மருத்துவப் படிப்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்வு முறையை ரத்து செய்ய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து புதிய மதிப்பெண் விதி காரணமாக மருத்துவத்தில் முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள். எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் அனாடமி, பயோகெமிஸ்ட்ரி, ·பிஸியாலஜி என்ற மூன்று பாடங்களை படிப்பார்கள். இந்த பாடங்களுக்கு இரண்டிரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு வரை, ஒரு பாடத்திற்கு இரண்டு தாளிலும் சேர்த்து 100 மதிப்பெண் பெற்றால் அந்த பாடத்தில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படும். ஆனால் புதிய தேர்வு முறையால், ஒவ்வொரு தாளிலும் தலா 50 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மாற்றி அமைத்தது.
இந்த புதிய தேர்வு முறையால், கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வெழுதிய 3,184 மாணவர்களில் 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். 1,217 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். புதிய தேர்வு முறையால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.முதலாம் ஆண்டில் தோல்வி அடைந்த மாணவர்கள், விதிமுறைப்படி இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு செல்ல முடியாது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திலு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கினை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை, பல்கலையின் முடிவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் பல மருத்துவக் கல்லூரிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாம் ஆண்டு வகுப்பில் மாணவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் போராட்டங்களும், அமைச்சரிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டன. சுகாதாரத் துறை அமைச்சரும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பேசி, புதிய தேர்வு முறையை ரத்த செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் ஆலோசனை ஏற்று, புதிய தேர்வு முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.அதன்படி, சென்னை உயர் வழக்கு விசாரணை நவம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது. விசாரணையின்போது, புதிய மதிப்பெண் விதிமறையை ரத்து செய்த தகவலை தமிழக அரசு தெரிவிக்கிறது.இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த பிரச்சினை முடிவிற்கு வருகிறது.
No comments:
Post a Comment