|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 June, 2011

சந்திரகிரகணத்தையொட்டி திருமலை கோயில் மூடல்: 16-ம் தேதி 8 மணிக்கு மேல் வழிபாடு!

சந்திர கிரகணத்தையொட்டி திருமலை கோயில் நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 4.30 வரை சாத்தப்படுகிறது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு மேல் வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு மேல் திருமலையில் கோயில் நடை சாத்தப்படுகிறது. இது தவிர ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், ஊழியர்கள் மற்றும் கை குழந்தைகள் செல்லும் சுபதம் ஆகியவை நாளை காலை 11.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நாளை லகு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மகா லகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், டிக்கெட் நடப்பு பதிவும் ரத்து செய்யப்படுகிறது.

நாளை காலை 10 மற்றும் 12 மணி ஆகிய இரண்டு நேரங்களில் மட்டும் தான் மாற்று திறனாளிகள் அனுமதிக்கப்படுவர். நாளை மறுநாள் (16-ம் தேதி) காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பின்னர் சுப்ரபாதம், தோமால, அர்ச்சனை ஆகிய பூஜைகள் ஏகாந்தமாக செய்யப்படும். 8 மணிக்கு மேல் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர். அங்கபிரதக்ஷனம் மற்றும் திருப்பாவாடை சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...