ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
14 June, 2011
இதே நாள்
சந்திரகிரகணத்தையொட்டி திருமலை கோயில் மூடல்: 16-ம் தேதி 8 மணிக்கு மேல் வழிபாடு!
சந்திர கிரகணத்தையொட்டி திருமலை கோயில் நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 4.30 வரை சாத்தப்படுகிறது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு மேல் வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு மேல் திருமலையில் கோயில் நடை சாத்தப்படுகிறது. இது தவிர ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், ஊழியர்கள் மற்றும் கை குழந்தைகள் செல்லும் சுபதம் ஆகியவை நாளை காலை 11.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நாளை லகு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மகா லகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், டிக்கெட் நடப்பு பதிவும் ரத்து செய்யப்படுகிறது.
நாளை காலை 10 மற்றும் 12 மணி ஆகிய இரண்டு நேரங்களில் மட்டும் தான் மாற்று திறனாளிகள் அனுமதிக்கப்படுவர். நாளை மறுநாள் (16-ம் தேதி) காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பின்னர் சுப்ரபாதம், தோமால, அர்ச்சனை ஆகிய பூஜைகள் ஏகாந்தமாக செய்யப்படும். 8 மணிக்கு மேல் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர். அங்கபிரதக்ஷனம் மற்றும் திருப்பாவாடை சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
நாளை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு மேல் திருமலையில் கோயில் நடை சாத்தப்படுகிறது. இது தவிர ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், ஊழியர்கள் மற்றும் கை குழந்தைகள் செல்லும் சுபதம் ஆகியவை நாளை காலை 11.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நாளை லகு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மகா லகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், டிக்கெட் நடப்பு பதிவும் ரத்து செய்யப்படுகிறது.
நாளை காலை 10 மற்றும் 12 மணி ஆகிய இரண்டு நேரங்களில் மட்டும் தான் மாற்று திறனாளிகள் அனுமதிக்கப்படுவர். நாளை மறுநாள் (16-ம் தேதி) காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பின்னர் சுப்ரபாதம், தோமால, அர்ச்சனை ஆகிய பூஜைகள் ஏகாந்தமாக செய்யப்படும். 8 மணிக்கு மேல் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர். அங்கபிரதக்ஷனம் மற்றும் திருப்பாவாடை சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
Sridevi's Daughter Jhanvi Upcoming Actress" - தமிழில் ஹீரோயினாகிறார்!
முன்னால் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்போது கதாநாயகியாகிறார். 1970 மற்றும் 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் படங்களிலும் நடித்தார். 1996-ல் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு ஜான்வி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.
ஜான்வி வளர்ந்து விட்டபடியால் கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு அல்லது தமிழ் படத்தில் அறிமுகம் செய்கிறார். இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஆரம்பத்தில் தெலுங்கில்தான் தன் மகளை அறிமுகப்படுத்துவேன் என்று கூறிவந்தவர் ஸ்ரீதேவி.
ஏற்கெனவே இப்படிக் கூறி தெலுங்கில் தன் மகள் கார்த்திகாவை அறிமுகப்படுத்தி படுதோல்வி கண்டவர் ராதா. பின்னர் கார்த்திகாவை 'கோ' தமிழ் படத்தில் அறிமுகம் செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இதைப் பார்த்தபிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்ட ஸ்ரீதேவி, ஜான்வியை தமிழில் முதலில் நடிக்க வைக்க விரும்புகிறார்.
கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்க : மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா மனு!
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டிருப்பது சரியல்ல. இதை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், தமிழகத்துக்கு என சிறப்பு நிதி ஒதுக்கீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளிக்க முன்வர வேண்டும்,'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். மதியம் 12 மணிக்கு, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தேவை மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, 30 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் போர் நடந்த கடைசி நேரங்களில், அப்பாவி தமிழ் மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் வரை கொண்டு செல்ல இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சம அந்தஸ்து, உரிமைகள் வழங்கிட இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். மத்திய அதிகாரங்களை மாநிலங்களுக்கும் பரவலாக்கி தமிழர்களுக்கு நில உரிமை மற்றும் போலீஸ் அதிகாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலும், பல கோரிக்கைகளை ஏற்க மறுத்துக் கொண்டே வருவதாலும் இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களின் புனர்வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெறுவது குறித்தும், அங்கு தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையில் துவங்கப்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்து சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வருவதற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பிரதமரே தலையிட்டு இந்த சேவையை நிறுத்த வேண்டும். ஊதியம், பென்ஷன் போன்றவற்றாலும் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளாலும் தமிழக அரசு நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பாரத்தை சமாளிப்பதற்காக சிறப்பு நிதிஒதுக்கீடாக ரூ. ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி ஆகிய மின் நிலையங்களில் இருந்து 3,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யூர் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய வேண்டும். நிறைய மின் திட்டங்களும் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை கட்ட கேரள அரசுக்கு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது. எந்தவொரு ஆய்வுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது. கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
இந்த நிதியாண்டில் தமிழக அரசின் திட்ட மதிப்பீடு, ரூ.23 ஆயிரம் கோடி வரை இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, ரூ.23 ஆயிரம் கோடியை ஏற்றுக் கொள்ள வேண்டும். மானியமாக ரூ.2,300 கோடி வரை வழங்க வேண்டும். மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 52 ஆயிரம் கிலோ லிட்டர் வரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு இருந்தது. இதில் 8,226 கிலோ லிட்டர் குறைக்கப்பட்டு விட்டது. இந்நிலை மாறி, 65 ஆயிரத்து 165 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.
சென்னையைச் சுற்றி அவுட்டர் ரிங்ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட திட்டம் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டமாக வண்டலூருக்கும் மீஞ்சூருக்கும் இடையில் அமைக்கப்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு, ரூ.1,075 கோடி வரை தேவை. இதற்கு உதவி வரும் ஜப்பான் நாட்டு வங்கியுடன் பேசி நிதியை மத்திய அரசு விரைந்து வாங்கித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமரை, முதல்வர் சந்தித்துப் பேசியபோது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் உடன் இருந்தார்.
தமிழக அரசின் புறக்கணிப்புக்கு சீமான் பாராட்டு
தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
இலங்கைத் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றுக் குவித்துவிட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்துவிட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசிவருகிறது சிங்கள இனவாத ராஜபக்ஷே அரசு.
தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ இந்திய அரசுக்கு அக்கறை இருந்தால், தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும். ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுவதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலிகொண்டுவரும் சிங்கள பெளத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது.
அதன் ஒரு வெளிப்பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.
தமிழினத்துக்கோ, தமிழ்நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரியது.
அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்துவந்த வணிக வரிச் சலுகைகளை நிறுத்திவிட்டது. மனிதாபிமான உணர்வுடன் ஐரோப்பிய ஒன்றியம் கையாண்ட பொருளாதாரத் தடையால் 2 இலட்சம் சிங்களர்கள் வேலை வாய்ப்பு இழந்தனர். ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது.
அதுமட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகிவிடும், அது இந்தியாவின் நலனுக்கு எதிரானதாகிவிடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது.
கறுப்பர் இன மக்களை ஒடுக்கி வந்த இனவெறி தென்னாபிரிக்க அரசுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பில் இருந்து கிரிக்கெட் புறக்கணிப்பு வரை அத்தனை அரசியல் புறக்கணிப்பு வழிகளையும் கையாண்ட இந்திய அரசு, அன்றைக்கு இப்படிப்பட்ட அரசியல் சால்சாப்புகள் எதுவும் கூறவில்லை.
ஆனால் இலங்கை பிரச்னையில் மட்டும் தொடக்கத்தில் இருந்தே தமிழின விரோத போக்கை இந்திய மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அதுதான் கப்பல் போக்குவரத்திலும் வெளிப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதாரத் தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது.
ஆனால் தமிழக அரசு தான் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இணங்க, கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்துள்ளது. முந்தைய அரசு போல் பெயருக்குத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு தமிழர்களை ஏமாற்றும் போக்கை இந்த அரசு கடைபிடிக்கவில்லை.
தமிழ்நாட்டின் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ எவரும் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவில்லை. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழக அரசு உறுதியாகவுள்ளதை இந்த புறக்கணிப்பு நிரூபிக்கிறது.
தமிழக அரசின் புறக்கணிப்பு நடவடிக்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகும். பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.
இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம், இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு, அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது," என்று சீமான் கூறியுள்ளார்.
மோசடி செய்த சிதம்பரம்- தயாநிதி பதவி விலக வேண்டும் - டில்லியில் முதல்வர் ஜெ!
கடந்த 2009 தேர்தலில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இதைனை அ.தி.மு.க., தொடர்ந்து கூறி வருகிறது. இவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். எங்களது கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார். டேட்டா என்ட்ரி செய்யும் ஆப்ரேட்டர் மூலம் இதி்ல குளறுபடி செய்து விட்டார். அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த பிரச்னை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்று நாட்டை ஏமாற்றியிருக்கிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம் . எனவே அவர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி அவரே பதவி விலகியிருக்க வேண்டும் அவர் பதவி விலகாததால் தயாநிதியை, பிரதமர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின்போது அவர்கள் தங்களுக்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்தனர். குடும்ப ஆட்சியே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எவ்வித கவலையும் அடையவில்லை என்றார். தி.மு.க.,வினர் மீது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது தி.மு.க.,மீது தாம் எதுவும் கிரிமினல் வழக்கு போட யாருக்கும் சிக்னல் கொடுக்கவில்லை என்றார்.
அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி ; ஜெ.,யின் குற்றச்சாட்டிற்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது கருத்து தெரிவிப்பது தவறு. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஜெ., எப்போதும் கோர்ட்டை மதிப்பதில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.
Highest-paid celebrities under the age of 30 - முன்னணி 20 பெயர் (TOP 20)
Lady Gaga; is the highest-paid celebrity under the age of 30, according to the latest ranking from Forbes. The 25-year-old took home $ 90 million this past year. In this photo, Gaga attends the 2011 CFDA Fashion Awards at Alice Tully Hall on Monday, June 6, 2011, in New York.
Justin Bieber (age 17) earned $ 53 million. In this photo, Bieber arrives at the 2011 CMT Music Awards in Nashville, Tenn. on Wednesday, June 8, 2011.
Miami Heat's LeBron James (age 26) earned $ 48 million. In this photo, James gestures against the Dallas Mavericks in Game Six of the 2011 NBA Finals at American Airlines Arena on June 12, 2011 in Miami, Florida
Tennis star Roger Federer (age 29) earned $ 47 million. In this photo, Switzerland's Federer reacts as he plays Spain's Rafael Nadal, during the men's final match for the French Open tennis tournament at the Roland Garros stadium, Sunday, June 5, 2011, in Paris
Singer Taylor Swift (age 21) earned $ 45 million. In this photo, 4-time Grammy winner Swift took the unprecedented step of opening the last dress rehearsal for her Speak Now Tour for fans as a fundraiser to benefit victims of recent deadly tornadoes in the Southeast. The sold-out show raised over $750,000.00 and was held at the Bridgestone Arena in Nashville, Tennessee on May 21, 2011.
Katy Perry (age 26) earned $ 44 million. In this photo, Perry performs onstage during The 53rd Annual GRAMMY Awards held at Staples Center on February 13, 2011 in Los Angeles, California.
Real Madrid soccer star Cristiano Ronaldo (age 26) earned $ 38 million. In this photo, Ronaldo lines up before the start of the EURO 2012 Group H qualifier between Portugal and Norway at Estadio do Sport Lisboa e Benfica on June 4, 2011 in Lisbon, Portugal
Beyonce (age 29) earned $ 35 million. In this photo, Beyonce Knowles performs during the 2011 Billboard Music Awards at the MGM Grand Garden Arena May 22, 2011 in Las Vegas, Nevada.
