தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என, மொத்தம், 478 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை எனக்கூறி, நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, ஏ.ஐ.சி.டி.இ., சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், 11 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.
புதிய பொறியியல் கல்லூரிகள் விவரம்: 1. சி.ஆர். பொறியியல் கல்லூரி, 2. தயா பொறியியல் கல்லூரி, 3. கே.எஸ்.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 4. மகாலஷ்மி பொறியியல் கல்லூரி, 5. முத்தையம்மாள் தொழில்நுட்ப வளாகம், 6. என்.எஸ்.என். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 7. ரத்தினம் தொழில்நுட்ப வளாகம், 8. சிவா தொழில்நுட்பக் கல்லூரி, 9. சண்முகா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 10. எஸ்.எஸ்.எம்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, 11. தாமிரபரணி பொறியியல் கல்லூரி.
இந்த கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ், மொத்தம், 3,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment