகொண்டவருக்கும் கனவுகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனை சிதைத்து விடவும் கூடாது. திருமணத்திற்கு முன்பே சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.

    எல்லையற்ற அன்பு: வாழ்க்கைத்துணையை கரம் பற்றிய நிமிடத்திலேயே இருவரும் ஒருவருக்கொருவர் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்ற உறுதிமொழியே தடுமாற்றம் இன்றி பயணம் செல்ல வழிவகுக்கும். மகிழ்ச்சியுடன் தொடங்கும் மணவாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக இருப்பது என்பது மணமக்களின் கைகளில்தான் உள்ளது. வெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எல்லையற்ற அன்பு பாராட்டுங்கள்.

    நம்பிக்கைதான் எல்லாமே: மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்த இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் வாழத் தொடங்கவேண்டும். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. தாம்பத்யத்தில் இருவரின் உடலும் சங்கமிப்பது போல லட்சியப்பயணத்தில் தடையாக நில்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.

    யாதார்த்தமாய் வாழுங்கள்: சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிறு சிறு கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்’ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.

    அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்: திருமணம் முடிந்ததும் கணவனோ, மனைவியோ இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் ஆராயத் தொடங்கக் கூடாது. ஏனென்றால் உறவுப்பாலம் சிதைவதற்கான முதல் வித்து இதில்தான் தொடங்குகிறது. இருவருமே வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் அவரவரின் குறை நிறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். யாரும் யாருக்காகவும் மாறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலச் சூழலில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும்.

    தமிழகத்தில், புதிதாக, 11 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்து - All India Council For Technical Education (AICTE), New Delhi


    தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என, மொத்தம், 478 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை எனக்கூறி, நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, ஏ.ஐ.சி.டி.இ., சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், 11 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.

    புதிய பொறியியல் கல்லூரிகள் விவரம்: 1. சி.ஆர். பொறியியல் கல்லூரி, 2. தயா பொறியியல் கல்லூரி, 3. கே.எஸ்.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 4. மகாலஷ்மி பொறியியல் கல்லூரி, 5. முத்தையம்மாள் தொழில்நுட்ப வளாகம், 6. என்.எஸ்.என். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 7. ரத்தினம் தொழில்நுட்ப வளாகம், 8. சிவா தொழில்நுட்பக் கல்லூரி, 9. சண்முகா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 10. எஸ்.எஸ்.எம்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 11. தாமிரபரணி பொறியியல் கல்லூரி.

    இந்த கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ், மொத்தம், 3,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    அல்-காய்தாவின் புதிய தலைவர் அல்-ஜவாஹிரி! - Al-Zawahiri named new al-Qaeda chief

    அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக அல்-ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அல்-காய்தா வெளியிட்டுள்ள அறிக்கை, அந்த இயக்கத்தின் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது."ஜவாஹிரி தலைமையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு உதவும் நாடுகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும். இஸ்லாமிய மண்ணை ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறும் வரை எங்கள் போர் தொடரும்." என்று அல்-காய்தாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2-ம் தேதி, அல்-காய்தாவின் தலைவரான பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த இயக்கத்தில் இரண்டாம் நிலை தலைவராக இருந்து வந்த அல்-ஜவாஹிரி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    துபாயில் நடிகை மனோரமாவிற்கு விருது!







    துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு மற்றும் தமிழ்த்தேர் மாத இதழின் 5ம் ஆண்டுவிழா மே 27ம் தேதியன்று மாலை துபாய் மகளிர் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து பழ.நெடுமாறனும், தமிழ் திரைப்பட நடிகை மனோரமாவும் பங்கேற்றார்கள். ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் சிம்மபாரதியின் ஆண்டறிக்கையுடன், விழாவில் நாட்டிய விருந்தளித்தார் நிவேதிதா குழுவினர். மன வளர்ச்சி குன்றிய கார்த்திக் வழங்கிய பாடல் சபையின் ஒட்டுமொத்தப் பாராட்டுக்களை அள்ளியது. ஸ்ரீவித்யா வழங்கிய நாத இன்பமும், தொலைக்காட்சிப் புகழ் மேகநாதனின் நகைச்சுவை விருந்தும், குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்க வழங்கப்பட்ட மாயாஜாலக் காட்சிகளும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கின.