Barcelona soccer star Lionel Messi (age 23) earned $ 32 million. In this photo, Messi looks on during the UEFA Champions League final between FC Barcelona and Manchester United FC at Wembley Stadium on May 28, 2011 in London, England.
Tennis star Rafael Nadal (age 25) earned $ 31 million. In this photo, Nadal of Spain serves during his Men's Singles quarter final match against Jo-Wilfred Tsonga of France on day five of the AEGON Championships at Queens Club on June 10, 2011 in London, England.
Rihanna (age 23) earned $ 29 million. In this photo, Rihanna performs on NBC's 'Today' in Rockefeller Plaza on May 27, 2011 in New York City
Orlando Magic center Dwight Howard (age 25) earned $ 28 million. In this photo, Howard of the Orlando Magic is seen against the Atlanta Hawks during Game Three of the Eastern Conference Quarterfinals in the 2011 NBA Playoffs at Philips Arena on April 22, 2011 in Atlanta,
Miami Heat's Dwyane Wade (age 29) earned $26 million. In this photo, Wade looks on against the Dallas Mavericks in Game Six of the 2011 NBA Finals at American Airlines Arena on June 12, 2011 in Miami, Florida.
New York Knicks' Carmelo Anthony (age 27) earned $ 25 million. In this photo, Anthony attends the 'Alexander McQueen: Savage Beauty' Costume Institute Gala at The Metropolitan Museum of Art on May 2, 2011 in New York City
Tennis star Maria Sharapova (age 24) earned $ 24 million. In this photo, Sharapova of Russia celebrates matchpoint during the women's singles quarterfinal match between Maria Sharapova of Russia and Andrea Petkovic of Germany on day eleven of the French Open at Roland Garros on June 1, 2011 in Paris, France
Miley Cyrus (age 18) earned $ 15 million. In this photo, Cyrus arrives at Nickelodeon's 24th Annual Kids' Choice Awards at Galen Center on April 2, 2011 in Los Angeles, California
Actress Kristen Stewart (age 21) earned $ 20 million. In this photo, Stewart arrives at the 2011 MTV Movie Awards at Universal Studios' Gibson Amphitheatre on June 5, 2011 in Universal City, California.
Actor Robert Pattinson (age 25) earned $ 20 million. In this photo, Pattinson speaks onstage during the 2011 MTV Movie Awards at Universal Studios' Gibson Amphitheatre on June 5, 2011 in Universal City, California.
Singer Carrie Underwood (age 28) earned $ 15 million. In this photo, Underwood performs onstage during 2011 Stagecoach: California's Country Music Festival at the Empire Polo Club on May 1, 2011 in Indio, California.
Rap artist Lil Wayne (age 28) earned $ 15 million. In this photo, Lil Wayne performs during his 'I Am Still Music' tour at the Staples Center on April 22, 2011 in Los Angeles, California
வேலைவாய்ப்புக்கள் இனி இந்தியா, சீனா வசம் சென்று விடும்: ஒபாமா
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை கைப்பற்றுவதில் முன்னணி பெற்று வருகிறார்கள். எனவே இனி அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அமெரிக்கர்களை அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் களத்தில் பணிக்கு பொருத்தமானவர்களை கண்டறிவது அமெரிக்க நிறுவனங்களுக்கு சிரமமாக உள்ளது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல அடையாளம் அல்ல என ஒபாமா வட கரோலினா, டர்ஹாமில் பேசும் போது தெரிவித்தார்.
இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் நான்க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு ஆசிரியர்கள் தான் வரவேண்டியுள்ளது. திறன் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல என்று ஒபாமா குறிப்பிட்டார்.
இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் நான்க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு ஆசிரியர்கள் தான் வரவேண்டியுள்ளது. திறன் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல என்று ஒபாமா குறிப்பிட்டார்.
பொருளாதார தடை விதிக்காமல் இலங்கைக்கு கப்பல் விடுவதா: சீமான் கண்டனம்!
இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் அதைக் கண்டு கொள்ளாமல் இலங்கைக்கு கப்பல் விட்டுள்ள இந்திய அரசின் செயல் கண்டிக்கத் தக்கது என்று சீமான் கூறியுள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று பேசி வருகிறது சிங்கள ராஜபக்சே அரசு. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.
ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.
தமிழனத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம் தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச் சலுகைகளை நிறுத்தி விட்டது.
ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால் அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது. ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இத்தீர்மானத்தை மதிக்காமல் கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.
இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று பேசி வருகிறது சிங்கள ராஜபக்சே அரசு. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.
ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.
தமிழனத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம் தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச் சலுகைகளை நிறுத்தி விட்டது.
ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால் அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது. ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இத்தீர்மானத்தை மதிக்காமல் கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.
இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அமெரிக்காவில் 17ம் தேதி முதல் 10வது தமிழ் இணைய மாநாடு
10வது தமிழ் இணைய மாநாடு, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. ஜூன் 17ம் தேதி தொடங்கி 19ம் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 10 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சிறுவர் திருக்குறள் போட்டி நடக்கிறது. கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் குறுந்தகடுகளும் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, செர்மனி, சுவிசர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படிக்கின்றனர். இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்துள்ள விதம், தமிழ் மென்பொருள்கள் பற்றி விவாதிக்கின்றனர்.
மேலும் மு.அனந்தகிருட்டினன், பொன்னவைக்கோ, பென்சில்வேனியா பல்கலை தெற்கு ஆசிய துறைத்தலைவர் தாவூத் அலி, பேராசிரியர் ஹெரால்டு ஷிப்மன், பேராசிரியர் அண்ணாமலை, பிரான்சு பேராசிரியர் ஏ.முருகையன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு, கனடா பேராசிரியர் செல்வகுமார், ஈழத்தின் சிவா அனுராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த தகவலை அமெரிக்கா பன்னாட்டுக்குழு தமிழ் இணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் தமிழ் இணையத்துறையில் முன்னோடியுமான முனைவர் மு.இளங்கோவனும் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளார். இணையவழித் தமிழ்ப் பாடங்கள் என்ற தலைப்பில் அவர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறார்.
இன்றைக்கு வகுப்பறையில் நடக்கும் தமிழ்ப்பாடங்கள் எதிர்காலத்தில் இணையத்தில் நடைபெற உள்ளன. இன்றும் நூற்றுக்கணக்கான இணைய தளங்களில் தமிழ்ப்பாடங்கள் உள்ளன. இலவசமாகவும், கட்டணம் கட்டியும் இந்தப் பாடங்களைப் படிக்கலாம். வெளிநாட்டு மாணவர்களும் தமிழ்மாணவர்களும் தமிழ் படிக்க உதவும் வகையில் உள்ள இந்தப் பாடங்களில் தமிழ் அகரவரிசை, பேச்சுத்தமிழ், உரையாடல், தமிழர் பண்பாட்டுக்கூறுகள் உள்ளன.
திரைப்படங்களில் இடம்பெறும் இலக்கியப்பாடல்கள் கொண்டு இணையதளங்களில் தமிழ்ப்பாடங்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களில் உள்ள நிறை குறைகளை எடுத்துக்காட்டி முழுமையான தமிழ்ப்பாடங்களை எப்படி வடிவமைப்பது என்று இளங்கோவன் தம் ஆய்வுக்கட்டுரையில் விளக்கவுள்ளார். இளங்கோவனின் தமிழ் இணையப் பணிகளைப் பாராட்டும் வகையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா அமைப்பு இந்த ஆண்டு நடத்தும் மூன்று நாள் ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக இவரை அழைத்துப் பாராட்டவுள்ளது.
தெற்குக் கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ள்ஸ்டன் நகரில் இந்த ஆண்டு நடைபெறும் பெட்னா விழாவில் இளங்கோவன் சிறப்பிக்கப்பட உள்ளார்.
மேலும் நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன், நியூசெர்சி, வடக்குக் கரோலினாவில் நடைபெறும் தமிழ் விழாக்களிலும் அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றுச் சிறப்புரையாற்ற உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)