* ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் (0-4), முத்தரப்பு தொடரில் தோல்வி
* ஆஸ்திரேலியாவுடன் "டுவென்டி-20' தொடர் "டிரா' (1-1).
* ஆசிய கோப்பையில் ஏமாற்றம்
* "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் "அவுட்'
* சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை இழந்தது (1-2).
* "டுவென்டி-20' தொடரில் இங்கிலாந்துடன் சமன் (1-1).
* பாகிஸ்தானுடன் "டுவென்டி-20' தொடர் "டிரா' (1-1).
* பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் தோல்வி (0-2)
* தவிர, கோல்கட்டா மண்ணில் பங்கேற்ற 6 போட்டிகளில், 5ல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
"விளையாடு அல்லது வெளியேறு'
இந்திய அணியின் தொடர்
தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க, பி.சி.சி.ஐ., அதிரடி நடவடிக்கை எடுக்க
வேண்டும். பழம்பெருமைகளை பேசிக் கொண்டு, அணியில் ஒட்டிக் கொண்டிருக்கும்
"விளையாடாத' சீனியர் வீரர்களை நீக்கி விட்டு, ரகானே, ராயுடு போன்ற இளம்
பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஓயாத போட்டிகளும்
வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இதனை தவிர்க்கும் பொருட்டு டெஸ்ட், ஒருநாள்
போட்டி, "டுவென்டி-20' என ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி அணியை உருவாக்கலாம்.
கேப்டன் தோனி மட்டும் தனிநபராக நின்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி தேடித்
தர இயலாது. பகையை மறந்து அனைத்து வீரர்களும் நாட்டுக்காக ஒற்றுமையுடன்
விளையாடினால் தான், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்
தொடரிலாவது சாதிக்க முடியும்.
No comments:
Post a Comment