|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 November, 2011

பாம்பு ஒயின் குடிக்க போட்டோ போட்டி ...!


மது பிரியர்களுக்கு ஏற்கனவே எண்ணற்ற மது வகைகள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் ஜார்க்கண்ட் இளைஞர்கள் பாம்பு ஒயினை அருந்த போட்டோ போட்டியில் ஈடுபட்டுள்ளனர். பாம்பு ஒயினின் பிறப்பிடம் சீனாவாகும். அங்கு இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. தாவர மதுவில் பாம்பை ஊறப்போட்டு பாம்பு ஒயின் தயாரிக்கப்படுகிறது. இதற்கு விஷப்பாம்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

இந்த விஷயத்தில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படாதபடி தடுக்க சில ரசாயணங்களும் சேர்க்கப்படுகின்றன. பாம்பு ஒயின் மிகுந்த போதை தரக்கூடியது என்ற போதிலும் பாம்பின் விஷம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று சர்ப்பவியல் வல்லுநர்கள் ரசியுதீன், ஸ்ரீவத்சவ் ஆகியோர் கூறியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், இளைஞர்கள் இடையே பரவலாக புழக்கத்தில் உள்ள பாம்பு ஒயின் அண்டை மாநிலங்களான பீகார், சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகியவற்றிலும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. பாம்பு ஒயினுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. இதற்காக, எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க இளைஞர்கள் தயாராகி இருக்கிறார்கள். 

கவர்ச்சியில் கலக்குவேன்...!

நடிகை அமலாபால், காத்திருங்கள் கவர்ச்சியில் கலக்குவேன் என்று கூறியிருந்தார். படங்களில் வரும் காட்சிகளில் மட்டுமே கலக்குவார் என்று எதிர்பார்த்தால், சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடை அணிந்து கலக்குகிறார்.






2016 வரை மின் பற்றாக்குறை நீடிக்கும்-மின்வாரியம்!


2015-16 வரை தமிழகம் மின் பற்றாக்குறை மாநிலமாகவே திகழும் என்று தமிழக மின்வாரியம் (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம) அரசுக்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வரும் நிலையில் மின்வாரியத்தின் இந்த உண்மை நிலவர அறிக்கை தமிழக மக்களை கவலைக்குள்ளாக்குவதாக உள்ளது.

இத்தனைக்கும் மின் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பெருமளவிலான மின்சாரம், தமிழக கிரிடில் சேர்ந்துள்ள நிலையிலும் அதையும் மீறி பற்றாக்குறை பெருமளவில் உள்ளதாக உண்மை நிலவரம் தெரிவிக்கிறது. மின்பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் குறித்து தமிழக மின்சார முறைப்படுத்தும் ஆணையத்திடம் மின்சார வாரியம் இந்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 2500 முதல் 4000 மெகாவாட் மின்சாரம் வரை பற்றாக்குறையாக உள்ளது. நாம் வெளியிலிருந்து வாங்கும் மின்சாரத்தை தேக்கி வைக்கத் தேவையான சக்தி தற்போதைய கிரிடுக்கு இல்லை. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 2011-12 முதல் 2016-17 காலகட்டத்தில் தமிழகத்தின் மின் தேவை 12,462 மெகாவாட் முதல் 18,311 மெகாவாட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மின் உற்பத்தியின் மொத்த அளவு 11,263 மெகாவாட்டிலிருந்து 20,152 மெகாவாட்டாக அதிகரிக்கும்.

பல்வேறு மின் உற்பத்தி அதிகரிப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ள போதிலும், எதிர்பார்க்கும் தேவை மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையே நிறைய இடைவெளி உள்ளது. இருப்பினும் 2016-17 காலகட்டத்தில் தமிழகத்தில் 531 மெகாவாட் உபரி மின்சாரம் தமிழகத்திடம் இருக்கும். அதே காலகட்டத்தில், தமிழக மின்வாரியம், தனது கிரிடில் பல்வேறு திட்டங்கள் மூலம் கூடுதலாக 15,957 மெகாவாட் மின்சாரத்தை சேரிக்கும். சில தவிர்க்க முடியாத காரணங்களினால், 2011-12ல் தொடங்கப்பட வேண்டிய சில திட்டங்கள், 2012-13க்கு தள்ளிப் போயுள்ளது.

எண்ணூர் (250 மெகாவாட்), என்எல்சியின் முதலாவது உற்பத்தி நிலையம் (475 மெகாவாட்), தூத்துக்குடி (420மெகாவாட்) ஆகிய அணல் மின் நிலையங்கள் விரைவில் ஓய்வு பெறவுள்ளன. மேலும், தனியார்களிடமிருந்து வாங்கப்பட்டு வரும் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களும் முடிவடையவுள்ளன. இதனால், 2010-11 கால கட்டத்தில் 8000 மெகாவாட் மின்சாரம் குறைந்தது. அதேபோல 2016-17ல் இதன் அளவு 6620 மெகாவாட்டாக இருக்கும். மின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு 900 முதல் 3900 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை பல்வேறு திட்டங்கள் மூலம் வாங்கவும், சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு வெளியே இறக்கிவிட்ட பேருந்துக்கு ரூ.12,000 அபராதம்!


இரவு நேரத்தில் பயணியை ஊருக்கு வெளியில் இறக்கிவிட்டுச் சென்ற தனியார் பேருந்துக்கு ரூ.12,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் காந்தி. இவர் தூத்துக்குடியில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த மே மாதம் 25ம் தேதி இரவு சமாதானபுரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

புதுக்கோட்டை வரையிலும் அவர் டிக்கெட் எடுத்திருந்த போதிலும் அந்த பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அவரை புதுக்கோட்டைக்குள் இறக்கி விடாமல் வெளியே உள்ளே மெயின் ரோட்டில் இரவு 11 மணிக்கு கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டுச் சென்றனர். இதனால் மனவேதனை அடைந்த தங்கராஜ் காந்தி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தனியார் பேருந்தின் சேவை குறைபாடு குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன், பயணியை வேண்டும் என்றே தவிக்க வைத்த தனியார் பேருந்து நிறுவனத்திற்கு ரூ.12,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வங்கிகள்-தரத்தை இறக்கியது 'மூடிஸ்'!


