|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2011

"உயிர்ச்சொல்"


பொதுவாகத் திரைப்படங்களில்தான் பாடல்கள் இடம்பெறும். முதல்முறையாக ஒரு நாவல் வெளியாகும் முன் அந்த நாவலின் கருவை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து எழுதி வெளிவரவிருக்கும் "உயிர்ச்சொல்" என்ற நாவலுக்காக இந்தப் பாடல் உருவாகியிருக்கிறது. நாவல் ஆசிரியர் கபிலனே பாடலையும் எழுதியிருக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று புகழ் என்.ஆர்.ரஹ்னந்தன் இசை அமைத்திருக்கிறார். ஹரிணி இதற்கு குரல் கொடுத்திருக்கிறார். "ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே" எனத் தொடங்கும் இந்தப்பாடல் இதமான பாடலாக அமைந்திருப்பதாக தயாரிப்பாளர்- மன்னிக்க வேண்டும்- பதிப்பாளர் வட்டம் தெரிவிக்கிறது. நாவலின் தலைப்பை பார்த்தால் முழு முதற் காதல் கதையாக இருக்குமோ என்று தோன்றியது. கபிலனிடம் விசாரித்தோம். "நீண்ட நாளா குழந்தைக்கு ஏங்கிக்கிட்டு இருக்கிற ஒரு பெண்ணின் கனவு- குழந்தை பிறந்ததும் அந்த பெண்ணுக்கு ஏற்படற மன அழுத்தம்- அந்த அழுத்தத்துக்கு மருந்தாகும் கணவனின் காதல்- பின்னணில தமிழக அரசியலில் சில புதிய பரிசோதனைகள்- இதுதான் "உயிர்ச்சொல்" என்று நான்கு வரியில் கதை சொல்லிவிட்டார்.

”நீங்க சொன்ன எல்லாமே இந்த ஒரு பாட்டுக்குள்ளா இருக்கா?" என்று கேட்டதற்கு "இருக்கு" என்று யோசிக்காமல் சொல்கிறார். "தனக்கு பிறக்கப் போற குழந்தையப் பற்றிய ஒரு தாயின் கனவு- தன் பூமிலமாற்றத்த ஏற்படுத்த விரும்பற இளைஞர்கள பற்றிய தமிழ்த்தாயின் பூரிப்பு- தன் காதலனை நினைக்கும்போது ஒரு பெண்ணுக்குள் ஏற்படற பரவசம்- இந்த மூன்று உணர்வுகள் ஒருங்கிணையற மாதிரி இந்தப் பாடல உருவாக்கியிருக்கோம். ரஹ்னந்தன்- ஹரிணி இவங்க இரண்டு பேரோட அனுபவங்கள் இல்லனா இந்த முயற்சிய தொடங்கியிருக்கவே முடியாது" என்று நெகிழ்கிறார்.

நாவல் பாடலை www.uyirsol.com  என்ற இணைய முகவரியில் பெறலாம்.

ஐந்து கவிதைத் தொகுதிகள், ஒரு சிறுகதைத் தொகுதி, ஆஸ்திரேலிய பழங்குடியினரை அடிப்படையாகக் கொண்ட பூமரேங் பூமி என்ற நாவல் ஆகிய புத்தகங்களுக்குப் பிறகு கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இரண்டாம் நாவல் இது. இந்தப் புத்தகத்தை நவம்பர் மாத இறுதியில் கிழக்குப் பதிப்பகம் வெளியிடுகிறது.

பரிதியைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகம் தயார்!

திமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மேலும் வலுவடையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. பரிதி இளம்வழுதியைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் கட்சியில் புதிய புயலைக் கிளப்பத் தயாராவதாக கூறப்படுகிறது. பரிதி இளம்வழுதியைப் போன்ற கட்சி விசுவாசிகளுக்கு, தீவிர உழைப்பாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கட்சித் தலைவர் கருணாநிதியிடம், வீரபாண்டி ஆறுமுகம் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக முன்னணித் தளபதிகளில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் ஆரம்பத்திலிருந்தே கருணாநிதி கோஷ்டியில்தான் நீடித்து வருகிறார். அழகிரி பக்கமோ, ஸ்டாலின் பக்கமோ இவர் சாய்ந்தது இல்லை. இருப்பினும் சமீபத்தில் அழகிரியா, ஸ்டாலினா என்ற மல்யுத்தம் திமுகவில் தொடங்கியபோது அழகிரி பக்கம் இவர் சாய்ந்தார். தொடர்ந்து அதே பக்கத்திலேயே இருந்து வருகிறார். இதனால் ஸ்டாலின் தரப்பு சற்றே அப்செட்டாகியுள்ளது. இந்த நிலையில் பரிதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார் வீரபாண்டியார். இது திமுக உட்கட்சிப் பூசலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வலுப்படுத்துவது போல சேலத்தில் நடந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வீரபாண்டியாரின் பேச்சு அமைந்துள்ளது.

