லஞ்சம் சட்ட விரோதமானது' எனக் குறிப்பிட்டு, லஞ்சம் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய முகவரியை, அனைத்து துறைகளும் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, புது உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதுதொடர்பாக, அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு, தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி அனுப்பியுள்ள கடிதம்: லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அனைத்துத் துறைகளும், தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில், குறிப்பிட்ட வாசகத்தை வெளியிட உத்தரவிடுமாறு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, "லஞ்சம் சட்ட விரோதமானது; லஞ்சம் பற்றிய புகார்களை, பின் வரும் முகவரிக்கு எழுதி அனுப்பவும்; விழிப்புப் பணி, லஞ்ச ஒழிப்பு இயக்குனர், சென்னை -28, வலைதளம்: www.dvac.tn.gov.in; தொலைபேசி எண் : 24615989, 929, 949' என்ற வாசகத்தை, அனைத்துத் துறைச் செயலகமும், தலைமையகமும், தங்களது அதிகாரபூர்வ இணையதளங்களில், ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடுவதோடு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்துக்கான இணைப்பையும் அளிக்க வேண்டும்
No comments:
Post a Comment