|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 March, 2011

இதே நாள் 18 மார்ச் 2011

மார்ச்
18
வெள்ளி
விக்ருதி வருடம் - பங்குனி
4
ரபியுல் ஆகிர் 12
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1850)
  •  வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது(1874)
  •  ஐனார் டேசாவ், குறுகிய அலை வானொலி அலைபரப்பியை உபயோகித்த முதல் ஒலிபரப்பாளராவார்(1909)
  •  அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது(1962)
  •  எகிப்தில் 4400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது(1989)

வேலாயுதம் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

hollywood stund master in Vijay’s Velayudham
காவலன் படத்தை தொடர்ந்து வேலாயுத‌ம், நண்பன், பகலவன் என்று கைநிறைய படங்களுடன் பிஸியாக இருக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில் விஜய் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் வேலாயுதம் படத்தின் சண்டை காட்சியை, ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் டாம் டெல்மர் இயக்குகிறார்.
காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். டைரக்டர் ராஜா இப்படத்தை இயக்குகிறார். படத்தில் நாயகியாக ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகிய இரண்டு பேரும் நடிக்கின்றனர். படத்தில் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். காமெடியுடன் ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சண்டை காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் டாம் டெல்மர் இயக்குகிறார். விஜய் படத்திற்கு ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர், சண்டை காட்சி அமைப்பது இதுவே முதன்முறையாகும். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் பிறந்தநாளன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.


 

ஓர் அரசியல் முதலீடு!

கூட்டணிக் கட்சிகளுடன் பேரம் இருட்டில் முடிந்தது; இனி மக்களுடனான பேரம் வெளிச்சத்தில் நடைபெறும், தேர்தல் அறிக்கைகள் என்ற பெயரில்! மக்களுக்கு உதவி செய்வது போல் தோன்றும் ஒன்றிரண்டு விஷயங்கள், அறிக்கைகளில் தட்டுப்படும்.

தேர்தல் அறிக்கைகள் வெளி வந்தவுடன், அறிவு ஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து விமர்சனங்கள் கிளம்பும். சக கட்சிகள், பிற கட்சிகளின் அறிக்கைகளை பட்டும்படாமல் விமர்சனம் செய்யும்; எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது என்பதற்காக. மற்றபடி எல்லாக் கட்சிகளுமே குச்சி மிட்டாய்கள் கொடுக்க விரும்புகின்றன; வண்ணங்கள் தான் வேறு. "இலவச திட்டங்களால் மக்களின் பணம் பாழாகிறது' என்பது, பொது விமர்சனம். "இந்தப் பணத்தை லாபகரமான திட்டங்களில் முதலீடு செய்யலாமே' என்ற யோசனையும் வெளிப்படும். கேட்டுக் கேட்டு புளித்துப்போன இந்த வாசகத்தை அரசியல்வாதிகள் சட்டை செய்வதில்லை. அவர்களுக்குத் தெரியும், எங்கே, எப்படி முதலீடு செய்வது என்று. எந்தத் தட்டு மக்கள் பெரும்பான்மையோ, அவர்களைத் திருப்திபடுத்தும் திட்டங்களே தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறுகின்றன; அது ஒரு அரசியல் முதலீடு.

இதில் ஒரு கட்சி மற்றொரு கட்சியைக் குறை சொல்ல முடியாது. "எல்லாருக்கும் இலவச உணவு' என்று ஒரு கட்சி சொன்னால், மற்றொரு கட்சி, "தினமும் அதை வாழை இலையில் தருவோம்; இதனால் வாழை விவசாயிகளும் பயன் பெறுவர்' என்று சொல்லும். ஒரு கட்சி, எல்லாருக்கும் இலவச உடை தருவதாகச் சொன்னால், மற்றொன்று அவற்றைச் சலவை செய்தும் தருவோம் என்று சொல்லும். சொல்வதை எல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை; சில மாதங்களுக்குச் செய்தால் போதும். அப்புறம், புதிய இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகள் மட்டும் போதும். "தினமும் தெருவில் நான்கு மணி நேரம் நின்றால் போதும்; உணவுக்கு வேலை திட்டத்தின் கீழ் 100 ரூபாய் கிடைக்கும்' என, அறிவிக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் வயல் வேலை களுக்கு ஆட்கள் இல்லை. அதனால், அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை? அவர்களது வயலில் தினமும் அமோக அறுவடை; அதற்காகவே இலவச திட்டங்கள். இவை எல்லா மாநிலங்களிலும் உண்டு; அதில் தேசிய ஒருமைப்பாடு இருக்கிறது. மக்களும் ஒற்றுமையாக இருந்தபடி, கொடுப்பதை வாங்கிக் கொள்ளாமல், ஏன் குறை சொல்ல வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பது, நியாயம் தானே.