அக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடித்து கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் நீக்கப்படுவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியுள்ளார். தேர்தலில் திமுக வேட்பாளர்களை அதாவது தனது ஆதரவாளர்களைத் தோற்கடித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்குச் சொல்லாமல் சொல்லியுள்ளார் வீரபாண்டியார் எனக் கருதப்படுகிறது. ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரளயத்தை ஏற்படுத்த வீரபாண்டியார் தயங்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சென்னை வந்த வீரபாண்டியார் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசியுள்ளார். அப்போது ஸ்டாலின் ஆதரவாளரான திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட சேலம் மாவட்ட நிர்வாகிகள் மீது புகார்ப் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

தனது பேச்சை ராஜேந்திரன் மதிப்பதில்லை என்றும், ஏதாவது கேட்டால் ஸ்டாலின் சொன்னதால் செய்கிறேன் என்று கூறி விடுவதாகவும் கூறினாராம் வீரபாண்டியார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.  மேலும் தனது சந்திப்பின்போது பரிதிக்கு ஆதரவாகவும் பேசி விட்டு வந்துள்ளார் வீரபாண்டியார். கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கத்தான் பரிதி கூறினார்.இதில் தவறு என்ன உள்ளது. கட்சிக்கு விசுவாசமான பரிதியைப் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றும் அவர் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.

Bodhidharma Cave


போலி பட்டா தயாரித்து ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி!


உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பாண்டிய ராஜன். இவரது மனைவி தங்கம் (வயது 45). இவருக்கு சொந்தமாக சென்னை போட்கிளப் பகுதியில் 23 கிரவுண்டு இடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த இடத்தை ஓய்வு பெற்ற சார்பதிவாளர் அப்துல் காதர், நவநீதகிருஷ்ணன், ராமவெங்கட்நாராயணன் ஆகியோர் போலி பட்டா தயாரித்து அபகரிக்க முயன்றனர். 3 பேரும் போலியாக பட்டா தயாரித்து இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கோர்ட்டில் உத்தரவு பெற்றனர். இந்த உத்தரவின் நகல் கோர்ட்டில் இருந்து தங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நகலைப் பார்த்ததும் தங்கம் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதை அறிந்து கொண்டார். இது தொடர்பாக அவர் சென்னை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தார். அபிராமபுரம் போலீசிலும் புகார் செய்தார். போலி பட்டா வழக்கில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். இதை ஏற்று போலீசார் போலி பட்டா தயாரித்து ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஓய்வு பெற்ற சார்பதிவாளர் அப்துல்காதர், நவநீதகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். ராமவெங்கட் நாராயணனை தேடி வருகிறார்கள்.

9 மாதங்களாக ஜாமீன் கேட்காமல் இருக்கும் ஆ.ராசா!

 2ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த 9 மாதங்களில் இதுவரை ஒருமுறைகூட ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இதர நபர்கள் அனைவரும் ஜாமீன் கோரி நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். தொழில்ரீதியாக வழக்கறிஞரான ஆ.ராசாதான் 2ஜி வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர். அவர் இதுவரை ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என எந்த நீதிமன்றத்தையும் அணுகவில்லை. ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த கனிமொழி எம்பி, இந்த 3 நீதிமன்றங்களின் கதவுகளையும் தட்டிப் பார்த்துவிட்டார். ஆனால் இதுவரை ஜாமீன் கிடைத்தபாடில்லை. ஆ.ராசா ஜாமீன் மனு தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2ஜி வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால் ஜாமீன் கேட்டாலும் கிடைக்காது என்பதால் அவர் மனுத்தாக்கல் செய்யவில்லை என்று சிலரும் வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கில் தன் வாதத்திறமை மூலம் தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிக்கப் போவதாகவும், அதுவரை திகார் சிறையில் இருப்பதே தனக்கு பாதுகாப்பு என அவர் கருதுவதாலும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யாமல் உள்ளார் என்று சிலரும்

மருத்துவ கல்வியில் மீண்டும் பழைய தேர்வு முறை!


பழைய தேர்வு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசின் இம்முடிவிற்கு மாணவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக இருந்த தேர்வு முறையை மாற்றி புதிய தேர்வு முறையை நடைமுறைப்படுத்தியது. ஒரு பாடத்தில் இரண்டு தாள்களிலும் தலா 50 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என்ற தேர்வு முறையால் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், முதலாம் ஆண்டு வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் இந்த புதிய தேர்வு முறையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில், சென்னை மெமோரியல் ஹால் முன்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு, புதிய முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் சுகாதாரத் துறை அமைச்சர் மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இந்த கோரிக்கை எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விவாதித்த முதலமைச்சர், மீண்டும் பழைய தேர்வு முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கொரியாவில் தமிழர்களின் தீபாவளி பண்டிகை!









அக்டோபர் 30ம் தேதியன்று தீபாவளி கொண்டாட்டங்கள் மிகப் பிரம்மாண்டமாக சியோல்
கொரியா தமிழ் நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்டது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்துக்களை, மத்திய அமலாக்கத்துறையினர் பறிமுதல் !


மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்துக்களை, மத்திய அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்ய உள்ளனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அர்விந்த் மற்றும் டினு ஜோஷி. தம்பதியரான இவர்கள், வருவாய்க்கு அதிகமாக, 350 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தின் துணை செயலராக டினு, 1988 முதல், 1990 வரை பணியாற்றியுள்ளார். கார்கில் போரின் போது மத்திய ராணுவ அமைச்சக இணை செயலராக, அர்விந்த், 1999ல் பணியாற்றியுள்ளார்.கடந்தாண்டு, போபாலில் இவர்கள் வீட்டில், வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், 350 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்த விவரம் தெரிய வந்ததால், பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்ட விரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆமதாபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், இவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த ஐ.ஏ.எஸ்., தம்பதியரின், 350 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்ய உள்ளனர்.

இதே நாள்...


  • பனாமா விடுதலை தினம்(1903)
  •  பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
  •  பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)
  •  அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
  •  போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)

குமரிக்கு இன்று 56வது பிறந்த நாள்...!


குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு ஸ்தூபி புதுக்கடையில் உள்ளது. தமிழகத்தின் தென் எல்லை பகுதியாக விளங்குகிறது எழில் கொஞ்சும் குமரி மாவட்டம். திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த இம்மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தலைவராக சாம் டானியேல் பொறுப்பேற்றார். அதன் பின்னர் மார்ஷல் நேசமணி இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 


திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்த போது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது. இந்நிலையில் 1954ம் ஆண்டு உச்சகட்ட போராட்டம் நடந்தது. இதனையடுத்து தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கடையில் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இச்சம்பவத்தில் அருளப்பநாடார், முத்துசுவாமி, செல்லப்பாபிள்ளை, பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர். போராட்டம் ஓயவில்லை என்பதை உணர்ந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாக்களை 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. அன்று தமிழக முதல்வராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவிலில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் இதற்கான விழா நடந்தது. சாம் டானியேல், மார்ஷல் நேசமணி, குஞ்சன்நாடார், சிதம்பரநாதன், ரசாக், நூர்முகமது, சைமன், காந்திராமன், மணி, தாணுலிங்கநாடார், பொன்னப்பநாடார், வில்லியம், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்வாறு போராட்ட களங்கள் பல கண்டு, பலரை தியாகம் செய்து தாய் தமிழகத்துடன் இணைந்தது குமரி மாவட்டம். குமரிக்கு இன்று 56வது பிறந்த நாள். வளர்ச்சி பாதையில் குமரி மாவட்டம் சென்று கொண்டிருந்தாலும் தன்னிறைவடைய இன்னும் ஏராளம் செய்ய வேண்டியுள்ளது. 

கனிமொழி ஜாமின்மனு தள்ளுபடி 11 ம் தேதி வழக்கு விசாரணை துவங்கும்!


2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு இன்றாவது ஜாமின் கிடைத்து விடுமா என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பில் தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் டில்லியில் முகாமிட்டிருந்தனர். ஆனால் இன்று ஜாமின் வழங்க முடியாது என்று நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் . வரவிருக்கும் 11 ம் தேதி வழக்கு விசாரணை துவங்கும் என்றும் நீதிபதி கூறினார். 

ஜாமின் மறுக்க நீதிபதி கூறும் காரணம் என்ன ? : ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கனிமொழி மக்களுக்கான பொது நிதியை தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார் என்றும், இது மாபெரும்குற்றமாக கருதப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவிக்கும் காரணத்தில் ; கனிமொழி ஒரு பெண் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ஒரு கற்பனையான ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. இது ஏற்க கூடியது அல்ல. நாட்டிற்கு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற குற்றம் புரிந்துள்ளார். சமுதாயத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் எம்.பி.,யாக இரு்ககிறார் என்பதற்காக குற்றப்பத்திரிகை விஷயத்தில் இவர்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரிமையும் முக்கியம்தான். இருந்தாலும் இவருக்கு ஜாமின் வழங்க முகாந்திரம் இல்லை. எந்தவொரு நிர்பந்தம் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை அத்துடன் வழக்கின் தன்மை மற்றும் உண்மைநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பி்ககப்படுகிறது. இதனால் இவருக்கு ஜாமின் வழங்க முடியாது என்று கை விரித்து விட்டார்.

கனிமொழியின் மகிழ்ச்சியும்- கண்ணீரும் : இன்று நீதிபதி அறிவிக்கும் ஜாமின் உத்தரவில் தமக்கு ஜாதகமான தகவலே இருக்கும் என்ற மகிழ்ச்சியில் கனிமொழி இருந்தார். இவர் கோர்ட்டுக்கு வந்தபோது சிரித்த முகத்துடன் எப்போதையும் விட சற்று குதூகலமாக இருந்தார். ஆனால் நீதிபதி உத்தரவு வந்ததும் கனியின் முகம் இறுகியது. கண்ணீர் விட்டு அழுதார். இதனை பார்த்த தாயார் ராஜத்தியும் கண்ணீர் விட்டார். தேம்பி, தேம்பி அழுத சோகத்தினாலல்பட, படத்தார். அருகில் இருந்த எம்.பி.,க்கள் தேற்றினர். கோர்ட் அருகே காத்திருந்த தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலங்கி போயினர். இதற்கிடையில் ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து ஐகோர்ட்டில் மேல் மனு தாக்கல் செய்யப்படும் என தி.மு.க, வட்டாரம் தெரிவிக்கிறது.

பல முறை எதிர்பார்த்து ஏமாந்த கனி: ஸ்பெக்ட்ரம் முறைகேடு புகார் எழுந்த நாள் முதல் கனி எப்போது விசாரணைக்கு அழைக்கப்படுவாரோ என்ற திகில் இருந்து வந்தது. பின்னர் மே மாதம் சி.பி.ஐ., தாக்கல் முதல் தகவல் அறிக்கையில் கனிமொழி பெயரும் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து இவர் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சம் இருந்தது. கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டதும், ஆஜராகியது முதல் சில நாட்களுக்கு கோர்ட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டார். இதனையடுத்து இந்தியாவில் வாதத்தில் சிறந்து விளங்கும் பிரபல ராம்ஜெத்மலானி மூலம் கனிக்கு ஜாமின் வழங்க வேண்டும், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் நீதிபதி அவரது ஜாமின் மனுவை நிராகரித்தார் இதனையடுத்து கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகும் ஒரு ஜாமின் மனு தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. கீழ் கோர்ட்டில் ஜாமின் கோரலாம் என்றதும் மீண்டும் ஒரு ஜாமின் மனு தாக்கலானது. இதில் விசாரணை முடிந்து விட்டதா , குற்ப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என விவரம் தெரிய வேண்டும் என்று கனியின் வக்கீல் வாதாடினார். இதனால் ஜாமின் மனு ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி பல முறை கனிக்கு ஜாமின் கிடைக்குமா , கிடைக்குமா என்று பல நாள் எதிர்பார்ப்பு இருந்து வந்தது இன்றும் நிறைவேறாமல் போனது. இன்று நடந்த மனு விசாரணையின் போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி, கணவர் அரவிந்த், மகன் ஆதித்யா, ஆகியோர் கோர்ட்டில் இருந்தனரர்ர்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி: தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் எம்.பி.,கனிமொழிக்கும் தொடர்பு இருந்தது சி.பி.ஐ., மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாயம் பெற்றதற்காக ஸ்வான் என்ற நிறுவனத்தினர் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியை கொடுத்தனர். இது கடனாக பெறப்பட்டது என்று கனி மொழி சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டை ஏற்று ஆதாராம் இருப்பதாக உணவர்வதாகவும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியிருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி விட்டால் ஜாமின் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் இன்று ஜாமின் கிடைத்து விடும் என வக்கீல்கள் நம்பி இருந்தனர். கனிமொழியுடன் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசீப்பால்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி மற்றும் ராஜீவ்அகர்வால் ஆகியோர் ஜாமின் கேட்டிருந்தனர். மனு விசாரணை வருவதையொட்டி இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவரது ஜாமின் மனு கடந்த 24 ம் தேதி விசாரணைக்கு வந்தது . இதில் சி.பி.ஐ., தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இதனால் அவரை, நீதிபதி ஜாமினில் விடுதலை செய்வார் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தீபாவளி கொண்டாடும் நேரத்தில் அவர் வெளியே வருவது கூடுதல் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.குறிப்பாக வெள்ளிக்கிழமை ( 21 ம் தேதி ) டில்லிக்கு சென்ற தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஜாமின் பெறும் கனிமொழியை அழைத்து கொண்டுதான் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நீதிபதி தனது தீர்ப்பை 3 ம் தேதி ( இன்று ) அறிவிப்பதாக கூறியதை அடுத்து இன்றும் நம்பிக்கையில் தி.மு.க.,வினரும், கனியின் குடும்பத்தினரும் திக், திக்., மனதுடன் காத்திருந்தனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...