|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

சிம்புவின் ஒஸ்தி !



சிறுத்தையின் சிறு முகம்!


தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் கார்த்தி சர்ச்சையில் சிக்கியுள்ள கார்த்தி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் கார்த்தி ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்த்தியிடம், 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா?' என கேள்வி கேட்டார் விழாவைத் தொகுத்தளித்த பெண்.

அதற்கு கார்த்தி, "நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும். தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கைதட்டி விசிலடிப்பார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை," என்று பதில் சொல்வது போல் வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. 

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி கார்த்தி வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டுள்ளோம் என்று ஒரு கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

கார்த்தி கூறுகையில், "தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள். 

ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.


அரசியல் கொலைவெறி....!


பார்த்ததில் பிடித்தது! கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்!

அப்போ இந்த ஜன்மத்தில கடன் வாங்க முடியாதுன்னு சொல்லுங்க......?
ரஜினி பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு !! கமல் பொண்ணு கூட romance பண்றதுக்கும் ஒரு யோகம் வேணும் !! எனக்கு இப்ப வருது கொலைவெறி!!




லோக்பால் வரம்புக்குள் பிரதமர், சிபிஐ இல்லை ஆனால், என்.ஜி.ஓக்கள் உண்டு!


ஊழலுக்கு எதிராக மத்திய அரசு உருவாக்கியுள்ள லோக்பால் வரைவு மசோதாவின் சட்ட வரம்புக்குள் வெளிநாட்டு நன்கொடை வசூலிக்கும் என்.ஜி.ஓக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன்மூலம் அன்னா ஹசாரேயின் குழுவினரின் என்.ஜி.ஓ. அமைப்புக்கும் மத்திய அரசு 'செக்' வைத்துள்ளது. ஆனால், இந்த மசோதாவுக்கு அன்னா ஹசாரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த மசோதா இப்போது அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 30 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. நாளை இந்த மசோதா இறுதி செய்யப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந் நிலையில் அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து வருகின்றன.

இந்தத் தகவல்களின்படி, ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக வெளிநாட்டு நன்கொடை வசூலிக்கும் என்.ஜி.ஓக்கள், இந்தியாவில் பொது மக்களிடமிருந்து ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக நிதி வசூலிக்கும் என்.ஜி.ஓக்கள் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர் என்று தெரிகிறது. இதே போல நன்கொடை வசூலிக்கும் மீடியா நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரப்படுவர்.

அதே நேரத்தில் பிரதமர் பதவி இந்த மசோதாவின் வரம்புக்குள் வராது (அதாவது லோக்பால் சட்டப்படி பிரதமர் பதவியில் இருப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது). பிரதமர் பதவிலிருந்து ஒருவர் விலகிய பின்னரே அவர் மசோதாவின் வரம்புக்குள் வருவார். அதே போல நீதிபதிகள், கீழ்மட்ட அதிகாரிகளும் இந்த மசோதாவின் வரம்புக்குள் வர மாட்டார்கள். அதே நேரத்தில் அரசு நிர்வாகத்தில் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ பிரிவில் வரும் மூத்த அதிகாரிகள் லோக்பால் வரம்புக்கள் கொண்டு வரப்படுவர். லோக்பால் அமைப்புக்கு அரசியல் சட்ட அதிகாரம் வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் லோக்பால் வரம்புக்குள் வராது. இவ்வாறு வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
ஹசாரே நிராகரிப்பு: ஆனால், லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள், சிபிஐ மற்றும் கீழ் மட்ட அதிகாரிகளையும் கொண்டு வர வேண்டும் என்று கோரி வரும் ஹசாரே குழுவினர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு அதை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இது குறித்து ஹசாரே குழுவின் உறுப்பினர் அரவிந்த் கெஜரிவால் கூறுகையில், என்ஜிஓ அமைப்பிலும் கடும் ஊழல் நிலவுவது உண்மை தான். அதே நேரத்தில் அரசிடமிருந்து நிதி பெறும் என்.ஜி.ஓக்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

மேலும் சிபிஐயையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஆனால், சிபிஐயை வரம்பிலிருந்து வெளியே வைத்து, அதை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. சிபிஐ அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் லோக்பால் என்பதே வெறும் காலி டப்பாவாகத்தான் இருக்கும் என்றார். இந்தக் குழுவில் உள்ள கிரண் பேடி கூறுகையில், எம்.பிக்கள் மற்றும் நீதிமன்றங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரவில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் சி.பி.ஐயை கொண்டு வராவிட்டால், நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெற்றி பெறவே இயலாது. மத்திய அரசு தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் மக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என்றார்.

முல்லை பெரியாறுக்காக குரல் கொடுக்க தமிழகத்தில் யாருமில்லை!


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தையே கலக்கி விட்டனர் கேரளாவைச் சேர்ந்த அத்தனை எம்.பிக்கள். ஆனால் அவர்களின் தர்ணா போராட்டத்திற்கு கவுண்டர் தரும் வகையில் ஒரு தமிழக எம்.பியைக் கூட காண முடியவில்லை. திமுக எம்.பிக்கள் கனிமொழியின் ஜாமீனுக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அதிமுக எம்.பிக்களோ லோக்சபாவில் நடந்த அமளி துமளியில் சீரியஸாக மூழ்கியிருந்தனர். முல்லைப் பெரியாறு அணைக்காக குரல் கொடுக்க நேற்று ஒரு தமிழக எம்.பி. கூட இல்லாதது தமிழக மக்களை விரக்தியில் தள்ளியது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்ட வேண்டும் என்று தீர்மானமாக உள்ளது கேரளா. இதற்காக நேற்று கேரளாவின் நான்கு மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.

அதேபோல டெல்லியிலும் கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்கள் நேற்று சீன் கிரியேட் செய்து விட்டனர். லோக்சபாவில் கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட - கோஷமிட்டனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்திலும் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த எம்.பிக்களிடம் தமிழகம் மீது குற்றம் சாட்டி தங்களுக்கு ஆதரவு சேகரித்தனர். மேலும் டேம் 999 படத்தைப் பாருங்கள், அப்போது எங்களது பரிதாப நிலை தெரியும் என்றும் படம் குறித்தும் விளம்பரம் செய்தனர். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி வீடு முன்பும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கேரள எம்.பிக்களின் போராட்டம் குறித்த பேச்சாகவே இருந்தது. பல மாநில எம்.பிக்களும் கேரளா ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டது போல என்று எண்ணும் அளவுக்கு கேரள எம்.பிக்களின் செயல்பாடுகள் காணப்பட்டன. இப்படி நடந்தும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களில் ஒருவர் கூட எந்த வகையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஒரு எதிர்ப்புத் தர்ணாவைக் கூட யாரும் நடத்தவில்லை. குறைநத்பட்சம் லோக்சபாவில் கூட கேரள எம்.பிக்களின் கூற்றை மறுத்து யாரும் பேசக் கூட இல்லை.

திமுக எம்.பிக்கள் அத்தனை பேரின் கண்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் தருவார்களா என்ற எதிர்பார்ப்பில்தான் இருந்தது. அங்குதான் கிட்டத்தட்ட அத்தனை பேரும் கூடியிருந்தார்கள். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் சிலர் கூடியிருந்தனர். டி.ஆர்.பாலுவைப் பிடிக்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு கனி மொழி குறித்த கவலையில் சுற்றிக் கொண்டிருந்தார் அவர். சரி அதிமுக எம்.பிக்களாவது ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அவர்களும் கப்சிப்பென்றிருந்தனர். மாறாக, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் அரசுக்கு எதிரான ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்த அமளி துமளிகளில் அவர்கள் பாஜகவுடன் சேர்ந்து படு பிசியாக காணப்பட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சியினரும் கூட இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. சிபிஐ தேசியச் செயலாளர் ராஜாவைக் கூட காண முடியவில்லை. மொத்தத்தில் நேற்று தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக அத்தனை தமிழக கட்சிகளும் நேற்று டெல்லியில் திராட்டில் விட்டு விட்டன. 39 எம்.பிக்கள் இருந்தும், கேரளாக்காரர்கள் நடத்திய போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு எம்.பி கூடவா இல்லை கனிமொழி பிரச்சினை முடிந்து விட்டதால் 'ஃப்ரீ' ஆகியுள்ளதைத் தொடர்ந்து திமுக எம்.பிக்கள் இன்றுதான் பிரதமரைச் சந்திக்கப் போகின்றனராம்!

மோதிர விரல் நீளமா நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!


சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம். ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.

நோய்களை அறிந்து கொள்ளலாம் ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

விரலும் ஆய்வு முடிவும் ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம். 

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம். ஹார்மோன் தூண்டப்படும் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.

ஆண்மை அதிகரிக்கும் ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.  150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.

திருமணமான பெண்கள் செக்ஸை வெகு சீக்கிரமே வெறுக்கத் தொடங்கி விடுவதாக கருத்துக் கணிப்பு!


திருமணமான பெண்கள் செக்ஸை வெகு சீக்கிரமே வெறுக்கத் தொடங்கி விடுவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இணையதளம் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2500 திருமணமான பெண்களிடம் இந்த இணையதளம் கருத்துக் கணிப்பை நடத்தியது. அவர்களிடம் திருமணத்திற்கு பின்னர் உங்களது செக்ஸ் வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேட்டுள்ளனர். அதில் கிடைத்த பதில்கள் வியப்பூட்டுவதாவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்ததாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 77 சதவீதம் பேர் செக்ஸ் தங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றுதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், 50 சதவீத பெண்கள், செக்ஸ் தங்களது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாகவும், சங்கடமூட்டுவதாகவும், மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்களாம். அதேசமயம், 54 சதவீதம் பேர் செக்ஸை தாங்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

29 சதவீத பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை தங்களுக்கு சோர்வைக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமே சிறு வயது குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளைக் கவனிக்கவே நேரம் போதவில்லை என்பதால் செக்ஸ் விஷயங்கள் தங்களால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.

சரி செக்ஸுக்கு மாற்று வழியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று கேட்டதற்கு, 24 சதவீதம் பேர் அதற்குப் பதில் நல்ல குளியலைப் போடலாம் என்று கூரியுள்ளனர். 26 சதவீதம் பேர் புக் படித்து பொழுதைக் கழிப்பேன் என்று கூறியுள்ளனர். 23 சதவீத பெண்கள், தங்களது கணவர்களை நேசிப்பதால் செக்ஸ் உறவுக்கு உடன்படுவதாக கூறியுள்ளனர். கணவரை சந்தோஷமாக வைப்பது அவசியமாயிற்றே என்பது இவர்களின் விளக்கமாக உள்ளது. 49 சதவீத பெண்கள், தங்களுக்கு செக்ஸ் தேவை என்பதால் உறவு கொள்வதாக கூறியுள்ளனர். 26 சதவீதம் பேர், குழந்தை பிறப்புக்குப் பின்னர்தான் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செக்ஸ் இல்லாத திருமண வாழ்க்கை நிச்சயமாக சாத்தியமில்லை என்கிறார் திருமண உறவுகள் குறித்த நிபுணர் ஷனான் பாக்ஸ். திருமண வாழ்க்கையில் செக்ஸை வெறுப்பது என்பதற்கு இடமே இல்லை. பின்னர் அந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். செக்ஸில் நாட்டமில்லை என்று கூறியுள்ள பெண்களுக்கு உடல் ரீதியிலான அல்லது மன ரீதியிலான பிரச்சினைகள் இருக்கலாம். மற்றபடி திருமணத்தை இங்கு குறை கூற முடியவே முடியாது என்கிறார் பாக்ஸ்.

