|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 March, 2013

உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...

சாப்பாடு கூட இல்லாமல் பலரால் சில தினங்கள் உயிர்வாழமுடியும். ஆனால் இன்டர்நெட் இல்லாமால் இருக்க முடியாது என்பார்கள் அவர்கள். அந்த அளவிற்கு மனித வாழ்வில் முக்கியப்பங்குவகிக்கிறது இன்டர்நெட்! இதை கண்டறிந்தவர்களுக்கு ஒரு சல்யூட்!
கம்ப்யூட்டர் பற்றிப் படிக்காதவர்களும் கம்ப்யூட்டர் அறிவு இல்லாவதவ்ர்களும் மிக மிகக் குறைவு எனலாம். அதிக அளவில் வளர்ச்சிபெறும் துறையில் முக்கியமான இடத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளே உள்ளன.
உலகின் முதல் வாகனத்தை உருவாக்கியவர் கார்ல் பென்ஸ் என நம்பப்படுகிறது. இதை இவர் 1885ல் உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது. இவைகளில் தான் இன்றைய உலகம் நகர்த்தப்படுகிறது.
இந்த பல்ப்பை கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது எனவும் சொல்லப்பட்டது. நினைத்துப் பாருங்கள் இந்த பல்ப் மட்டும் இல்லாமல் இருந்தால்...
இன்றைய உலகம், மொபைல் போன், டிவி,ரேடியோ போன்றவையெல்லாம் இல்லாமல் வாழவே முடியாது என்கின்ற நிலையில் உள்ளது. டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். டிவியை கண்டுபிடித்தவர் லோகி பைர்ட். ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.
ஆயிரம் வருடங்களுக்கும் முன்பே சீனர்கள் காகிதங்களை கண்டறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. காகிதங்களில் அச்சிடுவதற்கு இந்த அச்சிடும் இயந்திரம் பயன்பட்டது. இதனால்தான் தகவல்தொடர்பும் விரிவடைந்தது என்றே சொல்லலாம். செய்திகளை காகிதங்களில் அச்சிட்டது, அது இன்று இணையவழி செய்தியாக மாறியதும் தொழில்நுட்பத்தின் உந்துதலே!
அந்தக்காலத்தில் ஒரு பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்வது மிகவும் கடினவாகவும், மெதுவாகவும் இருந்தது. அந்த சூழலில்தான் இந்த ஸ்டீம் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டு, சற்றே வேகமானது பிசினஸ்!
ஆண்களின் பார்வையில் இந்த குளிர்சாதனப் பெட்டி என்பது, பணத்தை வீணடிக்கும் ஒரு ஆடம்பர டப்பாதான். ஆனால் பெண்கள் இந்த குளிர்சாதனப் பெட்டியை தயிர், பால், காய்கறிகள், இவ்வளவு ஏன் இட்லி மாவை பாதுகாக்கும் பொக்கிசமாகவே கருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் அதிகம் தேவைப்படும் ஒரு பெட்டி.
சாதாரணமாக பார்த்தால் இது வெறும் சக்கரம் தான். ஆனால் இது இல்லாமல் எதையாவது நினைத்துப் பார்க்க இயலுமா? வாகனங்கள் சக்கரம் இல்லாமல் இயங்குமா? இந்த சக்கரம் 3100 B.C யில் கண்டுபிடிக்கப்பட்டவை.
இன்றளவிலும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்த உழுதல் முறைதான் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விவசாயம் செய்வதை எளிமையாக்கியதும் இம்முறையே! ஆனால் இன்று பல்வேறு வளர்ச்சியில் இருக்கும் உழுதலின் நிலையும், உழவனின் நிலையும் வருங்காலத்தில் கேள்விக்குறியுடனே இருக்கும்...

படிச்சிட்டு யாரும் சிரிக்கக்கூடாது..


