2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு..க தலைவர் கருணாநிதியும் மகளுமான கனிமொழி மற்றும் மற்ற 4 பேரின் ஜாமின் மனு தொடர்பாக, சி.பி.ஐ., க்கு டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கனிமொழி உள்ளிட்ட 5 பேரது ஜாமின் மனு குறித்து டிசம்பர் 1ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று டில்லி ஐகோர்ட் நீதிபதி வி.கே. ஷாலி, சி.பி.ஐ.,க்கு அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமின் கோரி, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறி வர்த்தக நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி உள்ளிட்டோர் ஜாமின் கோரி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நவம்பர் 03ம் தேதி மனுவை தள்ளுபடி செய்தார். தி.மு.க., சார்பில், கனிமொழி ஜாமின் மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமின் மனு குறித்து, டிசம்பர் 1ம் தேதிக்குள் சி.பி.ஐ. பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், அவர் (கனிமொழி) இம்மாதம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனிமொழி ஜாமின் மனு விசாரணையை, டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சரும், தி.மு.க., பிரமுகருமான ராஜா இதுவரை ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment