|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 June, 2011

இதே நாள்


  • மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)

  •  நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)

  •  முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது(1860)

  •  தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)

  •  தென்னிந்திய இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம்(1928)

  • ஜட்டி-Tamil comedy short film (aduts only) - உண்மை கசக்கும்! ஆனால் உண்மை!


    The Untouchables ( ayyayyo ivungala ) - short film - வல்லவனுக்கு வல்லவன்!


    Tamil Short Film - விட்டு பிடி(Uttu Pudi) - சப்ப காதல்!


    Tamil Short Film - பூச்செடி(Poochedi) மறக்க பழகு !


    Bengaluru - Tamil short film


    மூட்டுவலிகளை குணப்படுத்தும் நொச்சி...

    சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இந்தியா முழுவதும் வளரும் தாவரமாகும். புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு

    காசநோய் புண்களை குணப்படுத்தும் இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

    மூட்டுவலிக்கு மருந்து முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

    குடல்பூச்சிகளுக்கு எதிரானது வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

    கல்லீரல் நோய்களுக்கு மருந்து மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
    கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

    மனதை மயக்கும் சிவப்பு...

    மனதை மயக்கும் சிவப்பு பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர்.

    காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்...! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

    ஆண்களை கவரும் பெண்கள் பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

    இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள் ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்...! கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

    முத்தம் சிந்தும் உதடுகள் அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது.

    உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர்.

    பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

    பந்தா இல்லாத ஆண்கள் சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே...! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

    பொறியியல் ரேங்க் பட்டியல் ஜுன் 24ல் வெளியீடு...


    பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஜுன் 24ம் தேதி வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு 1,25,000 இடங்கள் உள்ளன.இவற்றை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேங்க் பட்டியல் அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பார்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிட உள்ளது. உடனடியாக மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தாங்களது ரேங்குகளை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...