அடுத்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளின் வர்த்தக நிலைமை மோசமாகும் என்று சர்வதேச பொருளாதார ரேட்டிங் அமைப்பான மூடிஸ் (Moody's) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் வங்கிகளின் பங்கு விலைகள் சடாரென சரிந்தன. அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகள் ''stable'' (ஸ்திரமான நிலை) என்ற நிலையிலிருந்து ''negative'' (எதிர்மறையான நிலை) என்ற நிலைமைக்குப் போகலாம் என மூடிஸ் எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய வங்கிகளின் சொத்து நிலைமை, மூலதனமயமாக்கம் (capitalisation), லாப விகிதம் ஆகியவை குறைந்து வருகின்றன. மூலதனம் சரிந்து வருவதால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகளுக்கு நிதித் தட்டுப்பாடு உருவாகலாம் என மூடிஸ் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்திய வங்கிகளுக்கு மிக வலுவான வாடிக்கையாளர்கள் இருப்பதாலும், அவர்களது முதலீடுகள் வலுவாக இருப்பதாலும், இந்திய வங்கிகளில் அரசின் முதலீடுகளும் அதிகமாக இருப்பதாலும் பிரச்சனைகளை வங்கிகள் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக 8.4 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைந்து வந்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கமும் சந்தையில் நிதித் தட்டுப்பாடும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதிலும் பிரச்சனை நிலவுகிறது. இந்த நிதிப் பிரச்சனைகள் காரணமாக இதனால் வங்கிகள் கடன் வழங்கும் விகிதம் குறையலாம். இதன் காரணமாக, வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாடும் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு பிரச்சனை நிறைந்ததாகவே இருக்கும் என்று மூடிஸ் கூறியுள்ளது. மூடிசின் இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தையில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் பங்குகள் இன்று வீழ்ச்சியைக் கண்டன. மூடிசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், இந்திய வங்கிகள் மிகவும் பலத்துடனும் ஸ்திரமாகவும் இருப்பதாகவும் எச்டிஎப்சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் கூறியுள்ளார். இதே கருத்தையே பெரும்பாலான வங்கிகள் கூறியுள்ளன. வங்கிகள் என்னதான் கூறினாலும், மூடிஸ் போன்ற சர்வதேச ரேட்டிங் அமைப்பு அறிவித்துள்ள இந்த தரம் இறக்கம் காரணமாக, இந்திய வங்கித்துறை பல சிக்கல்களை சந்திக்கும் என்றே தெரிகிறது.

சப்போட்டா!


சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக. 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும். சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

தோற்றப்பொலிவு தரும்: ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கொழு கொழு கன்னங்கள்: கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும். ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது. 

தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்; இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

பித்தம் குணமாகும்; சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்: 'கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது 'சப்போட்டா கொட்டை தைலம்'. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.

5-ல் ஒருவருக்கு சர்க்கரைநோய்!


இந்தியாவில் 5-ல் ஒருவர் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றில் ஒருவர் இந்த இரண்டு நோயினாலும் தாக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. சைட் எனப்படும் ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெமிக் அமைப்பு இந்தியர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, அந்த ஆய்வு முடிவு திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐந்தில் ஒருவர் பாதிப்பு: இந்தியாவில் 60 சதத்தினர் அதாவது ஐந்தில் ஒருவர் நீரிழிவு அல்லது உயர் ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் மகாராஷ்டிராவில் 67 சதவிகிதத்தினர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 40 சதவிகிதத்தினரை சோதனை செய்தபோது 40 சதவிகிதம் பேர் நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 8 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நோய் பற்றிய விழிப்புணர்வு மகாராஷ்டிராவில் குறைவாகவே உள்ளது தெரியவந்தது. இந்தியா முழுவதும் 7 சதவிகிதத்தினர் தங்களுடைய நோய் பற்றிய விழிப்புணர்வு அன்றி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 5 சதவிகிதத்தினர் நோய்பற்றி அறியாமையிலேயே இருக்கின்றனர். 

எட்டு மாநிலங்கள்: எட்டு மாநிலங்களில் நகர்புறங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 60 சதவிகிதத்தினர் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக சைட் அமைப்பின் தலைவர் டாக்டர் சசாங்ஜோசி தெரிவித்துள்ளார். நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பலரும் ரெகுலராக ரத்த சர்க்கரை, மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பலரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 சதவிகிதம்தான் இருந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.லி கிராம் அளவிற்கு இருந்து. ஏராளமானோர் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு அவசியம்: நம்முன் உள்ள மிகப்பெரிய சவால் என்னவெனில் இதில் 7.2 சதவிகிதத்தினர் தங்களுக்கு சர்க்கரை மற்றும் உயர் ரத்தஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறியாமல் இருப்பதுதான். 18.4 சதவிகிதத்தினர் முன் பரிசோதனை குறித்து விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர் என்றும் டாக்டர் ஜோஷி தெரிவித்துள்ளார். மாறிவரும் உணவுப்பழக்கமே இதுபோன்ற நோய் பாதிப்பிற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் பற்றிய விழிப்புணர்வும், அதனை கட்டுப்படுத்துவது குறித்த தெளிவும் இருந்தால் நம்மை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

எழுந்து உட்கார்ந்த பிணம்...!


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17). அவர் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல் தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார்.

இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த போலீசார் சில விவரங்களை சேகரித்தனர். மறுநாள் காலையில் பிரதே பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். அப்போது ரத்தே உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப் மிட்டல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆண்களுக்கு 'செக்ஸ்' நினைப்பு வருமா?


புது ஷூ வாங்கலாமா, ஷாப்பிங் போகலாமா, பிரண்ட்ஸ் என்ன பண்ணிட்டிருப்பாங்க, பாஸ் ஓவரா பேசிட்டாரே வேற வேலை பார்க்கலாமா, 'செங்கல்' போனை தூக்கிப் போட்டுட்டு புது செல்போன் வாங்கலாமா என்ற வரிசையில்தான் பெரும்பாலான ஆண்களின் சிந்தனை ஓட்டம் பொதுவாக இருக்கிறதாம். இதில் தவறாமல் இடம் பெறுகிறது செக்ஸ் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். 

அதேசமயம், ஆண்களின் மூளை ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண், சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்திருப்பதாக எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 8000 முறை அவன் செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா, 7 விநாடிகளுக்கு ஒருமுறை ஆண்கள் செக்ஸ் நினைப்பில் மூழ்குகிறார்களா என்று செக்ஸாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறார்கள்.