மேலும் அவர் கூறுகையில், 77 சதவீத பெண்கள் செக்ஸ் முக்கியமானது என்று கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இப்படிக் கூறும் பெண்கள் செக்ஸை விரும்பவில்லை என்று கூறினால் அதற்கு வேறு காரணம் இருக்கலாம். செக்ஸ் தேவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதேசமயம், அதை மேற்கொள்ள முடியாத அளவுக்கு புறச் சூழல்கள் அவர்களுக்கு அமைந்திருக்கலாம். அதை சரி செய்ய அவர்கள் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும் என்றும் பாக்ஸ் எச்சரிக்கிறார்.

செக்ஸில் மனைவிக்கு நாட்டமில்லை என்ற நிலை வரும்போது நிச்சயம் அவர்களின் கணவர்கள் பாதை மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அந்த நிலைக்குப் போகும்போது திருமண பந்தத்தின்மீதும் அந்தப் பெண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்பட்டு விடலாம். இது அவர்களின் மனதையும் வெகுவாக பாதித்து தேவையில்லாத பல விளைவுகளுக்கு இட்டுச் சென்று விடும் என்பது பாக்ஸின் கருத்து. சர்க்கரை இல்லாமல் வெறும் பாலைச் சாப்பிட்டால் சுவையாக இருக்காது. அதேபோல வெறும் சர்க்கரையை மட்டும் சாப்பிடவும் முடியாது. இரண்டும் இணைந்தால்தான் இனிமை. அதுபோலத்தான் திருமண வாழ்க்கையும், செக்ஸ் உறவும். இதில் எது ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை கசந்து போய் விடும்.இதை இந்தப் பெண்கள் உணர்ந்தால் உறவும் இனிக்கும், உள்ளமும் தெளிவாக இருக்கும்

கசக்கும் சர்க்கரை!



உணவில் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேநீர், காபி, பழரசங்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நாம் அதிக அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.


ஆபத்தான சர்க்கரை சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

சர்க்கரை தேவையில்லை சர்க்கரையை உபயோகிப்பதன் மூலம் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால் உடலானது எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்

நோயாளிகளாக மாறும் குழந்தைகள் குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல் குண்டாகிறது. இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நோயாளியாக உருவாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் கட்டிகள் உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே தினமும் காபி அல்லது தேநீர் பருகும் போது குறைந்த அளவு சர்க்கரையை பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் துத்திப்பூ!



பட்டாம்பூச்சிகள் பறந்து அமரும் துத்திப்பூக்கள் காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய் மலர்ந்து சிரிக்கும். குப்பை மேடுகள், சாலையோரங்கள் என பல இடங்களிலும் வளர்ந்துள்ள துத்திச் செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணமுடையவை. ரத்தம் தொடர்புடைய நோய்களை போக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.  துத்திப்பூக்களைச் சேகரித்து துவரம்பருப்புடன் கூட்டாகச் சமைத்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் ரத்தம், சிறுநீரில் ரத்தம் எதுவாயினும் குணமாகும். ஆண்மை பெருகும்.  துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.  ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும். அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

மோடியின் பெயர் 5வது மேஷபிள் விருது 2011க்கு பரிந்துரை!


சமூக இணையதளங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அரசியல் தலைவர்கள் பிரிவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் 5வது மேஷபிள் விருது 2011க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர் அல்லாத ஒரே நபர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தினமும் தான் என்ன செய்கிறோம் என்பதை டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் தெரிவிக்கும் பழக்கம் உள்ளவர். இது தவிர தனது கருத்துகளை தன்னுடைய பிளாக்கில் தவறாமல் பதிவு செய்துவிடுவார். குஜராத் அரசு மற்றும் பாஜகவின் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவிப்பவர்.

டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், கூகுள்+ மற்றும் பிற சமூக இணையதளங்களை சிறப்பாக பயன்படுத்தும் நிறுவனங்கள், நபர்கள் மற்றும் திட்டங்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் மேஷபிள் விருது வழங்கப்படுகிறது. சிறந்த புதிய கேட்ஜெட், சிறந்த சமூக வளைதளம், சமூக இணைதளங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பிராண்ட உள்ளிட்ட 28 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அரசியல்வலாதிகளுக்கான விருதுப் பிரிவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கோரி ப்ரூக்கர், ரான் பால், பட்டி ரோமர் மற்றும் பெர்னி சான்டர்ஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக நீங்கள் யாருக்காவது வாக்களிக்க விரும்பினால் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதிக்குள் வாக்கை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள். வெற்றியாளர்கள் வரும் டிசம்பர் 19ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.

நிலநடுக்கம் இலவசத் தகவல் கொடுக்கும் யு.எஸ். புவியியல் ஆய்வு மையம்!


உலகம் முழுவதும் ஏற்படும் நில நடுக்க சம்பவங்களை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கண்காணித்து வருகின்றது. உங்கள் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிடங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம். உலகில் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் இயற்கை பேரழிவான நிலநடுக்கத்தின்போது பெருமளவில் மடிகின்றனர். நிலநடுக்கங்கள் குறித்து உடனடியாக தகவல் அறிந்து மனித உயிர்களை காப்பாற்ற அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இலவமாக மின் அஞ்சல் மூலம் தகவல்களை கொடுத்து வருகின்றது.

இந்த அரிய தகவலை பெற https://sslearthquake.usgs.gov/ens/  என்ற இணையதள முகவரிக்குச் சென்று Subcribe செய்த பின்னர் மாதிரி மின்னஞ்சல் நமக்கு வந்து சேரும். அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் கூகுளின் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை வரைந்த பின்பு சேமித்து விடவும். இனி மேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.

அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் மின்அஞ்சல் மூலம் கிடைக்கின்றது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளுக்கான தகவல் கிடைக்க சுமார் 20 முதல் 30 நிமிடம் வரை ஆகின்றது. இந்த தகவல் முழுக்க முழுக்க உண்மையானதாகவும், இதன் மூலம் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிவகை கிடைப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆபத்தான நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க இன்றே அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்றுக்கள்.

தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம்!




எதிரிகளை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் பறவைகள், தட்டாம்பூச்சிகளின் அளவில் உளவு விமானம் தயாரிக்கப்படவிருப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முதன்மை கட்டுப்பட்டாளர் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிவதாணுப்பிள்ளை வருங்கால மக்களின் வாழ்க்கையில் நானோ டெக்னாலஜி பெரும் பங்கு வகிக்கும். நானோ டெக்னாலஜி மூலம் உணவு பதப்படுத்துதல், எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பான குடிநீர் உள்ளி்ட்ட துறைகளில் மக்கள் பயன் பெற முடியும். ஒளியை விட 7 மடங்கு வேகமாக சென்று தாக்கக் கூடிய பிரமாஸ் ஏவுகணையின் வேகத்தை மேலும் அதிகரிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. உயர்வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் ஏவப்பட்டால் அவை மனித உடலில் படும் போது அவர்களுக்கு கதிர்வீச்சு ஏற்படும். அந்த கதிர்வீச்சு பாதிப்பை குறைக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் கொடுக்க வேண்டும்.

இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி. ஆகியவற்றை அளக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட சீருடை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்களின் உடல்நிலையை ராணுவ அதிகாரிகள் முகாமில் இருந்தவாறே தெரிந்து கொள்ள முடியும். ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிக்கவும் இந்த சீருடை பயன்படும். நானோ டெக்னாலஜியின் மூலம் தட்டாம்பூச்சி, பறவைகளின் அளவில் உளவு விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் வெளிநாட்டு எதிரிகளின் ஊடுருவல், நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானங்களில் 5 ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என்றார்.

வெட்டி ஆபீசருக்கு 13 காதலிகள், 15 குழந்தைகள்!


இங்கிலாந்தைச் சேர்ந்த வேலையில்லாத 'வெட்டி ஆபீசர்' ஒருவருக்கு தனது 14வது காதலி மூலம் 16வது குழந்தையும், 15வது காதலி மூலம் 17வது குழந்தையும் பிறக்கவிருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜேமீ கம்மிங் (34). வேலையில்லாதவர்,. ஆனால் 'சும்மா' இருக்கவில்லை. அவருக்கு 13 பெண்கள் மூலம் 15 குழந்தைகள் உள்ளன. 19 வயது பெண் கம்மிங்கின் 15வது குழந்தைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தந்தையானார். இந்நிலையில் 19 வயதாகும் செல்சீ என்ற பெண்ணுக்கு இன்னும் 24 மணி நேரத்தில் பிரசவமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறக்கப்போவது கம்மிங்ஸின் 16வது குழந்தை.

இது போதாததற்கு இன்னும் ஒரு இளம் பெண் வரும் ஜனவரி மாதத்தில் கம்மிங்ஸின் 17வது குழந்தையை பெற்றெடுக்க தயாராகி வருகிறாராம். ஏம்மா, உங்க பிள்ளை இப்படி இருக்காரே, நீங்க ஏதாச்சும் சொல்லப்படாதா என்று கம்மிங்கின் தாயார் லொரைனிடம் கேட்டால், நான் எனது மகனுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. அவனது சொந்த வாழ்க்கையைப் பார்க்கையில் எனக்கு கவலையாக உள்ளது. நான் என்னால் முடிந்த வரைக்கும் அவனின் குழந்தைகளை பார்த்து வருகிறேன்.

அவனுக்கு பல ஆண்டுகளாக வேலை இல்லை. வேலை செய்யும் எண்ணமும் அவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவன் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. இன்னும் 24 மணி நேரத்தில் செல்சீக்கு குழந்தை பிறக்கவிருக்கிறது. அவனுடைய மூத்த மகள் சமந்தா பிறந்ததில் இருந்து என்னுடன் இருக்கிறாள். அவளை அவன் பார்க்க வருவதேயில்லை. அவன் டீன் ஏஜ் பெண்களைத் தான் விரும்புகிறான் என்றார். சமந்தா கடந்த 1995ம் ஆண்டு பிறந்தாள். அப்போது கம்மிங்ஸுக்கு வயது 17. கம்மிங் ஒரு பெண் மூலம் ஒரு பிள்ளை தான் பெற்றுக் கொள்வார். இதில் ஆலிசன் மட்டும் விதிவிலக்கு. அவர்கள் இருவரும் சேர்ந்து 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பூமியை போன்ற தன்மைகள் கொண்ட புதிய கிரகம்!


பூமியை போன்ற ஒத்த தன்மைகள் கொண்ட புதிய கிரகம் ஒன்றை கலிப்போர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளித் துறை போராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர், பூமியில் இருந்து மிக அருகில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரம் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர்.

அந்த ஆராய்ச்சியில் ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 2 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் பூமியில் இருந்து 123 திரில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகம் பூமியை போலவே ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள அந்த கிரகத்துக்கு ஜிலிஸி 581ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து ஆஸ்ட்ரோபிஸிக்கல் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த 11 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிக்கு பிறகு, ஜிலிஸி 581ஜி என்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் பூமியில் இருப்பது போலவே, நீர்ம நிலையிலான தண்ணீர் இருக்கலாம் என்று தெரிகிறது. அதன்மூலம் பூமியை போன்றே அதற்கும் சந்திரன்கள் இருக்கலாம்.

