|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

ஊழலால் ரூ.72 ஆயிரம் கோடி இழப்பு கிரண்பேடி! - Ind loses $ 16 bn to corruption every year, says Kiran Bedi!

சிகாகோ கவுன்சில் என்ற அமைப்பு சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய, கிரண்பேடி கூறியதாவது: இந்தியாவில் நடக்கும் ஊழல்களால், ஆண்டுதோறும் 72 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு 100 ரூபாய் ஒதுக்கினால், அதில், 16 ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதம் உள்ள 84 ரூபாய் காணாமல் போகிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும், ஊழலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். ஊழல் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்க கூடியது. ஊழல் அதிகரிப்பதற்கு காரணம், அதை கட்டுப்படுத்துவற்கான முறைகள் இல்லை. சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பால், கடந்த சில மாதங்களாக, ஊழல் செய்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முதன்முறையாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமினும் வழங்கப்படவில்லை. இதற்காக, சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

Out of every Rs 100 meant for infrastructure development, only Rs 16 is used and Rs 84 is lost," said Bedi at a event conducted by the Chicago Council on Global Affairs. She further said that India could become a developed nation in the world only after it becomes free of corruption first and pays back all its debt. "I would like to see Indians in America collectively raising a voice because it is our future," said Bedi, who is also a part of Anna Hazare's fight against corruption. She further spoke about the Lokpal Bill and said that corruption in India was at its peak because the country lacked a system which could keep a check on activities like these.

"It is only in the last two months thanks to the Supreme Court that key players and politicians went to jail for the first time and have not been bailed out till now," said Bedi. Speaking about the event India Against Corruption that was held at Gayatri Shaktipeeth she said, "Scams have increased over the years and the number of recorded scams have also increased," and said that records showed that such scams had no appropriate punishment. She urged that she needed support from the Non-Resident Indians (NRI) in the fight against corruption for taking the campaign a step forward."We can also try to weed out corruption if we allocate even 0.5 per cent of budget for anti-corruption," she added.

இதே நாள் ...


  • எகிப்தில் மன்னராட்சி முடிந்ததால் குடியரசானது(1953)

  •  மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியால் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது(1948)

  •  சான் பிரான்சிஸ்கோ மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடி கண்டுபிடித்தனர்(1981)

  •  கசகிஸ்தான், கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது(2006)

  • இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்!


    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, "எல்காட்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழக அளவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அளவில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 மாணவர்கள் 7.5 லட்சம் மாணவர்கள் உள்ள விவரத்தை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசிடம் சமர்ப்பித்தனர். அது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் "எல்காட்' அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கவர்னர் உரையில், இலவச லேப்-டாப் வழங்குவதை அரசு உறுதி செய்தது. இலவச லேப்-டாப் தயாரிப்பதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம்: முதல் கட்டமாக, 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்ய, சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11. அதற்கான வைப்புத் தொகை 20 லட்சம். கடைசி தேதியன்று மாலை, டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படுகின்றன. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, லேப்-டாப் கொள்முதல் செய்வதற்கான அனுமதி உடனே வழங்கப்பட மாட்டாது. முதலில், தொழில்நுட்ப ரீதியாக டெண்டர் பரிசீலிக்கப்படும். இதில், அந்நிறுவனங்கள், அரசு விதித்துள்ள தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அடுத்த கட்ட டெண்டருக்கு தேர்வு செய்யப்படும். முதல் டெண்டரில் தகுதிபெற்ற நிறுவனங்களுடன், அடுத்த கட்டமாக, விலை நிர்ணயம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் ஒத்துவரும் நிறுவனங்களுக்கு, லேப் -டாப் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் வழங்கப்படும். லேப்-டாப்பில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய, தயாரிப்பு நிறுவனம், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் முடியும் வரை இலவச சர்வீஸ் செய்து தர வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாதிரி லேப்-டாப்களை, "எல்காட்' நிறுவனத்திடம் இந்த மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எடை 2 கிலோ 700 கிராமுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழி விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி, சென்னை அண்ணாசாலையில் உள்ள "எல்காட்' நிறுவனத்தில், லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில், லேப்-டாப் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்களை, எல்காட் அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    வசதிகள் அதிகம்: விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறையில் லேப்-டாப்பை இயக்கலாம். ஸ்டாட்டர் எடிஷன், கேமரா, ஒயர்லெஸ், "டிவிடி' ரைட்டர், வேர்டு, எக்சல் மற்றும் டேட்டா பேஸ் புரோகிராம்கள் மற்றும் கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய அளவிலான ஸ்கிரீன், 2 ஜி.பி., ரேம், 320 ஜி.பி., ஹார்டுடிஸ்க் இருக்கும்.

    வறுமையில் தியாகி விஸ்வநாத தாஸ் குடும்பம்!

    சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் குடும்ப வாரிசுகள் அரசு வேலை கேட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கோரிக்கை மனு அளி்த்தனர். சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து நாடகம் நடத்தி மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர் தியாகி விஸ்வநாத தாஸ் . சுதந்திரத்திற்காக வீரமுடன் போராடியதால் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

    இத்தகைய தியாகி விஸ்வநாததாசின் 125 வது பிறந்த தினவிழா மதுரை திருமங்கலத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
    இந்த விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ கலந்து கொண்டு வீரத்தியாகி விஸ்வநாததாசின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன் மதுரை கலெக்டர் சகாயம், திருமங்கலம் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது , தியாகி விஸ்வநாததாசின் வாரிசுகள் தாங்கள் வறுமையால் வாடுவதாகவும் தங்களுக்கு ஏதாவது ஒரு அரசு வேலை தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை மனு அளி்த்தனர்.அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    காரட் ...

    தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.

    காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்: கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.

    புற்று நோய் செல்களை அழிக்கும்: நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு காரட்டிற்கு மட்டுமே உள்ளது. இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகிறது. காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது.

    கண்பார்வை குறைபாட்டினை போக்கும்: வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் காரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண்நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் சக்தி காரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது.

    வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் காரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் உள்ள நார்ச் சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

    பக்கவாதத்தை அண்டவிடாது: காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் காரட்டினை உண்பவர்களை ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப்பார்ப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது.

    பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு காரட் போக்கிவிடும்

    அல்சரை குணப்படுத்தும்: பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்த நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது. அல்சர் நோய் உள்ளவர்கள், வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் காரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் எட்டிப்பார்க்காமல் செய்துவிடும்.

    வயிற்றுக் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு காரட் சிறந்த மருந்தாகும். வாரத்திற்கு 5 நாட்கள் காரட்டை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் எதுவும் கலக்காமல் பருகி வர வாய் நாற்றம் ஓடியே போய் விடும்.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு. எனவே நீரிழிவு நோயளிகள் காரட்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் சுரப்பு சீரடையும்.

    ஒரு கப் காரட் ஜூஸ்

    இதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது.

    • உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.
    • குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.
    • காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.
    • காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.
    • ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும். காரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறையும்
    • முடி கொட்டாது நீளமாக வளரும்.
    • வைட்டமின் B அதிகம் உள்ளது. எளிதில் ஜீரணமாகும்.
    • நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.
    • குடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் ஜூஸ் நல்ல மருந்து.
    • இதயத் துடிப்பைச் சீராக்கும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும்.
    • மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.
    • இரத்தப் புற்றுக்கு தினமும் காரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
    • தலை சுற்று, மயக்கம் வராமல் காக்கும்
    • வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும்.
    • நெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும்.
    • சூதகக் கட்டு ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தவும்.
    • தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க காரட் சாறு அருந்தவும்.
    • ஒல்லியானவர்கள் மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்தவும்.
    • தேவை இல்லாத யூரிக் அமிலத்தை காரட் சாறு இரத்தத்தில் கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் வலிநீங்கி குணம் பெறுகிறார்கள்.
    • உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச் சத்து காரட்டில் உள்ளது. இது எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எலும்புகள் உறுதி பெறுகின்றன. பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு காரட்டிலுள்ள Tocokinin என்ற பொருள் இன்சுலின் போல் இருந்து உதவுகிறது.
    • காரட் ஜுஸில் உள்ள வைட்டமின் ‘ஈ’ மலட்டுத் தன்மையை மாற்றும்.
    • கர்ப்பிணிகள் தினமும் 25 gm காரட் பச்சையாக உண்டால் மலக்கட்டு, போலி வலி,களைப்பு நீங்கி குழந்தை நிறமாக வலுவாகப் பிறக்கும்.
    • காரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி, பசும் பாலில் போட்டு அவித்து, சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இளைப்பு நீங்கும்.உடல் வலுப்படும் .எடை கூடும்.நோய் வராது.
    • காரட் துண்டுகளை பசும்பாலில் அவித்து அதோடு உலர் திராட்ச்சையும், தேனும் கலந்து பெரியவர்களுக்கு கொடுக்க உடல் வலுவாகும்.வயிற்று நோய்கள் மாறும்.
    • தோல் நீக்கி நறுக்கிய காரட்டுடன் ,பச்சைக் கொத்த மல்லி,இஞ்சியை தேவையான அளவு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து உண்ண வயிறு தொடர்பான நோய்கள் மாறும்.வரட்சி நீங்கி முகம் பொலிவாகும். மூளை பலப்படும்.
    இத்தனை சிறப்பு நிறைந்த காரட் ஜுஸை தினமும் ஒரு கிளாஸ் அருந்தினாலே போதும். அதிகம் அருந்தினால் மூலத் தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு.

    திமுக அரசு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை-ஜப்பான் தூதர் அகிடகா சைக்கி!

    தமிழகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக பெருமளவில் நிதி பெற்ற திமுக அரசு ஆனால் எதையுமே செய்யவில்லை. இப்போதைய அதிமுக அரசாவது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என ஜப்பான் தூதர் அகிடகா சைக்கி பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

    முதல்வர் ஜெயலலிதாவை நேற்று அகிடகா சைக்கி சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் ஜப்பான் தூதரக ஆலோசகர் மசுகா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியத் தொழில் கூட்டமைப்பான சிஐஐ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சைக்கி பேசினார். அப்போது அவர் முந்தைய திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.

    அவர் பேசுகையில், முந்தைய திமுக அரசு சாலைகள் மற்றும் துறைமுகத்தை மேம்படுத்துவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இந்த விவகாரத்தை எடுத்துக் கூறினேன். அவர் இந்த விவகாரத்தை கவனிப்பதாக உறுதி அளித்தார். எனக்கும் இந்த விவகாரத்தில் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தை விரைந்து கவனிக்க வேண்டும். கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை எனில் ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வேறு மாநிலங்களை பார்க்க வேண்டியிருக்கும். ஜப்பானில் இருந்து வர்த்தகக் குழு ஒன்று செப்டம்பரில் இந்தியா வர உள்ளது. அந்தக் குழுவின் முக்கிய நகரங்கள் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.

    கற்பழிப்பை ஆயுதமாக பிரயோகிக்கிறார் கடாபி-ஹில்லாரி! -Clinton accuses Qaddafi of using rape as a tool

    பெண்கள் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை ஆயுதமாக பாவிக்கிறார்கள் லிபிய அதிபர் கடாபியின் ராணுவத்தினர் என்று குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,லிபியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குறிப்பாக பாலியல் வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது கவலை தருகிறது. தங்களுக்கு எதிராக பெண்கள் திரும்பி விடக் கூடாது என்பதற்காக கற்பழிப்பையும், பாலியல் வன்முறைகளையும் ஒரு போர் ஆயுதமாக கடாபியின் ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர்.மேலும் தங்களுக்கு எதிராக போராடும் பெண்கள் மீதும் பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

    கன்னித்தன்மை சோதனை என்ற பெயரில் பெண்களை அவர்கள் சித்திரவதை செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார்கள். பல்வேறு வகையான பாலியல் சித்திரவதைகளை அவர்கள் பெண்கள் மீது ஏவி விடுகிறார்கள்.
    தங்களுக்கு எதிராக போராடும் ஆண்களை வழிக்குக் கொண்டு வர அவர்களது வீட்டுப் பெண்களை பிடித்து வைத்து அவர்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கி வருகிறது ராணுவம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார் ஹில்லாரி.

