|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். Movie



பள்ளிகளில் கூடுதல் கட்டணம் திரும்ப பெரும் அதிகாரம்!


தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கூடுதலாக வசூலித்த பள்ளி கட்டணத்தை திரும்ப பெரும் அதிகாரம் மற்றும் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வி கட்டண நிர்ணய கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் கமிட்டி வைக்கப்பட்டது. இந்த கமிட்டியானது தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாணவர்களிடம் இருந்து எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டுமென்பது குறித்து நிர்ணயம் செய்தது. 

இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள லியோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் இருந்து கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகத்திற்கு கல்வி கட்டண கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரக ஆய்வாளர் மேற்கண்ட பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்து உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அப்பள்ளியில் உள்ள 731 மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 29 லட்சத்து 36 ஆயிரத்து 530 ரூபாய் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கட்டண கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லியோ மெட்ரிக்குலேசன் பள்ளி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கல்வி கட்டணக் கமிட்டிக்கு கட்டணம் நிர்ணியிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டிக்கு அதிகாரம் இல்லை என்று தனது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே.சசீதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டுமின்றி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பள்ளி நிர்வாகத்தின் மனுவை தள்ளிபடி செய்து உத்தரவிட்டார்.

சாலைப் பராமரிப்பு!


சாலைப் பராமரிப்பு இதுவே! காரணம் சாலைகள் சாவுக்கான வாசல்தானே!

'புளிச்’சிடும் படம்!

பளிச்’சிடும் விளக்கம்!

மதுரை என்ற பெயர் வந்தது எப்படி?

சிவபக்தனான குலசேகர பாண்டிய மன்னனிடம்  சில பொருட்களை விற்க, தனஞ்ஜெயன் என்னும் வணிகர் வந்தார். வியாபாரத்தை முடித்துவிட்டு கடம்பமரங்கள் அடர்ந்த காட்டில் தங்கினார். அன்று இரவில், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு. வானிலிருந்து இறங்கி வந்த தேவர்கள்  வழிபாடு நடத்தியதைக் கண்டார். ஆச்சரியமடைந்த அவர்,  மன்னனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.  மன்னன் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான். வணிகர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, சுற்றிலும் வீதிகளை உண்டாக்கி, ஒரு நகரத்தை அமைத்தான். அப்போது அந்நகரின் மீது சிவனின் நெற்றியில் இருந்த சந்திரனில் இருந்து அமிர்தம் தெளிக்கப்பட்டது. அதனால், அந்த நகருக்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டது. (அமிர்தத்தை மது என்றும் சொல்வர்)  மாண்புமிகு மதுரை பிறந்தநாள் தெரியுமா?  இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, மதுரை. 

உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சுமார் 2500 ஆண்டுகளுக்கு  முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப்  பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் கூடல் என்றும், கலித்தொகையில் நான்மாடக்கூடல் என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில்  மதுரை என்றும் அழைக்கப் படுகிறது. 

சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது.  சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர்,  நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்  வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை.  ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பதியெழுவறியா பழங்குடி மூதூர் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?  தற்போதைய பழமொழியில் கூறப்படும் மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன.  மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, 

நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில்  எழுவர், என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.  நச் நகரமைப்பு: இந்தக் கால மதுரையை மறந்துவிட்டு, இந்த செய்தியை படியுங்கள், நகரமைப்பு (டவுன் பிளானிங்) என்ற துறை வளராத காலத்திலேயே, உலகுக்கே  அதைக் கற்றுக்கொடுத்தது, பழைய மதுரையின் அமைப்பு. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியே மதுரை நகர் அமைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் சதுர வடிவில் தெருக்கள் அமைக்கப்பட்டன. மதுரையை ஆண்ட நாயக்கர்களில் முதல் மன்னர் கி.பி 1159 முதல் 64 வரை ஆண்ட விஸ்வநாத நாயக்கர். இவர் ஷில்பா சாஸ்திர கட்டடக் கலை அடிப்படையில், மதுரை நகரை மீண்டும் வடிவமைத்தார்.  