எனது தந்தை கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு 

போராட்டத்தில் கலந்து கொண்டார்- டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற்சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும், தங்கள் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதாரண மாணவன். தனக்கு ஒரு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல்வர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கப் போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் அவமானப்படுத்தக்கூடாது. இது போன்ற போராட்டங்களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப்பட்ட தலைவர்களின் போராட்டங்களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது இவ்வாறு கனிமொழி. 

# Karunanidhi was born on June 3, 1924.அவருக்கு 14 வயது என்றால் 

1938.அப்போது இந்தியா சுதந்திர நாடே அல்ல.இந்தி எதிர்ப்பு போராட்டம் 

நடந்தது 1965ல் அப்போது கருணாநிதியின் வயது 36.

திரும்பவும் மேலே இருக்கும் போஸ்ட்டை படிங்க! ஹாஹ்ஹா

"எத்தனை வேசம் போட்டாலும் மண்ட மேல இருக்கிற கொண்டைய 

மறைக்கத் தெரியலையே!"


மாணவர்கள் பின் நிற்பதை உறுதி செய்யுங்கள்!


 

தோழர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்,தமிழ்நாட்டில் நடந்து வரும்   

மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பது ஆண்டுகள் கழித்து   

மாணவர்கள் தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள்   

அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது   

கடமை,மாணவர்களின் போராட்டங்களுக்கு உங்கள் பங்களிப்பை   

நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால்   

ஒருங்கிணைப்பதில் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும்   

சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவர்களுடன் நீங்களும்   

கைகோருங்கள்.  1.வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு 

இருந்தால் போதும்   உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் 

போராட்டங்களுக்கு உங்கள்   வீட்டிலேயே தேநீர் தயாரித்து 

கொடுக்கலாம்,பிஸ்கட் போன்றவற்றை   வாங்கி மாணவர்களுக்கு 

விநயோகிக்கலாம்.  2.வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும் 

அவர்களுக்கு மோர்,அல்லது   எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை 

உங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து   கொண்டு போய் கொடுக்கலாம்.  

3.நகல் எடுக்க வெறும் இருபத்தி ஐந்து பைசா போதும் இருநூற்று ஐம்பது   

ருபாய் மட்டும் இருந்தால் ஆயிரம் துண்டறிக்கைகள் அடித்து கொடுத்து   

அவர்களுக்கு உதவலாம்.  4.அதுவும் முடியவில்லை என்பவர்கள் 

அவர்களுக்கு குறைந்தது   பானையில் குளிர்ந்த நீரை தர ஏற்பாடு செய்து 

தரலாம்,அவர்களுடன்   ஒன்றிணைந்து துண்டறிக்கைகள் 

விநயோகிக்கலாம்,  5.குறைந்தது நீங்கள் உங்கள் அருகில் 

நடக்கும்,போராட்டங்களுக்கு   உங்கள் குடும்பத்துடனோ அல்லது 

நண்பர்களுடனோ சென்று   மாணவர்களை வாழ்த்தி உற்சாக 

படுத்தலாம்,உங்கள் நண்பர்களுக்கும்   இதை தெரிய படுத்தலாம்.  

வெளிநாடுகளில் வாழும் நம் தோழர்கள் தங்கள் நண்பர்கள் மூலமாக   

இதை செய்ய முயற்சிக்கலாம்,மாணவர்கள் அவர்களின் இனப்பற்றை   

காண்பித்து விட்டார்கள்,அவர்களை காலம் முழுவதும் குறை சொல்லும்   

நாம் நம் கடமையை இப்போதாவது சரியாக செய்வோமே,  இந்த எளிய 

போராட்டங்களுக்கு நம்முடைய எளிய பங்களிப்பை   தரலாமே? இதை 

இனப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவசியம் பகிர   வேண்டும் 

தோழர்களே,உலக தமிழர்கள் மாணவர்கள் பின் நிற்பதை   உறுதி 

செய்யுங்கள்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!



உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு


சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி


யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்... அப்புறம்

" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு

அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும் வாங்கினேன்..

