ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
12 June, 2014
21 May, 2014
யார் இந்த ஏ பி டி வில்லியர்ஸ்..?
அனைவருக்கும் தெரிந்த பதில் அவர் ஒரு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்.பெங்களூரு அணிக்காக ஆடுகிறார் என்பது மட்டுமே.அனால் அவர் அது மட்டும் அல்ல.
1.தேசிய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்ய பட்டவர்.
2.தேசிய ஜூனியர் கால் பந்து அணிக்கும் தேர்வானவர்.
3.தேசிய ஜூனியர் ரக்பி அணியின் தலைவர்,
4.தேசிய நீச்சல் ஜூனியர் பிரிவில் 6 தேசிய சாதனைகளை படைத்தவர்.
5.தேசிய தடகள போட்டியில் ஜூனியர் பிரிவில் வேகமாக 100 மீட்டர் ஓடிய சாதனைக்கு சொந்தக்காரர்.
6.19 வயதிற்கு உட்பட்டோருக்கான பூ பந்து போட்டியில் சாப்பியன் பட்டம் வென்றவர்.
7.தன்னுடைய அறிவியல் ஆராய்சிக்காக நெல்சன் மண்டேலாவிடம் விருது வாங்கியவர்.;
இப்போது சொல்லுங்கள் யார் நிஜமான ஆல் ரவுண்டர்.?
09 May, 2014
14 November, 2013
இந்தியாவின் ரன் மெஷின்!
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே
ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின்
ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது!மும்பை, வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட்
போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, கிரிக்கெட்டில்
இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுக்கவிருக்கிறார் சச்சின்.
இனி இந்தியக் கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் - சச்சினுக்குப் பின் என்றே குறிப்பிடலாம்.
05 April, 2013
IPL 6 Schedule.
| Date | IST | Details | Venue |
| 03-Apr | 8:00 PM | Kolkata Knight Riders vs Delhi Daredevils | Kolkata |
| 04-Apr | 8:00 PM | Royal Challengers Bangalore vs Mumbai Indians | Bangalore |
| 05-Apr | 8:00 PM | Sunrisers Hyderabad vs Pune Warriors | Hyderabad |
| 06-Apr | 4:00 PM | Delhi Daredevils vs Rajasthan Royals | Delhi |
| 06-Apr | 8:00 PM | Chennai Super Kings vs Mumbai Indians | Chennai |
| 07-Apr | 4:00 PM | Pune Warriors vs Kings XI Punjab | Pune |
| 07-Apr | 8:00 PM | Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore | Hyderabad |
| 08-Apr | 8:00 PM | Rajasthan Royals vs Kolkata Knight Riders | Jaipur |
| 09-Apr | 8:00 PM | Mumbai Indians vs Delhi Daredevils | Mumbai |
| 10-Apr | 8:00 PM | Kings XI Punjab vs Chennai Super Kings | Mohali |
| 11-Apr | 4:00 PM | Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders | Bangalore |
| 11-Apr | 8:00 PM | Pune Warriors vs Rajasthan Royals | Pune |
| 12-Apr | 8:00 PM | Delhi Daredevils vs Sunrisers Hyderabad | Delhi |
| 13-Apr | 4:00 PM | Mumbai Indians vs Pune Warriors | Mumbai |
| 13-Apr | 8:00 PM | Chennai Super Kings vs Royal Challengers Bangalore | Chennai |
| 14-Apr | 4:00 PM | Kolkata Knight Riders vs Pune Warriors | Kolkata |
| 14-Apr | 8:00 PM | Rajasthan Royals vs Kings XI Punjab | Jaipur |
| 15-Apr | 8:00 PM | Chennai Super Kings vs Pune Warriors | Chennai |
| 16-Apr | 4:00 PM | Kings XI Punjab vs Kolkata Knight Riders | Mohali |
| 16-Apr | 8:00 PM | Royal Challengers Bangalore vs Delhi Daredevils | Bangalore |
| 17-Apr | 4:00 PM | Pune Warriors vs Sunrisers Hyderabad | Pune |
