நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளத்தில் லாரி டிரைவர் பாபு என்பவர் கடந்த 26.07.2011 அன்று மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சு திணறி இறந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து தாளையூத்து போலீசார் விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்கு பிறகு 09.09.2011 அன்று பாபுவின் மனைவி உமாவை (27) கைக்குழந்தையுடன் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் சோர்சு சொல்லுவதாவது, தாளையூத்தில் பாபு அவரது மனைவி உமா, இவர்களது வீட்டருகே நல்லசாமி (37) குடும்பத்தோடு குடியிருந்து வந்தார். நல்லசாமி அங்கே லாரி செட் நடத்தி வந்தார். நல்லசாமியிடம் கடந்த 2009 முதல் லாரி டிரைவராக பாபு வேலை பார்த்தார். இதன் காரணமாக பாபு அடிக்கடி வெளியூர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதைய நேரங்களில் நல்லசாமி அடிக்கடி உமாவின் வீட்டிற்குள் சென்று வந்ததால் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இறுக்கமானார்கள்.
இதனை அறிந்த பாபு, அங்கிருந்து 2010ம் ஆண்டு தன்னுடைய வீட்டை மாற்றி, மானூர் அருகே உள்ள குறிச்சிக்குளத்தில் குடியேறினார். மேலும், நல்லசாமியிடம் பார்த்த டிரைவர் வேலையை விட்டுவிட்டார். பின்னர் வேறொரு லாரி ஒன்றில் டிரைவர் வேலைக்கு சென்று விட்டார்.பாபு வீடு மாறினாலும் உமாவுக்கும் நல்லசாமிக்கும் உள்ள கள்ளத்தொடர்பு நீடித்தது. இதற்கிடையே 20.107.2011 அன்று தன் வீட்டுக்கு பாபு வந்தபோது, அங்கு உமாவும் நல்லசாமியும் தனிமையில் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். ஆத்த்திரம் அடைந்தவர் நல்லசாமி மற்றும் உமாவை தாக்கினார். இதனால் நல்லசாமியும் கர்ப்பமாக இருந்த உமாவும் பாபு உயிரோடு இருந்தால் தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும். மேலும் தங்களது உல்லாசம் தொடர வேண்டுமானால் பாபுவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர்.
இதையடுத்து கடந்த 26.07.2011 அன்று இரவு பாபு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, உமா பாபுவின் இரு கால்களையும் பிடித்துக்கொள்ள, நல்லசாமி தலையணையால் பாபுவின் முகத்தில் அழுத்தினார். இதனால் மூச்சுத் திணறி பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் காலையில் உமா, தன் கணவர் பாபு இறந்துவிட்டாக கூச்சல் போட்டப்படியே வெளியே ஓடினார். அதைக்கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் பாபுவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் பாபு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே பாபுவின் உறவினர்கள், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தாளையூத்து போலீசில் புகார் செய்தனர். பாளை அரசு மருத்துவக் கல்லூரியில் பாபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த உமாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாபுவின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், பாபு மூச்சுத் திணறி கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதனைக்கண்டு அதிர்ந்த தாளையூத்து போலீசார், சந்தேகம் மரணத்தை கொலை வழக்கமாக மாற்றி உமாவை விசாரித்தனர். தனது கணவரை நல்லசாமியுடன் சேர்ந்து தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு காரணம் கள்ளக்காதலால் ஏற்பட்ட விளைவு என்றார். விசாணை நடத்திய போலீசார், உமாவை கைக்குழந்தையுடன் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கணவனே கண் கண்ட தெய்வம் என்கிற கலாச்சாரம், கல்லறைக்குள் போய்விட்டது என எண்ணத் தோன்றுகிறது உமாவின், அடுத்தவனுக்கு முந்தி விரிப்பு வாழ்க்கை.