இதுகுறித்து டாக்டர் சீமா என்பவர் கூறுகையில், இதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஒரு வேளை யாருக்காவது அப்படி இருந்தால் நிச்சயம் அவர் மன நல மருத்துவரைப் போய்ப் பார்ப்பது நல்லது. காரணம், செக்ஸ் ரீதியான கோளாறு இருந்தால்தான் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றும். அதற்கு சிகிச்சை தேவை என்கிறார். 32 வயதான மல்லிகா என்ற உளவியல் துறை சார்ந்த பெண் கூறுகையில், இது நிச்சயமாக உண்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். சில ஆண்களுக்கு செக்ஸ் நினைப்பு அதிகம் இருப்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த ஆண்களையும் இதில் சேர்த்து விட முடியாது. செக்ஸைப் பற்றியே எப்போதும் ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுவாக கூறுவது தவறு என்கிறார். மேலும் அவர் கூறுகையில், பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், ஈர்ப்பும் சற்றுஅதிகமாக இருக்கும். இது இயற்கையானதே. அவர்களது ஹார்மோன் வளர்ச்சிதான் அதற்குக் காரணம். ஆனால் 26 வயதைத் தாண்டி விட்ட ஆண்களுக்கு 7 விநாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் நினைப்பு வரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களது மனதில் செக்ஸை விட மற்ற விஷயங்கள் நிச்சயமாக அதீதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 



ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பல்வேறு வகையான பொறுப்புகள் மனதில் வந்து உட்கார்ந்து விடும். அதுகுறித்த சிந்தனையில்தான் அவர்கள் அதிகம் மூழ்கியிருப்பார்களே தவிர செக்ஸ் அவர்களை ஆக்கிரமிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். 28 வயதான நம்ரதா என்பவர் கூறுகையில், நான் எனது ஆண் நண்பர்களை அவ்வப்போது சீண்டிப் பார்ப்பேன். அவர்களில் பெரும்பாலானோரும் செக்ஸ் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை என்பதை புரிந்து கொள்வேன். தங்களது வேலையில் முன்னேறுவது, குடும்பப் பொறுப்புகள், மனைவி, குழந்தை குறித்த அக்கறை உள்ளிட்டவைதான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். செக்ஸ் குறித்த சிந்தனை அவர்களிடம் அதீதமாக இருப்பதில்லை என்றார்.



சரி மருத்துவ ரீதியாக ஒரு ஆணின் மனது செக்ஸ் குறித்து எந்தவகையான சிந்தனையைக் கொண்டிருக்கும் என்று டாக்டர் சீமாவிடம் கேட்டால், பெண்களை விட ஆண்கள் வெளிப்படையாக செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இது பொதுவானது. மேலும் செக்ஸை ஒரு மனப் பளுவை நீக்கும் மருந்தாக ஆண்கள் கருதுகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை அப்படியில்லை. ஆண்கள் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவது என்பது பெண்களை விட அதிகம் நடக்கும் ஒன்றுதான் என்றாலும் கூட 7 விநாடிகளுக்கு ஒருமுறை சத்தியமாக நடப்பதில்லை என்பதே உண்மை என்றார்.



இதற்கிடையே, ஆண்களின் செக்ஸ் குணாதிசியங்கள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வித்தியாசமான முடிவுகள் வந்துள்ளன.அதில், 54 சதவீத ஆண்கள் தினசரி செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாகவும், ஒரு நாளைக்கு பலமுறை செக்ஸ் சிந்தனை அவர்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 சதவீதம் பேருக்கு வாரத்திற்கு சில முறையும், சிலருக்கு மாதம் சில முறையும் செக்ஸ் சிந்தனை ஏற்படுகிறதாம். 4 சதவீதம் பேருக்கு மாதத்திற்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனை வருகிறதாம். இதிலிருந்து பார்த்தால், சராசரியாக ஆண்களில் பாதிப் பேருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை கூட செக்ஸ் சிந்தனை வருவதில்லை என்பதை உணரலாம்.
உண்மையில், செக்ஸ் சிந்தனை அதிகம் இருப்பவர்களை விட இவர்கள்தான் கவலைக்குரியவர்கள்...!

சிறைக்குள் செல் நிமிடத்திற்கு ரூ.25க்கு வாடகை!

 கோவை மத்தி்ய சிறைக்குள் நிமிடத்திற்கு ரூ. 25க்கு வாடகைக்கு விடப்பட்ட செல்போன்கள் மற்றும் ரூ. 11,000 ரொக்கத்தை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.கோவை மத்திய சிறையில் சுமார் 2250 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் செல்போன் புழக்கம் அதிகம் உள்ளது என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதை தடுக்க சிறை நிர்வாகம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் 30 செல்போன்கள் சிக்கின. அவை கேமரா மற்றும் எம்பி3 வசதியுடன் கூடிய செல்போன்கள். இந்நிலையில் கைதிகள் 2 பேர் நிமிடத்திற்கு ரூ. 25க்கு செல்போனை சக கைதிகளுக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதாக சிறை நிர்வாகத்திற்கு புகார் வந்தது.இதையடுத்து தலைமை வார்டன் பிச்சுமணி மற்றும் சிறை காவலர்கள் கோவை பெரியநாய்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்(29), செந்தில்குமார்(31) என்ற 2 பேர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது 2 செல்போன்களும், ரூ. 11,000 ரொக்கமும் சிக்கியது.அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் செல்போன்களை நிமிடத்திற்கு ரூ.25க்கு வாடகைக்கு விட்டது உறுதிபடுத்தப்பட்டது.

பத்திரிகைகளுக்கு பயப்படமாட்டேன் ராஜபக்சே!

 பத்திரிகைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.கொழும்பில் செவிலியருக்கான படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். பல்வேறு விதமான பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவ்வாறு பயந்துகொண்டிருந்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.மேலும் இலங்கையில் ஏராளமான குப்பை பத்திரிகைகள் வெளியாகின்றன என்று அவர் கூறினார்.பொதுமக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வது அவசியம் என்றார் அவர்.இலங்கையில் சமீப காலமாக பல பத்திரிகைகளை ராஜபக்சே அரசு தடை செய்துவிட்டது. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று.அரசை எதிர்த்து எழுதியதற்காக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே கொடூரமாக கொல்லப்பட்டதில் ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபாயவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. புலிகளை ஆதரித்ததாகக் கூறி திசநாயகம் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களை ராஜபக்சே அரசு துன்புறுத்தியது. இரு தினங்களுக்கு முன்பும்கூட 5 செய்தி இணையதளங்களை மூட உத்தரவிட்டது ராஜபக்சே அரசு என்பது நினைவிருக்கலாம்.

இதே நாள்...


  • கம்போடியா விடுதலை தினம்(1953)
  •  உத்தராஞ்சல், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(2000)
  •  நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது(1990)
  •  அமெரிக்கா, ஹவாய் தீவின் பியர்ல் துறைமுக உரிமையைப் பெற்றது(1887)
  •  டார்ம்ஸ்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1994)

கிரிவலம் சுற்றினால் என்ன பலன்...?