என்னுடன் படித்தவர், தொழிற்கூடம் நடத்தும் ஒரு ஜவுளி நகருக்குச் சென்றிருந்தேன். அவரது அலுவல கத்தில், தமிழக அரசின் இலவச கலர் "டிவி' இருந்தது. வசதியான நபரின் அலுவலகத்தில் அதைப் பார்த்ததும் ஆச்சரியப் பட்டேன். அவர் அலட்டி கொள்ளாமல் சொன்னார்: "ஏம்ப்பா! ரேஷன் கார்டுக்கு ஒரு "டிவி' தர்றான். எனக்கும் ரேஷன் கார்டு இருக்கு...' எனக்கு அந்த பதிலைக் கேட்டதும் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. ஓய்வு பெற்ற, மனசாட்சிக்குக் கட்டுப்படும், ஒரு பேராசிரியரை தென்மாவட்ட கோவில் நகரில் பார்த்தேன். வாக்காளர்களுக்கு, "கவர்' கொடுப்பது பற்றி பேச்சு வந்தது; தானும் வாங்கிக்கொண்டதாகச் சொன்னார். "ஏன் வாங்கினீர்கள்?' என்று கேட்டேன். "விவரம் புரியாமல் பேசாதீர்கள்... கவர் கொடுப்பவர்கள், வாங்கியவர்கள் பற்றி கவலைப் படுவதில்லை. வாங்காதவர்களின் பெயர்களைக் குறித்து வைத்து, கட்சி மேலிடத்தில் சொல்வர். ஏதாவது சொல்லித் திருப்பி அனுப்பினாலும் வம்பு. அரசியல்வாதிகளின் எடுபிடிகள் குறிவைத்தால் இந்த ஊரில் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டார். "பணம் வாங்கியது தவறு. என்ன செய்தீர்கள்' என்று கேட்டேன். தன் பங்கைக் கோவில் உண்டியலில் போட்டதாகவும், மனைவி ஒரு சேலை வாங்கியதாகவும், அது சாயம் போய்விட்டதாகவும் சொன்னார். "பணம் கொடுப்பது தவறு என்றால் அதை வாங்காமல் இருப்பது ஆபத்து' என்ற நடைமுறை ஞானத்தை அந்தப் பேராசிரியர் போதித்தார்.

ஆக, தேர்தல்கள் நடைபெறும் புதிய முறைகளில் விவரமறிந்தவர்கள், அறியாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், வசதியானவர்கள், வசதியில்லாதவர்கள் என்ற பேதங்கள் அழிந்து போய்விடுவதால் இனி இலவசத் திட்டங்களுக்கும் தேர்தல் நேர, பண, பொருள் வினியோகத்திற்கும் எதிர்ப்புகளே இல்லாமல் போய்விடும். இப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசியல்வாதிகள் அயலார் பணத்தை தர்மம் செய்வதனால், இடையில் மரித்துப் போயிருந்து சர்வ சாதக சமதர்ம ஜனநாயக சோஷலிசம் மறுபிறப்பு எடுத்துவிட்டது. எதையும் எதிர்ப்பது ஆபத்து, எதிர்பார்ப்பது நல்லது என்ற நிலை உருவாவாது ஜனநாயகத்திற்குக் கேடு; அது எப்போது எல்லாருக்கும் புரியப் போகிறது?

ஆர்.நடராஜன், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்


 

உங்கள் கம்ப்யூட்டர் பேசுமா?

