|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 May, 2011

தேர்தல் முடிவு ஓய்வல்ல... தண்டனை!

தேர்தல் தெளிவான முடிவைத் தந்துள்ளது. முதல் பெருமை தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தால், அடுத்த பெருமை தமிழக மக்களைச் சேர்ந்தது. ஆமாம், குழப்பமில்லாத தெளிவான முடிவு. ஜனநாயகத்தை மதிக்காமல் ஒரு குடும்பத்தினர் செய்த கொடுமையான தவறுகளுக்குச் சரியான தண்டனையைத் தந்துள்ளனர்.  

தொண்டர்களே இல்லாத தலைவர்களால் நிறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் பெற்றிருக்கும் கேவலமான தண்டனை தமிழினம் அறிவாற்றலில் சிறந்தது, உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறது.  பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைச் சிகிச்சைக்குக்கூட அனுமதிக்க மறுத்த கருணாநிதியோடு கூட்டணி வைத்துக் கொண்டதற்காக ஈழத்தமிழ் ஆதரவாளர்களாக இருந்த திருமாவளவனுக்கும் ராமதாஸýக்கும் தண்டனை அளித்திருக்கிறார்கள். 

தெளிந்த தீர்ப்பு.  மக்கள் தனக்கு ஓய்வளித்திருப்பதாகப் பெரியவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தம் மக்களைக் குறித்துத்தான் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்க முடியும். ஏனென்றால், தமிழக மக்கள் தந்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. அரச பரம்பரைபோல கருணாநிதியுடைய மொத்தக் குடும்பமும் அவரது கட்சியினரின் குடும்பங்களும் தமிழ்நாட்டில் நடத்திய அத்து மீறல்களுக்குத் தண்டனை.

சகோதரி குஷ்பு தமிழக மக்களுக்குத்தான் தோல்வி என்கிறார். இது நமது தலைவிதி. கருணாநிதிக்கு அடுத்து கருத்துச் சொல்லும் உரிமை திமுகவில் அவருக்குத்தான் இருக்கிறது. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா திஹார் சிறைச்சாலையில் இருப்பதால், அந்தப் பதவிக்குத் தாற்காலிகமாக நடிகை குஷ்புவை நியமித்திருக்கிறார்களோ என்னவோ. இவர்தான் தேசியத் தொலைக்காட்சிகளில் திமுகவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லை என்று வக்காலத்து வாங்குகிறார்.  தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர்களின் தன்மானம் பற்றியும், கற்பு பற்றிப் புதியதொரு வியாக்யானத்தை முன்மொழிந்த "தமிழச்சி' குஷ்பு பேசுவதை யார் ரசிக்கிறார்களோ இல்லையோ, தமிழினத் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் ரசிக்கிறார். 

வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது... இந்தியாவில் அல்ல, திமுகவில்...  இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியோ வாய்திறக்க மறுக்கிறார். அறிவான பலர்கூட இவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் முடிவு குறித்துக் குழம்பிப் போயிருந்தனர். என்னிடம் பலர் கேட்டனர். எப்படி நீங்கள் மட்டும் 200 இடங்களில் வெற்றி கிட்டும் என்று சொன்னீர்கள் என்று.  மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மக்கள் தமிழக மக்கள். அமைதியாகப் பதற்றம் காட்டாமல், பணம் வாங்கிக் கொள்ளாவிட்டால் சந்தேகப்படுவார்கள் என்று, கொடுத்த பணத்தையும் பல கிராமங்களில் வாங்கிக் கொண்டு, நமது பணத்தைத்தானே நமக்குத் தருகிறார்கள் என்று தெளிந்து, தேர்தல் ஆணையத்தின் நல உதவியோடு (வாக்காளர் அடையாளச் சீட்டோடு) ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.  தமது குடும்பத்தினரின் அத்து மீறல்களைஎல்லாம் நியாயப்படுத்த முயன்றார் கருணாநிதி. அதில் ஒழுக்கமாக உழைத்து முன்னேறிய எத்தனை பெரியவர்களைஎல்லாம் அசிங்கப் படுத்த முயன்றார்.