கிரி...கிரி... கிரி வலம்...
கிரி என்பது மலை என பொருள்படும். கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரி முதலியனவும் கிரியாகிய மலையை குறிக்கும் சொல்லாகும். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் (மலைக்கு வலபக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதல்) என்பதாகும்.
கிரிவழிபாடு
இறைவழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். இறையை வழிபடுவது போல மலையை ஆன்மாக்கள் மகிழும்படி எழுந்து மகாமேருமலையை வலமாக சுற்றிவந்து வழிபடும் பல சமயத்தாரும் வழிபடுவதும் காலத்தை கடந்த பழமையானதாம். இவ்வகையில் கையிலை மலையை வழிபடுவது காலத்தை கடந்த வழிபாடாக உள்ளது. சிவசிந்தனை தோன்றிய போதே கையிலை மலையை பற்றிய சிந்தனையும் தோன்றிவிட்டது. வழிபாடும் தோன்றி விட்டது. சூரியன் கையிலை மலையை வலம் வந்து நாள் தோறும் வழிபடுகிறான் என்கின்றனர். இதனை நக்கீரர்
உலக முவப்ப வலநோபு திருதரு

பலா புகழ் ஞாயிறு     

திருமுருகற்று படைவரிகளில் உணர்த்துவதை காணலாம். புனிதமான ஸ்தலத்தையோ, தீர்த்தத்தையோ, மலையையோ, வனத்தையோ, தெய்வீகம் உள்ள இடத்தையோ சுற்றி வருவதே வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படும். அதேபோல் ஒரு மூர்த்தியையோ (கடவுளையோ) வில்வமரம் போன்ற தெய்வீக மரத்தையோ துளசி செடியையோ சுற்றி வருவதும் கூட வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படுகிறது. இவ்வாறு பக்தர்கள் எதையாவது ஒன்றை சாதாரண முறையில் சுற்றி வந்தால் அதை வலம் வருதல் அல்லது பிரதட்சணம் என்று அழைப்பர். இதையே மிகப்பெரிய அளவில் செய்தால் அது பரிக்கிரம் அல்லது கிரிவலம் எனப்படுகிறது.
கிரிவலம் சுற்றுவதன் பெருமை: நாம் உணராவிட்டாலும் கூட, ஒவ்வொரு நொடியுமே, நாமும், நம் உலகமும், அகண்டாகார பிரபஞ்சமும் சுழன்று கொண்டேயிருக்கிறோம்.
நகர்வின்றி நிகழ்வில்லை. சுழற்சியின்றி சக்தியில்லை.
சிறிய சைக்கிள் டைனமோ முதல், ஆலைகளில் உள்ள பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் அணைகளில் உள்ள பிரம்மாண்டமான டர்பைன்கள் வரை, சக்தி உருவாக்கிகள் யாவுமே சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மின் கடத்தி இழைகளையும், காந்தத்தையும், ஒன்றை அசைவற்ற நிலையிலும், மற்றதை சுழலும் படியும் அமைக்கும் போது தான் மின்சக்தி உருவாகிறது. ஆலயத்தை வலம் வரும் வழிபாடும் இவ்வடிப்படையில் உருவானதே. ஜெனரேட்டரில், காந்தத்தின் சக்தியை அல்லது மின் இழையின் பரிமாணத்தை மட்டும் அதிகரித்தால் போதாது. இரண்டுக்குமிடையே சுழற்சி உறவை உருவாக்கினால்தான் மின்சாரம் கிடைக்கும். அது போலவே தான் இறைத் திருவுருவங்களுக்கு விரிவான பூசைகள் நடத்துவதால் மட்டுமோ, அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் மட்டுமோ, முழு நன்மையையும் பெற்றிட இயலாது. அடியவர்கள் ஆலயத்தை வலம் வரும் போதுதான் முழுப்பயனையும் அடையும் நிலை உருவாகிறது. பூசித்த பலனை பிரதக்ஷிணத்தால் அடை என்பது பழமொழி. இதனால் தான் வீட்டில் வழிபடும் போதும், திருவுருவைச் சுற்ற முடியாத இடங்களிலும் ஆத்ம பிரதட்சிணமாவது செய்யுமாறு கூறப்படுகிறோம். திருச்சுற்று கூட தெய்வீகமும் கூடும். டைனமோவை ஓரிரு முறை சுழற்றும் போது மின்னோட்டம் ஏற்பட்டாலும், அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விளக்கில் ஒளியைக் கொடுப்பதில்லை. பன்முறை சுற்றும் போதே திருப்தியான பலன் கிடைக்கிறது.
மேலும் சைக்கிளில் கால் சுழற்றுமிடத்தில் உள்ள பல் சக்கரத்தின் அளவு பெரிதாக பெரிதாக, பின் சக்கரத்தின் சுழற்சி கூடி, சைக்கிள் செல்லும் வேகம் அதிகரிப்பது போல, ஆலயங்களிலும் வெளிக்கோடியிலுள்ள பெரிய பிரகாரத்தை வலம் வரும்போது நன்மை மிக அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் தான் முன்னோர்கள், இயன்ற வரையில், பல ஆலயங்களிலும் 5சுற்று, 7 சுற்று என பல சுற்றுக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இத்தகு அமைப்பு உள்ள தலங்களை பஞ்சாவரண/சப்தாவரண/நவாவரண ÷க்ஷத்ரங்கள் என்று போற்றி வந்திருக்கின்றனர். இச்சுற்றுக்களை வலம் வருவதின் மேன்மையை நமக்கெல்லாம் நினைவுபடுத்துவதாக, இன்றும் ஒருசிலர், மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் முதலில் சித்திரை வீதியையும், அடுத்து ஆடி வீதியையும், பின்னர் 2வது உள் பிரகாரத்தையும், அதற்கும் பிறகு முதல் உள் பிரகாரத்தையும் வலம் வந்த பின்பே அம்மனையோ, சுவாமியையோ தரிசிப்பதைக் காணலாம். பணிப் பளுவினால், கால அவகாசமின்மையால், எல்லோராலும், எல்லா நாட்களிலும், எல்லாச் சுற்றையுமோ, பெரிய பிரகாரத்தையோ வலம் வர இயலாது என்றாலும் இயன்றவரை சிறிய திருச்சுற்றையாவது சில முறையாவது வலம் வருதல் நல்லது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறையாவது பெரிய திருச்சுற்றை வலம் வருதலை எல்லோரும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.