இந்த ஸ்க்ரிப்டை உங்கள் கம்ப்யூட்டர் இல்  .vbs ஆகா save செய்து run செய்து பாருங்கள், பிறகு என்ன உங்கள் கம்ப்யூட்டர் பேசும் உங்களோடு...





 

ஜப்பான் - இன்று அணு உலையை கூல் படுத்தும் முயற்சில் ராணுவம்

Efforts to cool one of the reactors at a quake-damaged Japanese nuclear power plant have been "somewhat effective" since authorities turned helicopters, fire trucks and police water cannon on the facility, its owner said early Friday.
Japanese military helicopters dumped tons of water on the No. 3 reactor housing, including its spent fuel pool, at the Fukushima Daiichi plant until after midnight Thursday, the Tokyo Electric Power Company reported. Earlier, fire and police trucks turned their hoses on the No. 3 reactor housing for more than an hour, TEPCO reported, and the subsequent steam and lowered radioactivity levels indicated progress.

உலகம்
 

U.N. Security Council approves no-fly zone in Libya

Told the time to act was diminishing by the hour, the U.N. Security Council voted Thursday evening to impose a no-fly zone and "all necessary measures" to protect civilians, as forces loyal to Libyan leader Moammar Gadhafi closed in on the rebel stronghold.

Opposition leaders, who have suffered military setbacks this week, said such measures were necessary for them to have any chance of thwarting Gadhafi's imminent assault on Benghazi.
"We're hoping and praying that the United Nations will come up with a very firm and very fast resolution and they will enforce it immediately," said Ahmed El-Gallal, a senior opposition coordinator, before the vote.

விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால்...? - சீமான்



கருப்பு மஞ்சள் சிகப்பு- பயமுறுத்தும் குறும் படம்


ஜூன் மாதம் முதலே மங்காத்தா

நடிகர் அஜீத் நடித்து வரும் 50வது திரைப்படம் மங்காத்தா. இதனை வெங்கட்பிரபு இயக்க தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார். இப்படத்தில் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல்கள் விரைவில் வெளிவர உள்ளது.

அஜீத் பிறந்த நாளான மே 1 தேதி வெளியிடப்படும் என ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இப்பொழுது ஜூன் மாதம் தான் வெளியாகும் என வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெங்கட்பிரபு  " படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதனை மும்பையில் படமாக்க உள்ளோம். மும்பையில் இருந்து ஏப்ரல் இரண்டாம் வாரம் திரும்பி வர உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இளைய எம்.ஜி.ஆர் விஜய்?

விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று பரபரப்பு கிளம்பியதுமே அடுத்த எம்.ஜி.ஆர் ஆக நினைக்கிறாரா விஜய் என்று கேள்விகள் எழும்பின. அதன் பிறகு ரசிகர் மன்ற போஸ்டர்களில் இளைய எம்.ஜி.ஆர் விஜய் என்று எழுதப்பட்டது. ஏற்கெனவே கருப்பு எம்.ஜி.ஆர், சிகப்பு எம்.ஜி.ஆர் இருக்க இது என்னப்பா புதுசா இருக்கே என்று நினைக்க, சமீபத்திய விழா ஒன்றில் அடுத்த எம்.ஜி.ஆர் விஜய் என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது
சென்னையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,   ‘’அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே கட்சி ஆரம்பித்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்.   ஆகையால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் திறமைக்கு அவர் ஹாலிவுட்டிற்கு போக வேண்டியவர். சினிமாவில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு’’ என்றார்.

இப்படத்தின் நாயகன் நடிகர் சத்யராஜ் பேசும்போது, ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் விஜய் நடிக்கிறார். விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டிய வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் விஜய்யை பல கோடி ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காவும் அவரை கொண்டாடும் தமிழகத்திற்காகவும் அவர் ஏதாவது செய்தாகவே வேண்டும். அது அவர் கடமை.  

