திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் மிக கோலகலமான முறையில் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றி வைத்தனர். இதனை 15ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டு களித்தனர்.அதோடு முதல் நாள் திருவிழாவும் தொடங்கியது. காலையில் விநாயகர், முருகர், அண்ணா மலையார், உண்ணாமலையம்மன் தேர்கள் மாடவீதியை சுற்றி வந்தன. தினமும் காலையில் ஒருவிதமான அலங்காரத்தில், இரவு வேறு ஒரு அலங்காரத்திலும் சாமி வீதியுலா வரும். இன்றைய பகல் வீதியுலா முடிந்தது. இரவு வீதியுலாவுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 10 நாள் அரசு பொருட்காட்சியை தொடங்கிவைக்கிறார். வரும் 5ந்தேதி மகாரதமும், 8ந்தேதி மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது.
No comments:
Post a Comment