தூத்துக்குடி “ஸ்டெர்லைட்” தாமிர ஆலையிலிருந்து வட இந்தியாவிற்கு தாமிர தகடுகள், மற்றும் தாமிர பொருட்களை எடுத்து சென்ற சரக்குந்து (லாரி) ஓட்டுனர்களை கொலை செய்துவிட்டு, தாமிர தகடுகள் உள்ள சரக்குந்துகளை சில கொள்ளையர்கள் கடத்திக் கொண்டு போவது தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், கர்நாடகாவில் ஒன்பது சரக்குந்து ஒட்டுனடர்கள் இப்படி கொலை செய்யப்படுள்ளனர்கள். கொலையாளிகள் யார்…? எதற்காக கடத்தினர்கள்…? கடத்தப்பட்ட சரக்குகள் எங்கே…? என்ற எந்த கேள்விகளுக்கும் இதுவரை விடைகிடைக்கவில்லை.
நாமக்கல்லை சேர்ந்த கருப்பையா என்பவருக்கு சொந்தமான லாரியில், திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த நல்லதம்பி வயது-54, மற்றும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் வயது-41, ஆகிய இருவரும் ஒட்டுனர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும், கடந்த 24-ம் தேதி தூத்துக்குடி “ஸ்டெர்லைட்” நிறுவனத்திலிருந்து குஜராத் மாநிலம் சில்வாசாவுக்கு தாமிர தகடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். 25-ம் தேதி நள்ளிரவில் கர்நாடக மாநிலம் இலுக்கல்லில் இருந்து ஓட்டுனர் நல்லதம்பி சரக்குந்து உரிமையாளரிடம் செல்பேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு கடந்த நான்கு நாட்களாக சரக்குந்து ஓட்டுனர்கள் இருவரிடமிருந்தும் எந்தவிதமான தொடர்பும் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகம் கொண்ட சரக்குந்து உரிமையாளர் கருப்பையா, நேற்று நாமக்கல் சரக்குந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பியிடம் இதுகுறித்து விபரம் தெரிவித்துள்ளார். நான்கு நாட்களாக இரண்டு ஓட்டுனர்களும், காணாமல் போனதாக சொன்னதில் சந்தேகம் கொண்ட நல்லதம்பி கர்நாடக மாநிலம், இலுக்கல் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு சரக்குந்து ஓட்டுனர்கள் காணாமல் போனது பற்றி விசாரித்துள்ளார்.
No comments:
Post a Comment