|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 June, 2011

கங்கையை காக்க காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த சுவாமி நிகாமானந்த் மரணம்!

கங்கை நதியைக் காப்பதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி, ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் போராட்டம் மேற்கொண்டிருந்த சுவாமி நிகாமானந்த் மரணம் அடைந்தார். சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியான ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சுவாமி நிகாமானந்தின் உயிர், டெரேடூனில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை பிரிந்தது.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 9-வது நாளில் போராட்டத்தை கைவிட்ட பாபா ராம்தேவ் ஐ.சி.யு.வில்  சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய அதே மருத்துவமனையில் தான் சுவாமி நிகாமானந்தின் உயிரும் பிரிந்தது.புனிதமான கங்கை நதி மாசுபடுத்தப்படுவதற்கு எதிராக  பிப்ரவரி 19-ல் ஹரித்வாரில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய சுவாமி நிகாமானந்த் மொத்தம் 73 நாட்கள் தனது போராட்டத்தை கைவிடாமல் நடந்தி வந்துள்ளார்.

      
 

இதுகுறித்து அவரது ஆதரவாளர் ஒருவர்.       கூறுகையில், "சுவாமி நிகாமானந்த் தனது ஆசிரமத்தில் 68 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆலைக் கழிவுகள் கலப்பதில் இருந்தும், ஆற்றுப் படுகையில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்தும் கங்கையை மீட்க வேண்டும் என்பதாக அவர் போராடினார்," என்றார்.

காலவரையற்ற உண்ணாவிரத்தால் உடல் நிலை மோசமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27-ல் வலுக்கட்டாயமாக ஹிமாலயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், நிகாமானந்த். கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், எவ்விதப் பலனும் இன்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.

"மாஃபியா கும்பலை காப்பதில் அரசுக்கும் பங்குண்டு. நிகாமானந்த் உண்மையிலேயே தனது நோக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்துள்ளார். இதுவரை எந்த மீடியாவும் அவர் விரிவான செய்தியினை வெளியிடவில்லை," என்று வருத்தம் தொய்ந்த குரலுடன் பேட்டியளித்திருக்கிறார், சக சாதுவான சுவாமி கைலாஷ்நாத்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...