|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

இந்த வாரபலன் (9-3-2012 முதல் 15-3-2012 வரை)

மேஷம் 

பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவு நன்றாக இருக்கும். ஆச்சரியமான செய்திகளைக் கேட்கக்கூடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குல தெய்வ வழிபாடு செய்ய வெளியூர் செல்ல திட்டமிடக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்
பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தாரிடம் பாராட்டு பெறுவீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மிதுனம்
பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைத்து மகிழக்கூடும். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சேமிப்பு பெருகும்.

கடகம்
பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். புதிய ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். மனம் நிம்மதியாக இருக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் பெறக்கூடும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்
பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். சந்தோஷமான செய்திகள் உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். மனம் குதூகலமாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கோரிக்கைள் அனைத்தும் நிறைவேறும். வெளியூர் பயணம் மேற்கொள்ளக்கூடும். சிலர் ஆலய தரிசனம் செய்யக்கூடும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி
பொது: சுமூகமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலனில் கவனம் செல்லும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.

துலாம்

பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வழக்குகள் சாதகமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடக்கூடும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

விருச்சிகம்


பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். மனம் உற்சாகமாக இருக்கும். எதிர்பார்த்த முக்கிய தகவல் கிடைத்து மகிழக்கூடும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. இருப்பினும் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலனில் கவனம் செலுத்தவும்.வேலை பார்ப்போருக்கு: சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

தனுசு
பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நடத்த தி்ட்டமிடக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தோடு புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனம் நிம்மதியாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.

மகரம்
பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணம் பல வழிகளில் வரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை. உடன் பிறப்புகளிடம் மனம்விட்டு பேச வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். தர்மகாரியங்களுக்கு செலவு செய்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.

கும்பம்
பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் உங்கள் சொல்பேச்சைக் கேட்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

மீனம்

பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பண வரவு நன்றாக இருக்கும். மனம் மகிழும் செய்தி உங்களைத் தேடி வரும். உடல் நலம் மேம்படும். உடன் பிறப்புகளிடம் எந்த ரகசியத்தையும் கூற வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். மகான்களின் தரிசனம் கிடைக்கலாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்திலேயே அதிக செல்வாக்கு உள்ள பதவி கிடைத்து மகிழக்கூடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

அமெரிக்க தீர்மானம்: இலங்கைக்கு எதிராக 22 நாடுகள்...


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் இலங்கைக்கு நெருக்கடி முற்றியுள்ளது. அதேசமயம், இந்த விஷயத்தில் கண்டிப்பாக பேசியாக வேண்டிய முக்கிய நாடான நமது இந்தியா பெருத்த அமைதி காத்து வருகிறது. இந்தியாவின் இந்த மயான அமைதி உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் வேதனையை அளித்துள்ளதாம்.கடைசி வரை அமைதியாக இருந்து விட்டு கடைசி நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ரத்த வெறியாட்டம் போட்டது இலங்கை. உலகமே ஒன்று திரண்டு இந்த கோர வெறியாட்டத்கை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்தன. அடிக்காதே, அடிக்காதே என்று வாய் வார்த்தையாக மட்டுமே உலக சமுதாயம் இலங்கையை அப்போது கண்டித்தது. அதை கண்டிப்பு என்று கூட சொல்ல முடியாது. அப்படி ஒரு மென்மையான அணுகுமுறை அது. இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக புல்டோசர் ஏற்றி மறைக்கப்பட்டு விட்டனர்.

ஆனால் ஈழ மண்ணில் நடந்தது மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் என்பதை அம்பலமாக்கும் வகையிலான வீடியோ காட்சிகள், பேட்டிகள், புகைப்படங்கள் வெளியாகி ஈரம் உள்ள மக்களின் நெஞ்சங்களை பதறடித்தது, சிதறடித்தது, வேதனையுற வைத்தது.பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர், பெண்கள், ஊனமுற்றோர் என பாரபட்சமே பார்க்காமல் சிங்களப் படைகள் ரத்தக் குளியல் நடத்தியது அம்பலமானது. இந்த நிலையில்தான் இலங்கையின் மனித உரி்மை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் வரைவுத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமை பொதுக் கூட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த தீர்மான நகல் மனித உரிமைக் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் குறித்து விவாதம் நடத்தி பின்னர் வாக்கெடுப்புடன் இது நிறைவேற்றப்படும். இது நிறைவேறினால் உலக அளவில் இலங்கை பெரும் சிக்கலுக்குள்ளாகும். பல்வேறு விசாரணைகள், பொருளாதாரத் தடைகள் பாயும், நாடே ஸ்தம்பித்துப் போய் விடும், பொருளாதாரத் தடைகளால் பெரும் பின்னடைவையும் சந்திக்க நேரிடும்.

இதையடுத்து இந்த தீர்மானம் நிறைவேறாமல் முறியடிக்க பகீரத்ப பிரயத்தனம் செய்து வருகிறது இலங்கை. அந்த நாடு தற்போது மலை போல நம்பியுள்ளது ரஷ்யா, இந்தியா, சீனாவைத்தான். இந்த மூன்று நாடுகளில் ரஷ்யாவும், சீனாவும் பகிரங்கமாகவே தங்களது ஆதரவைத் தெரிவித்து விட்டன. இந்தியா இதுவரை கருத்து சொல்லவில்லை. ஆனால் இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா மறைமுகமாக பேசி வருகிறது. இது உலகத் தமிழர்களை அதிர்சசியுற வைத்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங், இந்த தீர்மானம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அதைப் பற்றி அவர் பேசக் கூட மறுத்து வருகிறார். வழக்கம் போல மயான அமைதி காத்து வருகிறார்.மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவோ, இந்தியா, இலங்கை நீண்ட நெடிய நட்புறவுடன் கூடிய நாடுகள் என்று பேசி வருகிறார். இப்படி இந்தியாவின் நிலை ஒரு புறம் இருக்க அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இதுவரை 22 நாடுகள் கை தூக்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது ஈழத் தமிழர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. கிட்டத்தட்ட பாதி உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

இந்த தீர்மானம் குறித்த துணை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அமெரிக்கா நடத்தியது. அதில் கலந்து கொண்ட நாடுகளில் பெரும்பாலானவை தீர்மானத்தை ஆதரித்துப் பேசின. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எதிர்த்துள்ளன. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், நார்வே, ஹங்கேரி, போலந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக திரண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகப் பெரிய விஷயம்.

24 நாடுகளின் ஆதரவு இருந்தால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். எனவே மேலும் சில நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றால் தீர்மானம் நிறைவேறும். அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் உற்சாகமும், எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. அதேசமயம், என்ன செய்தால் தீர்மானத்தை சிதறடிக்க முடியும் என்ற பதைபதைப்புடன் இலங்கைத் தரப்பு காணப்படுகிறது. அந்த நாட்டின் அமைச்சர் மகிந்தா சமரசிங்கே தலைமையிலான சிறப்புக் குழு ஒன்றும் தற்போது ஜெனீவா விரைந்துள்ளது.

இந்திய அரசியலில் மகளிர் உலக பட்டியலில் இந்தியாவுக்கு 105வது இடம்!

அரசியலில் பங்கேற்கும் மகளிர் அதிகம் கொண்ட நாடுகள் எது என்ற பட்டியலில் உலக அளவில் ஜனநாயக நாடு என்ற பட்டத்துடன் இருக்கும் இந்தியாவுக்கு 105 வது இடம் தான் கிடைத்திருக்கிறது. அண்டைய நாடான பாகிஸ்தான், வங்க தேசம், நேபாள் நாட்டை விட நாம் குறைவான மதிப்பைத்தான் மகளிருக்கு அளித்து வந்துள்ளோம். 

உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் பார்லி., யூனியன் தொடர்பான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 543 லோக்சபா உறுப்பினர்கள் கொண்ட இந்தியாவில் 60 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். 240 ராஜ்யசபா உறுப்பினர்களில் 24 பேர் தான் பெண்கள். இதில் 2 சீட் லோக்சபாவில் காலியாகவும், ராஜ்யசபாவில் 5 சீட்டும் காலியாக உள்ளது. மேலும் இந்த பட்டியலின் விவரம் வருமாறு: ரூவாண்டா தான் டாப் மோஸ்ட் முக்கியத்துவம் அளிக்கும் நாடாக உள்ளது. இந்நாட்டின் கீழ்சபையில் 56 சதவீத பெண்களும், மேல்சபையில் 38 சதவீதத்தினரும் அடங்குவர். இதற்கு அடுத்தப்படியாக தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள அந்தோரா ( 50 சதம் ) கொண்டு 2 வது இடத்தில் உள்ளது. தான்சானியா ( 36 சதம் ) உலக அரங்கில் 18 வது இடம். இதே போல் ஸ்பெயினும் உள்ளது. உகாண்டா ( 35 சதம் ) 19 வது இடம், டூனிஷியா , தெற்கு சூடான் ( 26 சதம் ) 35 வது இடம், இலங்கை ( 129) , மியான்மர் (134 வது இடம்).
பணக்கார நாடுகள் எப்படி? உலகில் பணக்கார மற்றும் சக்தி கொண்ட நாடுகளான அமெரிக்கா (78 வது இடம்), பிரிட்டன் (53வது இடம்) , இத்தாலி (57 வது இடம்), பிரான்ஸ்( 69 வது இடம்) , ஜெர்மனி ( 21 வது இடம்), சீனா ( 60 வது இடம்). சவுதி அரேபியா, கத்தார், பெலீஸ், பாலுவ், மிக்ரோனேஷியா, நவ்ரு, சாலமோன் தீவுகள் நாடுகளில் பெண்கள் பங்கேற்பு பூஜ்யமாக உள்ளது.
மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் சென்னையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில் 33 சதம் வழங்கும் மகளிர் மசோதா இன்னும் நிறைவேற்ற முடியாமல் சிரமப்படுகிறோம் என்று வேதனை பட்டார். நமது நாட்டில் மகளிர் மசோதா நிறைவேறுமா என்ற நிலையில் தான் இன்னும் இருக்கின்றோம். என்பதும் ஒரு வேதனையாக தகவல்தான். காரணம் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு நிலையை கருத்தில் கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெண் தலைவர்களாவது பெண்கள் முன்னேற்றத்திற்கு முழு முயற்சி எடுப்பார்களா? 

இதே நாள்...


  •  லிபனான் ஆசிரியர் தினம்
  •  பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது(1959)
  •  சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது(2006)

அரசியல் சித்து விளையாட்டில் முல்லைப் பெரியாறு விவகாரம் ஏன் இவ்வளவு தூரம்?

 கேரள மாநிலம் பிரவம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் உம்மன் சாண்டிக்கும் அச்சுதானந்தனுக்குமான நேரடிப் போட்டி என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். மார்ச் மாதம் 17ம் தேதி பிரவம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள இந்தத் தொகுதியில் போட்டியிடும் பரம வைரியான இரு வேட்பாளர்களுமே ஜேக்கப் என்னும் கடைசிப் பெயர் கொண்டவர்களே. இருந்தாலும், இந்தப் போட்டி இவர்களுக்கு இடையிலானது என்பதை விட, உம்மன் சாண்டிக்கும் அச்சுதானந்தனுக்கும் இடையிலானது என்றே கருதுகிறார்கள்.