    ராசி பலன் (17-6-2011 முதல் 23-6-2011 வரை)

    மேஷம்
    பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிறப்பாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். எண்ணங்கள் நிறைவேறும். வீடு மாற்ற உகந்த வாரம்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். தடைபட்டிருந்த சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும். உறவினர்களால் நன்மை அடையக்கூடும். கணவரை அனுசரித்து நடப்பீர்கள்.வேலை பார்ப்போருக்கு:அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை திறம்படச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

    ரிஷபம்

    பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். கணக்கு வழக்கில் கவனம் தேவை. சமூக சேவையில் நாட்டம் செல்லும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிலும் நிதானம் தேவை.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனம் மகிழும் நிகழ்ச்சி ஒன்று நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வேலை பளு அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவியால் அவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்த பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

    மிதுனம்

    பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா செல்லக்கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேரக்கூடும்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் எதிர்பார்த்த பலன் கிடைத்து மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் நன்றாக இருக்கும். வீண் பேச்சைக் குறைக்கவும்.

    கடகம்

    பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிப்பீர்கள். பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவுகளைக் குறைக்கவும்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். வீண் பேச்சைக் குறைக்கவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    பொது: அனுபவமிக்க வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். புதிய அங்கீகாரம் கிடைக்கும். யாரிடமும் தேவையில்லாமல் பேச வேண்டாம்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிலும் நிதானமாக இருக்கவும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன்தொகை கைக்கு வந்து சேரும்.

    கன்னி

    பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செல்லும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். குழந்தைகள் நலனுக்காக கடினமாக உழைப்பீர்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். திருமணம் போன்ற சுப நிகழச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள். பிறரிடம் பேசும்போது நிதானமாகப் பேசவும்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்படச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். தவறுகளை தக்க சமயத்தில் திருத்தி்க் கொள்வீர்கள்.

    துலாம்


    பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் பெருமுயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கனிவான பேச்சால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். பொருளாதாரம் மேம்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உறவினர் வருகையால் மனம் மகிழும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

    விருச்சிகம்


    பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு சீராக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரியோர் ஆசி கிடைக்கும். எந்த ஆவணத்திலும் அவசரப்பட்டு கையெழுத்திட வேண்டாம்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கணவரின் உடல் நலத்தில் கவனம் செல்லும். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

    தனுசு


    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். பூர்வீக சொத்துகள் கிடைக்கக்கூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைத்து, அதனால் ஆதாயம் அடைவீர்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தடைகள் அகலும். பொருளாதாரம் மேம்படும்.

    மகரம்


    பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாண்டி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். எதையும் நிதானமாகச் செய்யவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

    கும்பம்


    பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்கள் தாமதாக முடியும். எதிலும் நிதானம் தேவை. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கடன் தொல்லைகள் தீரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் அவர்களிடம் குடும்ப விஷயங்களைக் கூற வேண்டாம். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படக்கூடும்.

    மீனம்


    பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் முன்னேற்றகரமாக முடியும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதாரம் மேம்படும். வீண் செலவுகளைக் குறைக்கவும்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். சேமிப்பில் கவனம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளக்கூடும்.

    Indian origin woman in prostitution ring - விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இந்தியப் பெண் வக்கீல் அமெரிக்காவில் கைது!


    பணம் வாங்கிக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வக்கீல் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.அவரது பெயர் ரீமா பஜாஜ். 25 வயதாகும் இவர் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சைகமோர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். வக்கீலாக பணியாற்றி வருகிறார்.கடந்த ஆண்டுதான் இவர் வக்கீலாகப் பதிவு செய்து பணியாற்ற ஆரம்பித்தார். இவர் மீது டிகால்ப் கவுன்டி கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பணம் வாங்கிக் கொண்டு செக்ஸை விற்றதாகவும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    50 டாலர் பணம் வாங்கிக் கொண்டு தனது வக்கீல்அலுவலகத்திற்கு அருகே ஒரு ஆணுடன் இவர் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்தக் குற்றச்சாட்டு கூறுகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ரீமா பஜாஜ் மறுத்துள்ளார்.

    ndian American woman attorney from Sycamore in the state of Illinois has been charged with three counts of prostitution. Reema Bajaj, 25, who had received her law license last year, pleaded not guilty to the two misdemeanor and one felony counts, according to a report in the Chicago Tribune. Bajaj, who grew up in the western suburbs, pleaded not guilty in Dekalb County on June 9, according to her attorney, the Chicago Tribune reported.

    Bajaj is charged for allegedly performing a sex act with a man last month for USD 50, DeKalb County Assistant State's Attorney Julie Trevarthen said. Police also say they were investigating another case when they found evidence that linked Bajaj to a prostitution case in August 2010.This incident occurred 1,000 feet from a school, that elevates the crime from a misdemeanor to a felony, said DeKalb police Sgt. Bob Redel. Bajaj, a 2010 graduate of the Northern Illinois Universi

    குவியல் குவியலாக பணம், நகை! சாய்பாபா ரகசிய அறையில்!!

    புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன. பணம், நகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.

    கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.

    தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பகவான் சத்யசாய்பாபா வசித்து வந்த அறை திறக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினருமான பி.என். பகவதி, செயலாளர் சக்ரவர்த்தி, சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் யஜூர்வேத மந்திரினுள் சென்றனர்.

    அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

    பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக இருந்ததாம். வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

    அங்கிருந்த பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

    இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை! இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்!!

    விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின் போது, அதன் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போரின் போது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியது, கொத்துக் குண்டுகளை வீசியது உள்ளிட்ட போர் வீதிமீறல் நடந்துள்ளதாக பல்வேறு அமைப்புகள் கூறி வந்தன. இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள மனித உரிமை கழகம் கோரி வந்தது. இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றது உண்மை என ஐ நா சபை நடத்திய விசாரணையிலும் தெரிய வந்துள்ளது. 

    இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த இந்தியா முயற்சி எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதிதாக பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், இங்கிலாந்தின் தொலைக்காட்சி ஒன்றில், தமிழர்கள் கொலைச் செய்யப்படும் காட்சிகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. மனதை உறைய வைக்கும் இக்காட்சிகள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் தவைவர்கள் இலங்கை மீது கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளன. ஆகவே இதுகுறித்து இலங்கை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். இதை ஏற்காவிட்டால், இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் என்று இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறினார்.இதனிடையே, லண்டனில் உள்ள இலங்கை தூதரகம், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அது ஜோடிக்கப்பட்டவை எனவும் அது தெரிவித்துள்ளது.

    கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க விருப்பமில்லை என நீதிபதிகள் விலகல்!

    கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    இவர்கள் இருவரும் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.   அம்மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.   இம்மனு மீதான விசாரணை நடந்துக்கொண்டிருக்கின்றனது.

    இந்நிலையில் கனிமொழியையும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று எதிர்ப்பு தெரிவித்தது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஏ.கே. பட்நாயக் ஆகியோர் 2ஜி விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளனர்.

    தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டத்தில் சிங்கள ராணுவம் தாக்குதல் !


    இலங்கை அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென கூட்டத்திற்குள் நுழைந்த இலங்கை ராணுவ வீரர்கள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட 6 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தாக்குதலில் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சுதர்சன் என்ற இளைஞர் மயங்கி விழுந்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்களின் கார்களும் ராணுவ வீரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

    செய்தியாளர்களின் கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை போலீஸ் நிலையத்தில் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 



    Sri Lanka''s main Tamil party TNA today accused the military of storming its meeting and assaulting lawmakers and their supporters in the northern Jaffna peninsula.Troops carrying automatic weapons as well as sticks broke up the TNA meeting at Alaveddi in Jaffna on Thursday night, the party said, adding that an officer led the team of 30 soldiers carried out the attack.

    Several TNA members of parliament were beaten up by the troops who also attacked the police bodyguards assigned to the opposition law makers, the TNA said in a statement, adding that they have complained to the police.The party was holding the meeting to discuss the local government elections scheduled for July 23 when they were attacked by troops who accused them of being an unlawful assembly.

    "While the meeting was in progress some"While the meeting was in progress some army personnel entered the hall and gave orders to stop the meeting," the statement said.It said a TNA lawmaker, M. A. Sumanthiran walked upto an officer who seemed to be in the rank of a major and spoke to him and was told that the meeting could not proceed since they had no police permission.

    "While he was explaining that this was an internal party meeting that did not require any police permission and that in any case that was a matter between the police and us and not the military, several soldiers in full uniform, carrying automatic weapons and long poles in their hands, rushed into the hall and started assaulting the people," the party said.There was no immediate comment from the government, but military spokesman Ubaya Medawela said he had no information, but referred the query to the police.

    ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி...தமிழக அரசு

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,    ’’முதல் - அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், 5 திருமண திட்டங்களின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் திருமண நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இளம்பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தியும் மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு 6.6.2011 அன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது மற்றும் மாற்றுத் திறனாளிகளை மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொள்வது என நான்கு வகை திட்டங்களின் கீழ் திருமண நிதி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறன் படைத்த பயனாளிகளும் சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமணநிதி உதவி திட்டங்களால் பயனடைவது போன்றே பயன்பெற முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத் தரவிட்டுள்ளார்.

    இதன்படி 25 ஆயிரம் ரூபாய் திருமண நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவி தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் 15.6.2011 அன்று ஆணையிட்டுள்ளார்.

    இத்திட்டத்தினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.   முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மேற்காணும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த ஓய்வூதியத்தை இந்த மாதம் முதலே அனைவரும் பெறலாம் என்றும் அறிவித்தார்.   இதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணைய ரகத்தின் கீழ் செயல் படுத்தப்படும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், மனவளர்ச்சி குன்றியோருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆகிய 3 திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.  இந்த உத்தரவின் மூலம் 76,407 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் இத்திட்டம் செயல் படுத்தப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 46 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்’’ என்று  கூறப்பட்டுள்ளது.


    விடுதலைச் சிறுத்தைகள் கையெழுத்து இயக்கம். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்க?

    நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்க 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகிகள் ரவிக்குமார், ம.செ.சிந்தனைச்செல்வன், பெ.ஆற்றலரசு, வெ.கனியமுதன், புதுவை பாவாணன், வன்னிஅரசு உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், கட்சியின் இப்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டன.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்க உலகம் தழுவிய அளவில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கிற வகையில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் சுமார் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது. இனப்படுகொலைக் குற்றவாளியான ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர ஐ.நா.பேரவையை இக்குழு வலியுறுத்துகிறது. முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு பெருந்தன்மையோடு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தை ஜூலை 2-ம் தேதி கூட்டுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அல்கொய்தா புதிய தலைவரையும் வீழ்த்துவோம்: அமெரிக்கா...

    பின்லேடனை சுட்டுக் கொன்றதைப் போல அல்கொய்தாவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரியையும் சுட்டுக் கொல்வோம் என்று அமெரிக்கா சபதமிட்டுள்ளது. பின்லேடன் பாகிஸ்தானின் அபோட்டாபாதில் தங்கியிருந்தபோது அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அல் காய்தா இயக்கமும், அதன் தலைவரும் இன்னும் எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். நிச்சயமாக ஜவாஹரியையும் பின்லேடனைப் போல வீழ்த்துவோம் என அமெரிக்க ராணுவத் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் பென்டகனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    பின்லேடனுக்கு அடுத்து ஜவாஹிரி புதிய தலைவரானதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அது எதிர்பார்க்கப்பட்டதுதான் என முல்லன் கூறினார்.பாதுகாப்புத்துறைச் செயலர் கேட்ஸ், கடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறும்போது, தற்போதைய சூழ்நிலையில் அல் காய்தாவின் தலைவர் பதவியை ஏற்பதில் எவருக்காவது விருப்பம் இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.