பூமியில் இருந்து 20.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரத்தை குறித்து ஆராய்ச்சியின் போது 2 புதிய கிரகங்களை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தனர். ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 4 கிரகங்களை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் புதிய கிரகங்களின் எண்ணிக்கையும் சேர்த்து தற்போது 6 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தை போலவே, ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றிலும் உள்ள கிரகங்களுக்கும் நீள்வட்ட சுற்றுப்பாதை உள்ளது. ஜிலிஸி 581ஜி பூமியை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு பெரிதாக உள்ளது. மேலும் அது நட்சத்திரத்தை 37 நாட்களில் ஒருமுறை சுற்றி வருகிறது. பாறைகளாலான நிலப்பகுதியை கொண்ட இந்த கிரகத்தில் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்ப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து!

 இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பேருந்து ஏற வசதியாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் ஏழு சிறப்பு பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென 7 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், ஹைட்ராலிக் முறையில் அவர்கள் பேருந்தினுள் செல்ல சிறப்பு வழியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சென்னையில்தான் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் மதுபானங்கள் விலையை உயர்த்த அரசு முடிவு!


 தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் முதல் எலைட் மதுபானங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 8 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைய தேதிக்கு படு லாபகரமாக இயங்கி வரும் அரசு அமைப்பு எது என்றால் அது டாஸ்மாக்தான். பல லட்சம் பேரை தள்ளாட வைத்தாலும், தள்ளாட்டமே இல்லாமல், 9வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள டாஸ்மாக் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் எலைட் ஷாப்கள் திறப்பதுடன் மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா தலைமையில் மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அதில் டாஸ்மாக் கடைகள் மூலம் இன்னும் கூடுதல் வருவாயை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மதுபானங்கள் விலை உயர்த்துவது குறித்தும், கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்காணித்து தடுப்பது குறித்தும் மண்டல, மாவட்ட அதிகாரிகளுடன் யோசனை கேட்கப்பட்டது. அனைத்து அதிகாரிகளும் மதுபானங்கள் விலையை உயர்த்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி வரை தனியார் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. நவ 29ம் தேதி முதல் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பஞ்சாயத்து கிராமப்பகுதிகளில் 6 ஆயிரத்து 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 2003ம் ஆண்டு வரை ரூ.2 ஆயிரம் கோடி அளவில் ஆண்டு வருவாய் கிடைத்த வந்த நிலையில் 2010-2011ம் ஆண்டில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் தமிழக அரசிற்கு மதுபானங்களின் கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்டவைகள் மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும்!


அண்ணாமலையார், அபிதகுஜாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மட்டுமல்ல, திருக்கார்த்திகையன்று திருவிளக்கு ஏற்றி பூஜை செய்யும் போதும் 108 போற்றி சொல்லி வழிபடுகிறோம். இதை 120, 130, 150, 1000 என்றும் வைத்திருக்கலாமே! ஏன் 108க்கு முக்கியத்துவம் தரப்பட்டது தெரியுமா? மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இது சாத்தியமா என்றால் இல்லை. "மாயை (உலக வாழ்க்கை நிரந்தரமானது என்ற எண்ணம்) என்ற வலையில் சிக்கியுள்ள மனிதன் இறைவனை நினைப்பதில்லை, நினைத்தாலும் அதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவு. மாயைக்குரிய எண் 8. இந்த மாயையில் இருந்து நம்மை மீட்பவன் இறைவன். நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும், அவன் ஒரே ஒருவன் தான். ஆக, ஏக இறைவனுக்கும் (ஒன்றுக்கும்) எட்டுக்கும் ( மாயைக்கும்) மத்தியில் நாம் ஒரு சக்தியுமே இல்லாத பூஜ்யமாக இருக்கிறோம். அதனால் தான் 108 என்ற எண் முக்கியத்துவம் பெற்றது. கலியுகத்தில் இறைவனை அடைய 108 போற்றி அதிகமாகவே கைகொடுக்கிறது.

பங்குவர்த்தகத்தில் களமிறங்கும் பேஸ்புக்!


சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக், பங்குவர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பேஸ்புக் நிறுவனம், 10 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக வால்ட் ஸ்டிரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதகுறித்து, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2012ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது. இருந்‌தபோதிலும், பங்குவர்த்தகத்தில் களமிறங்குவதற்கான இறுதிமுடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 800 மில்லியன் பயனாளர்களை கொண்ட பேஸ்புக் இணையதளத்தை, தினமும், குறைந்தது 500 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாள்...


  • தமிழ் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)
  • இந்திய தொழிலதிபர் ‌ஜே.ஆர்.டி.டாடா இறந்த தினம்(1993)
  • தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல் தடவையாக காட்சிப்படுத்தினர்(1877)
  •  பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)