| 17-Apr | 8:00 PM | Rajasthan Royals vs Mumbai Indians | Jaipur |
| 18-Apr | 8:00 PM | Delhi Daredevils vs Chennai Super Kings | Delhi |
| 19-Apr | 8:00 PM | Sunrisers Hyderabad vs Kings XI Punjab | Hyderabad |
| 20-Apr | 4:00 PM | Kolkata Knight Riders vs Chennai Super Kings | Kolkata |
| 20-Apr | 8:00 PM | Royal Challengers Bangalore vs Rajasthan Royals | Bangalore |
| 21-Apr | 4:00 PM | Delhi Daredevils vs Mumbai Indians | Delhi |
| 21-Apr | 8:00 PM | Kings XI Punjab vs Pune Warriors | Mohali |
| 22-Apr | 8:00 PM | Chennai Super Kings vs Rajasthan Royals | Chennai |
| 23-Apr | 4:00 PM | Royal Challengers Bangalore vs Pune Warriors | Bangalore |
| 23-Apr | 8:00 PM | Kings XI Punjab vs Delhi Daredevils | Mohali |
| 24-Apr | 8:00 PM | Kolkata Knight Riders vs Mumbai Indians | Kolkata |
| 25-Apr | 8:00 PM | Chennai Super Kings vs Sunrisers Hyderabad | Chennai |
| 26-Apr | 8:00 PM | Kolkata Knight Riders vs Kings XI Punjab | Kolkata |
| 27-Apr | 4:00 PM | Rajasthan Royals vs Sunrisers Hyderabad | Jaipur |
| 27-Apr | 8:00 PM | Mumbai Indians vs Royal Challengers Bangalore | Mumbai |
| 28-Apr | 4:00 PM | Chennai Super Kings vs Kolkata Knight Riders | Chennai |
| 28-Apr | 8:00 PM | Delhi Daredevils vs Pune Warriors | Delhi |
| 29-Apr | 4:00 PM | Rajasthan Royals vs Royal Challengers Bangalore | Jaipur |
| 29-Apr | 8:00 PM | Mumbai Indians vs Kings XI Punjab | Mumbai |
| 30-Apr | 8:00 PM | Pune Warriors vs Chennai Super Kings | Pune |
| 01-May | 4:00 PM | Sunrisers Hyderabad vs Mumbai Indians | Hyderabad |
| 01-May | 8:00 PM | Delhi Daredevils vs Kolkata Knight Riders | Delhi |
| 02-May | 4:00 PM | Chennai Super Kings vs Kings XI Punjab | Chennai |
| 02-May | 8:00 PM | Pune Warriors vs Royal Challengers Bangalore | Pune |
| 03-May | 8:00 PM | Kolkata Knight Riders vs Rajasthan Royals | Kolkata |
| 04-May | 4:00 PM | Sunrisers Hyderabad vs Delhi Daredevils | Hyderabad |
| 04-May | 8:00 PM | Royal Challengers Bangalore vs Kings XI Punjab | Bangalore |
| 05-May | 4:00 PM | Mumbai Indians vs Chennai Super Kings | Mumbai |
| 05-May | 8:00 PM | Rajasthan Royals vs Pune Warriors | Jaipur |
| 06-May | 8:00 PM | Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad | Bangalore |
| 07-May | 4:00 PM | Rajasthan Royals vs Delhi Daredevils | Jaipur |
| 07-May | 8:00 PM | Mumbai Indians vs Kolkata Knight Riders | Mumbai |
| 08-May | 8:00 PM | Sunrisers Hyderabad vs Chennai Super Kings | Hyderabad |
| 09-May | 4:00 PM | Kings XI Punjab vs Rajasthan Royals | Mohali |
| 09-May | 8:00 PM | Pune Warriors vs Kolkata Knight Riders | Pune |
| 10-May | 8:00 PM | Delhi Daredevils vs Royal Challengers Bangalore | Delhi |
| 11-May | 4:00 PM | Pune Warriors vs Mumbai Indians | Pune |
| 11-May | 8:00 PM | Kings XI Punjab vs Sunrisers Hyderabad | Mohali |
| 12-May | 4:00 PM | Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore | Ranchi |
| 12-May | 8:00 PM | Rajasthan Royals vs Chennai Super Kings | Jaipur |