இவர் சதுர வடிவில் அமைத்த தெருக்களை, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி என தமிழ் மாதங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அப்போதுதான், தமிழ் மாத பெயர்களின் அடிப்படையில் விழாக்களும் துவங்கின. கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள தெருக்கள் விசாலமாக, திருவிழாக்கள் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டன. இத்தெருக்களில் கோயில் தேர்கள், சுவாமி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.  பண்டைய தமிழ் இலக்கியங்களில், மதுரை நகரின் மத்தி மற்றும் தெருக்களில் தாமரை பூக்கள் வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கி, கோயிலும், நகரமும் உருவாக்கப்பட்டது. கோயிலின் நான்கு பாகங்களிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன் தெருக்களில், சமுகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்க்கும், கடைசி தெருக்களில் சாதாரண மக்களும் குடியமர்த்தப்பட்டனர். 19 நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, காலனித்துவ அரசியல் மற்றும் தொழில்களின் தலைமையிடமாக மதுரை மாறியது.

மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார்.  நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட  ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், அங்காடி வீதிகள் எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் நாளங்காடி எனவும், மாலையில் கூடும் வீதிகள், அல்லங்காடி  எனப்பட்டன. மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது. 

இது என்டே கேரளாவில்!


தமிழர்கள் அதிகம் செல்லக்கூடிய கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலின் வாசலில், தமிழர்கள் மொழிப்பிரச்னையால் சிரமப்படக்கூடாதே என்பதற்காக, தமிழிலேயே போர்டு வைத்துள்ளனர். ஆனால் இந்த போர்டை பார்த்து படிப்பதற்குள் தமிழர்கள் ரொம்பவே குழம்பிப் போகின்றனர்.

நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இளையராஜா இசை!



இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார்  இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முதல் நேரடி நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

 அவரும் இதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்றார். மேலும் அவர் கூறுகையில், அவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல நூறு பாடல்களைப் படைத்துள்ளார். அதிலிருந்து எதைத் தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. காரணம் அத்தனையுமே முத்துக்கள். இதில் எதை விடுவது... நேரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நான்கு மணி நேரம் நடைபெறப் போகும் அந்த ஷோவில், இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து அதை இடம்பெறச் செய்யவுள்ளோம் என்றார் அவர். இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு 100 டாலர் முதல் 500 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், சித்ரா, மனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் காண 18000 ரசிகர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிழைப்பு தமிழனிடம் பறப்பது இலங்கை தேசிய கொடி!


சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. அங்கு இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது. முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது. முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.

திருமணம் காரணமாக ஒருவர் தனது ஜாதியை மாற்றுமாறு கோர முடியாது!


மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் தமது கணவரின் ஜாதிக்குரிய தகுதியை தமக்கும் வழங்க கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஏ. பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செங்குந்தர் ஜாதியை சேர்ந்த தாம் இஸ்லாம் மதத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த ஆசாத் என்பவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்தேன். பிரேமாவதி என்ற பெயரையும் பாத்திமா என மாற்றினேன். இதனால் எனது கணவரின் 'லப்பை' ஜாதி சான்றிதழை எனக்கும் வழங்கக் கோரினேன். காஞ்சிபுரம் துணை வட்டாட்சியரும் இதற்கான சான்றிதழை அளித்திருக்கிறார். ஆனால் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நான் கலந்து கொண்டேன். ஆனால் பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவில் என்னை சேர்க்காமல், பெண்கள் - இதரர் என்ற பிரிவில் டி.என்.பி.எஸ்.சி. சேர்த்துள்ளது. இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். , பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) என்ற பிரிவில் என்னை சேர்த்து, எனக்கு பணி வாய்ப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. சந்துரு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். திருமணம் காரணமாக ஒருவர் தனது ஜாதியை மாற்றுமாறு கோர முடியாது. உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மனுதாரருக்கு லப்பை என்று அளிக்கப்பட்ட ஜாதி சான்றிதழ் செல்லாது என்றும் நீதிபதி தமது தீர்ப்பில்.


தமிழ் கல்வி அவல நிலை!