    என் மகளுக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது : கலெக்டர் கண்டிப்பு...

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் தனது மகள் கோபிகாவை ஏழை பள்ளிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார்.   கலெக்டரின் இந்த நடவடிக்கையால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன் உள்ளனர்.  மேலும் முன் உதாரணமாக திகழ்ந்த கலெக்டருக்கு அடுத்தப்படியாக மற்ற அரசு அதிகாரிகளும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.  

    ஈரோடு குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருக்கும் தனது மகள் கோபிகாவை மற்ற குழந்தைகளை எப்படி கவனித்து படிக்க வைக்கிறீர்களோ... அப்படிதான் படிக்க வைக்க வேண்டும். வேறு எந்த சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்றும் கலெக்டர் ஆனந்தகுமார் பள்ளி நிர்வாகத்தினரிடம் கூறி உள்ளார். கலெக்டரின் குழந்தை குமலன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருப்பதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அதிகாரிகளின் பார்வையும் குமலன்குட்டை தொடக்கப்பள்ளியிலேயே பதிந்துள்ளது.

    நாம்தமிழர் கட்சி சார்பில் நாளை (18-ந்தேதி) மாலை சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம்!


    ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் நாளை (18-ந்தேதி) மாலை சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல்அமீது, கலைக்கோட்டுதயம், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, தடா சந்திரசேகர், கோட்டை குமார் அய்யநாதன், பால்நியூமன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இலவச அரிசியை விலைக்கு விற்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை!

    இலவச அரிசியை விலைக்கு விற்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உணவுத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உணவுத் துறை செயலாளர் யதீந்திரநாத் ஸ்வெய்ன், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் க.பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் வீரசண்முக மணி, குடிமைப் பொருள் வழங்கல் துறை கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது: உணவுப் பொருள் கடத்தல், பதுக்கல் போன்ற செயல்களைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் இணைந்து உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பணிகளைக் கண்காணிக்க வேண்டும். அவ்வப்போது வாகன சோதனை, குடோன்களில் சோதனை நடத்த வேண்டும்.உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பதுக்கும் கடத்தல்காரர்களையும் கள்ளச் சந்தையில் அவற்றை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இலவச அரிசியை வாங்கி சில கடைக்காரர்கள் வெளிச்சந்தையில் விற்பதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்ணெண்ணெய் மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன் கடைப் பொறுப்பாளர்கள், குடோனில் உள்ள பணியாளர்கள் மீதும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிய ரேஷன் அட்டைகள்: மாவட்டங்களில் உள்ள அரிசி மாவு அரைக்கும் பெரிய ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும். புதிய ரேஷன் அட்டைகளைக் கேட்கும் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உரிய முறையில் அவற்றின் மீது விசாரணை நடத்த வேண்டும். போலி ரேஷன் அட்டைகளைக் களையும்போது உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது.ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாநிலங்களின் எல்லைகளில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி.நுகர்வோர் உதவி மையம்: சேப்பாக்கம் எழிலகம் நான்காவது தளத்தில் உள்ள மாநில நுகர்வோர் உதவி மையத்தை (044-2859 2828) அமைச்சர் ஆய்வு செய்தார். ரேஷன் அட்டை தொடர்பான புகார்கள் உள்ளிட்ட நுகர்வோர் குறித்த அனைத்துப் புகார்களையும் தொலைபேசி வழியாகத் தெரிவிக்க வகை செய்யும் உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.இதன்பின், "நுகர்வோர் ஆலோசனை மையம்' உள்ளிட்ட துறையின் பல்வேறு பிரிவுகளையும் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.

    பணிபுரியும் கிராமங்களில் வசிக்காத வி.ஏ.ஓ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ...உயர் நீதிமன்றம்!

    பணிபுரியும் கிராமங்களிலேயே வசிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கபிலர் மலையைச் சேர்ந்த கே.எஸ். விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.மனு விவரம்: வி.ஏ.ஓ.க்கள் எந்த கிராமத்தில் பணிபுரிகிறார்களோ, அதே கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்று விதி உள்ளது. வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, ஜாதி சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ் விநியோகம், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ.க்கள் உள்ளனர். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்ய முடியும். ஆனால், மிகப் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் நகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் வசிக்கின்றனர். இதனால், மக்களுக்கான பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. எனவே, பணிபுரியும் கிராமங்களிலேயே வி.ஏ.ஓ.க்கள் வசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது. 

    இந்த மனு மீது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தது:வி.ஏ.ஓ.க்கள் பணிபுரியும் கிராமங்களில்தான் குடியிருக்க வேண்டும் என அவ்வப்போது அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 15-ம் தேதி கூட, தமிழக அரசின் வருவாய்த் துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வி.ஏ.ஓ.க்கள் பணிபுரியும் கிராமங்களில்தான் குடியிருக்க வேண்டும் என ஏற்கெனவே அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்போது இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனவே, தாங்கள் பணிபுரியும் கிராமங்களிலேயே வி.ஏ.ஓ.க்கள் குடியிருப்பதை உறுதி செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: வி.ஏ.ஓ.க்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களில் பலர் பணிபுரியும் கிராமங்களில் வசிப்பதில்லை. நகரங்களிலோ, மாவட்டத் தலைநகரங்களிலோ இருந்தபடியே தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். மாதத்தில் சில நாள்கள் மட்டுமே தாங்கள் பணிபுரியும் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். வி.ஏ.ஓ.க்கள் பணிபுரியும் கிராமங்களிலேயே வசிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    அப்படியிருந்தும், வி.ஏ.ஓ.க்கள் கிராமங்களில் வசிக்காதது ஏன்? அவ்வாறு கிராமங்களிலேயே வசிக்காத வி.ஏ.ஓ.க்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை? எனவே, வி.ஏ.ஓ. ஒருவர் தான் பணிபுரியும் கிராமத்தில் வசிக்கவில்லை என புகார் வந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அவர் பணிபுரியும் கிராமத்தில்தான் வசிக்கிறாரா என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியர்கள் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரை அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Top 10 Best Engineering Colleges in Tamil Nadu...


    Top Engineering Colleges in Tamil Nadu
    The strong infrastructural facilities and education policy by the Tamil Nadu government makes it the most preferred destination for the higher education. There is no dearth of colleges offering post graduate and undergraduate engineering programs in Tamil Nadu. The education system of this place is considered the best among all the other states and cities of India, thus, Tamil Nadu boasts of several top engineering colleges providing high-quality education to the students. Tamil Nadu, every year produces highest scores of engineering scholars all over India, thus attracting several software companies to establish their business in the Southern part of India.

    The criteria to get an admission into the top engineering colleges in Tamil Nadu are to qualify through JMET and GATE. The engineering colleges of Tamil Nadu offer various postgraduate and undergraduate engineering courses to the students by providing proper guidance as well as training to meet the industry standards. Also, there are various governments and privately owned engineering colleges in Tamil Nadu, which are mainly affiliated to the Anna University or Chennai University. Also, there are a few institutions accredited to certain regional universities. The top engineering colleges in Tamil Nadu, mainly focus on providing quality facilities, good infrastructure and innovative research to the scholars.

    1) College of Engineering
    Anna University, Guindy. Ph: +91-44-22351723
    The college of engineering under Anna University is recognized as an esteemed centre for coaching and training in the field of engineering. The centre is in close contact with many Indian industries and MNCs. Useful links: http://www.annauniv.edu/ceg

    2) Madras Institute of Technology
    Chromepet, Chennai. Ph: +91-44-22232403
    One of the leading centres in Tamil Nadu providing ambient conditions for the development of talented engineers, MIT helps to develop the sense of responsibility and humanity among them.

    3) Vellore Institute of Technology
    Vellore, Tamil nadu. Ph: + 91-416-2243091
    The institute imparts top quality education of global standards in well planned measures. VIT finds position in top list of centers giving 100% campus placements for several years.
    Useful links: http://www.vit.ac.in

    4) SRM College of Engineering
    Ramapuram, Chennai. Ph: +91-44-2249 2882
    The college is rated as one among the top in Tamil Nadu offering undergraduate and post graduate courses in engineering field. The placement cell in this college is much efficient in creating opportunities for students. Useful links: http://www.srmuniv.ac.in

    5) PSG College of Technology
    Coimbatore, Tamil Nadu. Ph: +91-0422-2572177
    This autonomous institution is affiliated to Anna University and is one of the best among south Indian colleges and in the top lists of excellent colleges handling information technology. The centre aims to create and deliver high end professionals and technologies through industrial attachment training and consultancy.
    Useful links: http://www.psgtech.edu

    6) St.Joseph College of Engineering
    Chennai, Tamil Nadu. Ph: +91-44-24501060
    The college is facilitated with most modern equipments and well trained faculties. Eminent lecturers from outside state and also from abroad use to take classes and are much beneficiary to students.
    Useful links: http://www.stjosephs.ac.in

    7) Crescent Engineering of Engineering
    Vandalur, Chennai. Ph: +91- 44 – 22751375
    Crescent college is dedicated to create high quality engineers and technicians for the country. It offers undergraduate and postgraduate courses in different branches of engineering.
    Useful links: www.crescentcollege.org

    8)Coimbatore Institute of Technology
    Coimbatore, Tamil Nadu. Ph: +91-422 -2574071
    CIT makes pioneers in engineering field with sound fundamental knowledge and innovative concepts. They imparts high quality teaching and dynamism among students to cope up changing technologies. Useful links: http://www.cit.edu.in

    9) Sri Sivasubhramaniya Nadar (SSN) College
    SSN Nagar, Tamil Nadu. Ph: +91-44-27474844
    This private institution is striving to create cutting edge technologies and ultimate professionals for the world. The training and placement cell functioning in this college is highly efficient in creating opportunities. Useful links: http://www.ssn.edu.in

    10) Amrita Institute of Technology and Science
    Coimbatore, Tamil Nadu. Ph: +91-422- 2656422
    The institution is counted as one among the top centers for engineering and technical studies. AITEC is in close collaboration with leading industries in India and abroad. The mode of education creates a sense of humanity and self motivation among students.

    ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களின் கவனத்திற்கு...

    நாட்டில் ஐயப்பனுக்கென பல கோயில்கள் இருந்தாலும், கேரளமாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை  ஐயப்பன் கோயில் மட்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த ஐயப்பனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே 11வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்களை  பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோயிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு  பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரிபார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை   இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில் அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே இந்த பெண்பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாது.  அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும் இவர்களை தனியாக விட்டு விட்டு ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண்பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.

    கிறிஸ் கெய்ல் எதிர்காலம்... ? Will Chris Gayle move away from Windies cricket?

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவரை மீண்டும் அணியில் சேர்ப்பது தொடர்பாக நடந்த சமரச பேச்சுவார்த்தை மோதலில் முடிந்தது. இதனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இவர் இடம் பெற வாய்ப்பு இல்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் (டபிள்யு.ஐ.பி.ஏ.,) வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கும்(டபிள்யு.ஐ.சி.பி.,) இடையே சம்பள ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதனால் வீரர்கள் ஒப்பந்தத்தில், அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் கையெழுத்திடவில்லை. ஒருவேளை தனது ஐ.பி.எல்., சம்பளத்துக்கு சமமான தொகையை, போர்டு கொடுத்தால் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று கெய்ல் தெரிவித்தார்.
     