பிரவம் தொகுதியில் நின்று வென்ற டி.எம். ஜேக்கப், உணவு மற்றும் வழங்கல் துறை  அமைச்சராக இருந்தவர். கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) உறுப்பினராக சட்டமன்றத்தில் இருந்தவர். இந்தக் கட்சி, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அங்கமான கட்சி. இவரின் மகன் அனூப் ஜேக்கப் (34), தன் தந்தையின் பரம வைரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போட்டி வேட்பாளர் எம்.ஜே.ஜேக்கப்புடன் நேரடியாக மோதுகிறார். கடந்த 2006ம் ஆண்டுத் தேர்தலில், மூன்று தலைமுறைகளைக் கண்ட டி.எம்.ஜேக்கப் முதல் முறையாக எம்.ஜே.ஜேக்கப்பிடம் தோற்றார். அதன்பின்னர், 2011 தேர்தலில் அவர் எம்.ஜே.ஜேக்கப்பை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதல்வர் உம்மன் சாண்டி இந்த இடைத்தேர்தல் குறித்துக் கூறியபோது, இது தனது 9 மாத அரசாட்சி மீது மக்கள் அளிக்கும் தீர்ப்பு என்றார். கடந்த மே மாதம் தொடங்கி, இன்று வரை ஆட்சி நடத்தி வரும் அரசுக்கு மக்கள் எந்த வகையில் திருப்திப் பட்டிருக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. இதை ஒரு சவாலாகவே நான் ஏற்கிறேன் என்றார். 140 உறுப்பினர் சட்டமன்றத்தில், ஆளும் கட்சி பெரும்பான்மை என்ற பாதி எண்ணிக்கைக்கு ஓரிரு உறுப்பினர் ஆதரவில் அரசை நடத்திச் சென்றுகொண்டுள்ளார். அதுபோல் மார்க்சிஸ்டின் அச்சுதானந்தனனின் ஜாலம் ஒன்றும் பிரவம் தேர்தலில் எடுபடாது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி யுடிஎஃப்  கருதுகிறது. நிலம் தாரைவார்த்த வழக்கில் அவர் சிக்குண்டது, மாநில அரசின் சார்பில் இயங்கும் ஒரு ஐடி அகாதெமியில் அவரது மகன் அருண் குமாரை இயக்குநராக நியமித்தது (இந்த வழக்கும் இப்போது விசாரணையில் உள்ளது) உள்ளிட்ட சில விவகாரங்கள் காங்கிரஸின் கையில் துருப்புச் சீட்டாக உள்ளன.


ஆனால் அச்சுதானந்தனோ, இப்போது போட்டியிடும் ஜேக்கப்பின் மகன் அனூப்புக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்... நீண்டகாலத்துக்கு முன்னேபேயே சாண்டியை மிகவும் மோசமான ஊழல்வாதி என்று ஜேக்கப் வலியுறுத்திச் சொன்னதையே இப்போதும் சொல்கிறேன். இப்போதும் காட்சி எதுவும் மாறிவிடவில்லை.... என்று பிரவம் தொகுதியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். கடந்த 2011 தேர்தலில் டி.எம்.ஜேக்கப் 157 ஓட்டுகள் என்ற நூலிழை வித்தியாசத்தில்தான் கம்யூனிஸ்டுகளிடம் இருந்து தொகுதியைத் தட்டிப் பறித்தார். எனவே, இந்த இடைத்தேர்தலில் பிரவம் தொகுதி தங்களுக்குத்தான் என்று கம்யூனிஸ்டுகள் உறுதியாக நம்புகிறார்கள். இருப்பினும், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இதை மறுக்கவில்லை. ஆயினும், முந்தைய அச்சுதானந்தன் அரசுக்கு, அண்மைக்கால 9 மாத சாண்டி அரசுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர இது ஒரு வாய்ப்பு என்கிறார். ஏ.கே.அந்தோனிக்கு இருக்கும் மவுசை வைத்து, பிரவம் இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு அறுவடை செய்ய காங்கிரஸ் தீவிரமாக வரிந்து கட்டுகிறது. காரணம், அனூப் ஜேக்கப்பின் தந்தை, ஏ.கே.அந்தோனியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், இடதுசாரிகளின் தயவில் உள்ளவரும், பிரவம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் தெட்டாயில், இந்தத் தேர்தல் வெறும் ஒரு அமைச்சரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தல் மட்டுமல்ல, ஒரு புதிய அரசையே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தல் என்கிறார். தமிழக கேரள மாநிலங்களில் பெரும் புகைச்சலைக் கிளப்பிய முல்லைப் பெரியாறு விவகாரம் ஏன் இவ்வளவு தூரம் அரசியல் சித்து விளையாடல்களால் மிகப் பெரும் விவகாரமாக்கப்படுகிறது என்பது, இந்த இடைத்தேர்தல் பிரசாரங்களின்போதே தெரிகிறது. இந்த ஒரு தொகுதியின் வெற்றி, ஆளும் ஆட்சியின் போக்கை மாற்றுமா? அதற்கு எந்த விதத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் போக்கு வெற்றி பெறும் என்பது மார்ச் 17ம் தேதி வாக்குப் பதிவுக்குப் பின் தெரியவரும்!   
மறக்கமுடியுமா? 