கிரிவலத்தின் நன்மை: தேக ஆரோக்கியத்தை காப்பதற்காக தினமும் பலர்  மைதானத்திலும்  ரோடு ஓரங்களிலும் நடக்கின்றனர். இது மிகவும் நல்லது. ஆனாலும் உடல் நலத்துடன், அமைதியும், ஆன்ம பலமும் அடைய வேண்டும் என்று பலரும் உணரத் துவங்கியிருப்பதால் தான், இன்று ஆலயங்களையும் மலைகளையும் வலம் வருவது கூடியுள்ளது. சிலரது வீட்டருகே சுற்றி வரும் அளவிற்கு மலை இல்லாமல் இருக்கலாம். எனவே அருகில் இருக்க கூடிய கோயில் உள்ள இடங்கள் வரை இறை சிந்தனையுடன் நடந்து சென்று கோயிலையும் வலம் வந்தால், உடல் நலமும் கிடைக்கும். உள்ளமும் பலம் பெறும். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை அருகிலுள்ள கிரிவலம் செல்லக்கூடிய மலைக்கோயில் வாசல்  வரை வாகனத்தில் சென்று, அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தெய்வபலம் பொருந்திய மலையை கிரிவலம் செய்தால் உடலும் மனமும் வலிமை பெறும்.விடுமுறையென்றால், வீட்டிலேயே இருந்து, தொலைக்காட்சியை மட்டுமே பார்க்காமல், குடும்பமாக, குழுவாக, இயற்கை வளம் மிகுந்த ஊர்களுக்கும், இறையருட்தலங்களுக்கும் சென்று வருவது மனதுக்கு நிம்மதி கிடைக்கும். இது போலவே, கிரிவலம் செல்வது கூட பவுர்ணமியில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களில் சென்று வருவது நல்லது.


கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
மலையை வலம் வர மனது விரியும்
நடந்து வழிபட தேக நலனும் கூடும்
நாலு பேரோடு நடக்க நல்லுறவும் பெருகும்
அவனைப் பணிய, அவனடியவரை நினைக்க
அமைதியும் கூடும், அகஒளியும் பெருகும்.


திருவண்ணாமலை கிரிவலம்: ஒரு சில பக்தர்கள் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இடைவிடாது திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருகின்றனர். திருவண்ணாமலை தலம், சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் ஆகும். இங்குள்ள மலையடி வாரத்தின் கீழ் சிவாலயம் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தன்று இந்த மலை மீது ஏற்றப்படும் தீபத்தில் ஈஸ்வரன் அருள் பாலிக்கிறார். இங்கு மலையே சிவலிங்கமாகும். இந்த மலையைச் சுற்றி வருவது பெரும் புண்ணியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்வது மரபு. இதில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையில் தான் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்றுள்ளனர். பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம்.
வார நாட்களில் கிரிவலம் சுற்றினால் ஏற்படும் பலன்கள்:


ஞாயிறு: மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்

திங்கள்: செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய்: வறுமை, கடன் நீங்குதல்
புதன்: கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன்: தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி: விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி: கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
அமாவாசை நாட்கள்: சிவனின் பரிபூரண அருள், மன நிம்மதி கிடைத்தல் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக சுற்றுதல்........ குறையிருந்தாலும் மகப்பேறு கிடைத்தல்

பக்தர்கள் எல்லோரும் திருவண்ணாமலை போன்ற சில கோயில்களுக்கு மட்டுமே பவுர்ணமி அன்று கிரிவலம் செல்கிறார்கள். ஆனால் பவுர்ணமி கிரிவலம் என்பது அனைத்து கடவுளுக்குமே முக்கியமானது. கோயில்களில் மதில் சுவர்களை எழுப்பி உருவாக்கப்படும் பிரகாரங்கள் நாமாக ஏற்படுத்திக் கொண்டவை என்றால், மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை இயற்கையாகவே கிடைத்ததாகும். திருவண்ணாமலையில் மட்டுமின்றி மலையுள்ள ஊர்களில் எல்லாம், அங்குள்ள ஆலயத்தை தரிசிக்கும் முன்பு மலையை கிரிவலம் வந்து வணங்குவது மிக நன்று. கைலாயத்திலுள்ள கைலாச நாதனையும், தமிழகத்திலுள்ள அண்ணாமலையானையும் மட்டுமின்றி, விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்மனின் ஆலயங்கள் மலைமீது உள்ள அமைந்திருந்தாலும்,  அல்லது மலைக்கு கீழே குடைவரைக்கோயிலாக அமைந்திருந்தாலும் அந்த மலையை பவுர்ணமி நாட்களில் சுற்றி வருவது மிகுந்த புண்ணியத்தை தரும். மலைமேல் உள்ள மருந்தே மாமருந்து என்பதற்கு இணங்க சுவாமி அருளால் எல்லா தோஷங்களும் விலகும். தற்போது பக்தர்கள் விநாயகரை பிள்ளையார்பட்டியிலும், முருகனை பழநி, திருப்பரங்குன்றத்திலும், பெருமாளை வேலூர் சோளிங்கரிலும், அம்மனை திண்டுக்கல் அபிராமியம்மை கோயிலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கிரிவலம் செல்லும் மேலும் சில கோயில்கள்: 
திருவள்ளூர்: திருத்தணி
வேலூர்: சோளிங்கர், ரத்தினகிரி, வள்ளிமலை
காஞ்சிபுரம்: திருநீர் மலை, சிங்கபெருமாள், திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் 
திருக்கழுக்குன்றம்