| 13-May | 4:00 PM | Delhi Daredevils vs Kings XI Punjab | Delhi |
| 13-May | 8:00 PM | Mumbai Indians vs Sunrisers Hyderabad | Mumbai |
| 14-May | 8:00 PM | Kolkata Knight Riders vs Pune Warriors | Ranchi |
| 15-May | 4:00 PM | Chennai Super Kings vs Delhi Daredevils | Chennai |
| 15-May | 8:00 PM | Mumbai Indians vs Rajasthan Royals | Mumbai |
| 16-May | 8:00 PM | Kings XI Punjab vs Royal Challengers Bangalore | Dharmasala |
| 17-May | 8:00 PM | Sunrisers Hyderabad vs Rajasthan Royals | Hyderabad |
| 18-May | 4:00 PM | Kings XI Punjab vs Mumbai Indians | Dharmasala |
| 18-May | 8:00 PM | Pune Warriors vs Delhi Daredevils | Pune |
| 19-May | 4:00 PM | Royal Challengers Bangalore vs Chennai Super Kings | Bangalore |
| 19-May | 8:00 PM | Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders | Hyderabad |
| 21-May | 8:00 PM | TBC vs TBC | Chennai |
| 22-May | 8:00 PM | TBC vs TBC | Chennai |
| 24-May | 8:00 PM | TBC vs TBC | Kolkata |
| 26-May | 8:00 PM | TBC vs TBC | Kolkata |
19 March, 2013
விளையாட்டில் இப்படி ஒரு விளையாட்டு!
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், இரண்டாவது இடத்தை பிடிக்க, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.டெஸ்ட் தரவரிசையில் மார்ச் 30 தேதியில் "டாப்-4' இடங்களில் இருக்கும்
அணிகளுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கோப்பை
மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு 128 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா (ரூ. 2.5 கோடி) அணி
முதலிடத்தை உறுதி செய்துவிட்டது. அடுத்த இடத்தை பிடித்து ரூ. 1.9 கோடியை
தட்டிச் செல்ல, இங்கிலாந்து (114), ஆஸ்திரேலியா (112), இந்தியா (111) இடையே
மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 2வது இடம் பிடிக்க, டில்லி டெஸ்டில் (மார்ச் 22-26)
ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அதேநேரம், மூன்றாவது டெஸ்டில் (மார்ச்
22-26) இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைய வேண்டும். இதன்மூலம்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 112 புள்ளிகள் பெறும். தசம புள்ளிகள்
வித்தியாசத்தில் இந்திய அணி 2வது இடத்தை பிடிக்கும்.
* இங்கிலாந்து அணி, 2வது இடத்தை தக்கவைத்துக் கொள்ள நியூசிலாந்துக்கு
எதிராக குறைந்த பட்சம் "டிரா' செய்தாலே போதுமானது. ஆஸ்திரேலியாவுக்கு
எதிராக இந்திய அணி வெற்றி பெற்றால் கூட எவ்வித பாதிப்பும் வராது.
* ஆஸ்திரேலிய அணி 2வது இடத்துக்கு முன்னேற, டில்லி டெஸ்டில் இந்தியாவை
கட்டாயம் வீழ்த்த வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்திடம்
தோற்க வேண்டும். தரவரிசைப் பட்டியலில் மூன்று, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு ரூ. 1.35 கோடி, ரூ. 81 லட்சம் கிடைக்கும்.
11 January, 2013
06 January, 2013
04 January, 2013
தொடரும் அவமானம்,,,?
* ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் (0-4), முத்தரப்பு தொடரில் தோல்வி
* ஆஸ்திரேலியாவுடன் "டுவென்டி-20' தொடர் "டிரா' (1-1).
* ஆசிய கோப்பையில் ஏமாற்றம்
* "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் "அவுட்'
* சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை இழந்தது (1-2).
* "டுவென்டி-20' தொடரில் இங்கிலாந்துடன் சமன் (1-1).