இது பெண்கள் தின ஸ்பெசல் இங்கல்ல பஞ்சாபில் பெண்களுக்கு எம்.ஏ. வரை இலவச கல்வி!

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. வரும் 14-ம் தேதி நடக்க இருக்கும்  பதவியேற்பு விழாவில் பிரகாஷ் சிங் பாதல் 5-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். 85 வயதான பாதல் ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த முறை பாதல் ஆட்சிக்கு வந்தபோது பஞ்சாபில் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்பட்டது.  இம்முறை பதவியேற்பதற்கு முன்பே பஞ்சாபில் அனைத்து பெண்களுக்கும் எம்.ஏ. வரை இலவச கல்வி வழங்கப்படும் என பாதல் அறிவித்துள்ளார்.  மேலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கும் இனி இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும் பாதல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தெய்வம் நின்று கொள்ளும்...


இனத்தை அழித்த துரோகிகளுக்கு சாவு விரைவில்... அதன் முதல் படி & பலி விரைவில் ...  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு குணமாகி நாடு திரும்பினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.  இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் மறைந்த ஷியாம் சரன் சுக்லா நினைவு தபால்தலை வெளியூட்டு விழா நடந்தது. இதில் சோனியா காந்தி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீர் என்று சோனியா வருகை ரத்து செய்யப்பட்டது. சோனியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று மறைந்த சுக்லாவின் மகள் உமாதிவாரி கூறினார். சோனியாவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடல் நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை. அவர் நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியா வராததால் பிரதமர் மன்மோகன்சிங் சுக்லாவின் தபால் தலையை வெளியிட்டு பேசினார். 

என் கண்களில் வழிந்த "நீலிக்" கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பிரதமருக்கு மீண்டும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின் போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக்குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. ஏப்ரல் 25ஆம் நாளன்று வெளியிடப்பட்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசின் ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும், போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொன்று விட்டதாகவும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டுமென்றும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக; வலியுறுத்தப்பட்டது.மேலும், இந்த கருத்தை கடந்த 1ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையிலும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளேன்.  ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக் கூடாது என்று வலியுறுத்தினேன்.

மேலும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும், பிரதமரை நேரில் சந்தித்து கழகத்தின் நிலைப்பாட்டினையும், உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார். உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட ஆவன செய்திடுக என்று மத்திய அரசுக்கு உணர்வு பூர்வமாக வேண்டுகோள் விடுத்தோம். இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்ட போது, என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒரு முறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில்; சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க வேண்டும்; அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமையானதும் கடுமையானதுமான போர்க் குற்றங்கள் அனைத்தையும் இந்திய அரசு நினைவிலே கொண்டு, இனியும் காலம் தாழ்த்தாது, இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்திட வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கலிகாலம் 2 பெண் குழந்தைகளின் தாய் ஆட்டோ டிரைவருடன் மாயம்!