ஏவி.எம். செட்டியார் காரைக்குடியில் படப்பிடிப்புத் தளத்தைத் தொடங்கி பின்னர் சென்னைக்கு வந்து படிப்படியாக முன்னேறி இன்றும் அவரது பிள்ளைகள் அடக்கமாக இத்தனை பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற ஆணவம் இல்லாமல் "அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற குறளின் இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சூப்பர் ஸ்டார்களையும், சூப்பர் ஸ்டாரினிகளையும் தங்கள் விரலசைப்புக்கு ஆடவைத்த கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அகம்பாவத்தோடு, உழைப்பே உயர்வுதரும் என்று வாழ்ந்து காட்டும் ஏவி.எம். குடும்பத்தை உதாரணம் காட்டக் கருணாநிதிக்குத்தான் மனம் துணியும்.  தங்கள் உழைப்பால் முன்னேறிய பலரைத் தனது முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு எல்லை மீறிய தங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிக்கை தந்தாரே. அதைப் பார்த்த தமிழக மக்கள் ஓய்வல்ல, தண்டனை தந்துள்ளார்கள்.  

ஒரு தலித் வழக்கறிஞர் ராசாவை திகார் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டு தனது மகள் கனிமொழிக்காக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீதிமன்றத்துக்கே அனுப்பிவிட்டு வழக்கறிஞர் பெரியவர் ராம் ஜேட்மலானியைவிட்டு எல்லா ஊழல்களையும் ராசாதான் திட்டமிட்டுச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்திலேயே சொல்லவைத்து எப்படியேனும் கனிமொழியைக் காப்பாற்ற முயன்ற அசிங்கமான அநியாயத்துக்காகத் தலித்துகள் கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள். இன்னும் ராசா திமுக நாடாளுமன்ற உறுப்பினர்தானே?  ஒரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்திலேயே மகளுக்காகக் காட்டிக் கொடுத்த உங்கள் துரோகத்துக்காக உண்மையான திமுக உடன்பிறப்புகளும் சேர்ந்து கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள்.


உங்கள் இலவசங்கள் சிறு குழந்தைகளிடம் தோடு கம்மலைத் திருடுகிற திருடர்கள் அவர்களுக்கு வாங்கித் தருகிற மிட்டாய் போன்றது என்று மக்கள் புரிந்து கொண்டதன் தண்டனை இது.  பல இடங்களிலே தாங்கள் வழங்கிய இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் குப்பைக்கு வந்துவிட்டன என்பதைச் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்களுக்குக் காட்டிக்கொடுத்தன.  

இந்திரா காந்தியை மட்டும் மேடைதோறும் அவசர நிலைத் தவறுகளுக்கு அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்திலே மன்னிப்புக் கேட்டார் என்று தேர்தல் கூட்டங்களிலேகூட நல்ல மானமுள்ள காங்கிரஸ் நண்பர்கள் இளங்கோவன் போன்றோரை வைத்துக்கொண்டு சொன்னீர்களே. அப்போதாவது இந்திரா காந்தியே மன்னிப்புக் கேட்டுள்ளாரே, நமது குடும்பத்தினர் செய்த தவறுகளுக்கு நாமும் மன்னிப்பு கேட்போம் என்று தங்களுக்குத் தோன்றவே இல்லையே, ஏன்?  நேரு குடும்பத்திடம் காணப்படும் அந்தப் பெருந்தன்மை எல்லாம் திருக்குவளையிலிருந்து திருட்டுத்தனமாகச் சென்னை வந்து இன்று ஆசியக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு வருமா என்ன?  

கனிமொழி ஒரு பெண் என்கிறார் அவரது வழக்குரைஞர் ராம் ஜேட்மலானி. இப்போது தனது மகளுக்காக வாய்தா வாங்குவதிலும் ஜாமீன் வாங்குவதிலும் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறார் பெரியவர் கருணாநிதி. ஜெயலலிதா நீதிமன்ற விதிமுறைகள்படி வழக்கில் வாய்தா வாங்குவதைக் கண்டித்து நாடு பூராவும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை என்று உணரவில்லை. இன்று அதே நீதிமன்றத்தில் கனிமொழி பெண் என்கிறீர்கள்.  நீதிமன்றத்திலே ராசாத்தி அம்மாள் காலில் தலித் இளைஞர் ராசா விழுந்து வணங்குகின்றாரே, அதுவும் ஒரு வழக்கறிஞர் ஏன்? ஜெயலலிதா காலில் கழகத் தோழர்கள் விழுந்தால் மேடைக்கு மேடை அவரைக் கேலி செய்வீர்களே. ராசா ஏன் ராசாத்தி அம்மையார் கால்களிலே விழுந்தார்? அவருக்கு ராசாத்தி அம்மாள் என்ன உறவு?

ஓர் அமைச்சர் அல்லது கட்சிக்காரர் முதல்வரின் காலில் அல்லது கட்சித் தலைவரின் காலில் விழுந்து ஆசிபெறுவது தமிழனின் தன்மானத்துக்கு இழுக்கு என்று வாய் கிழியப் பேசியவர்கள் "இப்போது தனது துணைவியின் காலில் முன்னாள் அமைச்சர் விழும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறாரே, ஏன்?