* பாகிஸ்தானுடன் "டுவென்டி-20' தொடர் "டிரா' (1-1).
* பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் தோல்வி (0-2)
* தவிர, கோல்கட்டா மண்ணில் பங்கேற்ற 6 போட்டிகளில், 5ல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
"விளையாடு அல்லது வெளியேறு'
இந்திய அணியின் தொடர்
தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க, பி.சி.சி.ஐ., அதிரடி நடவடிக்கை எடுக்க
வேண்டும். பழம்பெருமைகளை பேசிக் கொண்டு, அணியில் ஒட்டிக் கொண்டிருக்கும்
"விளையாடாத' சீனியர் வீரர்களை நீக்கி விட்டு, ரகானே, ராயுடு போன்ற இளம்
பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஓயாத போட்டிகளும்
வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இதனை தவிர்க்கும் பொருட்டு டெஸ்ட், ஒருநாள்
போட்டி, "டுவென்டி-20' என ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி அணியை உருவாக்கலாம்.
கேப்டன் தோனி மட்டும் தனிநபராக நின்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி தேடித்
தர இயலாது. பகையை மறந்து அனைத்து வீரர்களும் நாட்டுக்காக ஒற்றுமையுடன்
விளையாடினால் தான், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்
தொடரிலாவது சாதிக்க முடியும்.
03 January, 2013
19 December, 2012
தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை!
தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் இந்திய வீரர் யாரும் இல்லை!
துபை: இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் போட்டியில் படுதோல்வியைச்
சந்தித்திருக்கும் நிலையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்தில் எந்த
இந்திய வீரரும் இடம்பெறவில்லை.
இங்கிலாந்துடனான தொடரில் மொத்தமே 112 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சச்சின்
19-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதேபோல் சேவாக்,
புஜாரா ஆகியோர் 25,26 -ஆவது இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
கோஹ்லி 41-வது இடத்திலிருந்து 37-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
டோணி அதே 38-வது இடத்தில் இருக்கிறார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஓஜா 9-வது இடத்திலும் அஸ்வின் 20-வது
இடத்திலும் இருக்கின்றனர். ஜாகீர் கான் 15-வது இடத்திலும் இஷாந்த் சர்மா
32-வது இடத்திலும்
14 December, 2012
09 December, 2012
சச்சின், தோனியை வெளியேற்ற தைரியமில்லை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இத்தொடரில் சரியாக விளையாடாத காரணத்தால், யுவராஜ், ஜாகிர் கான் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே போன்று தொடர்ந்து சரியாக விளையாடாத சச்சின் மற்றும் கேப்டன் தோனி ஆகியோரை நீக்குவதற்கு பி.சி.சி.ஐ., க்கு தைரியமில்லை. இது பாரபட்சமான தேர்வை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முடிவில் பேட்டியளித்த கேப்டன் தோனி, ஆமதாபாத் ஆடுகளம் தனக்கு திருப்தியளிக்க வில்லை என்றும், ஆட்டத்தின் முதல்நாளில் இருந்தே சுழலுக்கு ஏற்றவாறு மைதானம் தயார் செய்யப்படவில்லை என குறைபட்டுக்கொண்டார். இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி மைதானத்தின் ஆடுகளம் தோனியின் விருப்பப்படி மாற்றியமைக்கப்பட்டது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. புஜாரா, அஸ்வினை தவிர இந்திய அணியில் யாரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாட வில்லை. இப்போட்டியில் இந்திய அணியின் சச்சின் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார் . தோனி எடுத்தது 35 ரன்கள். தவிர முன்னணி வீரரான விராட் கோஹ்லி எடுத்தது 27 ரன்கள்.
