|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 June, 2014

நான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்!

இந்த வீடியோவை காணும் போது சிறுவயதில் படித்த நீதிக்கதையே ஞாபகத்திற்கு வரும். அந்த கதையில் வருவதை போன்றே ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. தனியாக இருக்கும் மாட்டை வேட்டையாடுகின்றது இரண்டு சிங்கம். சிங்கம் அசந்த நேரம் பார்த்து சிங்கத்தை கொல்கின்றது இன்னொரு காட்டெருமை.

இரத்தம் சரணம் கச்சாமி!


உலக புகையிலை எதிர்ப்பு தினம்!


வாழ வைக்க வேண்டியவன் வெறுக்கின்றானே!


படங்கள் சொல்லும் செய்தி.
முதல் படம் - அமெரிக்கா நியூ ஜெர்சி நகரில் சீனர்கள் நடத்தும் சிறப்பங்காடி. இந்த வணிக நிறுவனத்தின் பெயர் பலகையில் சீன மாண்டரின் மொழி முதன்மையாக எழுதப்பட்டுள்ளது. பெயர் பலகையில் மட்டுமல்ல கடையின் உள்ளேயும் சீன மொழி தான் ஆளுமை செலுத்துகிறது . சீனர்கள் அமெரிக்காவில் வணிகம் செய்தாலும் அவர்கள் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் தங்கள் மொழியை விட்டுக் கொடுப்பதில்லை.
இரண்டாம் படம் : சென்னை பசுல்லா சாலையில் உள்ள குளம்பிக்கடை . இக்கடை தமிழ்நாட்டில் தான் உள்ளது . தமிழர்கள் தான் அதிகம் இங்கு வந்து குழம்பி அருந்துகிறார்கள் . இக்கடையின் பெயர்பலகையிலும் தமிழ் உள்ளது . ஆனால் கண்ணுக்கு தான் புலப்படாது . கண்களுக்கு புலப்படாதவாறு தமிழில் கடைப் பெயரை எழுதி உள்ளனர். காரணம் தமிழர்கள் எவரும் தங்கள் மொழி ஏன் இவ்வளவு சிறிதாக உள்ளது என தட்டிக் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம் தான். மேலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது . அந்த சட்டத்திற்காக இவர்கள் இவ்வளவு சிறிதாக தமிழில் எழுதி உள்ளனர்.
சென்னையில் உள்ள இக்கடை தமிழர்கள் நடத்துகிறார்களா எனத் தெரியவில்லை. தமிழர்கள் நடத்தும் கடைகளிலும் தமிழ் காணப்படுவது இப்போது அரிதாகி வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசும் அலட்சியப் போக்கையே கடைபிடித்து வருகிறது. எத்தனை கடைகளுக்கு தான் நாம் நேரில் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று வலியுறுத்த முடியும் ? மொழி உணர்வை சீனர்கள் , அரேபியர்கள் மூலமாக நாம் கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என்பது தான் வேதனை .
இப்பதிவை பார்க்கும் தமிழக வணிகர்கள் இனியாவது தங்கள் மொழிக்கு வணிகத்தில் முக்கியத்துவம் கொடுக்கட்டும். கொட்டை எழுத்தில் தமிழில் பெயர்பலகை வைத்த பல வணிக நிறுவனங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும் . தாய் மொழியை புறக்கணித்து ஆங்கில மொழியை மட்டுமே முதன்மைபடுத்தும் பல நிறுவனங்கள் மண்ணைக் கவ்வி உள்ளன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் நம் அடையாளம் என்பதை நினைவில் கொள்வோம் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...