    காரணம் என்ன? இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து கெய்ல் நீக்கப்பட்டு, டேரன் சமி நியமிக்கப்பட்டார். உலக கோப்பை தொடருக்குப் பின் கெய்லுக்கு காயம் இருப்பதாக கூறி, சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில், அணியில் சேர்க்காமல் புறக்கணித்தது. இதனால் வெறுப்படைந்த கெய்ல், ஒரு "ரேடியோ இன்டர்வியூவில்' கூறுகையில்,""அனைத்து சிக்கலுக்கும் பயிற்சியாளர் கிப்சன் தான் காரணம். சர்வான் உள்ளிட்ட வீரர்கள், நெருக்கடியுடன் தான் விளையாடுகின்றனர். பாகிஸ்தான் தொடருக்கான பயிற்சி முகாமில் வீரர்கள் அழைக்கப்பட்ட போது, எனக்கு கிரிக்கெட் போர்டு தரப்பில் இருந்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. "மீடியா' மூலம் தான் தெரிந்து கொண்டேன். இதனால் வேறுவழியில்லாமல் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க நேர்ந்தது,'' என்றார்.
    இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. இதனால் ஐ.பி.எல்., தொடரில் 2 சதங்கள் உட்பட 608 ரன்கள் எடுத்த போதும், இந்தியாவுக்கு எதிரான "டுவென்டி-20', ஒருநாள் போட்டித் தொடரில் கெய்ல் சேர்க்கப்பட வில்லை. இந்தியாவுடன், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்த போதும், அடுத்து வரும் டெஸ்ட் தொடரிலும், கெய்லை ஓரங்கட்ட, டபிள்யு.ஐ.சி.பி., முடிவு செய்தது.சமாதான முயற்சி: கெய்லை அணியில் சேர்க்க, டபிள்யு.ஐ.பி.ஏ., சார்பில் சமாதான முயற்சி நடந்தது. இதன் ஒருபகுதியாக கெய்ல், டபிள்யு.ஐ.பி.ஏ., தலைவர் ராம்நரைன், துணைத்தலைவர் வேவல் ஹிண்ட்ஸ், டபிள்யு.ஐ.சி.பி., தலைமை அதிகாரி எர்னஸ்ட், அணியின் பயிற்சியாளர் கிப்சன் உட்பட பலர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
     

    கடும் விவாதம்:இந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. போர்டு குறித்து தெரிவித்த கருத்துக்களை, கெய்ல் வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை ஏற்க முடியாது என, உறுதியாக தெரிவித்துள்ளார் கெய்ல். சுமார் நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தின் முடிவில், தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. மிகவும் வெறுப்படைந்த வீரர்கள் சங்கத்தின் தலைவர் ராம்நரைன், ஒரு கட்டத்தில் கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி எர்னஸ்ட்டை, அடிக்க பாய்ந்தாராம். பின் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    கெய்ல் இல்லை: இச்சம்பவம் குறித்து கெய்ல், கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் இந்தியாவுக்கு எதிராக வரும் ஜூன் 20 ல் துவங்கும் டெஸ்ட் தொடரில், கெய்ல் இடம் பெறமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
    தவிர, தொடர்ந்து எதிராகவே செயல்பட்டு வரும் கெய்லுக்கு, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க நிரந்தர தடைவிதிக்கும் முடிவையும் டபிள்யு.ஐ.சி.பி., எடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் கெய்லில் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கூட்டத்தில் நாற்காலி வீச்சு சமரச கூட்டத்தில் நாற்காலியை தூக்கி வீச முயற்சித்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் போர்டு உறுப்பினர்கள் கூறுகையில்,"வீரர்கள் சங்கத்தின் தலைவர் ராம்நரைன், தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை தூக்கி, தலைமை அதிகாரி எர்னஸ்டை அடிக்க பாய்ந்தார்,' என்கின்றனர். இதை மறுத்து வீரர்கள் சங்கத்தினர்,"கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்தது உண்மைதான். இதனால் கோபத்தில் தனது நாற்காலியை விட்டு, ராம்நரைன் எழுந்து சென்றுவிட்டார். மற்றபடி, அதிகாரியை அடிக்க பாய்ந்தார் என்ற செய்தியில் உண்மையில்லை,' என, தெரிவித்தனர்.
     

    எல்லாம் முடிந்து விட்டது  கெயல் பிரச்னை குறித்து டபிள்யு.ஐ.சி.பி., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" கெய்ல் தெரிவித்த கருத்து காரணமாக, கிரிக்கெட் போர்டு, நிர்வாகிகள், பயிற்சியாளர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கே அவமானம் ஏற்பட்டது. இதை வாபஸ் பெற்றால், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சேர்த்துக் கொள்ள தயாராக இருந்தோம். கெய்ல் மறுக்கவே, கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் கெய்ல் மீண்டும் விளையாடுவார் என்று இருந்த, சிறிய நம்பிக்கையும் தகர்ந்து விட்டது,'' என்றார்.

    ரிச்சர்ட்ஸ் கண்டனம் வீரர்கள் சங்கம் மற்றும் கிரிக்கெட் போர்டு பிரச்னை குறித்து முன்னாள் வீரர் ரிச்சர்ட்ஸ் கூறுகையில்,"" நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்னையால், பாதிக்கப்படுவது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தான். எதிர்கால நலன் கருதி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, இருதரப்பிலும் இருந்தும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முடிவு எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால், அனைவருக்கும் வீழ்ச்சி தான் கிடைக்கும்,'' என்றார்.


    Chris wаntѕ tο play cricket fοr thе West Indies. Hе wаntѕ tο play really tеrrіbƖу аnԁ thіѕ іѕ whу hе turned up fοr thе meeting. Bυt, whаt wаѕ ѕаіԁ аnԁ hοw іt wаѕ ѕаіԁ аt thе meeting hаѕ left hіm rаthеr frustrated аnԁ hе mау now look аt taking hіѕ game away frοm thе West Indies," thе newspaper quoted a source аѕ saying."Thіѕ іѕ a man whο hаѕ served West Indies cricket well іn thе past аnԁ hе wаѕ аƖѕο captain οf thе regional team. Bυt, hе wаѕ treated very tеrrіbƖу bу one individual аt thе meeting аnԁ thіѕ hаѕ left hіm іn a state," thе source added. Gayle wаѕ accompanied bу Executive President οf thе West Indies Players' Association Dinanath Ramnarine аnԁ WIPA Vice-President Wavell Hinds іn thе a near four-hour long meeting wіth thе WICB οn Saturday. "Chris wаѕ penalised (bу being dropped frοm thе West Indies team) previous tο hе wаѕ agreed a hearing. Thіѕ wаѕ реrfесtƖу unfair аnԁ wаѕ aired аt thе meeting.