சச்சினுக்கு வாய்ப்புஅடுத்து கோல்கட்டாவில் நடந்த போட்டியின் போது, ஆடுகளத்தை மாற்றியமைக்க தோனி வற்புறுத்தியதும், அதற்கு மறுப்பு தெரிவித்து ஆடுகள பராமரிப்பாளர் பிரபீர் முகர்ஜி நீண்ட விடுமுறையில் சென்று விட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. கடந்த சில போட்டிகளைக் காட்டிலும், முதல் இன்னிங்சில் சிறப்பாக (76 ரன்கள்) எடுத்த சச்சின், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 5 ரன்களுக்கு வெளியேறினார்.இந்நிலையில் சச்சினுக்கு, நாக்பூர் டெஸ்டிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இவர் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்டில் மொத்தம் 110 ரன்கள் (சராசரி 22.00) மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இவரை விட கூடுதலாக ரன் எடுத்துள்ள யுவராஜ் சிங் (125 ரன், சராசரி 25.00) நீக்கப்பட்டுள்ளார்.
பாண்டிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மோசமான "பார்ம்' காரணமாக தாமாகவே முன்வந்து ஓய்வை அறிவித்தனர். ஆனால் தனது "பார்ம்' குறித்து நன்கு அறிந்த சச்சினுக்கு ஓய்வு பெறும் எண்ணம் தோன்றாதது ஆச்சர்யம் அளிக்கிறது. சமீபத்தில் சச்சினை சந்தித்த தேர்வுக்குழுவினரிம், ""தன்னை அணியில் இருந்து நீக்குவது குறித்து தேர்வுக்குழுவே முடிவு செய்து கொள்ளலாம். இவ்விஷயத்தில் தலையிட மாட்டேன்,'' என, வெளிப்படையாக தெரிவித்தார். இருந்தபோதிலும் சச்சினுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவதால், தேர்வுக்குழுவினர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.இந்திய கேப்டன் தோனியின் சமீபத்திய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. கடைசியாக இவர் விளையாடிய மூன்று டெஸ்டில் 92 ரன்கள் (சராசரி 18.40) மட்டுமே எடுத்துள்ளார். தவிர இவரது கேப்டன் வியூகமும் கைகொடுக்கவில்லை. இதனால் மும்பை டெஸ்ட் போட்டியை தொடர்ந்து கோல்கட்டா டெஸ்டில் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.
கடந்த ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து (4-0), ஆஸ்திரேலியா (4-0) அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. அப்போது கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத தேர்வுக்குழு, தொடர்ந்து தோனியை கேப்டனாக நியமித்தது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ளது. இனிமேலாவது தேர்வுக்குழுவினர் "செயல்படு அல்லது வெளியேறு' என்ற "பார்முலா' வை பின்பற்றும் பட்சத்தில், மோசமான தோல்வியிலிருந்து தப்பலாம்.இத்தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால், ஜாகிர் கான், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தொடர்ந்து சொதப்பி வரும் சச்சின், தோனி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைச் செய்வதற்குக் கூட பி.சி.சி.ஐ.,க்கு தைரியமில்லை. இந்திய அணி இது போன்ற எத்தனை கேவலமான தோல்விகளைப் பெற்றாலும் நாட்டைப்பற்றி கவலைப் படாமல் அணியில் நீடிக்கும் இவர்கள் போன்றவர்களை அணியிலிருந்து விலக்கி அணிக்கு புத்துயிர் கொடுக்க திராணியில்லாமல் பி.சி.சி.ஐ., செயல்படுகிது.
10 October, 2012
சச்சின் கோரிக்கை அரசு சம்மதம்!
லண்டன் ஒலிம்பிக்கில் நம்மவர்கள் சாதிக்க, விளையாட்டில் முன்னேற்றம் காண செய்ய வேண்டியவை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகனுக்கு சச்சின் இரண்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில் இவர் குறிப்பிட்டுள்ள நான்கு முக்கிய திட்டம்:
* சாமான்ய மக்கள் மத்தியில் இருந்து இளம் திறமைகளை கண்டறிந்து, உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
* பல்கலை., கல்லூரிகளில் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
* விளையாட்டு போட்டிக்கான உட்கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.
* பள்ளி, கல்லூரிகளில் உடற்பயிற்சி, விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும்.