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது 


இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு 

யாருமே சொல்லலை... என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )


நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்

இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 


7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல 


அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் 


குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு 


எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட 

சேவையை எப்படிதான் பாராட்றது..? " என்னங்க இது அநியாயமா இருக்கு..?

நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் 


விக்கிற நாடுங்க இது.. இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!


'இங்கு எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்?


இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொண்டுள்ள போராட்டம் தவறு என்று கருத்து தெரிவித்த மதுரை மாவட்ட நீதிபதியை வழக்கறிஞர்கள் கண்டித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்துக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று  வழக்கு ஒன்றை விசாரித்த 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம்,  ''இங்கு எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்? இலங்கையில் போய் போராட்டம் நடத்துங்கள். இலங்கைத் தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தவறு, அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்'' என்றும் கருத்து தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, இன்று காலை வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர், நீதிபதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  சொல்லி அவரது கோர்ட்டை புறக்கணித்தனர். இதனிடையே, நீதிபதி ராஜலிங்கத்தின் 4-வது குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று காலை மர்ம நபர்கள் பூட்டு போட்டுள்ளனர். இதைச் செய்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்தச் சம்பவம், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக நுகர்வோர் தினம்.


நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள். "தற்போது நுகர்வோர் நீதி' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

யார் நுகர்வோர்: நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். உதாரணமாக, தந்தை குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார். இதில் தந்தை வாடிக்கையாளர். அதை சாப்பிடும் (பயன்படுத்தும்) குழந்தை நுகர்வோர். வணிகத்தில் எத்தனையோ விதமான வியாபாரம் நடக்கிறது. இவை நுகர்வோருக்கு சரியான விலையில், சரியான தரத்தில் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. உரிமைகள் என்ன என்பதே தெரியாமல் வியாபாரிகளிடம் நுகர்வோர் ஏமாறுகின்றனர். பணம் மட்டுமே குறிக்கோளாக வியாபாரிகளும் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

எப்படி வாங்குவது: தினமும் பல பொருட்கள் அறிமுகமாகின்றன. நகர்ப்புறங்களுக்கு சமமாக கிராமப்புற மக்களும் பல்வேறு வசதிகளை பயன்படுத்துகின்றனர். அப்பொருள்களின் தரம், விலை மற்றும் அந்தப் பொருளுக்கான நுகர்வோர் உரிமை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. பொருட்களை வாங்கும் போது அக்மார்க், ஐ.எஸ்.ஐ., எப்.பி.ஓ., உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை நுகர்வோர் சோதிக்க வேண்டும். பொருள்களின் விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி தேதி, ரசீதில் சேவை வரி, பதிவு எண், மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும்.

உரிமைகள் என்ன

* பாதுகாப்பு உரிமை

* தகவல் பெறுவது 

* தேர்ந்தெடுக்கும் உரிமை

* உத்தரவாதம் பெறும் உரிமை

* நிவர்த்தி பெறும் உரிமை

* உரிமைகளை தெரிந்து கொள்ளும் உரிமை

(மேலும் விவரங்களுக்கு  www.consumeraffairs.nic.in  என்ற மத்திய நுகர்வோர் நலன் அமைச்சக இணையதளத்தை பார்க்கவும்)

என்ன செய்வது: நுகர்வோர் உரிமை குறித்த புத்தகங்களை படித்து, நுகர்வோர் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமைகள் குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும். அரசும், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் உரிமைகளையும், அதன் சட்ட திட்டங்களையும் மக்களுக்கு செய்திதாள், "டிவி' உள்ளிட்ட வழிகளில் தெரியப்படுத்த வேண்டும். நுகர்வோர் எதிர்த்து போராடினால் தான், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை, தங்களது பகுதியில் குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுத்த வேண்டும் என இந்நாளில் உறுதி ஏற்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...