ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
16 February, 2012
விடுதலைப் புலிகளுடனான போரின்போது தமது வீரர்கள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இலங்கை ராணுவம்!
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது தமது வீரர்கள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இலங்கை ராணுவம் முதல் முறையாக அறிவித்திருக்கிறது. இதற்காக 5 நபர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை அமைத்து ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்ய உத்தரவிட்டிருக்கிறார்.போர்க்குற்றங்கள் தொடர்பாகவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சூழலில், ஏற்கனவே அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கண்துடைப்பு நடவடிக்கையாக, இன்னும் ஒரு நாடகமாக இலங்கை ராணுவம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக எத்தனையோ வீடியோக்கள் சர்வதேச நாடுகளில் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் சேனல்4- தொலைக்காட்சி, நெஞ்சை உறைய வைக்கும் கொடூர காட்சிகளையும் வெளியிட்டிருந்தது. ஆனால் அதுகுறித்து விசாரிக்க முடியாது என்று பிடிவாதமாகவும், தெனாவெட்டாகவும் கூறி வந்தது இலங்கை. இலங்கையை இந்தியாவும் கூட சற்றும் கண்டிக்கவில்லை, நிர்ப்பந்திக்கவில்லை, கேள்வி கூட கேட்கவில்லை. தற்போது அமெரிக்காவே சற்று கோபமடைந்து, தனக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக கூறி விட்டதால் பயந்து போய் இந்தப் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது இலங்கை. இதை வைத்து இன்னும் கொஞ்ச காலம் உலகத்தை ஏமாற்றலாம் என்பது அதன் எண்ணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
போர்க்குற்றங்களை யாரேனும் செய்ததற்கான 'முகாந்திரம்' இருந்தால் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபையின் தீர்மானத்தை அமெரிக்காவும், இந்தியாவும் ஆதரிக்க உள்ளன. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. வல்லுநர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றமும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி திராவிட கட்சிகளை ஒழிப்பதே எனது நோக்கம் ராமதாஸ்!
திராவிட கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி வைத்ததுதான் நான் செய்த தவறு, இனி திராவிட கட்சிகளை ஒழிப்பதே எனது நோக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:ஒளிமயமான எதிர்காலத்தை தருவதாகக் கூறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் திராவிட கட்சிகளின் ஆட்சியில் மின்வெட்டுதான் கிடைத்துள்ளது. இதனால் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டு விடுதலை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால் இன்று தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை உள்ளது. கிராமப்புறத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இருப்பதில்லை. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது தெரியவில்லை. கோவையில் உள்ள சிறு, குறுந் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் தினமும் ஒரு கொலை நடக்கிறது. பெருங்குடி வங்கிக் கொள்ளையர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
1967 - ல் இருந்து சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள். இதன் காரணமாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை சீர்கேட்டிற்கு இழுத்து சென்று விட்டது. திராவிட கட்சிகளை ஒழிப்பதே எங்கள் நோக்கம். மாறி, மாறி கூட்டணி வைத்தது தான் நான் செய்த பெரிய தவறு. திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு கொடுத்தது மூன்றுதான். குடி, சினிமா மோகம், இலவசம் இவற்றைத்தான் திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு கொடுத்துள்ளன. சினிமாக்காரர்களை நம்பி தமிழகம் சீரழிந்தது போதும். தமிழகம் வளம் பெற சினிமா மோகத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் ஆர்என்கே.பிரசாத் மரணம்!
பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான ஆர்என்கே.பிரசாத்(81) சென்னையில் 15.02.2012 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு உஷா என்ற மனைவியும் ராஜீவ் பிரசாத் என்ற மகனும், மாலாராவ் என்ற மகளும் உள்ளனர்.ஆர்என்கே.பிரசாத் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல்ஹாசன் தந்தையாக நடித்துள்ளார். மேலும் சித்தி, மர்ம தேசம் உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கவிக்குயில், சிட்டுக்குருவி உள்பட 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். இவருக்கு 15.02.2012 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
Subscribe to:
Posts (Atom)