நாகர்கோவில்: நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.   இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். லதா தூத்துரில் அழகு கலை நிலையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலையில் குழந்தைகளை ஒரு ஆட்டோவில் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டு மீண்டும் அதே ஆட்டோவில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து லதாவின் தாயார் சரஸ்வதி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் லதாவுக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை தேடிச் சென்றனர். ஆனால் அவரையும் காணவில்லை. இதனால் லதாவும், ஆட்டோ டிரைவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தை காக்க இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.42 கோடியில் !


தமிழகம் முழுவதும் கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தை காக்க இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.42 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் 10 முதல் 19 வயதுள்ள வளர் இளம் பெண்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரசவிக்கும் தாய்மார்கள் 7 லட்சம் மற்றும் 700 பெண் சிறை கைதிகளுக்கும் சேர்த்து கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. 

அதன்படி, சுமார் 40 லட்சம் பேருக்கு சானிட்டரி நாப்கின் வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின்படி, 2 மாதத்துக்கு ஒரு முறை 3 பாக்கெட் அடங்கிய 18 நாப்கின்கள் வழங்கப்படும். மேலும், நலவாழ்வு புத்தகம் ஒன்று தனியாக அளிக்கப் படும். அதில், வளர் இளம்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். நாப்கின்கள் வழங்கும் தேதியும் குறிக்கப்படும். ‘புது யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். அதேபோல் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் சிறை அதிகாரிகள் மூலம் மற்றவர் களுக்கு நாப்கின் வழங்கப்படும். ‘புது யுகம்’ திட்டத்தை மார்ச் 26க்குள் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காந்தி பிறந்த தேசத்துக்கு இல்லையே.மனிதாபிமானம்!

சென்னையில் சிறுவன் கொலையில் தேடப்பட்டு வரும் குற்ற்றவாளி டக்லஸ் 

தேவானந்தா,ஈழத்தில் நம் மக்களை கொலை செய்து சர்வதேச நாடுகளால் 

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜபக்க்ச்கேவுடன் விருந்தில் நம் 

நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கும்,சோனியா காந்தியும.இவர்கள் பழரசத்தை 

குடிப்பதாக நினைத்துவிடாதீர்கள்.அதில் நம் ஈழ மக்களின் 

இரத்தமும்,மீனவர்களின் இரத்தமும் இருக்கலாம்.  ஐநா மன்றத்தில் 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா 

ஆதரிக்கவில்லை.இந்தியா இலங்கையை ஆதரிக்க காரணம்.ஈழத்தில் நடந்த 

படுகொலைகளுக்கு இலங்கை முதல் குற்ற்றவாளியென்றால் இந்தியா 

இரண்டாவது குற்றவாளி.....!

ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் எல்லாம் காஸ்மீர்,பீகார்,சத்தீஸ்கர் 

மற்றும் தண்டகாரணிய பகுதியில் இந்திய அரசால் பசுமை வேட்டை என்ற 

பெயரில் மலைவாழ் மக்களை துன்புறுத்திக் கொண்டுள்ளது.இன்று இலங்கை 

குற்றவாளி கூண்டில் ஏறினாள் நாளை நாமும் ஏற வேண்டுமே என்ற பயம் 

இந்திய அரசுக்கு.அதனால் தான் இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது.

இனத்தாலும் மொழியாலும் வேறுபட்ட அமெரிக்காவுக்கு இருக்கும் 

மனிதாபிமானம் கூட காந்தி பிறந்த தேசத்துக்கு இல்லையே என்பது தான் 

வருத்தமாக இருக்கிறது .....!

King of Comedy - Maanada Mayilaada..Total damage


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...