ஒருவிடுமுறை நாள். தேவியும், ராமுவும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். மரத்தடியிலிருந்து ஒரு அணில்குட்டி தொப்பென்று கீழே விழுந்தது. இருவரும் அணில்குட்டியை எடுத்து அப்பாவிடம் கொடுத்தனர். அப்பா அதற்கு பஞ்சால் பாலூட்டினார். ஒரு அட்டைப்பெட்டியில் வைத்தார். சிறிது நேரம் கழித்து அணில்குட்டி அங்கும் இங்கும் ஓடியது. தேவியும், ராமுவும் அணில்குட்டியை வளர்க்க விரும்பினர். ஆனால், அப்பா அணில்குட்டியை அதே மரத்தடியில் விட்டுவிட்டார். இந்த இரண்டாம் வகுப்புக்குரிய கதையை, தமிழகக் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 70.1 சதவிகிதத்தினரால் திக்கித் திணறிக்கூட வாசிக்க முடியாத நிலை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? - இந்தக் கல்வி அவல நிலையை நம்பித்தான் ஆகவேண்டும். இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாவட்டங்களில் 2005-ல் இருந்து ஆண்டுதோறும் பள்ளிக் கல்வி ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள், அசர் (ASER) - கல்விநிலையின் ஆண்டறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது. 

'பிரதம்' என்ற தன்னார்வ கல்வி அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த ஆய்வின்போது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனரா? கிராமப்புற பள்ளிகளின் அடைப்படை வசதிகள் இருக்கின்றனவா என்பன பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் அடிப்படைக் கற்றல் திறன் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் முடிவில் கிடைத்தத் தகவல்களில் பெரும்பாலானவை அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின்முக்கிய அம்சங்கள் இவை...

* தமிழகக் கிராமப்பகுதிகளில் 6 முதல் 14 வயதுள்ள 99.4 சதவிகித குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். 

* 11 முதல் 14 வயதுள்ள பெண்குழந்தைகளில் 99.1 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர். 

இவ்விரண்டு அம்சங்களிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. 

தமிழ் வாசிப்பின் அவல நிலை! * ஒன்றாம் வகுப்புப் படிக்கும் 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எழுத்துகளை அடையாளம் காண முடிகிறது. 

* இரண்டாம் வகுப்புப் படிக்கும் 43.6 சதவிகித குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 

* ஐந்தாம் வகுப்புப் படிக்கும் 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே இரண்டாம் வகுப்பு கதையை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 46.8 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

கணக்கு பிணக்கு ஆமணக்கு! * ஒன்றாம் வகுப்பில் 53.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஓரிலக்க எண்ணை (1 முதல் 9 வரை) அடையாளம் காணமுடிகிறது. 

* இரண்டாம் வகுப்பில் 54.2 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஈரிலக்க எண்களை (11 முதல் 99 வரை) அடையாளம் காண முடிகிறது. 

* ஐந்தாம் வகுப்பில் 13 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எளிய வகுத்தல் கணக்கைப் போடமுடிகிறது.

ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125-வது பிறந்த ஆண்டையொட்டி, தேசிய கணித ஆண்டு கொண்டாடப்பட்ட வேளையில் தமிழக அளவில் மட்டும் அல்ல... இந்திய அளவிலும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கணக்குப் பாடத்தில் நல்ல கற்றல் நிலையை எட்ட முடியவில்லை என்பது துயரத்துக்குரிய முரண். 

ஆங்கிலம் நன்றாக ... * தமிழகத்தில் ஆங்கிலத்தில் எளிய வார்த்தயை வாசிக்க முடிந்த குழந்தைகளின் சதவிகிதம், இந்தியாவின் சராசரியை விட அதிகமாகக் காணப்படுகிறது. 

* ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 57.1 சதவிகித தமிழகக் குழந்தைகளால் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48 சதவிகிதமாகவே உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பதையும் அசர் ஆய்வு முடிவுகள் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்: 

* 49.3 சதவிகித பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது. 

* 81.7 சதவிகித பள்ளிகளில் ஆசிரியர் - வகுப்பறை விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது. 

* 80.8 சதவிகித பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது. 

* 66.1 சதவிகித பள்ளிகளில் முழுமையான சுற்றுச்சுவர் உள்ளது. 

* 68.9 சதவிகித பள்ளிகள் மட்டுமே கழிவறைகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...