’’சிவாஜி அப்படி ஆகிவிட்டார் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லக் கூடாது.   எம்.ஜி.ஆர்.  வரவில்லையா.    எம்.ஜி.ஆர் போல விஜய் அரசியலுக்கு வருவார். யாரும் நடிக்க வரும்போதே அரசியல் ஆசையோடு வருவதில்லை. காலம் அவர்களை கட்டாயப் படுத்துகிறது. விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பேசவே தயங்கும் நடிகர்கள் மத்தியில் தம்பி விஜய் நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாது செய்துவிடுவோம் என்று கோபப்பட்டார். அந்த கோபம்தான் எங்களுக்கு வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இயக்குனர் சீமான் பேசுகையில் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சீமான் இவ்விழாவில்,   ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள்.   அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது.    அந்த தீர்ப்புதான் விஜய்.   எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும்.   மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும்.   அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம். எனக்கான சுவாசத்தை நான் தான் சுவாசிக்க வேண்டும். என் தம்பி விஜய்க்கான அரசியலை அவர் தான் செய்வார். வரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள்.   அவர் வரவேண்டும்.  அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.

உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார்.   என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார்.  மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான்  அப்படி கோபம் வரும்.   இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள்.  எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள். என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல;  தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் 
போராளி. 

அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார்.   அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார். மேலும் ஒரு மனிதன் குழுபைக் குறைக்கலாமே தவிர கோபத்தைக் குறைக்ககூடாது. எங்கள் கோபம் இன்னும் அதிகமாய் வெளிப்படும் வகையில் என் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் பகலவன் படம் வெளிவரும் என்றார்.

விழாவுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் வரவில்லை...

பா.ம.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
1. மேட்டூர் - ஜி.கே.மணி, 2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு,
3. நெய்வேலி-வேல்முருகன், 4. அணைக்கட்டு- மா.கலையரசு,
5. ஆலங்குடி - டாக்டர் அருள்மணி, 6. சோழவந்தான் - மு.இளஞ்செழியன்,
7. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன்

இங்கிலாந்து அணி திரில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக டிராட் 47 ரன்கள் (38 பந்து 7 பவுண்டரி), ரைட் 44 ரன்கள் (57 பந்து, 5 பவுண்டரி) எடுத்தனர். ஸ்டிராஸ் 31 ரன்கள், பெல் 27 ரன்கள், பிரையர் 21 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரசெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் சிறப்பாக விளையாடினாலும் கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்து இறுதியில் 44.4 ஓவர்களில் 225 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்களை பறிகொடுத்தது.


அந்த அணியில் அதிகபட்சமாக ரசெல் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்களும், சேமி 21 பந்தில் 8 பவுண்டரி ஒசு சிக்சருடன் 41 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் டிரிட்வெல் 4 விக்கெட்களையும், ஸ்வான் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.





 

என் இசைப்பயணத்தை நிறுத்திவிடுவேன் : இளையராஜா அதிரடி



இளையராஜா இசையமைத்த ’’அழகர்சாமியின் குதிரை’’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது

படம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ‘’இந்தப்படத்தில் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கிறேன்.
  அந்த மியூசிக் கேட்டதும் எல்லோரும் ஒரு சொட்டு கண்ணீராவது விடுவீர்கள்.  இது நிச்சயம்.   அந்த இசை உங்கள் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்க வில்லையென்றால் நான் என் இசைப்பயணத்தை நிறுத்திவிடுவேன்’’ என்று அதிரடியாய் கூறினார்.

திமுக-அதிமுக நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள்

வியாழக்கிழமை, 17, மார்ச் 2011 (18:28 IST)


திமுக-அதிமுக நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள்
அ.தி.மு.க. 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த 160 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். 
திமுக 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது.   அதன் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.இதன் அடிப்படையில் பார்த்தால் தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்கள் 83 தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

சென்னை மாநகரில் 10 தொகுதிகளில் தி.மு.க.வும்-அ.தி.மு.க.வும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க-அ.தி.மு.க. நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. ஸ்ரீரங்கம், 2. பொன்னேரி, 3. திருவள்ளூர், 4. அம்பத்தூர், 5. மாதவரம், 6.திருவொற்றியூர், 7. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 8. வில்லிவாக்கம், 9. ஆயிரம் விளக்கு, 10. விருகம்பாக்கம். 11. சைதாப்பேட்டை, 12. பல்லாவரம், 13.தாம்பரம், 14. உத்திரமேரூர், 15. காட்பாடி, 16. ராணிப்பேட்டை, 17. விழுப்புரம், 18. விக்கிரவாண்டி, 19. சங்கராபுரம், 20. ஏற்காடு.

21. சேலம் மேற்கு, 22. சேலம் தெற்கு, 23. வீரபாண்டி, 24. ராசிபுபரம், 25. குமாரபாளையம், 26. ஈரோடு கிழக்கு, 27. தாராபுரம், 28. அந்தியூர், 29. மேட்டுப்பாளையம், 30. திருப்பூர் வடக்கு. 31.கவுண்டம்பாளையம், 32. கோவை வடக்கு, 33. கோவை தெற்கு, 34. கிணத்துக்கடவு, 35. மடத்துக்குளம், 36. பழனி, 37. ஒட்டன்சத்திரம், 38. நத்தம், 39. அரவக்குறிச்சி, 40. கிருஷ்ணராயபுரம்.

41. குளித்தலை, 42. திருச்சி மேற்கு, 43. திருச்சி கிழக்கு, 44. திருவெறும்பூர், 45. பெரம்பலூர், 46. கடலூர், 47. குறிஞ்சிப்பாடி, 48. கீழ்வேலூர், 49. மன்னார்குடி, 50. திருவாரூர். 51. நன்னிலம், 52. கும்பகோணம், 53. திருவையாறு, 54. ஒரத்தநாடு, 55. கந்தவர் கோட்டை, 56. விராலிமலை, 57. புதுக்கோட்டை, 58. திருப்பத்தூர், 59. மானாமதுரை, 60. மதுரை மத்தி.

61. மதுரை மேற்கு, 62. திருமங்கலம், 63. உசிலம் பட்டி, 64. ஆண்டிப்பட்டி, 65. பெரியகுளம், 66. போடி நாயக்கனூர், 67. கம்பம், 68. ராஜபாளையம், 69. ஸ்ரீவில்லிபுத்தூர், 70. சாத்தூர். 71. சிவகாசி, 72. அருப்புக்கோட்டை, 73. முதுகுளத்தூர், 74. தூத்துக்குடி, 75. திருச்செந்தூர், 76. ஒட்டப்பிடாரம், 77. சங்கரன்கோவில், 78. தென் காசி, 79. ஆலங்குளம், 80. திருநெல்வேலி.
 
81. அம்பாசமுத்திரம், 82. கன்னியாகுமரி, 83. நாகர் கோவில்.

அதிமுக -வி.சி. : 7 தொகுதிகளில் போட்டி

அதிமுக - காங்கிரஸ் : 42 தொகுதிகளில் பலப்பரீட்சை


அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் 42 தொகுதிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். அந்த 42 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. பூந்தமல்லி, 2. ஆவடி, 3. திரு.வி.க.நகர், 4. ராயபுரம், 5. அண்ணாநகர், 6. தியாகராய நகர், 7. மயிலாப்பூர், 8. ஆலந்தூர், 9. ஸ்ரீபெரும்புதூர், 10. மதுராந்தகம். 11. வேலூர், 12. கிருஷ்ணகிரி, 13. கலசப்பாக்கம், 14. சேலம் வடக்கு, 15. ஈரோடு மேற்கு, 16. மொடக்குறிச்சி, 17. ஊட்டி, 18. தொண்டாமுத்தூர், 19. சிங்காநல்லூர், 20. திருப்பூர் தெற்கு

21. காங்கேயம், 22. அவினாசி, 23. வேடசந்தூர், 24. கரூர், 25. மணப்பாறை, 26. முசிறி, 27. திருத்துறைப்பூண்டி, 28. பாபநாசம், 29. திருமயம், 30. காரைக்குடி. 31. சிவகங்கை, 32. மதுரை தெற்கு, 33. திருப்பரங்குன்றம், 34. விருதுநகர், 35. பரமக்குடி, 36. விளாத்திக்குளம், 37. ஸ்ரீவைகுண்டம், 38. வாசு தேவநல்லூர், 39. கடையநல்லூர், 40. நாங்குநேரி, 41. ராதாபுரம், 42. குளச்சல். 


