|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு *தோனிக்கு சாதகமான கிரகங்கள்

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாக, ஜோதிடரின் கணிப்பு தெரிவிக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நாளை முதல் துவங்குகின்றன. மார்ச் 24ம் தேதி நடக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
 தோனி "1981':
இந்தச் சூழலில் இந்தியா தான் கோப்பை வெல்லும் என மும்பை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இதற்கு கேப்டன் தோனியின் பிறந்த ஆண்டு பலமாக இருப்பது தான் காரணம். இவர் 1981ல் பிறந்துள்ளார். இதே ஆண்டில் பிறந்த ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் கேசில்லாஸ், 2010ல் உலக கோப்பையை வென்றார். தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ஷாகித் கபூர் 1981, ரன்பீர் கபூர் 1982ல் பிறந்தவர்கள் தான். அதாவது அனைத்து துறையிலும் 1981ல் பிறந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடந்த 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஏற்கனவே இரண்டு முறை கோப்பை வென்று விட்டார். இதனால் இத்தொடரில் 1981ல் பிறந்த இந்திய அணி கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோரில் ஒருவருக்கு கோப்பை வெல்லும் வாய்ப்புள்ளது


இப்படியே  உசுப்பேத்தி உசுப்பேத்தி  நம்மள ரணகல படுத்துராங்கலேப்பா  முடியல !   

இதே நாள் 22 மார்ச் 2011

  • சர்வதேச தண்ணீர் தினம்
  •  அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
  •  ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)
  •  இன்டெல் நிறுவனம் தனது முதல் பென்டியம் சிப்(80586) அறிமுகம் செய்தது(1993)
  •  ஹேல்-பொப் வால்நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது(1997)

இது என்ன வியாதி?