சச்சின் வழங்கிய ஆலோசனைகளை மத்திய அமைச்சர் கபில் சிபல் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியது விளையாட்டு வீரராகவும், பார்லிமென்ட் உறுப்பினராகவும் சச்சினின் முயற்சி சிறப்பானது. விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இவரின் கோரிக்கையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். இத்திட்டத்தைப் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். பாடத் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சகம் முடிவு செய்ய இயலாது. இவற்றை என்.சி.ஆர்.டி., அல்லது சி.பி.எஸ்.இ., போன்ற அமைப்புகள் தான் இறுதி செய்யும். சச்சின் கொடுக்கும் அறிக்கையை இந்த அமைப்புகளுக்கு அனுப்பி வைப்போம். பின் இவரது திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கபில் சிபல்.
|
09 September, 2012
சச்சினை ஓய்வு பெறாமல் தடுப்பது?
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பல் ஆட்டம் காண்பித்த எம்.பி. சச்சின் ஏன் இன்னும் ஓய்வு பெறவில்லை என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டாலும் அப்படியெல்லாம் நான் ஒன்றும் ஓய்வு பெற்றுவிடமாட்டேன் என சச்சின் அடம்பிடித்துதான் வருகிறார். இந்த அடம்பிடித்தலுக்கு காரணமாக சொல்லப்படுவது என்னவெனில், விளம்பர நிறுவனங்களுடன் சச்சின் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள்தான் காரணமாம்!
சச்சின் விளம்பர நிறுவனங்களுடன் செய்திருக்கும் ஒப்பந்தங்கள் வரும் 2013ஆம் ஆண்டு வரை இருக்கின்றன. சச்சின் ஓய்வு பெறுவரா? இல்லையா? என்ற குழப்பமான நிலையில் அவருடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும் சில நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.இதுபற்றி டோஷிபா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், சச்சினின் ஓய்வு நிச்சயமாக அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் கவலை அளிக்கக் கூடிய ஒன்றுதான். அப்படி அவர் ஓய்வு பெற்றுவிட்டால் நிச்சயமாக விளம்பர கட்டணம், நிபந்தனைகள் போன்றவற்றிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதிருக்கும் என்கிறார்.
கேனான் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டு சச்சின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. ஆனால் இப்போது சச்சினுடனான ஒப்பந்தந்த்தை அந்நிறுவனம் புதுப்பிக்கவில்லை. மாறாக இளம்நடிகை அனுஷ்கா சர்மாவை நாடியிருக்கிறது! இருந்தாலும் சச்சின் ஓய்வு பெறுவதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்கிறார் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலோக் பரத்வாஜ்.சன்ஃபீஸ் பிஸ்கட்டுக்கான விளம்பர ஒப்பந்தம் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது வரும் 2013-ம் ஆண்டு முடிவடைய இருக்கிறது. அவிவா லைப் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2007-ம் ஆண்டு போடப்பட்டது. இது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. கோக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2011-ல் போடப்பட்டது. இதுவும் 2013-ல் முடிவடையும்.
சச்சின் போட்டிருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்திலும் டீமுக்கு தேர்வாகமல் போனாலோ அல்லது 6 மாதம் விளையாடாமல் போனாலோ செலுத்தப்படும் தொகையில் மாற்றம் செய்து கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர் சிலர்.பொதுவாக இப்படி விளையாட்டு வீரர்களுடன் போடப்படும் ஒப்பந்தங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரைதான் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். சச்சின் ஒருவேளை ஓய்வு பெற்றால் மூன்று அல்லது 4 விளம்பர நிறுவனங்கள்தான் சச்சின் வசம் இருக்கும்.ஆக எல்லா ஒப்பந்தங்களும் முடியும் 2013 வரை எம்.பி. சச்சின் இப்படித்தான் ஆட்டம் காட்டுவாரோ? அதுக்கு அப்புறம்தான் ஓய்வு பெறுவாரோ?
20 May, 2012
19 May, 2012
14 May, 2012
ஆங்கிரி பேர்ட்ஸை தொடர்ந்து...?