அதிமுக -பாமக : 19 தொகுதிகளில் நேருக்கு நேர்


அ.தி.மு.க-பா.ம.க. வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

மொத்தம் 30 இடங்களில் போட்டியிடும் பா.ம.க. 3-ல் 2 இடங்களில் அ.தி.மு.க.வை எதிர்கொள்கிறது. அ.தி.மு.க-பா.ம.க. மோதும் 19 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. திருப்போரூர், 2. செங்கல்பட்டு, 3. காஞ்சீபுரம், 4. ஜோலார்பேட்டை, 5. செஞ்சி, 6. மயிலம், 7. ஒமலூர், 8. எடப்பாடி, 9. பவானி, 10. பூம்புபுகார், 11. திண்டுக்கல், 12. ஆலங்குடி, 13. பர்கூர், 14. வேளச்சேரி, 15. கும்மிடிப்பூண்டி, 16. கோவில்பட்டி, 17. திண்டுக்கல், 18. சோழவந்தான், 19. பால்கோடு.  தி.மு.க.

ஜெயலலிதாவிற்கு 3 நிபந்தனைகள்

அதிமுக கூட்டணியில் தொடர தேமுதிக 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.     

தொகுதி பங்கீட்டு பிரச்சனையால் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.  


இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி,  மூவேந்தர் முன்னனி கழகம் சேதுராமன் ஆகியோர்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து 3வது அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இதையடுத்து தேமுதிக அதிமுகவிற்கு 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.
1. அதிமுக அணியில் மதிமுகவிற்கு இடம் அளிக்க வேண்டும்
2. அதிமுக வேட்பாளர் அறிவித்துள்ள 21 தொகுதிகளை தேமுதிகவுக்கு தரவேண்டும்
3. தேமுதிகவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட வேண்டும்

Nuclear Reactor Meltdown Race Against Time Summary


பணிந்தார் ஜெயலலிதா, பயணம் தள்ளிவைப்பு

தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னமும் முடியாததால், நாளை தொடங்க இருந்த தனது பிரச்சார பயணத்தை தள்ளிவைப்பதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. போட்டியிடும் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்ட ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் கூறி, பயண விவரத்தையும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

ஆனால, தாங்கள் வெற்றி பெற்ற, விரும்பிக் கேட்ட தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை கண்ட அவரது கூட்டணிக் கட்சிகள், ஒன்றிணைந்து 3வது அணி அமைக்க திட்டமிட்டன. இந்திய, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர். 3வது அணி உருவாக்குவது பற்றி நாளை இறுதி முடிவு எடுத்து அறிவிப்பதாக செய்தியாளர்களிடம் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுவரை வாய் திறக்காத இருந்த அ.இ.அ.தி.மு.க. தலைமை, இன்று மாலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியாததால், வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தேர்தல் பிரச்சார பயணம் தள்ளிவைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, நாளை முதல் மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India's pride Mukesh Ambani joins Bank of America board

Reliance always takes India towards progress. Now, enhancing its pride, Reliance chief Mukesh Ambani has created a powerful position in abroad as he has been appointed as a director on board of Bank of America.Bank of America
்: பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர் களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.

"முகேஷ் அம்பானியை இந்தப் பதவியில் அமர்த்தியதன் மூலம் பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் உலகளாவிய பலன்களைப் பெறுவார்கள். இடர்ப்பாடு மேலாண்மையில் தனி நிபுணத்துவமும், பல்வேறுபட்ட வர்த்தகப் பிரிவுகளைக் கையாளுவதில் அவருக்குள்ள அனுபவமும் வங்கிக்குப் பயன்படும்", என அந்த வங்கியின் தலைவர் சார்லஸ் ஓ ஹாலிடே கூறியுள்ளார்.

Singaporean donates S$1 million

She appeared unprepared for the media's presence and flash of cameras as she walked into the meeting room at the Japanese Embassy.
In the end, Ms Elaine Low, 24, left most of the talking to her father for what is the biggest single donation given to the quake and tsunami victims in Japan.
Ms Low, who handed a S$1 million cheque to Japanese officials yesterday, said: "We want to offer our help to them."
சிங்கப்பூர் அரசாங்கம் தனது சார்பாக 1 மில்லியன் டாலர்ஐ   ஜப்பான்  துதரகதிடம் வழங்கியது .           

