|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2012

லஞ்சம் சட்ட விரோதமானது தலைமைச் செயலர் உத்தரவு!


லஞ்சம் சட்ட விரோதமானது' எனக் குறிப்பிட்டு, லஞ்சம் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய முகவரியை, அனைத்து துறைகளும் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, புது உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதுதொடர்பாக, அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு, தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி அனுப்பியுள்ள கடிதம்: லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அனைத்துத் துறைகளும், தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில், குறிப்பிட்ட வாசகத்தை வெளியிட உத்தரவிடுமாறு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, "லஞ்சம் சட்ட விரோதமானது; லஞ்சம் பற்றிய புகார்களை, பின் வரும் முகவரிக்கு எழுதி அனுப்பவும்; விழிப்புப் பணி, லஞ்ச ஒழிப்பு இயக்குனர், சென்னை -28, வலைதளம்: www.dvac.tn.gov.in; தொலைபேசி எண் : 24615989, 929, 949' என்ற வாசகத்தை, அனைத்துத் துறைச் செயலகமும், தலைமையகமும், தங்களது அதிகாரபூர்வ இணையதளங்களில், ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடுவதோடு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்துக்கான இணைப்பையும் அளிக்க வேண்டும்

இன்று உலக வனநாள்.


உலக மக்கள் தொகை அதிகரித்து, பிற உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சமச்சீரற்ற நிலை நிலவுகிறது. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என ஐ.நா., கூறுகிறது. இந்தியாவில் வனப்பரப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 400 ச.கி.மீ. இது மொத்த நிலப்பரப்பில் 19.32 சதவீதம். 1951 முதல் 1980 வரை அணைகள் மற்றும் பாசனத்திற்காக 5 லட்சம் எக்டேர் வனம் அழிக்கப்பட்டது. ஆண்டுதோறும் 0.6 சதவீத காடுகள் அழிக்கப்படுகின்றன. ஜப்பான் போன்ற தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த சிறிய நாடுகள் கூட, 60 சதவீத காடுகளை கட்டிக்காத்து வருகின்றன. இஸ்ரேலில் 1948 ல் 250 மி.மீ., இருந்த சராசரி மழையளவு, தற்போது 900 மி.மீ., அதிகரித்துள்ளது.பூமி சூட்டைத்தணித்து, வாயு மண்டலத்தை சுத்தப்படுத்துபவை மரங்களே.

நாம் வெளியிடும் கரியமில வாயுவை உட்கொண்டு, நாம் சுவாசிக்க பிராண வாயுவை கொடுப்பவை மரங்களே. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். மரங்களை நட்டு வளர்த்த மன்னர்கள், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமியின் பாதுகாப்பு கவசமாக திகழும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால், சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு நாம் ஆளாக, நீண்டகாலம் பிடிக்காது. மனிதன் இம்மண்ணில் வாழ எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை தாவரம், பறவை, விலங்கினங்களுக்கும் உண்டு. மனிதனுக்காக மட்டும் இந்த உலகம் படைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும், உலகம் பொதுவானது. சுத்தமான பூமியை நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல முடியுமா? என சவால் எழுந்துள்ளது.

இன்று ( மார்ச் 21) உலக வனநாள். வனங்களை பாதுகாப்பது பற்றி வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: ராஜசேகரன், மதுரை வனவிரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர்: மன்னராட்சியில் மரங்களை வெட்டியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தேக்குமரங்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நம் வனங்களில் யூகாலிப்டஸ், தேயிலை நட்டனர். அனைத்து நதிகளும் உற்பத்தியாவது வனங்களில்தான். அதன் மதிப்பை நாம் உணரவில்லை.ஜப்பான் வனங்களை பாதுகாத்து, இந்தியா, தாய்லாந்திலிருந்து மரங்களை இறக்குமதி செய்கிறது. பசுமை போர்வையை அதிகரிக்க ஒரே வழி தனியார், புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்கள், கல்வி நிறுவனங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் மரம் வளர்ப்பதுதான்.


பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவு.


 பொதுமக்களின் அறிவிலிருந்து முற்றாக மறைக்கப்பட்டுவரும் பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க வேண்டுமென மதுரை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, கன்யாகுமரி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவைத் தொடர்பான மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் கூறியதாவது: பாரம்பரிய மருத்துவ முறைகளை முடக்கிய பல உதாரணங்கள் வலாற்றில் உள்ளன. சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய 2 மருத்துவ முறைகளின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. ஆயுர்வேதம் என்ற சொல்லுக்கு &'வாழ்வின் அறிவியல்&' என்று பொருள். ஆனால், இச்சொல் வெறும் ஒரு மருத்துவ முறை என்ற குறுகிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
Encyclopaedia Britannica -ல் உள்ள தகவல்களின்படி பார்த்தால், கி.மு.800 முதல் கி.பி.1000 வரையிலான காலகட்டம், இந்திய மருத்துவத்தின் பொற்காலமாக குறிக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில், சாரக-சம்ஹிதா மற்றும் சுஸ்ருத-சம்ஹிதா போன்ற மருத்துவ நூல்கள் இயற்றப்பட்டன. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு மிக மிகப் பழமையானது. அம்மருத்துவ முறையில் ஏராளமான சிறப்புக் கூறுகள் உள்ளன. ஆனால், கடந்தகால வரலாற்றில் அம்மருத்துவ முறைக்கு கிடைத்த போதுமான ஆதரவின்மை மற்றும் காலனிய ஆதிக்கம் போன்ற காரணிகளால் அது இன்று தேய்ந்து போய் கிடக்கிறது. கடந்த 1961ம் ஆண்டு, மருத்துவக் கல்வி தொடர்பாக நியமிக்கப்பட்ட முதலியார் கமிட்டியானது, பாரம்பரிய மருத்துவத்துடன், நவீன மருத்துவத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. ஆனால், அந்தப் பரிந்துரை செய்யப்பட்ட காலகட்டத்தில், அலோபதி மருத்துவம் சமூகத்தை மிகவும் வலிமையாக ஆக்ரமித்திருந்தது. அதனோடு சேர்ந்து, மாநில அரசுகளும், பாரம்பரிய மருத்துவப் படிப்புகளை வழங்கிவந்த கல்வி நிறுவனங்களுக்கு கடிவாளமிட்டுக் கொண்டிருந்தன. எனவே, எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பது ஒழுக்கம்.

மனிதன் ஆயுளை நிர்ணயிப்பது விதி தான். ஆனால், இப்பிறவியில் அனுபவிக்கும் விதியை நிர்ணயித்தது முன்வினைப்பயன். அவ்வினைப்பயனை உண்டாக்குவதில் ஒருவன் பின்பற்றும் ஒழுக்கத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் தெய்வப்புலவர், நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம். தீயொழுக்கம் என்றும் இடும்பை (துன்பம்) தரும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார். அதனால், ஒழுக்கத்தை பின்பற்றி வாழ்வை பயனுள்ளதாக்க வேண்டியது அவசியம்.

இதே நாள்...



  • சர்வதேச புவி நாள்
  •  சர்வதேச இலக்கிய தினம்
  •  தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
  •  பஹாய் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது(1844)
  •  டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது(1917)


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...