கடந்த வாரம் தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையத்தின் கூட்டத்தில் 62 மருந்துகளின் விலையை 15 விழுக்காடு உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் சர்க்கரை நோயாளிகளும் காசநோயாளிகளும் உட்கொள்பவை.  விலையை உயர்த்தினாலும்கூட, இவற்றின் புதிய விலையானது இப்போது இறக்குமதி செய்யப்படும் அதே மூலக்கூறுகள் கொண்ட மருந்துகளின் விலையைவிட 15 விழுக்காடு குறைவாகத்தான் இருக்கிறது என்று இந்த ஆணையம் சமாதானமும் கூறியிருக்கிறது.  உலகிலேயே மிக அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருக்கும் நாடு இந்தியா என்கிற பெருமை விரைவில் வந்துவிடும் என்கின்றன புள்ளிவிவரங்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இப்போது 160 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 40 மில்லியன், அதாவது, 4 கோடி பேர், இந்தியாவில் இருக்கின்றனர். இதன் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சர்க்கரை நோயாளி என்கிற அளவுக்கு இந்த நோய் அதிகரித்து வருகிறது. ஆயினும் இந்த நோய்க்கு இந்திய அரசு முக்கியத்துவம் தராமல் இருப்பதுடன், மக்கள் மத்தியில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் எந்த முனைப்பும் காட்டாமல் இருக்கிறது. ÷சர்க்கரைநோய் தொற்றுநோய் இல்லை என்பதற்காக இந்திய அரசு இதைக் கண்டும் காணாமல் இருப்பது அறிவுடைமை ஆகாது. ஏனென்றால் சர்க்கரை நோய் எல்லா நோய்க்கும் காரணமாகிறது. விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது, சிறுநீரகம் செயலிழக்கிறது. நரம்புகள் பாதிக்கின்றன. இதனால் கால்கள் மரத்து, புண்ணாகி அவற்றை வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலையும் பலருக்கு நேர்ந்துவிடுகிறது.
வட இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ஓராண்டுக்கு எவ்வளவு செலவு நேர்கிறது என்கிற கணக்கெடுப்பை ஐந்து ஆண்டுகளுக்கு சண்டீகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு செய்ததில், ஒரு சர்க்கரை நோயாளி, குறைந்த வருவாய்ப் பிரிவினராக இருப்பின், அவர் தனது வருவாயில் 25 விழுக்காட்டை செலவிட நேர்கிறது. அதாவது குறைந்தபட்சம் மாதம் ரூ.1000 வரை செலவிட நேர்கிறது என்று கண்டறிந்துள்ளனர். மாதம் ஒருமுறை மருத்துவரைச் சந்தித்தல், சர்க்கரை நோய் அளவை அறியும் சோதனைகளைச் செய்துகொள்ளுதல், நாள்தோறும் சாப்பிடும் மருந்துகள் ஆகியவை மட்டுமே இதில் அடங்கும்.  இது தவிர, மறைமுகச் செலவுகளும் இருக்கின்றன. அதாவது சர்க்கரை நோயாளி தனக்காக மருத்துவக் காப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான பிரீமியத் தொகை சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவர் தனக்காக பிரத்யேகமான செருப்புகளை அணிய வேண்டியிருக்கும். இது போன்ற மறைமுகச் செலவுகளையும் சேர்த்தால், ஒரு சர்க்கரை நோயாளிக்கு ஆகும் செலவு மேலும் அதிகரிக்கும்.  ஒரு பொருளைப் பயன்படுத்துவோர் அதிகரித்தால் அப்பொருளின் விலை குறையும் என்பதுதான் வர்த்தக மந்திரம். கைப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து கைப்பேசியில் பேசுவதற்கான கட்டணமும் ஒரு நிமிடத்துக்கு 10 காசுகளுக்கும் குறைவாகவும் சேவை அளிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், வீட்டுக்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக மாறிவரும் சூழ்நிலையில், மருந்துகளின் விலையைக் குறைப்பதுதானே சரியான முடிவாக இருக்கும்?
இந்திய மருத்துவச் சந்தையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடன் உள்ளூர் மருந்து நிறுவனங்கள் போட்டிபோடும் ஆரோக்கியமான சூழ்நிலை கருதி இத்தகைய விலை உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது என்கிறது தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையம். ஆரோக்கியமான வியாபார சூழ்நிலை யாருக்கு? நமது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அல்ல. அதிக விலைக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு. விலை அதிகரிப்பினால், உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள் லாபமடையும் என்பதைவிட, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அதிகம் விற்பனையாகும் என்பதுதானே உண்மை?  சர்க்கரை நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவோர் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள்தான் என்கிறது மற்றொரு ஆய்வு. காரணம், ஏழைகளால் தங்கள் சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள முடிவதில்லை. உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற மருத்துவரை அணுகவும் ஏழைகளிடம் பணவசதி இல்லை. இதனால் நாள்பட்ட நிலையில், சர்க்கரையின் அளவு அதிகரித்து சிறுநீரகம் விழித்திரை பாதிக்கப்பட்டு அல்லது கால்கள் மரத்துப்போய் ஆறாப் புண்களுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் அவர்களது சிகிச்சைக்கான செலவுகள் மிக அதிகம். ஆனால் அவர்களோ ஏழைகள்.  சர்க்கரை நோய் மருந்துக்கான மூலப்பொருள் விலை, அதை தயாரித்து பெட்டிகளில் அடைத்தலுக்கான செலவு, வெளியிடங்களுக்கு அனுப்பும் லாரி வாடகை எல்லாமும் உயர்ந்துவிட்டது என்று நியாயப்படுத்த முனைகிறது தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம். இந்த அமைப்பு 1977-ம் ஆண்டு அரசால் ஏற்படுத்தப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அரசு விரும்பினால், இதன் முடிவுகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யவும், முடிவுகளை நிறுத்தி வைக்கவும் இயலும். 
சர்க்கரை நோயை, தொற்றிப்பரவாத நோய் என்பதாகக் கருதி அலட்சியம் செய்யாமல் அதைக் கட்டுப்படுத்த தனி அமைப்பை உருவாக்கி, மருந்துகளைக் குறைந்த விலைக்குக் கிடைக்கச் செய்யும் கடமை, பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதும், இறக்குமதி செய்பவர்களுக்கு ஆரோக்கியமாகப் போட்டியிட்டு பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிப்பதுமா ஓர் அரசின் நோக்கமாக இருக்க முடியும். உள்ளூரோ, வெளியூரோ மருந்துகளின் விலையைக் குறைத்து மக்களை வாழ வைக்க வேண்டிய அரசு, வியாபாரிகளை வாழ வைக்கத் துடிக்கிறதே, இது என்ன வியாதி என்று புரியவில்லை!  

