ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
20 June, 2013
அம்மாடி! 2012 ல் குழந்தைகளுக்கு எதிராக 38,000 குற்றம். 8541 கற்பழிப்புகள்?.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, சென்ற வருடம்
மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 38000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாம்.
அதிலும், 8541 கற்பழிப்பு குற்றங்களாம்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு
2012ஆம் ஆண்டுக்கான குற்றப்பதிவு பட்டியலை வெளியிட்டது.
அக்குற்றப்பதிவு பட்டியல் மூலம், ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் குழந்தைகள்
மீதான வன்முரை பெருகி வருவது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக
சிறுமிகள் கற்பழிப்பு விகிதம் கூடிக்கொண்டே வருவது உறுதியாகியுள்ளது.இந்தியாவில், 2007ம் ஆண்டு கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை
5045லிருந்து, 2008ல் 5446 ஆக உயர்ந்து 2009ல் 5336 ஆக குறைந்தது. பின்
மீண்டும், 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக எகிறி, கடந்த ஆண்டில்
8541 ஆகி அதிர்ச்சியைத் தந்துள்ளது.ஒரே ஒரு ஆண்டைத் தவிர தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மத்திய பிரதேச
மாநிலம் தான் குழந்தைகள் வன்முறையில் முதலிடத்தில் உள்ளதாம். மத்திய
பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும்,
2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262
சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும்
கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டு இறுதி கணக்குப்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், வரதட்சிணைக் கொடுமை என 2 லட்சத்து 44,270
குற்றங்கள் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) நிகழ்ந்துள்ளனவாம். குறிப்பாக
தமிழகத்தில் மட்டும் 7,192 குற்றங்கள்.இந்தியா முழுவதும் 34,434 கொலைகளும், தமிழகத்தில் 1,949 கொலைகளும்
நிகழ்ந்துள்ளன. உத்தரப் பிரதேசம் - 4,966, பிகார் 3,566, மகாராஷ்டிரம் -
2,712, மத்தியப் பிரதேசம் - 2,373, மேற்கு வங்கம் -2,252, கர்நாடகம் -
1860, குஜராத்தில் 1,126 கொலைகள் நிகழ்ந்துள்ளன.போலீஸாருக்கு எதிராக இந்தியா முழுவதும் 57,363 புகார்கள்
அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 378 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,412 புகார்கள்
அளிக்கப்பட்டுள்ளன.இந்தியா முழுவதும் ரூ.21,071.94 கோடி மதிப்புக்கு சொத்து திருட்டு
பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.1,417.93 கோடிக்கு பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 6.7 சதவீதம் மட்டுமே ஆகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ரூ.137.44 கோடி வரை சொத்து திருட்டு பிரிவின் கீழ்
வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.82.58 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு,
மொத்தத்தில் 60.1 சதவீதம் காட்டப்பட்டுள்ளது.மொத்தத்தில், இந்தியா முழுவதும் 2012ஆம் ஆண்டில் 60 லட்சத்து 41,559
வழக்குகள் பல்வேறு புகார்களின் அடிப்படையில் போலீஸாரால் பதிவு
செய்யப்பட்டுள்ளதாம். அதில், தமிழகத்தில் மட்டும் 7 லட்சத்து 49, 538
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட
தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
சுற்றுச்சூழலை மாசு படுத்துவோருக்கு மரண தண்டனை!
அதிகமாக மாசு ஏற்படுத்தி சுற்றுச்சூழலை மாசு படுத்துவோருக்கு மரண தண்டனை
வழங்கலாம் என புதிய அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ளது சீன அரசு.
ஏற்கனவே, அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசு அடைந்த நாடாக சீனா உள்ளது.
அதிலும், உலகிலேயே சுற்றுசூழலில் அதிக மாசு படிந்த நகரங்களாக பீஜிங்,
ஷங்காய் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் மாசினால் சீனர்களுக்கு இளவயதிலேயே மரணம் நேரிடுவது
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரச் சீர்கேட்டினால், ஏராளமான
சீன மக்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகிறார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்களின் ஆரோக்கியத்தை குறித்து அரசாங்கம் கவலைப் படுவதில்லை என்ற
குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில், அதிக மாசு
ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளை இயக்கும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண
தண்டனை அளிக்கும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கி நேற்று சீன அரசு
உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் மாசு
ஏற்படுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் சில முக்கிய மோசமான
நிகழ்வுகளுக்கு மரண தண்டனை வழங்கவும் இந்த புதிய அதிகாரம் வழிவகை செய்யும்
இன்று உலக அகதிகள் தினம்
இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகின்ற நேரத்தில், சமீபத்தில்
ஐ.நா உலக அகதிகள் குறித்த அறிக்கை திடுக்கிடும் தகவல் ஒன்றை
வெளியிட்டுள்ளது. அதில், சென்ற வருடம் மட்டும் 76 லட்சம் மக்கள் அகதிகள்
ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம், சமீபத்தில் அகதிகள்
தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகின் பல நாடுகளில் நடைபெறும்
போரினால் நிறைய மக்கள் அகதிகளானது தெரிய வந்துள்ளது.76 லட்சம் அகதிகள்...
அறிக்கையில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 76 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை
நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனராம். அதிலும், 1994-ம் ஆண்டுக்கு பிறகு அதிக
எண்ணிக்கையிலான மக்கள் அகதிகளாக இருப்பது சென்ற ஆண்டில் தானாம்.76 லட்ச அகதிகளில், 55 சதவீத அகதிகள் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக்,
சூடான் மற்றும் சிரியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.அகதிகள் விஷயத்தில் இரண்டாவது இடத்தில் சோமாலியாவும், மூன்றாவதாக ஈராக்கும் உள்ளது. இது ஐ.நா.அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
ஆத்தாடி 21 வயது 4 பிரசவம் 11 குழந்தைகள்!
பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை சேர்ந்த 25 வயது ரவுக்
அல்ப்பதாஸ்க்கு, 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது அவரது
மனைவிக்கு வயது 14. தற்போது 21 வயதாகும், அப்பெண்ணுக்கு, திருமணமான இந்த 7
ஆண்டில், 11 குழந்தைகளை பிறந்துள்ளதாம்.இதுவரை, மொத்தம் 4 முறை மட்டுமே, கருத்தரித்துள்ள அவருக்கு, 1 தடவை 4
குழந்தைகள், இன்னொரு தடவை 3 குழந்தைகள், பின்னர் அடுத்தடுத்து 2 இரட்டை
குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் 21 வயதிலேயே 11 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் என்ற சிறப்பைப்
பெற்றுள்ளார் அப்பெண். மேலும், ரவுக் அல்ப்பதாஸ் ஓர் அரசு ஊழியர். ஆதலால்,
குழந்தைகளை வளர்ப்பதற்கு அரசு உதவி தொகை வழங்கி வருகிறதாம்.
பவருக்கு பதில் சகலகலா டெரர் ஸ்டார்!
பவர் ஸ்டார் ஆஃபிசியலாக டெல்லி வரை போயிருக்கிறார் அல்லவா...
(கோடம்பாக்கத்தில் இப்போது அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள்!).
இதனால் பவர் ஸ்டார் ஒப்பந்தமாகியிருந்த ஏகப்பட்ட படங்களில் அவருடைய
போர்ஷனில் யாரை நடிக்க வைப்பது... அல்லது பவர் சிறைவாசம் முடிந்து வரும்வரை
காத்திருப்பதா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்
தயாரிப்பாளர்கள்.
இவர்களில் ராம நாராயணனும் ஒருவர். பவரை ஹீரோவாக வைத்து ஆர்யா சூர்யா என்ற
படத்தை எடுத்துவருகிறார். பவரை வைத்து ஏகப்பட்ட காட்சிகளை ஷூட்
பண்ணிவிட்டார். இப்போது கடைசி கட்டத்தில் பவர் ஸ்டார் இல்லை.
இப்போது இதற்கும் ஒரு அப்பாடக்கர் ஐடியா வைத்திருக்கிறார் ராம நாராயணன்.
பவர் ஸ்டார் பகுதிகளை எடுத்தவரைக்கும் அப்படியே வைத்துக் கொண்டு, மீதிக்
காட்சிகளுக்கு, பத்து பவர் ஸ்டார்களை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு
அல்லாடிக் கொண்டிருக்கும் டி ராஜேந்தரை பயன்படுத்திக் கொள்ள முடிவு
செய்துள்ளாராம்.
டிவி சீரியல்களில் ஒத்து வராத நடிகரை சாகடித்துவிட்டு அல்லது அவருக்கு
பதில் இவர் நடிப்பார் என்று டைட்டில் கார்டு போடுவது போல போட்டுவிட்டு,
டிஆரை நடிக்க வைக்கப் போகிறாராம்.
Subscribe to:
Posts (Atom)