திருவண்ணாலை: அருணாசலேஸ்வரர், பர்வதமலை, தேவிகாபுரம் கனககிரீஸ்வரர்
கிருஷ்ணகிரி: ஓசூர் சந்திரசூடேஸ்வரர்
சேலம்:  வடசென்னி மலை, கஞ்ச மலை
கடலூர்:  பாடலீஸ்வரர், விருத்தாச்சலம், சிதம்பரம் நடராஜர், திருவதிகை வீரட்டானேஸ்வரர்
ஈரோடு: கதித்தமலை, சென்னிமலை
திருச்செங்கோடு: அர்த்தநாரிஸ்வரர்
பெரம்பலூர்: செட்டிகுளம் முருகன்
கோவை: வெள்ளியங்கிரி, மதுக்கரை தர்மலிங்ககேஸ்வரர், கிணத்துக்கடவு முருகன், சரவணம்பட்டி, ரத்தினகிரி, செஞ்சேரி மலை
திருப்பூர்: அலகுமலை
திருச்சி:மலைக்கோட்டை, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர், ஈங்கோய்மலை
கரூர்:  தான்தோன்றி மலை, ஐயர் மலை
தஞ்சாவூர்: சுவாமி மலை, நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்
நாகப்பட்டினம்:  சீர்காழி சட்டநாதர்
புதுக்கோட்டை: விராலி மலை, திருமயம் சத்தியகிரிஸ்வரர், தேனிமலை முருகன்
மதுரை:  திருப்பரங்குன்றம், யானை மலை
திண்டுக்கல்:அபிராமி அம்மன், பழனி
தேனி : பெரியகுளம் கைலாச நாதர்
சிவகங்கை: பிரான்மலை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி
தூத்துக்குடி: கழுகுமலை
திருநெல்வேலி:  பண்பொழி முத்துகுமாரசுவாமி
கன்னியாகுமரி: வேலி மலை குமாரசுவாமி.
இது தவிர தமிழகத்தில் புகழ்பெற்ற பல கோயில்களில் கிரிவலம் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கிரிவலம் வரும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?
மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது  உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது. ஒரு சிலர் கிரிவலம் சுற்றுகிறேன் என்ற பேரில் பேசிக் கொண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டும், கொஞ்சம் கூட இறை சிந்தனை இல்லாமல் சுற்றி வருகின்றனர். மேலும்  குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் கிரிவலம் சுற்றுவதற்காக கூட்டத்தை ஏற்படுத்தி அந்த ஊரை குப்பை மேடாக்குவதுடன் அந்த ஊர் மக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றனர். கிரிவலம் சுற்றி வரும் மக்கள் கோயிலுக்குச் செல்லாமல் கிரிவலத்தை மட்டும் ஜாலியாக சுற்றி விட்டு ஊர் வந்து சேருகின்றனர். இதனால் கோயிலுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. இதற்கு பதிலாக பக்தர்கள் அவரவர் ஊரில் கிரிவலம் செல்லக்கூடிய கோயில்களில் ஏற்கனவே கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்களுடன் சேர்ந்து நிம்மதியாக இறை சிந்தனையுடன் கிரிவலம் சென்று கோயிலுக்குள்ளும் சென்று இறைவனை தரிசித்து விட்டு முழு பலனுடன் வீடு வந்து சேரலாம்.
பவுர்ணமியின் தனிச்சிறப்பு: சந்திரன் படிப்படியாக, ஒளி குறைந்து, முற்றுமாக, நம் கண்ணுக்குத் தென்படாத தினத்தை அமாவாசை என்றும், அதன் பிறகு, படிப்படியாக ஒளி கூடி, முழு இரவும் முழுமையாகத் தென்படும் நாளை பவுர்ணமி என்றும் கூறுகிறோம். பகலில் சூரியனும்; இரவில் சந்திரனுமாக, ஒரு நாளில் 24 மணி நேரமும், விண் ஒளிகள், நம்மீது, இயற்கையாகவே படர்வது பவுர்ணமி அன்று மட்டுமே. இதனால் தான் பரம்பொருள் வழிபாட்டில் மற்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளை விட பவுர்ணமி பூசையை மிகச் சிறந்ததாகப் போற்றி வந்திருக்கின்றனர். பொதுவாக, ஒவ்வொரு திதியையும், குறிப்பிட்ட ஒரு தெய்வ வழிபாட்டுக்கே மிக உகந்ததாக கருதப்படுவதை அறிவோம்.  உதாரணமாக, சதுர்த்தி விநாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், அஷ்டமி, நவமி அம்மனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், திரயோதசி, சதுர்த்தசி சிவபெருமானுக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, பவுர்ணமியை மட்டும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் அன்னை பராசக்திக்கும், லக்ஷ்மிக்கும் என்று பல தெய்வ வழிபாடுகளுக்கும் மிக மேன்மையாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியில் பூசை பண்ணியதும் பலன் என்று கூறுமளவுக்கு முழுநிலவன்று வழிபடுவது மிக்க சிறப்புடையது.
காலத்தைக் கணக்கிடும் பல முறைகளில், சூர்யமானம், சந்திரமானம் என்பவை மிக முக்கியமானவை. பொதுவாக, வடபாரத மாநிலங்களில் தான், சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டாலும், சூரியனின் நகர்வைப் பின்பற்றும் தமிழகத்திலும் பலமுக்கிய செயல்பாடுகளுக்கு நிலவின் நிலையும் கருதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறைவழிபாட்டில், அதுவும், ஆலய வழிபாட்டில் பவுர்ணமியும் அதை ஒட்டிய நட்சத்திரமுமே மிகவும் மேன்மையாகக் கருதப்பட்டிருக்கின்றன. சித்திரைத் தேர் முதல், பங்குனிக் காவடி வரை, லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திருவிழாக்கள் அநேகமாக பவுர்ணமி நாளன்றே நடைபெறுகின்றன.
மாதம் தோறும் வரக்கூடிய ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஒரு சிறப்பு உள்ளது. உதாரணத்திற்கு ஒரு சில சிறப்புக்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமி : (சித்திரை நட்சத்திரம்) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இழங்கும் விழா சிறப்பு.
வைகாசி பவுர்ணமி: (விசாகம் நட்சத்திரம்)  முருகன் அவதரித்த நாள்.
ஆனிப் பவுர்ணமி : (மூலம் நட்சத்திரம்) இறைவனுக்கு மா, பலா, வாழை போன்ற பல கனிகள் படைக்கும் நாள். திருவையாற்றில்  சிறப்பு.
ஆடிப் பவுர்ணமி : (பூராடம்/உத்ராடம் நட்சத்திரம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில்  சிறப்பு.
ஆவணிப் பவுர்ணமி : (அவிட்டம் நட்சத்திரம்) வட இந்தியாவில் ரக்ஷõபந்தனம் என்றும், கேரளத்தின் ஓணம் பண்டிகை என்றும் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி பவுர்ணமி : (பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம்) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரனுக்கு வட இந்தியாவில் சிறப்பான பூஜை.
ஐப்பசி பவுர்ணமி : (அசுவதி நட்சத்திரம்) வட இந்தியாவில் மகாலட்சுமி விரதமும், தென் இந்தியாவில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விசேஷம்.
கார்த்திகைப் பவுர்ணமி : (கார்த்திகை நட்சத்திரம்) திருவண்ணாமலையில் நடைபெறும் தீருக்கார்த்திகை தீபம் சிறப்பு.
மார்கழிப் பவுர்ணமி : (திருவாதிரை நட்சத்திரம்) சிவன் நடராஜராக காட்சியளித்த நாள்.
தைப் பவுர்ணமி : (பூசம் நட்சத்திரம்) சிவனுக்கும், முருகனுக்கும் பெருவிழா நடத்தும் நாள்.
மாசிப் பவுர்ணமி : (மகம் நட்சத்திரம்) மாசி மகத்தன்று கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் சிறப்பு.
பங்குனிப் பவுர்ணமி : (உத்திரம் நட்சத்திரம்) சிவன் பார்வதி திருமணம் போன்ற பல முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்ற காரணத்தினால் தான் பவுர்ணமியில் சுற்றும் கிரிவலமும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

மருத்துவ படிப்பில் புதிய தேர்வு முறை ரத்து!