வைகோவுக்கு பாஜக அழைப்பு

பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுமாறு வைகோவுக்கு பாஜ அழைப்பு விடுத்துள்ளது.


தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறையைப் புறக்கணிக்காமல், பாஜவுடன் கைகோத்து செயல்பட வருமாறு தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வைகோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற வைகோ முன்வரவேண்டும் என்றும் அவர் வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜவுடன் சேர்ந்து மூன்றாவது அணிக்கு வைகோ விரும்பினால் அதை  தாங்கள் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

சமூக விழிப்புணர்வு நீயா நானா ? கோபிநாத்


சமூக விழிப்புணர்வு மக்கள் அரங்கம் விசு



 

லிபியாவைத் தொடர்ந்து சிரியாவிலும் பொதுமக்கள் கலவரம்; கட்டிடங்கள் தீ வைத்து எரிப்பு

 
கடந்த பிப்ரவரி மாதம் துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. அவை முடிவுக்கு வந்த நிலையில் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதன் பக்கத்து நாடான சிரியாவிலும் போராட்டம் வெடித்துள்ளது.
 
அங்கு பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல்-ஆசாத் கடந்த 50 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். மேலும், அங்கு 48 ஆண்டுகளாக அவரச சட்டம் அமலில் இருந்து வருகிறது. அதனால் அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த போராட்டம் கலவர மாக மாறியுள்ளது. அங்குள்ள தேரா நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களை மக்கள் தாக்கினர்.அச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கலவரம் வலுவடைந்தது. நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் தேரா நகருக்கு வரும் ரோடுகள் மூடப்பட்டன. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து தேரா நகரின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்தபடி போராட்டக்காரர்களின் நடவடிக்கையை கண்காணித்தது.இதற்கிடையே, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதில் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாத் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தனர்.
 
மேலும் அதிபர் ஆசாத்தின் உறவினர்களுக்கு சொந்தமான 2 டெலிபோன் நிறுவனங்களுக்கும் தீ வைத்தனர். போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் தேரா நகரில் இயங்கும் இண்டர்நெட் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
 
மின்சாரம் நிறுத்தப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவர்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர சிரியா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்

இந்தியாவில் பெருமளவில் ஊழல்கள் நடந்துள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகிய மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மத்திய அரசு இந்த ஊழல் புகார்களால் எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்களது கண்டனங்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 
இந்த நிலையில் சர்வதேச ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனமான ஏ.பி.என்.ஜி. 100 உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து கே.பி.எம்.ஜி. நிறுவனம் தெரிவித்ததாவது,
கடந்த சில மாதங்களாக வெளிச்சத்துக்கு வந்துள்ள பல ஊழல்கள் பிரதமர் மன்மோகன்சிங்கின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுகிறது. பிரதமர் கூட்டணி தர்மத்துக்காகவும், கூட்டணி அரசை தக்க ைவத்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. தற்போது இந்தியாவில் மக்கள் பாஸ்போர்ட் பெறுவது, உரிமங்கள் பெறுவது போன்றவற்றுக்காக சிறிய அளவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதகமாக முடித்துக் கொள்கின்றனர். இது மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கோடிகளிலும் மெகா ஊழல்கள் நடைபெறுகின்றன. இது அரசியல்வாதிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் உள்ள சட்டத்திற்கு புறம்பான தொடர்பை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த மெகா ஊழல்கள் தடுக்கப்படாவிட்டால் நாட்டிற்கு பாதகமான விளைவுகள் ஏற்படும். மத்திய அரசு வரும் நிதியாண்டில் இந்தியாவில் 9 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பெருகி வரும் ஊழல்களால் அன்னிய முதலீடுகள் வெகுவாக குறைந்தால் 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியுமா? என்பது சந்தேகம்தான். இதனால் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் பெரும் பின்னடைவுகள் ஏற்படும். இந்தியாவில் நடக்கும் பெருமளவிலான ஊழல்கள் கட்டுமானத் துறையிலும் தொலைத் தொடர்பு துறைகளிலும்தான் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாதிக்பாட்சாவின் கதிதான் ராசாவிற்கும்.... சுப்பிரமணியசாமி

