|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2012

சொந்த வீட்டில் கிழக்கு திசையில்!

சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். தன் ஊரில் கிழக்கேயும், வேற்று ஊரில் மேற்கேயும் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பது கிராமத்துப் பழமொழி. பொதுவாக இந்த நியதி சாஸ்திரங்களிலும் காணப்படுகிறது. ஆனால், தெற்கே தலை வைத்துப் படுப்பது, சில இடங்களில் காலங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. இது வீட்டுக்கு ஆகாது என்று சொல்வர். வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமுண்டு இதனால் வடக்கில் தலை வைத்து படுக்கும் போது, ரத்த ஓட்டம் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும் மூளை பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். திசை காட்டும் கருவியின் முள் வடக்கு நோக்கி திசை காட்டுவது, அந்த திசையின் காந்த சக்தியால் தான்.   தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.

திருப்பூர் தற்கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக

தமிழக அளவில், திருப்பூர் மாவட்டம், தற்கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக உள்ளது. அதேபோல், குடும்பங்கள் சீரழிவு காரணமாகவே 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2009ல் 871 பேரும்; 2010ல், 940 பேரும்; 2011ல், 859 பேரும், 2012ல், கடந்த அக்., வரை, 511 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தினமும் சராசரியாக மூன்று பேர் தற்கொலை செய்து கொள்வதும்; 60 பேர் வரை தற்கொலைக்கு முயற்சிப்பதும் சாதாரணமாக நடந்து வருகிறது. 

மேற்குவங்கத்தில் வறுமை காரணமாக ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.தமிழகத்தில், ஆண்டுக்கு 15 ஆயிரத்து 963 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், கடன் தொல்லையால் 2.2 சதவீதத்தினரும், போதைக்கு 2.4 சதவீதத்தினரும், காதல் தோல்வியில் 3.55 சதவீதம் பேரும், நோய் பிரச்னைக்காக 19.6 சதவீதம் பேரும், குடும்ப சண்டை காரணமாக 24.3 சதவீதத்தினரும் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலாசார சீரழிவு, சமுதாய கட்டமைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூரில், அதிர்ச்சி தரும் கொலைகள், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.பனியன் தொழில் வளர்ச்சி காரணமாக, உலக அளவில் தனி இடத்தை பெற்றுள்ள திருப்பூர், பல்வேறு மாவட்ட மற்றும் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் நகரமாக உள்ளது. படித்தவர், படிக்காதவர் என பாரபட்சம் இல்லாமல், வாழ்வாதாரத்தை தரும் திருப்பூரில், சமூக கட்டமைப்பு இல்லாதது, கலாசார சீரழிவு, பணிச்சுமை, மன உளைச்சல், போதைக்கு அடிமையாதல் என பல்வேறு காரணங்களால் வாழ்வை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.தேசிய குற்றப்பதிவேடுகள் துறையின் அறிக்கைப்படி, இந்திய அளவில் தற்கொலைகள் அதிகரிப்பில், மேற்குவங்கத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக 400 பேர் வரை காணாமல் போனதாகவும் போலீசில் புகார்கள் பதிவாகி வருகின்றன. மேலும், கள்ளத்தொடர்பு, காதல் தோல்வி காரணமாக கொலைகள் அதிகளவு நடக்கும் நகரமாகவும் உள்ளது.வாழ்வாதாரத்தை தேடி, திருப்பூரை நோக்கி வருபவர்கள், வாழ்வை இழக்க வேண்டிய காரணம் குறித்து ஆய்வு செய்தால், கலாசார சீரழிவு, சமூக கட்டுப்பாடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அணிவகுக்கின்றன.திருப்பூரில் பல்வேறு மாவட்ட, மாநில மக்கள் வசிப்பதால், பல்வேறு கலாசாரம், பழக்க வழக்கங்களும் கலந்துள்ளன.ஒவ்வொரு பகுதியில் இருந்து வந்த மக்களும், சமூக கட்டுப்பாடுகளை மறந்து, அதிக பணப்புழக்கம் பல்வேறு தீய வழிகளுக்கு கொண்டு செல்கிறது. சமூக கட்டுப்பாடு இல்லாத நிலை, கலாசார சீரழிவு, போதைக்கு அடிமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தற்கொலைகள், கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களுக்கு வழி வகுத்து வருவதாக ஆய்வில்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...