மருத்துவப் படிப்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்வு முறையை ரத்து செய்ய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து புதிய மதிப்பெண் விதி காரணமாக மருத்துவத்தில் முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள். எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் அனாடமி, பயோகெமிஸ்ட்ரி, ·பிஸியாலஜி என்ற மூன்று பாடங்களை படிப்பார்கள். இந்த பாடங்களுக்கு இரண்டிரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு வரை, ஒரு பாடத்திற்கு இரண்டு தாளிலும் சேர்த்து 100 மதிப்பெண் பெற்றால் அந்த பாடத்தில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படும். ஆனால் புதிய தேர்வு முறையால், ஒவ்வொரு தாளிலும் தலா 50 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மாற்றி அமைத்தது.
இந்த புதிய தேர்வு முறையால், கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வெழுதிய 3,184 மாணவர்களில் 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். 1,217 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். புதிய தேர்வு முறையால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.முதலாம் ஆண்டில் தோல்வி அடைந்த மாணவர்கள், விதிமுறைப்படி இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு செல்ல முடியாது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திலு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கினை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை, பல்கலையின் முடிவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் பல மருத்துவக் கல்லூரிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாம் ஆண்டு வகுப்பில் மாணவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் போராட்டங்களும், அமைச்சரிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டன. சுகாதாரத் துறை அமைச்சரும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பேசி, புதிய தேர்வு முறையை ரத்த செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் ஆலோசனை ஏற்று, புதிய தேர்வு முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.அதன்படி, சென்னை உயர் வழக்கு விசாரணை நவம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது. விசாரணையின்போது, புதிய மதிப்பெண் விதிமறையை ரத்து செய்த தகவலை தமிழக அரசு தெரிவிக்கிறது.இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த பிரச்சினை முடிவிற்கு வருகிறது.

67 ஆயிரம் மாத சம்பளத்தில் மின் வாரியத்தில் வேலை!


மின் துறை இயக்குனர் பதவி பணியிடம் காலியாவதால், நேரடித் தேர்வில் அந்த இடம் நிரப்பப்பட உள்ளது. இதில் சேர விரும்புவோர், டிச., 12 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக மின் வாரிய மின் கட்டணப் பிரிவு இயக்குனர் பதவிக்கு, நேரடித் தேர்வு மூலம் ஆள் சேர்க்கப்படும். பொருளாதாரவியல் அல்லது வணிகவியலில் முதுகலைப் பட்டம், எம்.பி.ஏ., நிதி மேலாண்மை, சார்ட்டட் அக்கவுன்டன்ட், காஸ்ட் அக்கவுன்டன்ட் ஆகிய இவற்றில், குறைந்தது ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி, கணக்கியல், மின் துறையில் கட்டண மேலாண்மை, மின் துறை நிர்வாக அளவில், ஏதாவது ஒரு பிரிவில் ஏழு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதி பெற்றவர்கள், அடுத்த மாதம் 12ம் தேதிக்குள், எழும்பூரிலுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். கிரேடு-1 பதவியில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, 37 ஆயிரத்து 400 முதல் 67 ஆயிரம் வரையில், 10 ஆயிரம் ரூபாய் கிரேடு தொகை இணைத்து வழங்கப்படும். கிரேடு-2 ல் தேர்வாகும் நபருக்கு, 37 ஆயிரத்து 400 முதல், 67 ஆயிரம் வரையிலும், 8,900 ரூபாய் வரை கிரேடு தொகையும் இணைத்துத் தரப்படும். கிரேடு-1ல் தகுதியுள்ளவர் விண்ணப்பிக்காவிட்டால், கிரேடு-2ல் உள்ளவர் தேர்வாவார். விண்ணப்பிப்பவருக்கு, குறைந்தது 40 முதல், 50 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழக அரசின் வேறு துறைகள், பொதுத் துறைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களும், துறை மாறுதல் உத்தரவில், வர முடியும். அதற்கு, சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து, தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், கட்டணப் பிரிவு நிதிக் கட்டுப்பாட்டாளராக பாலதண்டாயுதபாணி பணிபுரிகிறார். இவர், அடுத்த மாதம் ஓய்வு பெறுவதால், புதிய மின் கட்டண இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.

அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ளவர்களிடம் ஸ்திரத் தன்மை இல்லை!


ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரேவிடம் ஒப்படைத்ததற்காக வருந்துகிறேன் என, 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உண்ணாவிரதம் இருந்த போது, அவருக்கு ஆதரவாக 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத்தும், அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

இது குறித்து ஷாம்பு தத் கூறியதாவது:ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யக்கோரி நான், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது, கிரண்பேடியும், சுவாமி அக்னிவேஷும் என்னை சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி வற்புறுத்தினர். அவர்கள் பேச்சை கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். ஆனால், இப்போது அது தவறு என்பதை உணர்கிறேன். நாங்கள் கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருப்பவர்கள்.அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ளவர்களிடம் ஸ்திரத் தன்மை இல்லை. அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்த நம்பகத்தன்மை போய் விட்டது. ஹசாரேவின் பிரசாரம் எல்லை மீறுவது சமீப காலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.பார்லிமென்டில் எந்த விதமாக மசோதா தாக்கல் செய்யப்படுகிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்பேன். காங்கிரசை எதிர்க்கப் போவதில்லை, என்றவர், ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். நடைபெற உள்ள உ.பி., உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஹசாரேவின் இந்த நடவடிக்கை குழந்தைத் தனமானது. ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஜன் லோக்பால் மசோதா விஷயத்தில் சில பிரிவுகளில் எங்களுக்கு அவர்களுடன் உடன்பாடில்லை.

ஊழல் செய்து வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, சட்ட கமிஷன், மாதிரி சட்ட மசோதாவை, அரசுக்கு அனுப்பியது. ஆனால், இந்த விஷயத்தில் அரசு, கடந்த 12 ஆண்டுகளாக மவுனம் சாதித்து வருகிறது. முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற மசோதா, லோக்பால் மசோதாவை விட முக்கியமானது. இந்த மசோதாவை அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லயென்றால், மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்குவேன்.இவ்வாறு ஷாம்பு தத் கூறினார்.

கூடங்குளம் அணு எதிர்ப்பாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் தயாராகிறது!


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்து தூண்டி விட்டவர்கள் மீது, 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், வன்முறையை தூண்டியோர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி திட்டமான கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, ஒரு குழுவினர், போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், உதயக்குமார் என்பவர் தலைமையில், ஒரு தரப்பினர், தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரை லூர்து மாதா சர்ச் வளாகத்தில், பந்தல் போட்டு போராட்டம் நடக்கிறது. இதற்கு, சர்ச் பாதிரியார் ஜெயக்குமார், கூத்தப்புளி பாதிரியார் சுசிலன் மற்றும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதேபோல், புஷ்பராயன் என்பவரும், சேரன்மகாதேவி பாதிரியார் ஜேசுராஜ் என்பவரும், தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள், போராட்டக்குழு சார்பில், தமிழக அரசின் குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்.இந்த பாதிரியார்களுக்கு தலைமை பாதிரியாராக பணிபுரியும், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ், அணு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு, பல வகையில் ஆதரவாக செயல்பட்டார். பல முறை போராட்ட களத்திலும் பங்கேற்றார்.