ராசா சிறையில் இல்லாமல் வெளியில் இருந்திருந்தால் சாதிக்பாட்சாவின் கதிதான் ராசாவிற்கும் ஏற்பட்டிருக்கும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி கூறியதாவது:- ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சோனியாவின் மருமகனுக்கும் தொடர்பு உள்ளது. ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்கு மேல் சோனியாவின் பெயரையும் வழக்கில் சேர்க்க மனு செய்வேன். கருணாநிதி பற்றி கவர்னரிடம் புகார் அளித்து ஒரு மாதம் ஆகிறது. இன்னும் அவகாசம் உள்ளது. அடுத்த தேர்தலில் கருணாநிதி முதலமைச்சராக இருக்க மாட்டார். அதனால் கவர்னரின் அனுமதி ஒரு பொருட்டல்ல. அடுத்த சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் ஜனதா கட்சி போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க.வை ஆதரிக்கும். நவம்பர்  மாதம் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் மே 13-க்கு பிறகு புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும். 
சாதிக்பாட்சாவின் தற்கொலையில் மர்மம் உள்ளது. சி.பி.ஐ. விசாரித்தால் உண்மைகள் வெளி வரும். வரும் 31-ந் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில் கனிமொழி, கனிமொழியின் தாயார் பெயர் சேர்க்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படலாம். ராசா சிறையில் இருந்ததால் தப்பித்தார், இல்லாவிட்டால் சாதிக்பாட்சாவின் கதிதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு சுப்பிரமணியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.

 தேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்?
 தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது. அவர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்?
 இத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது.
 தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன?
 குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது. வசதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி.
 ÷மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது.
 ÷இலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடுதானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்?
 இதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்? குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
 அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர்
 காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும்.
 தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா? ஏனென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி.
 இலவசங்களையும் கடன்பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது. இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி?
 இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
 நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப்படுவதைப் போல, அரியணையில் கொலுவீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள். பாவம், வெறும் விட்டில்பூச்சிகள்தானா மக்கள்?

பட்டைய கிளப்பும் தலைவர் படங்கள்



சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆர். பெயர் பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது. இன்னொரு புறம் தியேட்டர்காரர்களும் அவருடைய படங்களை ரிலீஸ் செய்து வசூல் குவிக்கின்றனர்.

கிராம புறங்களில் எம்.ஜி. ஆர், படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் படம் பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணி, இலவச வேட்டி, சேலைகளை சிலர் வழங்கியுள்ளனர்.

இது தேர்தல் அதிகாரிகள் கவனத்துக்கு செல்ல அவர்கள் விரைந்து போய் தடுத்துள்ளனர். சென்னையில் பல்லாவரத்தில் உள்ள லட்சுமி தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டுள்ளது. எம்.ஜி. ஆர். ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்து படம் பார்க்கின்றனர். கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் பூக்களை தூவி ஆரவாரம் செய்கின்றனர். விசில் சத்தம் ஒலிக்கிறது. தியேட்டர் முன் எம்.ஜி.ஆர். கட்-அவுட்களும் வைக்கப்பட்டு உள்ளது.

நாடோடி மன்னன் படம் பாரத், கோயம்பேடு ரோகினி, சைதாப்பேட்டை ராஜ், திருவள்ளுர் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

புதுப்படங்களை மிஞ்சும் அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்கள் வசூல் குவிப்பதாக விநியோகஸ்தர்கள் கூறினர். 1960 மற்றும் 70களில் வந்த எம்.ஜி.ஆர் படங்கள் இப்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடுவதும், வசூல் குவிப்பதும் திரைத் துறையினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களும் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளன.

வடிவேலு vs விவேக்

நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.   வரும் 23ம் தேதியில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

முதல்வர் கருணாநிதியை மீண்டும் ஆட்சியல் அமர்த்த அயராது பாடுபடுவேன் என்று வடிவேலு கூறியுள்ளார்.
திமுக களத்தில் நடிகர் வடிவேலு இறங்கிவிட்டதை அடுத்து அதிமுக களத்தில் நடிகர் விவேக்கை இறக்க முயற்சிகள் நடந்துவருகிறது.
மதுரை மண்ணைச்சேர்ந்த இந்த சிரிப்பு நடிகர்கள் இருவரும்  எதிர் எதிர் அணியில் நின்று சீரியசாக பேசப்போகிறார்கள்.