சென்னையில் பிடிபட்ட பயங்கரவாதி



சேலையூரில் பிடிபட்ட, "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த, எம்.பி.ஏ., மாணவரும் நேற்று பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் டில்லி கொண்டு செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, சமீபத்தில் டில்லியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பவே சென்னைக்கு வந்து தலைமறைவாகியிருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலம், பர்பங்கா என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவாஜ் உசேன், முகம்மது மைதீன், சபித் ரகுமான், முகம்மது இக்பால், ஹத்லான். இவர்கள் சென்னை, சேலையூர், ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து வந்தனர். டில்லி போலீசார், இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகம்மது இர்ஷாத் கான், 50, என்ற நபரை தேடி வந்தனர். விசாரணையில், ஒரு கட்டமாக, இர்ஷாத் கான் மொபைல் போன் தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து வந்தனர்.அப்போது, இர்ஷாத் கானின் மொபைல் போனில் இருந்து சென்னை, சேலையூர் டவர் மூலமாக தகவல் பரிமாற்றம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து, சென்னை வந்த டில்லி போலீசார், சேலையூர், ராஜேஸ்வரி நகரில், பீகார் மாணவர்கள் தங்கிருந்த வீட்டை கடந்த 10 தினங்களாக மறைந்திருந்து, கண்காணித்து வந்தனர். பீகார் மாணவர்களுடன், தேடப்படும் பயங்கரவாதியான இர்ஷாத் கான் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவரையும், மற்றவர்களையும் கூண்டோடு கைது செய்ய திட்டமிட்ட டில்லி போலீசார், தமிழக உயர் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பயங்கரவாதி சென்னையில் தலைமறைவாகியிருக்கும் தகவலை கூறி, ஆயுதம் தாங்கிய போலீஸ் படை ஒன்று வேண்டும் என்று கோரினர். இதையடுத்து, 80 பேர் அடங்கிய போலீஸ் படை ஒன்று தயாரானது.

தமிழக போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு, சேலையூர், ராஜேஸ்வரி நகரில், இர்ஷாத் கான் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின், உள்ளே நுழைந்து பார்த்தபோது, இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகிய மாணவர்களுடன், பயங்கரவாதி இர்ஷாத்கானும் இருந்தார். ஐவரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களை மவுன்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவோடு இரவாக அழைத்துச் சென்றனர். அங்கு, இர்ஷாத் கானிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.இதில், சமீபத்தில் நடந்த டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் இர்ஷாத் கான் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்ப, தனது உறவினரான அப்துல் ரகுமானுடன் சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆலந்தூர் கோர்ட்டில் இர்ஷாத் கானையும், அப்துல் ரகுமானையும் ஆஜர்படுத்திய டில்லி போலீசார், பின் இருவரையும் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லி கொண்டு சென்றனர்.இந்த வழக்கில், போலீசாரிடம் சிக்கிய பீகாரை சேர்ந்த இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அப்பாவிகள் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போலீசாரிடம் சிக்கிய இம்ரான் உசேன், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகியோர், அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள மேலும் மூன்று பீகார் மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது.

சென்னையை தாக்க திட்டமா?இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு, மாணவர்களை அதிகமாக கொண்டு இயங்கி வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் பயங்கரவாத திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. கடந்த 2008ம் ஆண்டு, ஆமதாபாத்தில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலே இந்த அமைப்பின் மிகப் பெரிய தாக்குதல். இதில், 50 பேர் இறந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான முகம்மது இர்ஷாத் கான் சென்னையில் கடந்த ஒரு மாதமாக, மாணவர்களுடன் தங்கியிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தாக்க அவன் எதுவும் திட்டமிட்டானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட டில்லி பயங்கரவாதி, தமிழகத்தில் சதி செயலில் ஈடுபடவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக, தமிழக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டில்லி போலீஸ் அளித்த தகவல் படி, முகம்மது இர்ஷாத் கான் மீது கள்ள நோட்டு, போலி பாஸ்போர்ட்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த இர்ஷாத்துக்கு, சென்னையில் அப்துல் ரகுமான் தங்க இடம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இர்ஷாத்தை கைது செய்யும் போது, அவரிடமிருந்து எவ்வித வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை.அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தமிழகத்தில் எந்த சதி வேலையிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ரூ.50 லட்சம் சுருட்டல்.



தமிழகம் முழுவதும் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி, ரூ.50 லட்சம் வரை சுருட்டிய "ஹைடெக்' மோசடி கும்பலை மதுரையில் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கார் மற்றும் 43 ஏ.டி.எம்., கார்டுகள், ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன் கோயில் தெருவில், ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, ஒருவர் 15 ஏ.டி.எம்., கார்டுகளை வைத்துக் கொண்டு மாறி, மாறி, மூன்று இயந்திரங்களில் பணம் எடுத்தார். வாட்ச்மேன் இல்லாததால், அடிக்கடி வெளியே செல்வதும், பின் உள்ளே சென்று பணம் எடுப்பதுமாக இருந்தார். இதை கவனித்து, ரோந்து எஸ்.ஐ., லோகேஸ்வரி விசாரித்தார். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூற, தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். செல்லும் வழியில், ரகசிய எண் எழுதப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை வீசி எறிந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. விசாரணையில், அவர் சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கணேசன்,33, என தெரியவந்தது. போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் எடுத்துள்ளார்.

இவர் கொடுத்த தகவலின்படி, சிவகங்கையில் இருந்து அம்பாசிடர் காரில் வந்த நண்பர்கள் நாமக்கல் பரமத்திவேலூர் பிரதாப்,40, இலங்கை மன்னார் மாவட்டம் ஆனந்த் என்ற ரூபன்,42,(இருப்பு, நாமக்கல் அகதிகள் முகாம்), ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் சையது அபுதாகீர்,35, சிவகங்கை கார் டிரைவர் விஜயகுமாரை ரிங் ரோடு - சிவகங்கை ரோடு சந்திப்பில் கைது செய்தனர். இவர்கள் லண்டனில் வசிக்கும் சிலரது உதவியுடன் போலி கார்டுகளை பயன்படுத்தி, சர்வதேச, "லிங்க்' வசதி உள்ள ஏ.டி.எம். மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தை, "சுருட்டி'யுள்ளனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள மையங்களில் மட்டும், ரூ.50 லட்சம், "சுருட்டியது' தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து சிட்டி வங்கி, எச்.எஸ்.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிகளின் 43 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.8 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு, பகலாக "சுருட்டல்:'"ஒரே ஊரில் பணம் எடுத்தால் சிக்கிக் கொள்வோம்' என, ஊர் ஊராக சென்று பணம் எடுத்துள்ளனர். மதுரை, சிவகங்கையில் பணம் எடுப்பதற்காக, நவ., 24ல் மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள ஒரு ஓட்டலில் தங்கினர். வெளிநாட்டில் வங்கி பரிவர்த்தனை துவங்கும் நேரத்தை கணக்கிட்டு, இங்கே இரவு, பகலாக பணம் எடுத்துள்ளனர்.