IOC puts fuel sales loss at Rs. 238 crore a day

நாளொன்றுக்கு ரூ. 238 கோடி இழப்பு : இந்தியன் ஆயில் கார்‌ப்பரேசன்
Original
State-owned Indian Oil Corp is losing Rs. 238 crore per day on selling diesel, domestic LPG and kerosene at government controlled rates.

"We are losing Rs. 156 crore per day only on diesel sales," a company official said, requesting anonymity.

IOC and its sister PSUs, Hindustan Petroleum and Bharat Petroleum, sell diesel, domestic LPG and kerosene at rates way lower than their imported cost to help government keep general price inflation under check.
"Diesel is being sold at a discount of Rs. 15.79 per litre to its imported cost," the official said
Read more at:
டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி கேஸ்) மற்றும் மண்ணெண்ணெயை அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்வதால், தங்களுக்கு நாளொன்றுக்கு 238 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, தங்கள் நிறுவனம், டீசல் விற்பனை செய்வதன் மூலம் மட்டும், நாளொன்றுக்கு ரூ. 156 கோடி இழப்பை சந்தித்து வருவதாகவும், மத்திய அரசு, விலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அரசின் இந்த விலை நிர்ணயத்திற்கு தாங்கள் மட்டும் பாதிக்கப்படாமல், தங்களுடைய துணை நிறுவனங்களான இந்துஸ்‌தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாங்கள் விற்பனை‌ செய்வதன் மூலம் பெறப்படும் வருமானம், இறக்குமதி செலவை விட குறைவாக இருப்பது என்பது வேதனைக்குரிய விசயம் என்றும், டீசலில் மட்டும் தங்களுக்கு லி்ட்டருக்கு ரூ. 15.79 இழப்பு ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

நாட்டிலேயே உயரமான புத்தர் சிலை திறப்பு

நாட்டிலேயே மிக உயரமான, 90 அடி உயர புத்தர் சிலை, வாரணாசியில் உள்ள சாரநாத்தில் நேற்று திறக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள சாரநாத்தில் முதன் முதலில் புத்தர் சொற்பொழிவு ஆற்றினார். இதை நினைவு கூரும் வகையில், அங்கு கடந்த பத்தாண்டுகளாக 90 அடி உயரமுள்ள, ஒரே மணற்பாறையால் ஆன புத்தர் சிலை செதுக்கப்பட்டு வந்தது. வேலை முடிவடைந்துள்ள நிலையில், புத்தர் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெனரல் சுரைடு, அந்நாட்டு பிரதிநிதி பிரகு தம்மா யுதி ஆகியோர் முன்னிலையில் நேற்று சிலை திறக்கப்பட்டது. 40 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுகுறித்து ஜெனரல் சுரைடு கூறுகையில், "புத்தர் சிலை திறப்பு மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்படும். ஒவ்வொரு ஆண்டும் இருநாடுகள் இடையே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புத்தர் சிலை திறப்பு இதற்கு மேலும் உந்துதலாக இருக்கும்.

Transfered $6.5 bn through India Post in 10 yrs: Western Union

6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிமாற்றம் : வெஸ்டர்ன் யூனியன்
   
"India Post is an integral of Western Union''s India wide agent network and the largest Western Union in-country network," Western Union South & South-east Asia MD Anil Kapur told reporters here.
India Post is the world''s largest postal network with over 1,55,000 post office, with a significant presence across rural India. Western Union has over 4,00,000 agent locations across 200 countries and territories.

கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் நிறுவனம், இந்திய தபால் துறையுடன் இணைந்து 6.5 பி்ல்லியன் அமெரிக்க டாலர்கள் பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக, வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தி்த்த வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் (தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்) நிர்வாக இயக்குனர் அனில் கபூர் கூறியதாவது, இந்திய தபால் துறை, 1,55,000 ஊழியர்களை தன்னகத்‌தே கொண்டு, சர்வதேச அளவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனம், 200 நாடுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான முகவர்களை வைத்து பணப்பரிமாற்ற சேவையை செய்து வருகிறோம். சர்வதேச அளவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய தபால் துறையுடன் சேர்ந்து தாங்கள் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறோம். இந்தியாவில் ஏற்ப்டடுள்ள முன்னேற்றமான பொருளாதார சூழ்நிலை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ள ‌பொருளாதார முன்னேற்றம் போன்ற காரணங்களினாலேயே இந்த சாதனை நிகழ்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 
                                          

3வது அணிக்கு திடீர் முயற்சி? பரபரப்பாக அரங்கேறும் காட்சிகள்

அ.தி.மு.க, அணியில் நீண்ட கால நண்பராக இருந்து வரும் ம.தி.மு.க.,.வுக்கு தொகுதி ஒதுக்குவதில் அ.தி.மு.க., அக்கறை காட்டவில்லை. இது வரை கவுரவ பேச்சுக்கு கூட அ.தி.மு.க, அழைக்கவில்‌லை. இது பெற்ற குழந்தையை விஷம் வைத்து ‌கொல்வதற்கு சமம் என இக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். புதிதாக சேர்ந்த தே.மு.தி.க., வுக்கு 41 தொகுதிகள் ஓதுக்கப்பட்டன.
தேசிய கட்சிகளான இடதுசாரிகள் அ.தி.மு.க., பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைக்கும் என காத்திருந்தன. நீண்ட இழுபறிக்கு பின்னர் மார்க்., கம்யூ., கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூ., கட்சிக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இது மிக குறைவுதான் என்று அதிருப்தியில் இருந்தாலும் அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம் என அறிவித்தன. 45 நாட்களாக பேச்சு வார்த்தைக்கு அ.தி.மு.க., அழைக்கும் என எதிர்பாத்து பொறுமையாக இருந்த நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தொகுதியை தன்னி‌ச்சையாக அறிவிப்பதா ? இதற்கிடையில் நேற்று அ.தி.மு.,க தனது 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இது கூட்டணி கட்சிகள் இடையே இப்போது பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் தே.மு.தி.க., இடதுசாரிகள், பார்வர்டுபிளாக் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்ட தொகுதிகள் அடங்கும். கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்தது அதிர்ச்சி தருவதாக மார்க்., கம்யூ., வெளிப்படையாக அறிவித்தது. சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்பதியில் இருக்கின்றன. இது தொடர்பாக அடுத்து என்ன செய்வது என இடதுசாரிகள் இன்று காலை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. தே.மு.தி.க., வும், இன்று கட்சி உயர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.இந்த கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய தா. பாண்டியன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க,வுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

விஜயகாந்துடன் தலைவர்கள் சந்திப்பு: இன்று காலையில் மார்க்., கம்யூ., இந்திய கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கிற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அ.தி.மு.,க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்., கம்யூ., ‌ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணச்சாமி , மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், பார்வர்டுபிளாக் கட்சி தலைவர் கதிரவன் ஆகியோர் கூடி பேசினர். பின்னர் அனைத்து நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஜெ., உருவ பொம்மை எரிப்பு : தே.மு.தி.க., தொண்டர்கள் ஆவேசம்: சென்னையில் தே.மு.தி.க., தொண்டர்கள் ஜெ., உருவ பொம்மையை எரித்தனர். அடுத்து என்ன செய்துவது என தே.மு.தி.க., கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு கூடிய இக்கட்சி தொண்டர்கள் ஜெ.,க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஜெ., உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

ஒரணியில் அணிதிரள வாய்ப்பு : அ.தி.மு.க, கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தே.மு.தி.க., ம.தி.மு.க.,.இடதுசாரிகள் மற்றும் அதிருப்தியில் உள்ள இதர கட்சிகள் ஒரணியில் திரண்டு 3 வது அணியை அமைக்க யோசிப்பதாக தெரிகிறது. இப்படி முடிவு எடுக்கும் பட்சத்தில் தமிழக தேர்தலில் மும்முனை போட்டி உருவாகும். அ.தி.மு.க., தனித்து விடப்படும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...