லிபியாவின் நிலை இலங்கையிலும் வரலாம்: சரத் பொன்சேகா


லிபியாவின் நிலை மிக விரைவில் இலங்கையிலும் வரலாம் என்றும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சிறையில் தன்னை சந்திக்க வந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பாலித ரங்கே பண்டாரவிடம், சரத் பொன்சேகா இவ்வாறு கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் வாழ்க்கைத் தரம் மட்டுமின்றி, வாழ்வதற்கான சுதந்திரமான சூழலும் இல்லாமல் போய்விட்டது என்றும், அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதப் போக்குகள் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் பொன்சேகா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மிக விரைவில் அதிபர் ராஜபட்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அப்போது மக்களை யாராலும் தடுக்கவோ அடக்கவோ முடியாது என்றும் பொன்சேகா கூறியதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிறுதியில் யார் யார்?

மார்ச் 23ம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தானும், மேற்கு இந்தியத் தீவுகளும் மிர்பூரில் சந்திக்கின்றன
.

24ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.


25ம் தேதி மிர்பூரில் நடைபெறும் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், நியூசிலாந்தும் சந்திக்கவுள்ளன
.

26ம் தேதி கொழும்பில் நடைபெறும் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் சந்திக்கின்றன
.

அரை இறுதி:

29ம் தேதி முதல் அரை இறுதிப் போட்டி கொழும்பிலும், 30ம் தேதி 2வது அரை இறுதிப் போட்டி மொஹாலியிலும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி:

ஏப்ரல் 2ம் தேதி இறுதிப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறும்.

பசி குறும்படம்

பழைய படம்தான் ஆனால் இன்னைக்கும் நாம் அந்த புள்ளியிலியே
 நிற்கிறோம். ஒட்டுக்காக  வாங்கும் பணம்  இன்னும்  எவ்வளவு  அடுத்தவன் அதிகம்  தருவான்  எனும்  மாயையில்   நாம்   மயங்கிப்போனோம்.  படத்தை படையலாய்  நமக்கு  அளித்த  செ.தே.   இமயவர்மன் ( இயக்கம் ) வாழ்த்துக்கள். சிருவன் பூ.கிருனராஜ்   நடிப்பு அருமை.

குறும்படம் ஆசை!

சிருவன் செல்வாவின் நடிப்பு இயல்பு இயக்கம் சாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் சேமிப்பு அருமை.    

குறும்படம் நெய்பந்தம்

நம்மில் துளிர்த்த வேர்ரகளுக்கான படத்தை சமர்ப்பித்த க.முரளி அப்பாஸ் (எழுத்து ,இயக்கம் )  வாழ்த்துக்கள்.  கடைசி வரை பேரன் திருந்தாதது நெஞ்சில் வருத்தமளிக்கிறது ...     

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா


As many as 2066 Indian pilgrims, mostly from Rameswaram island, began their journey to Katchatheevu in Sri Lanka on Saturday for attending the festival at St. Antony's Church. The group included 426 women and 204 children. Before embarking on boats, they were frisked by police, Customs, Revenue officials, Coastal Security Group and others. All pilgrims were given identity cards. Lifejackets were distributed by the State government.


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழா, இந்திய - இலங்கை பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையுடன் சிறப்பாக முடிந்தது. தமிழகத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் நேற்று மாலை, ராமேஸ்வரம் திரும்பினர்.
இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவை, கடந்த 16ம் தேதி நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றி, துவக்கி வைத்தார். இதில், பங்கேற்க, தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் படகில் சென்றனர். நடுக்கடலில் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளின் சோதனைக்குப்பின், கச்சத்தீவில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தீவின் அடர்ந்த காடு, கடற்கரையில் கூடாரம் அமைத்தும், வெட்டவெளியில் தங்கியும் பக்தர்கள், நேற்று காலை ஆறு மணிக்கு நடந்த சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய - இலங்கை ஒற்றுமை, உலக அமைதி, சுனாமியில் பாதித்த ஜப்பான் நாட்டிற்காக மெழுகுவத்தி ஏற்றி, கூட்டு பிரார்த்தனை செய்தனர். ஒன்பது மணிக்கு நடந்த அந்தோணியார் தேர்பவனியை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட பக்தர்கள், மாலையில் ராமேஸ்வரம் வந்தனர்.