விளையாட்டினை விரும்பும் பெரியவர்களுக்கும் சரி, சுட்டிகளுக்கும் சரி அமேஸிங் அலெக்ஸ் என்ற புதிய கேமினை அறிமுகம் செய்ய உள்ளது ஆங்கிரி பேர்ட்ஸை உருவாக்கிய ரோவியோ நிறுவனம்.அதுவும் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் இந்த கேமினை வழங்க உள்ளது ரோவியோ நிறுவனம். ரோவியோ நிறுவனத்தின் புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ் ஒரு குட்டி பையனை சுற்றி அமைக்கபட்டுள்ள ஒரு கதையாக உள்ளது.
ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு எந்த அளவு மக்களின் ஆர்வத்தினை தூண்டியதோ அதே போல் இந்த புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ், கேமிங் உலகத்தில் புதிய ஆரவாரத்தினை ஏற்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.100 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ் கேம். இது போல் அமேஸிங் அலெக்ஸ் கேம் புதிய சாதனையை செய்ய உள்ளது.கொஞ்சம் காத்திருங்கள் இந்த விளையாட்டில் வரும் குட்டி பையன் கூடிய விரைவில் எல்லோரது எலக்ட்ரானிக் சாதனங்களிலும் காட்சி அளிக்க போகிறான்.
07 May, 2012
100வது சிக்ஸ் அடித்து கிறிஸ்கெய்ல் சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், இன்று 26 ரன்களை எடுத்து அவுட்டானார். ஆனால் இன்று 2 சிக்ஸ் அடித்த கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடர்களில் 100 சிக்ஸ்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.ஐபிஎல் 5 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான கிறிஸ் கெய்ல், அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதில் வல்லவர். இதிலும் இவர் அடிக்கும் இமாலய சிக்ஸ்கள், ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை அளித்து வருகின்றன.முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத கிறிஸ் கெய்ல், 2வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தாவினார்.இதுவரை 4 ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக மொத்தம் 38 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் அதிரடியாக ஆடியுள்ள கெய்ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 26 சிக்ஸ்களும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 74 சிக்ஸ்களும் அடித்துள்ளார். இதன்மூலம் கிறிஸ் கெய்ல் இதுவரை மொத்தம் 101 சிக்ஸ் அடித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் பந்துகளில் கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 7 சிக்ஸ்களை அடித்துள்ளார். மேலும் ராகுல் சர்மா, ராஜத் பாட்டியா, சுரேஷ் ரெய்னா உட்பட 45 பந்துவீச்சாளர்களின் பந்துகளில் கிறிஸ் கெய்ல் சிக்ஸ் அடுத்துள்ளார்.மேலும் ஐபிஎல் 5வது தொடரில் அதிக சிக்ஸ்களை அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் தான் முதலிடத்தில் உள்ளார். இத்தொடரில் இதுவரை 31 சிக்ஸ்களை அடித்துள்ள கெய்ல், அதிக தூரம் கொண்ட சிக்ஸ்(111 மீட்டர்) அடித்தவரும் கூட.கடந்த 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சிக்ஸை அடித்த கிறிஸ் கெய்லுக்கு, இன்று அதே அணியுடன் தனது 100வது சிக்ஸை அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
04 May, 2012
விளையாட்டில் சொதப்புவது எப்படி?
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்திப்பது குறித்து ஆராய உள்ளதாக, அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு சொந்த மண்ணான சென்னை மைதானத்தில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்தது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று, கோப்பையும் கைப்பற்றியது.ஆனால் ஐபிஎல் 5 தொடரில் சென்னையில் ஆடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துடன் உள்ளனர். சென்னையில் தோல்வி அடைவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பல காரணங்களை கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய உள்ளதாக, அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருவது இதுவே முதல் முறை. இதற்கான காரணங்களை ஆராய உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடர்களில் எங்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சொந்த மண்ணில் தோல்வி பெற்று வருவதால், பல சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறோம்.கடந்த ஐபிஎல் தொடர்களில் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த ஆண்டு தோல்விகளை பெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்களின் ஆட்டத்தில் தான் குறைபாடு உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது.இனி வரும் போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது. அணியின் பேட்டிங்கை இன்னும் பலப்படுத்த முயன்றாலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்றார்.
Subscribe to:
Posts (Atom)