வங்கிகளிடம் விசாரணை :போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் கூறியதாவது :இருவாரமாக முன் இரவு, பின் இரவு என, போலீசார், 15 குழுக்களாக பிரிந்து ரோந்து செல்கின்றனர். அதற்கு கிடைத்த பலன்தான் இது. இக்கும்பலுக்கு லண்டனில் இருந்து கார்டு தயாரித்து கொடுப்பதாக தெரியவந்துள்ளது. ஷாப்பிங் இடங்கள், பெட்ரோல் பங்க் போன்றவற்றில் ஏ.டி.எம். கார்டை கொடுக்கும்போது, ரகசிய கேமராக்கள் அதை பதிவு செய்து, ரகசிய எண்ணை கண்டறிந்து கார்டு தயாரிக்கப்பட்டுள்ளது.கைதான கும்பலுக்கு, ஏ.டி.எம். மையத்தில் ரூ.10 ஆயிரம் எடுத்துக் கொடுத்தால், ரூ.500 கமிஷன் தரப்பட்டுள்ளது. இதற்கு மூளையாக செயல்படும் கும்பல் குறித்து விசாரித்து வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட கார்டுகளில் தமிழ் பெயர்கள் இருப்பதால், அதுகுறித்து வங்கிகளிடம் விசாரிக்க உள்ளோம், என்றார். பின்னணியில் விடுதலை புலிகள்?போலீஸ் கூறுகையில், ""விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுகளில் வசிக்கும் ஆதரவாளர்கள் தயாரித்துக் கொடுக்கும் போலி ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, பணம் எடுப்பது வழக்கம். அதேமுறையில், பணம் எடுத்துள்ளதால், இக்கும்பலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்,'' என்றனர்.

கேரள அரசு பீதி கிளப்ப காரணம்?




கடந்த 2006 பிப்ரவரியில் இந்த தீர்ப்பு வெளிவந்த நிலையில், மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன், கேரள காங்கிரஸ் அரசு, அவசரமாக சட்டசபையை கூட்டி, இந்த தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.இதை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணை நடந்து, தீர்ப்பு வெளிவர இருந்த நிலையில், பல்வேறு முறையீடுகளை கேரளா செய்து, அடுத்தடுத்த பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வைத்தது.இறுதியில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில், அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை அமைத்து, அதில், இரு மாநில அரசுகளும், தங்களது நியாயங்களைக் கூறி, ஒரு முடிவெடுக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இந்தக் குழுவில், கேரளா தரப்பில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ், தமிழகத்தின் தரப்பில், ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, பல கட்டங்களாக கூடி விவாதித்து வந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை, கேரள அரசு தாக்கல் செய்தது. முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இப்பிரச்னையை பெரிதாக்கி, நாடு முழுவதும் பீதியை கிளப்பும் பிரசாரத்தை, கேரள அரசு தீவிரப்படுத்தி இருப்பதற்கு காரணம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள முக்கியமான கூட்டமே என, கூறப்படுகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய அவசியம், தமிழகத்துக்கு உள்ளது.முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பல ஆண்டுகள் விசாரணை மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பின், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதித்ததோடு, 999 ஆண்டு குத்தகை செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்த குழுவிலும், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையிலும், அணைக்கு ஆபத்து இருப்பதற்கான எவ்வித ஆதாரத்தையும், கேரள அரசு சமர்ப்பிக்கவில்லை. அறிவியல் ரீதியான ஆய்வுகள் போன்றவற்றின் முடிவுகளையும் கேட்கத் தயாராக இல்லை. அதேசமயம், அனைத்து ஆய்வுகளுக்கும் ஒத்துழைக்கவும், சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்கும் தயாராகவே தமிழகம் இருந்து வந்துள்ளது.இது போன்ற செயல்கள், இக்குழுவுக்கு கேரளா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், குழுவின் இறுதிக்கட்ட கூட்டம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இக்கூட்டத்துக்குப் பின், தனது முடிவுரையை அறிக்கையாக, இக்குழுவின் தலைவர் ஆனந்த், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். அதன் அடிப்படையில், விரைவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வழங்க உள்ளது.தற்போதைய நிலையில், குழுவினரின் எண்ணம், தமிழகத்துக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, சமீப காலமாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள், வேறு உத்தியை கையாளத் துவங்கியுள்ளன.

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதாகவும், அதன் மூலம் தமிழகத்துக்கு தாராளமாக தண்ணீர் வழங்க இருப்பதாகவும், கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமரை சந்தித்து, இவ்விஷயத்தில் தமிழகத்துடன் மத்தியஸ்தம் செய்யுமாறு வலியுறுத்தினார்.சிறிய அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை காரணம் காட்டி, முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், "டேம் 999' என்ற திரைப்படத்தை வெளியிட்டு, மக்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பீதியை ஏற்படுத்த, முயற்சிகள் நடந்துள்ளன.இது தவிர, ஆங்கில "டிவி' சேனல்களில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூலம், முல்லை பெரியாறு அணை குறித்து, தவறான செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.கேரளா முழுவதும், தமிழகத்துக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நான்கு மாவட்டங்களில், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, மலையாள திரைப்பட நடிகைகள், நடிகர்களது பேட்டிகள் மூலம், அணைக்கு எதிரான பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வளவுக்கும் காரணம், வரும் 5ம் தேதி நடக்கவுள்ள கூட்டம் தான். அதில் எந்த முடிவும் எடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், மத்திய அரசு, மக்கள் என, அனைவர் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வேலையில், கேரளா ஈடுபட்டுள்ளது.இந்த பிரசாரத்தை, தமிழக அரசு முறியடிக்க, பதில் பிரசாரம் செய்தாக வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தின் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டு, தென் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும் நிலை ஏற்படும். 