பார்வதி அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அஸ்தி வங்கக் கடலில் நாளை கரைக்கப்படுகிறது. இதில் வைகோ பங்கேற்கிறார். அதனையொட்டி நடக்கும் அஞ்சலிக் கூட்டத்துக்கும் அவர் தலைமை தாங்கிப் பேசுகிறார்.


அன்னை பார்வதி அம்மையார் மறைந்த 31 ஆவது நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தலைநகர் சென்னையில், வங்கக் கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது. பிரபாகரனை, தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச் சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்ந்து இருக்கிறது. அதனை, வங்கக் டலில் தூவிட இருக்கிறோம்.

அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஈழத்தில், கண்ணீர்க்கடலில் தத்தளிக்கும் தமிழ் ஈழ மக்களைப் பாதுகாத்து, அவர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழ, அவர்களின் தாயக மண்ணை மீட்டெடுத்து, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைத்திட, அன்னை பார்வதி அம்மையாரின் நினைவாக வீர சபதம் ஏற்போம்!

எனவே, மார்ச் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு, பத்தினித்தெய்வம் கண்ணகி சிலை அருகில், தமிழ் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து, நம் அன்னையின் புகழ் அஞ்சலியில் பங்கு ஏற்குமாறு அன்போடு வேண்டுகிறேன.

-இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Coalition targets Gadhafi compound

அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று அதிகாலையிலேயே ராணுவ தாக்குதலை துவங்கின. பிரான்சின் போர் விமானங்கள் பெங்காசி நகரின் முக்கிய ராணுவ நிலையங்களை குண்டு வீசித் தாக்கின. அமெரிக்க கூட்டுப் படைகள் ட்ரிபோலி, மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைகள் வீசின. இந்த தாக்குதலில் போர் விமானங்கள், ராணுவடாங்கிகள் தீப்பிடித்தன.

இந்த ஏவுகணை தாக்குதலில் இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர், 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனாலும் ட்ரிபோலி, சிர்தே, ஜீவாரஹ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நேற்று இரவு அமெரிக்க கூட்டுப்படை ட்ரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் 4 அடுக்கு மாளிகையை குறி வைத்து ஏவுகணைகள் வீசின. இதில் மாளிகை தரைமட்டமானது.

இந்த மாளிகை தான் கடாபியின் அதிகார மையமாகவும், ஆலோசனைக் கூடமாகவும் இருந்து வந்தது. அமெரிக்க தாக்குதலில் இருந்து கடாபியின் ஆதரவாளர்கள் பலர் மனிதக் கேடயமாக இருந்து அவரை காப்பாற்றி வருகின்றனர். இந்த ஏவுகணை தாக்குதலில் அவர்களில் பலர் இறந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஆனால் எண்ணிக்கை தெரியவில்லை. 

Batcha autopsy: Doctor's resignation rejected


Dekal said he has put in his papers from government service as he would like to contest the assembly polls as an independent candidate.
Dr Dekal, an assistant professor of forensic medicine at the Government Royapettah Hospital, said he put in his papers on March 3, more than a fortnight before Batcha's suicide, to contest the Tamil Nadu assembly elections.
"I am yet to make up my mind since the relieving order is yet to come. If it comes soon, I may contest as an independent," he said. Dr Dekal's father was a DMK member.
However, he said his association with the Batcha case would continue till its end and he is waiting for the relieving order from the government.

சாதிக்பாட்சா உடலை பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா


ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடையவரும், மாஜி அமைச்சர் ராஜாவின் நெருக்கமான நண்பருமான சாதிக்பாட்சா கடந்த கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த உடலை பரிசோதனை செய்தவர் டாக்டர் டெக்கால் . இவர் தனது அரசு டாக்டர் பணியை ராஜினாமா செய்துள்ளார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் ராஜினாமா செய்தது ஏன் என யூகங்கள் கிளம்பிய நேரத்தில் தேர்தல் போட்டி என்று கூறியிருக்கிறார். இவருக்கு சில கட்சிகள் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.ஆனால் டெக்காலுக்கு ரிலீவ் ஆர்டர் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...