கடைசியாக ஒன்று, நீங்கள் யாரையும் ஏசியது இல்லை என்கிறீர்கள். அரசியல் நாகரிகம் பற்றி உபந்நியாசம் செய்கிறீர்கள். மதுரை மாநகராட்சித் தேர்தல். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சொன்னார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மக்கள் பணிகளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். 

அதற்கு நீங்கள் மேலமாசி வீதிப் பொதுக்கூட்டத்தில் சொன்ன பதில் அரசியல் அநாகரிகத்தின் உச்சம். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் நீங்கள் நெடுமாறன் அண்ணாச்சிக்கு அரசியல் நாகரிகம் பற்றி எழுதுகிறீர்கள்.  அந்த மாநகராட்சித் தேர்தலிலே பணியாற்றிக் கொண்டிருந்த நாங்கள் மேலமாசி வீதியில் தாங்கள் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றைக் கேட்டோம். நான் கேட்ட உங்களின் ஒரே பொதுக்கூட்டம் அதுதான். 

அதில் சொன்னீர்கள் எம்.ஜி.ஆர். முதல்வராக இருப்பாராம் நான் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமாம்.  அடுத்துச் சொன்னீர்களே அதுதான் பண்பாட்டின் உச்சம். அவர் கல்யாணம் செய்வாராம். நான்... என்று இடைவெளி விட்டீர்களே. அந்தத் தரக்குறைவான கருணாநிதியை மக்கள் மறந்துவிடவில்லை.  மக்கள் உங்களுக்கு அளித்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. உங்களது அநாகரிக அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கிடைத்திருக்கும் தண்டனை இது!

பிளே ஆப் சுற்று முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியும்

ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் சுற்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்த பிளே ஆப் சுற்று முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்றன.  ÷இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி அடுத்த போட்டியில் (கொல்கத்தா அல்லது மும்பை) வெற்றி பெற்றால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும். முன்னதாக இந்த இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின.  இதில் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இப்போது பிளே ஆப் சுற்றில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன.

இதுவரை நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில், இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 4ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன

இதே நாள்


  • எரித்திரியா விடுதலை தினம்(1993)

  •  அமெரிக்க அரசி விக்டோரியா மகாராணி பிறந்த தினம்(1819)

  •  வானியலாளர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் இறந்த தினம்(1543)

  •  விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது(2006)

  •  முதல் மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டனில் இருந்து மேரிலாந்திற்கு அனுப்பப்பட்டது(1844)

  • இதே நாள்




  • சிஸ்கோ தேர்வு எழுதி நெல்லை சிறுமி சாதனை !

    இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.


    மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

    தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

    ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட 'டிராமா'-தயாநிதி மாறன்

    `drama'
    ess than a month before he was accepted back in the DMK fold in 2008, DMK M.P. Dayanidhi Maran reportedly told an officer of the U.S. Consulate General in Chennai that then Chief Minister M. Karunanidhi's resignation threat on the Sri Lankan Tamil issue was a "drama," meant to distract attention from Tamil Nadu's power crisis and the resultant popular anger, and, further, that his attempt at `blackmail' had alienated Congress president Sonia Gandhi.

    A cable sent to the State Department under the name of Consul General Andrew T. Simkin, and accessed by The Hindu through WikiLeaks (176372: unclassified, dated November 3, 2008), reported Mr. Maran's candid observations along with Congress leader Peter Alphonse's assessment of what the DMK would do in the prevailing uncertain situation.

    According to the cable, Mr. Maran, who had been "stripped of his position as Union Minister for Information Technology and Telecommunications by his grand-uncle Karunanidhi in 2007, agreed that the Chief Minister's resignation threat was an idle one. Maran called it a `drama' staged by Karunanidhi, noting that he too tendered his resignation despite his estrangement from the Chief Minister. Maran said that Karunanidhi's main objective was to distract attention from the state's recent power outages, which have increased anger against the incumbent government to an all-time high."

    Mr. Maran, the consulate cable reported, "claimed Karunanidhi's attempt at `blackmail' has alienated the Congress high command, especially Sonia Gandhi. According to Maran, who despite having an axe to grind with Karunanidhi remains publicly loyal to the Chief Minister, Congress `will carry this grudge and retaliate at the right time.' As evidence of the hurt feelings, Maran alleged that Sonia Gandhi recently refused to meet with Karunanidhi's daughter Kanimozhi, who is a DMK Member of Parliament. Maran also said that a faction of the Congress Party leadership, including Rahul Gandhi, wishes to see Tamil Tiger chief Prabhakaran dead in retaliation for killing Rajiv Gandhi, which drives a wedge between Congress and the DMK over Sri Lanka."

    The cable set out the intriguing context in which these assessments were provided by the estranged DMK MP, who is currently Union Minister for Textiles, and the Congress leader, who was defeated in the recent State Assembly election by an AIADMK candidate. Tamil Nadu Members of Parliament had agreed at an `all-party meeting' on October 14, 2008 chaired by Mr. Karunanidhi "to resign en masse if the Government of India failed to force a ceasefire in Sri Lanka by October 28." However, two days before the deadline, the DMK Chief Minister backed down following a visit from External Affairs Minister Pranab Mukherjee. The visit, "coupled with several other actions by the central government - including summoning the Sri Lankan High Commissioner, engaging with Sri Lanka's Special Envoy, and agreeing to send humanitarian assistance to Sri Lanka's Tamils - appear[ed] to have mollified Karunanidhi," who agreed to defer the decision. The cable added that the DMK Chief Minister, who acknowledged that "this issue has been going on for 40 years" and "we cannot expect it to be resolved in four days," announced a day later "that the DMK had no difference of opinion with the Union Government on the Sri Lanka issue."

    Mr. Alphonse's take on what was happening, according to the Chennai consulate cable, was that "Karunanidhi would never have pulled the MPs from the UPA." He just "wanted to show-up his political opponents who expected the all-party meeting to be a routine one issuing a typical, toothless hortatory resolution." The Congress leader's view was that "the DMK has no option but to stick with the UPA and the Congress."

    Mr. Alphonse, however, conceded that "the resignation threat has put stress on an otherwise strong relationship between the DMK and Congress" because "at the local level.the Tamil Nadu Congress was irritated that Karunanidhi appeared to be slipping back into his past tendency to be `soft' on the terrorist Tamil Tigers and the small Tamil Nadu political parties that support them."

    Helped no doubt by these realpolitik assessments, the Chennai consulate sent the State Department an overall comment that proved to be accurate: "Karunanidhi's DMK and Congress are bound together by mutual self-interest. Karunanidhi needs Congress to remain Chief Minister of Tamil Nadu and Congress relies on the DMK to keep the UPA in power in New Delhi. As a result, it is no surprise that the political drama Karunanidhi generated quietly concluded with no resignations after the Indian government took sufficient steps to give him enough political cover to save face- .Support for the Sri Lankan Tamils has not become a burning issue with the public in Tamil Nadu.The legacy of revulsion over Rajiv Gandhi's assassination continues to loom large over Tamil Nadu."

    2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மாறனுடன், அமெரிக்க அதிகாரிகள் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிம்கின்.

    இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

    மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

    ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அது உறுதி.

    பிரபாகரனைக் கொல்லத் துடித்த ராகுல் காந்தி கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

    ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

    திமுக தோற்கும்-தயாநிதி மாறன் அதேபோல திமுக மீது ஊழல் கறை படிந்து விட்டது. இதை அகற்றாவிட்டால் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் அப்போது கூறியுள்ளார் தயாநிதி மாறன்.இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வியை அன்றே கணித்துள்ளார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்.கைவிட்டால் திமுகவுக்கு வழியில்லை-பீட்டர் பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

    காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

    ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

    'திமுக, காங்கிரஸின் சுய நல உறவு'இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது. 
     
    கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

    தமிழ் எழுத்தாளருக்கு தேசிய விருது!

    மத்திய அரசின் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகையருக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. திரைப்பட விருதுகளோடு ஒவ்வொரு ஆண்டும் சினிமா பற்றிய சிறந்த நூலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விருது கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ஜீவானந்தனுக்கு கிடைத்துள்ளது.

    பிரபல ஓவியர் ஜீவானந்தன். இவர் புகழ்பெற்ற சினிமா விமர்சகரும் ஆவார். பல்வேறு பத்திரிகைகளில் உலக சினிமாக்கள் குறித்து எழுதி வந்தார். சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘திரைச்சீலை’ எனும் நூலை வெளியிட்டது. இது ஓவியர் ஜீவானந்தனின் முதல் நூலாகும். இந்த நூல் 58வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றுள்ளது.

    கடைசியாக இந்த விருது 1982-ம் ஆண்டு அறந்தை நாராயணன் எழுதிய ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலுக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கழித்து இந்த விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்தது


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...