முல்லை பெரியாறு அணை, 120 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியரால் கட்டப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு அணை கட்ட, 8,000 ஏக்கர் நிலத்தை, 999 ஆண்டு குத்தகைக்கு தர, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால், இந்த ஒப்பந்தமே செல்லாது எனவும், புதிய அணை கட்டப் போவதாகவும் கேரளா கூறுகிறது. ஆனால், தமிழகத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள, 8,000 ஏக்கரில் புதிய அணையை கட்டாமல், கேரளாவுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப் போவதாகச் சொல்கிறது. இதன் மூலம், அணையின் மொத்த கட்டுப்பாட்டையும், தன் பிடிக்குள் கொண்டு வர, கேரளா முயற்சிக்கிறது.தற்போதைய நிலையில், முல்லை பெரியாறில், 136 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவே, 10 டி.எம்.சி., தான். இதில் தண்ணீர் வெளியேற வேண்டுமென்றால், 106 அடிக்கு மேல், 136 அடிக்கு கீழ் உள்ள தண்ணீர் தான் வெளியேற முடியும். அணை உடைந்தாலும், இந்த தண்ணீர் தான் வெளியேறும். எனவே, வெளியேறப் போவது 6 டி.எம்.சி., தண்ணீர் தான்.

அப்படி வெளியேறினாலும், அந்த தண்ணீர் நேராக இடுக்கி அணைக்கு தான் செல்லும். முல்லை பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில், 1979ல், கேரள மின் வாரியத்தால் கட்டப்பட்டது தான் இடுக்கி அணை. நீர்மின் நிலையத்துக்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை, 70 டி.எம்.சி., தண்ணீர் கொள்ளளவு கொண்டது. எனவே, முல்லை பெரியாறு அணை உடைந்தாலும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இந்த விவரங்களை, கேரள அரசு முதலில் மறைத்து வந்தது. இவை எல்லாம், வழக்கு விசாரணையின் போது தான் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, "இடுக்கி அணையே உடைந்துவிடும்' என்ற, புதிய பிரசாரத்தை கேரளா துவக்கியுள்ளது.மேலும், முல்லை பெரியாறு அணை என்பது, மற்ற அணைகளை போல, மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுவது அல்ல. அந்த அணையில் உள்ள தண்ணீரை, மிகப் பெரிய குழாய்கள் மூலம் தான், தமிழகம் எடுத்து வருகிறது. இதனால், அணை உடைந்தால், நான்கு மாவட்டங்கள் அழிந்துவிடும் என்ற வாதத்துக்கே இடமில்லை.அவ்வாறு நடக்க வாய்ப்பு இருந்தால், அதற்கான ஆதாரங்களை, சுப்ரீம் கோர்ட்டில், கேரளா தாக்கல் செய்யலாம். ஆனால், அவ்வாறு எதையும் செய்யாமல், பிரதமரை சந்திப்பது, பீதியை கிளப்பும் பிரசாரங்களை மேற்கொள்வது, கடையடைப்பு நடத்துவது என மிரட்டி வருவது, இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.

ஜனார்த்தன ரெட்டிக்கு இரும்பு சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கியது தொடர்பாக ஆந்திர பெண் ஐ.ஏ.எஸ் ஸ்ரீலட்சுமியை சி.பி.ஐ., கைது


கர்நாடக சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரது சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் ஏராளமான இரும்பு சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திலும் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்பு சுரங்கங்கள் உள்ளன. ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த கால கட்டத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் 68.5 ஏக்கர் பரப்பளவுள்ள இரும்பு சுரங்கம் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை எடுக்க ஏராளமானவர்கள் போட்டியிட்ட நிலையில், ஜனார்த்தன ரெட்டிக்கு முறைகேடாக சுரங்கம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, அப்போது தொழிற்சாலை துறை செயலராக இருந்த ஸ்ரீலட்சுமி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. தற்போது ஸ்ரீலட்சுமி குடும்ப நலத்துறை கமிஷனராக உள்ளார். இவரது ஐ.பி.எஸ்., கணவர் கோபி கிருஷ்ணா, சி.ஐ.டி., பிரிவின் ஐ.ஜி.,யாக உள்ளார்.

ஏற்கனவே, சி.பி.ஐ., ஸ்ரீலட்சுமியிடம் மூன்று முறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் லட்சுமி அப்ரூவராக மாறுவார், என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நேற்று, ஸ்ரீலட்சுமி கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் தங்கள் காவலில் ஒப்படைக்கும் படி சி.பி.ஐ., கோரியது. இருதய நோயாளி என்பதால் சிறையில் தனக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும், என லட்சுமி கோரினார்.மீண்டும் இன்று, லட்சுமியை ஆஜர்படுத்தும் படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்றிரவு லட்சுமி தங்க வைக்கப்பட்டார். சுரங்க வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 3ம்தேதி சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது."ஜனார்த்தன ரெட்டிக்கு சுரங்கம் ஒதுக்கப்பட்டது மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உத்தரவின் பேரில் தான் நடந்தது. எனவே இதற்கு நான் பொறுப்பு அல்ல' என, லட்சுமி தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...