    தொடர்ந்து தமிழ்த்தேரின் 5ம் ஆண்டுமலர், சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட, விழாவின் சிறப்புக்கட்டமாக ஆச்சி மனோரமாவிற்கு வானலை வளர்தமிழ் தமிழ்த்தேர் சார்பில் முத்தமிழ்க் காவியம் என்கிற பட்டம் பழ.நெடுமாறனால் வழங்கப்பட்டது. விழாவில் பஸ்லின், குத்தாலம் அஸ்ரப் மற்றும் அஜ்மான் மூர்த்தியின் சிற்றுரையைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய பழ.நெடுமாறன்,தமிழின் மேன்மை பற்றியும், தமிழரின் கடமை பற்றியும் விரிவாய் எடுத்துரைத்தார். திருவள்ளுவன் தந்த திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. காரணம், திருக்குறள் உலகம் முழுமைக்கும்,உலகில் வாழும் அனைவருக்கும் பொதுமறை என்பதனால் என்று அவர்தந்த புதிய விளக்கம் பாராட்டைப் பெற்றது. ஆச்சி மனோரமாவின் சிறப்புரை பல்சுவை நிறைந்ததாய் அமைந்திருந்தது. பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க அவர் பாடிய பல திரைப்பாடல்களை பாடி பரவசப்படுத்தினார். மேலும் தமிழ் மொழி பற்றி அவர் பாடிய ஒரு பாடல் தமிழ்த்தேருக்கு அலங்காரம் செய்ததுபோலிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட முத்தமிழ்க்காவியம் என்கிற பட்டத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    சிறப்பு விருந்தினர் பற்றிய நர்கிஸ் ஜியாவுதீனின் கவிதை, கவிஞர்.சந்திரசேகரால் எழுதப்பட்ட நிவேதிதா ஆனந்தனின் மனோரமா பற்றிய பாடல் உட்பட, வானலை வளர்தமிழ் அங்கத்தினரால் நடிக்கப்பட்டு முழுக்க முழுக்க அதன் அங்கத்தினராலேயே தயாரிக்கப்பட்ட ”தமிழ்த்தேரே” என்னும் காணொளி காண்போரை கவர்ந்திழுத்தது. விழாவில் துணைச் செயலாளர் முகவை முகிலின் “ஈச்சமர நிழலில்” கவிதைத் தொகுப்பு, ஒரு கவிதை காணொளியுடன் வெளியிடப்பட்டது. விழாவை தமிழ்த்தேரின் ஆசிரியர் கவிஞர் காவிரிமைந்தன், நிவேதிதா ஆனந்தனுடன் இணைந்து தொகுத்து வழங்க, இறுதியாக தமிழ்த்தேரின் பொறுப்பாசிரியர் ஜியாவுதீன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

    சிறப்பு முகாம் சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் – சீமான் கோரிக்கை !

    செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 13 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதில், செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைச் சந்தித்த செங்கல்பட்டு தாசில்தார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு சம்பிரதாயப்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், போராட்டக்காரர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

    தங்களை விடுவித்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இதே கோரிக்கையைத்தான் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களும் கோரி வருகின்றனர்.

    இலங்கைக்கு உணவு கடத்தினார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள், இரத்தம் கடத்தினார்கள் என்கிற குற்றச்சாற்றின் பேரிலும், ஐயத்தின் பேரிலும் செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லி முகாமில் 4 தமிழர்களும் ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் உள்ளனர்.

    அவர்களை, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் தண்டியுங்கள் என்றும் இல்லை எனில் எங்களை விடுவித்து இதர முகாம்களில் உள்ள எங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதுமே அவர்களின் கோரிக்கையாகும்.

    ஆனால் கடந்த ஆட்சியில் அவர்களின் எழுப்பிய கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவும், அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் நிலையைத் தான் ஏற்படுத்தியதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. ஐயத்தின் பேரால் ஈழத் தமிழர்கள் பலரை இப்படி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்து வைப்பது என்பது கடந்த திமுக ஆட்சியில் அடிக்கடி நடைபெற்றது.

    அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அன்றைய திமுக அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்பினர். ஆனால், அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர். இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மறுப்பாகும் என்பதை எடுத்துக்கூறி தமிழர் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் அன்றைய திமுக அரசு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    ஈழத்தில் போர் முடிந்த பிறகு வன்னியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையே, இங்கு சிறப்பு முகாம்களில் என்ற பெயரில் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு அவமானமல்லவா? எனவே, தமிழகத்தின் முதல்வராக 3 வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

    2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

    தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

    கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.
    தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.
    இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

    இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

    பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

    இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

    தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

    இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

    2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...