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு, கூடங்குளம் அணு உலைக்கு செல்லும் வழியில், அணு எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அணு உலையின் பணிக்கு சென்ற அதிகாரிகள், ஊழியர்கள், விஞ்ஞானிகள் வழி மறிக்கப்பட்டனர். சாலைகளில் பாறாங்கற்கள், உடைந்த மரங்களை போட்டு, இந்திய அணுசக்தி கழக வாகனங்களை செல்ல விடாமல் மறித்தனர். இதேபோல், கூடங்குளத்தைச் சுற்றி வாடகை வீடுகளில் தங்கிருந்த, வெளிமாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். வேலைக்கு செல்ல விடாமல் ஒரு குழு, அவர்களை தடுத்ததுடன், அவர்களை ஊரை விட்டு வெளியே விரட்டியது. இதனால், 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி கூலித்தொழிலாளர்கள், வாழ்வாதாரம் இழந்து, பிழைக்க முடியாமல் ஊர்களுக்கு சென்று விட்டனர்.இதில், மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தொழிலாளர்களே இருந்ததால், அவர்களின் பிழைப்பு கேள்விக்குறியாகி விட்டது. கான்ட்ராக்ட் நிறுவனத்தினரும் விரட்டப்பட்டனர்.

இதுமட்டுமின்றி, அணு விஞ்ஞானிகள், அதிகாரிகள் தங்கியிருக்கும் அணுவிஜய் நகரியத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்களை, சமூக விரோத தேச துரோகிகள் சிலர் உடைத்து விட்டனர். இதுபோன்ற வன்முறை சம்பவங்களால், கூடங்குளம் அணு உலை பணிகள் பாதிக்கப்பட்டதுடன், இந்திய அணுசக்தி துறைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.இச்சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவின் பேரில், அணுசக்தி அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், தொழிலாளர்கள் என, பல தரப்பில் நெல்லை மாவட்ட போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மத்திய உள்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் போலீசிடம் தரப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில், அணு எதிர்ப்பு வன்முறையாளர்கள் மீது, போலீசார் இதுவரை, 66 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்துள்ளனர். இவற்றில், வன்முறையாளர்கள், அவர்களை தூண்டிவிடுவோர், உடந்தையாக இருந்தோர், சட்டவிரோதமாக உண்ணாவிரதம் இருந்தோர், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோர், போராட்டக்களத்தில் பங்கேற்றோர் என, அனைவரது பெயர்களும் இணைக்கப்பட உள்ளது.தொழிலாளர்களை விரட்டியோர், கான்ட்ராக்டர்களை மிரட்டியோர், மத்திய அரசின் குடியிருப்புக்கு சொந்தமான தண்ணீர் குழாய்களை உடைத்தோர் என, பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இந்த வழக்குகளில், இந்திய அரசுக்கு எதிராக செயல்படுதல், நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் விளைவித்தல், இந்திய அரசின் ரகசிய விவகாரங்களில், அத்துமீறி தலையிடுதல், நாட்டுக்கு துரோகம், அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், பொய்த்தகவல்களால், அப்பாவி மக்களை பீதிக்குள்ளாக்குதல் என்பன போன்ற குற்றப்பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், வழக்குகளில் உள்ளவர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை பாயும். அதற்கான பணிகளில், மத்திய உள்துறை ஈடுபட்டுள்ளது.இவ்வாறு, மத்திய உள்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டு, 16 ஆண்டுகளில் முதன் முறையாக, கண்டலேறு அணையிலிருந்து, 8 டி.எம்.சி., நீர் !


கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டு, 16 ஆண்டுகளில் முதன் முறையாக, கண்டலேறு அணையிலிருந்து, 8 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. இந்தாண்டு, ஜூன் 23 ம் தேதி முதல், கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 316.58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை, 7,946.85 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்துள்ளது. கடந்த, 16 ஆண்டுகளில், இப்போது தான் ஒப்பந்தப்படி தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, 2009ல், 6.858 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்ததே அதிகமாக இருந்தது.

ஆந்திர மாநல பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கிருஷ்ணா நீர், கடந்த 16 ஆண்டுகளாக, தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை, கால்வாய் சீரமைப்புப் பணி போன்று பல்வேறு காரணங்களால், முழு அளவு தண்ணீர் வழங்க முடியவில்லை. இந்த ஆண்டு தான் ஒப்பந்தப்படி, முழு அளவு கிருஷ்ணா நீர் வழங்கியுள்ளோம். எட்டு டி.எம்.சி., என்ற அளவை எட்டியதும், கண்டலேறு அணை மூடப்படும்' என்றார். நான்கே நாட்களில் எல்லை கடக்கும் நீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, தமிழக-ஆந்திர அரசுகள் இடையே, 1983ம் ஆண்டு, ஏப்ரல்18ம் தேதி கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், 15 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும். இதில், 3 டி.எம்,சி, சேதாரம் போக, ஜூலை-அக்டோபர் மாதங்களில், 8 டி.எம்.சி., ஜனவரி-ஏப்ரல் மாதங்களில், 4 டி.எம்.சி., நீர் தர வேண்டும்.

கண்டலேறு அணையிலிருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை, 152 கி.மீட்டர் தூரத்திற்கு, கால்வாய் அமைக்கும் பணி, 13 ஆண்டுகளாக நடந்து, 1996ம் ஆண்டு நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்ததும், முதல் முறையாக, 1996ம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. இந்த 16 ஆண்டுகளில், ஒரு முறை கூட ஒப்பந்தப்படி, 15 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கவில்லை. கால்வாய் சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இது சாத்தியப்படவில்லை.சேதமடைந்த கால்வாயை, மறைந்த ஸ்ரீசத்ய சாய்பாபா, தனது அறக்கட்டளை மூலமாக, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்படுத்தினார். இதனால், ஆரம்பத்தில், 10 நாட்களில் கிடைத்த தண்ணீர், தற்போது, நான்கே நாட்களில் தமிழக எல்லையை அடைகிறது. இதே போல், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரை உள்ள, 25 கி.மீ.தூர கால்வாய், ஸ்ரீசத்ய சாய்பாபா அறக்கட்டளை மூலம் சீர் செய்யப்பட்டது. இதன் பயனாக, தெலுங்கு கங்கை கால்வாய், சாய்கங்கா கால்வாய் என அழைக்கப்பட்டது.

இதுவரை, தமிழகத்திற்கு கிடைத்த கிருஷ்ணா நீர் விவரம்:
ஆண்டு கிருஷ்ணா நீர் வரத்து(டி.எம்.சி., அளவில்)

1996 0.078
1997 2.860
1998 3.385
1999 1.948
2000 3.615
2001 3.113
2002 3.260
2003 -----
2004 1.331
2005 3.684
2006 3.795
2007 5.991
2008 4.438
2009 6.858
2010 6.817
2011 7.946(இதுவரை)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...