திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் காவல்நிலைய பகுதிக்கு உட்பட்டது வெளுக்கனந்தல் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த இராமகிருஷ்ணன் சி.ஆர்.பி.எப் வீரராக மும்பையில் பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் விநோத். அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7வது படித்து வந்தான். இவன் கடந்த மாதம் 20ந்தேதி காணாமல் போனான். பெற்றோர்கள் பையனை காணவில்லை என புகார் தந்திருந்தனர்.
இதனிடையே பையனை நாங்கள் தான் கடத்தி வைத்துள்ளோம். 30 லட்சம் தந்தால் தான் விடுவோம் என 2 முறை செல்போன் லைனில் வந்து மிரட்டியுள்ளனர். அதன் பின்பு எந்த தொடர்பும் கிடையாது. இந்த தகவலோடு போலிஸ் டி.எஸ்.பி பலுல்லா தலைமையில் தனிப்படை அமைத்து தேடத்தொடங்கியது. பணம் கேட்டு போன் வந்த எண்ணை பிடித்து அதன் மூலம் விசாரணை நடத்தி கடைசியில் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண்மணியை பிடித்தனர்.
அவளோ, எனக்கு அந்த பையன் விவகாரம் எதுவும் தெரியாது என்றால். போலிஸ் தங்களது பாணியில் கேட்டபோது, எனக்கு கடன் அதிகமாயிடுச்சி. அதனால நான் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த பையனை கடத்தினேன். பணம் வராதுன்னு தெரிஞ்சி நாம எங்க மாட்டிக்குவோம்ன்னு அவனை கொன்னு என் வீட்டு நிலத்துல புதைச்சிட்டேன் என்று கூறியுள்ளாள். இன்று காலை 10 மணியளவில், தாசில்தார் தலைமையில் காவல்துறையினர் அந்த பெண்மணி குறிப்பிட்ட இடத்தை நோண்டி பார்த்தபோது, அழுகிய நிலையில் உடல் இருந்தது. அதனை மீட்டு அங்கிருந்த டாக்டர்கள் குழு போஸ்ட் மார்டம் செய்தனர். இது வெளுக்கனந்தல் உட்டப சுற்றுவட்டார கிராமத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் வேறு யார் யார் சம்மந்தப்பட்டள்ளார்கள் என காவல்துறை தீவிர விசாரணையில் உள்ளனர்.
No comments:
Post a Comment