    "AƖѕο one official whο represented thе WICB wаѕ very provocative towards Chris аnԁ wаѕ nοt even allowing hіm tο аnѕwеr qυеѕtіοnѕ posed tο hіm. Thіѕ wаѕ very unfortunate," thе source exposed.

    இருப்பதற்கே ஆளை காணோம் இதில் இன்னும் 11 புதிய கல்லூரிக்கு அனுமதியாம்! பணம் பண்ணும் படிப்பு ...

    தமிழகத்தில் இந்த ஆண்டு, 65 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்களுக்கு மேல், காலியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைப் போலவே, இன்ஜினியரிங் கல்லூரிகளும் மூடல் அபாயத்தை நோக்கி முன்னேறுகின்றன.

    மழைக்காலத்தில் முளைக்கும் காளான்கள் போல, தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. 2010-11ம் கல்வியாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும், 3,241 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் மட்டும், 486 கல்லூரிகள், கட்டடம் கட்டி, மாணவர்களுக்காக காத்திருக்கின்றன. அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த இன்ஜினியரிங் கல்லூரிகளில், 15 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. இருக்கிற கல்லூரிகளே, கட்டணம் கட்டுவதற்கு மாணவர்கள் இன்றி, ஈயோட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பெரிய தெரு பிள்ளையார் கோவில் பிரசாதம் மாதிரி, கேட்பவருக்கெல்லாம் புதிய கல்லூரி துவக்க அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்காக காத்திருக்கின்றன. இவற்றில், 18 புதிய கல்லூரிகளுக்கு, இந்த ஆண்டு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    இப்படி, தினம் ஒரு கல்லூரி உருவாவதால், அவற்றின் தரம் கேள்விக்குறியாகிவிடுகிறது. அதனால் தான், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் தரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வந்தது. அதில், தரம் குறைந்த பல்கலைகளாக, யு.ஜி.சி.,யால் அடையாளம் காட்டப்பட்டவற்றில், தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது. அவர்களின் கணிப்புப்படி, 16 பல்கலைகள், தரத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், வெறுமனே கல்லா கட்டிக்கொண்டிருந்தவை. தமிழகத்தில் இப்போது, இரண்டு லட்சம் இன்ஜினியரிங் சீட்கள் இருக்கின்றன. ஆனால், இன்ஜினியரிங் சேர்பவர்களின் ஐந்தாண்டு சராசரியோ, வெறும், 97 ஆயிரம் தான். தொடர்ந்து நான்காண்டுகளாக, சராசரியாக, 20 ஆயிரம் சீட்கள் காலியாகக் கிடக்கின்றன. இது, அரசு ஒதுக்கீட்டு சீட்களின் எண்ணிக்கை தான். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைச் சேர்த்தால், காலியிடங்களில் எண்ணிக்கை, 50 ஆயிரத்தைத் தாண்டும்.

    இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதற்குப் பிறகும், இந்த நிலைமை மாறாதது தான். இன்னும் சொல்லப்போனால், மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட பிறகு, காலியான சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. கடந்த, 2008-09ம் ஆண்டு, இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 931 பேர் சேர்ந்தனர். அதிர்ச்சி தரத்தக்க வகையில், 2009-10ம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 74 ஆகக் குறைந்தது. அந்த ஆண்டு மட்டும் மொத்தம், 52 ஆயிரத்து, 371 சீட்கள் காலியாக இருந்தன.

    கடந்த ஆண்டு, 2 லட்சத்து, 4,541 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு, 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், திக்கித் திணறி ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களைத் தான் விற்க முடிந்தது. கடந்த ஆண்டை விட, 34 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக விற்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, நிச்சயமாக இந்த ஆண்டு, 65 ஆயிரம் சீட்கள் காற்றாடும் என எதிர்பார்க்கலாம். இதே மாதிரி தான், புற்றீசல்கள் போல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. என்னமோ, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கெல்லாம், தங்கத் தாம்பாளத்தில் அரசு வேலை காத்திருப்பது போல, எஸ்.எஸ்.எல்.சி.,யிலும், பிளஸ் 2விலும் நல்ல நல்ல மதிப்பெண் பெற்றவரெல்லாம், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தனர்.

    பயிற்சிக் கல்லூரிக்கான எந்தக் கட்டமைப்பும் இல்லாமல், வெறுமனே நான்கு சுவர்களை மட்டும் கட்டி, பிழைப்பு நடத்தியவர்கள் எல்லாம் உண்டு. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, அங்கே, இங்கே நான்கு கம்ப்யூட்டர்களைக் கடன் வாங்கி, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஆசிரியர் வேஷம் போட்டு, அதிகாரிகளைக் கவனித்து, அனுமதியைத் தொடர்ந்தவர்கள் ஏராளம். அவற்றின் நிலைமை, தற்போது பல்லிளித்துவிட்டது. 26 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் உரிமத்தை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை ரத்து செய்துவிட்டது. 54 கல்லூரிகள், "போதுமடா சாமி' என, தாங்களாகவே இழுத்து மூடிவிட்டன.தரம் குறைந்த நிறுவனங்களை அரசு அதிகாரிகள் அனுமதிப்பதும், எந்த முன்யோசனையும் இல்லாத மாணவர்கள், ஏதேனும் ஒரு, "டுபாக்கூர்' கல்லூரியில் சேர்ந்து, எதிர்காலத்தைத் தொலைப்பதும் தான், இதற்கெல்லாம் காரணம். கிடுக்கிப்பிடியை இறுக்காவிட்டால், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் இதே கதி தான் ஏற்படும்

    எங்கே செல்லும் இந்த பாதை ... கள்ளகாதலால் குழந்தையை கொன்ற தாய் !

    தொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.இந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,"குழந்தை இறந்துவிட்டது' என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.

    விசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; "குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்...' என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.

    ஜோதிடம் மீது பழி போட்ட தாய்:பெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,"அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே' எனக் கூறி, அழுது புலம்பினார். ஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.
     

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...