இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலின் புதிய முயற்சியாலும், ரத்ன வேலுவின் புதிய பரிணாமத்தாலும் உருவாகியுள்ளது ஹரிதாஸ். பெற்றோரின் கண்காணிப்புடன் புத்தி சுவாதீனம் இல்லாத குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கலாம் என்பதே பலருக்கு தெரியாதது. திருந்துரவன் ஒருமுறை தான் மன்னிப்பு கேப்பான். திரும்ப திரும்ப கேக்குறவன் திருந்தவே மாட்டாமன்”, ”மீன் வித்த காசு நாறவா போகுது” என்ற வசனங்கள் அருமை! விஜய் ஆண்டனியின் ஒரு பாடலும் எடுபடவில்லை. கம்பீரமான கேரக்டரில், அற்புதமாக நடித்திருக்கிறார் கிஷோர். உண்மையான அமுதவல்லி டீச்சராகவே நடித்திருக்கிறார் சினேகா. ஆனால் என்கவுண்டர் டீமில் வரும் போலீசில் வெண்ணிலா கபடி குழுவில் வரும் டீம் தலைவர் இதில் என்கவுண்டர் டீமில் போலிஸ் கட்டிங் இல்லாமல் ரவுடியான தோற்றம் கவனக்குறைவு. ஏதோ படத்தின் கிளைமாக்ஸ் ஏன் இப்படி தெரியவில்லை? தியேட்டருக்கு போறதே பெருசு இதுல ஒரு நேர்மையான என்கவுண்டர் ஸ்பலிஸ்ட் இப்படி குறைபாடு உள்ள குழந்தை இருதியில் ஜெயிக்கும் போது கத்தியால் குத்தி சாகடித்திருப்பது அதுவும் ரவுடி எல்லாம் செத்துபோய் கடைசியாய் ஒரு ஆல் காட்டி கையில் கத்தி குத்துபடுவது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
17 March, 2013
சுயேச்சை எம்.எல்.ஏ. சோமபிரகாஷ் சல்யுட்!
ஐஐடி உண்ணாவிரத பந்தலில் தற்பொழுது பீகார் ஒரிசா கேரளா ஆந்திராவை
சேர்ந்த ஐஐடி மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது
பொருளாதாரத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இன்று ஒரு
நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில்
பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
2-வது உலகப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை ஐநா எப்படி
விசாரித்ததோ அதுபோல இலங்கை இறுதிப் போரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட
இனப்படுகொலை குறித்தும் விசாரிக்க வேண்டும்; தென் சூடானில்
பொதுவாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு
நடத்தப்பட வேண்டும் என்பதும் ஐஐடி மாணவர்களின் கோரிக்கைகள்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ. சோமபிரகாஷ்
என்பவரும் கலந்து கொண்டு தமிழர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவை விரட்டியவர்
ராஜபக்சே பீகார் மாநிலம் புத்தகயாவுக்கு வருகை தந்தபோது அதற்கு கடும்
எதிர்ப்பு தனி மனிதராக போராட்டம் நடத்தியவர் சோமபிரகாஷ். கொலைகார ராஜபக்சே
புத்தகயாவுக்குள் காலடி எடுத்து வைக்குக் கூடாது என்று துணிச்சலுடன்
பகிரங்கமாக குரல் கொடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன? தமிழனா? நீயே முடிவெடு!
ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையை இந்தியா வாழ்த்தி
பேசியுள்ளது மனித உரிமை ