பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் நகரம் என்று சொல்வதற்கு, எப்போது பெண்கள் தனியாக எந்த நேரமும், பயமின்றி செல்ல முடியுமோ, அந்த நகரம் தான் பாதுகாப்பான நகரம். ஆனால் தற்போது சிறு பெண் குழந்தைகளுக்கு கூட, சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இதுவரை கிராமங்களில் வாழும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று நினைத்தால், கிராமங்களை விட மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நகரங்களிலேயே அதிக ஆபத்தானது உள்ளது. மேலும் தொம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் உள்ள ட்ரஸ்ட்லா (TrustLaw) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சொல்கிறது. ஏனெனில் பாலியல் வன்முறைகள், கடத்தல் போன்றவை இந்தியாவில் அதிகம் உள்ளது. மேலும் கூகுளில் அதிகம் "செக்ஸ்" என்ற வார்த்தையைத் தேடுபவர்களில், உலகில் உள்ள ஏழு நாடுகளில் இந்தியாவில் இருப்போர் தான் அதிகம் என்று கூகுள் கூறுகிறது.
மேலும் இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் (International Herald Tribune) கட்டுரையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில், இந்தியா மிகவும் மோசமான இடத்தைப் பெற்றுள்ளது என்று உள்ளது. அனைத்து நகரங்களில் நன்மைகளும், தீமைகளும் இருக்கும். ஆனால் அவற்றில் பெரும்பாலான நகரங்களில் எவ்வளவு நன்மை கிடைக்கிறதோ, அதே அளவில் தீமைகளும் உள்ளது. எனவே பெண்கள் எப்போதும் மற்றவர்களை நம்பாமல், சுயபாதுகாப்புக்காக, பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்போது, இத்தகைய இந்தியாவில் பெண்கள் செல்ல பயப்படும் 10 இடங்கள்?
1, டெல்லி என்று சொன்னாலே அனைவரும் தற்போது ஞாபகம் வருவது பலாத்கார விவகாரம் தான். ஆகவே தற்போது பெண்கள் டெல்லி என்று சொன்னாலே, பயப்படுகின்றனர். இந்தியாவின் தலைநகரமான டெல்லி, தற்போது புதிய பெயரையும் பெற்றுவிட்டது. அது தான் "பலாத்காரத்தின் தலைநகரம்". மேலும் தேசிய குற்றப் பதிவு செயலம், டெல்லியில் மொத்தம் 23.8% கற்பழிப்பு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கிறது.
2, கொல்கத்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் இங்கு பெண்களை கிண்டல் செய்தல், கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனவே தான் பெண்கள் இங்கு செல்லவே அஞ்சுகிறார்கள்.
3, தென்னிந்தியாவில் குற்றம் அதிகம் நடக்கும் இடங்களில் பெங்களூரும் ஒன்று. இங்கு என்ன தான் பெண்கள் வருவதற்கு ஆசைப்பட்டாலும், போதைப் பழக்கம் மற்றும் பெண்களுக்கு நைட் ஷிப்ட் வேலை இருப்பதால், கற்பழிப்பு எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. எனவே தான், இந்த இடத்திற்கு பெண்கள் செல்ல விரும்புவதில்லை.
4, ஹரியானாவில் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் குர்கான், கற்பழிப்பு வழக்குகள் மற்றும் குற்ற விகிதங்கள் அதிகம் இருப்பதால், பெண்கள் குர்கான் வருவதை தவிர்க்கின்றனர். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு தான் மோசமான பாதுகாப்பு உள்ளது.
5, என்ன தான் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும், மும்பையில் தான் 10.8% கற்பழிப்பு வழக்கு அதிகம் உள்ளது. ஆகவே தான் பெண்கள் இங்கு தனியாக வெளியே செல்லவும், தங்குவதற்கும் பயப்படுகின்றனர்.
6, மத்திய பிரதேசமும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மோசமான நகரமாக உள்ளது என்று FSI சர்வே வெளியிட்டுள்ளது. எனவே தான் பெண்கள் இங்கு செல்ல அஞ்சுகின்றனர்.
7, இந்தியாவில் பெண்கள் தவிர்க்க வேண்டிய நகரங்களில் ஹைதராபாத் ஒன்றாக உள்ளது. என்ன தான் பெரிய நகரமாக இருந்தாலும், அங்கு கற்பழிப்புகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இதனை நன்கு வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில் ஒன்று என்று சொல்லலாம்.
8, மஹாராஷ்டிராவில் பெண்கள் வெறுக்கும் நகரங்களில், அங்கு இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் பூனேயும் ஒன்று. பூனேயில் மிகவும் கடினமான அனுபவம் என்ற சொன்னால், இங்கு போக்குவரத்து அமைப்பிலிருந்து, பொது பேருந்துகள் வரை அனைத்தும் மிகவும் மோசமாக இருக்கும்.
9, இந்தியாவிலேயே வன்முறை குற்றங்கள் அதிகம் நிகழும் இடங்களில் உத்தர பிரதேசம் தான் முதன்மையாக 11.9% ஆக உள்ளது. இங்கு பெண்களுக்கு சிறு பாதுகாப்பு கிடைப்பதே பெரிய சந்தேகம் தான். ஏனெனில் இங்கு எந்த ஒரு காரணமின்றியும், எந்நேரமும் தாக்குவார்கள் என்பதாலேயே.
10, என்ன தான் சுற்றுலாத் தளமாக இருந்தாலும், இங்கு பெண்கள் செல்வதற்கு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்தே செல்ல முடியும். ஏனெனில் இங்கு போதைப் பொருட்களான மதுவை பொது இடங்களிலேயே அருந்துவதால், இதுவும் பெண்கள் செல்வதற்கு அஞ்சக்கூடிய நகரங்களுள் ஒன்றாக உள்ளது.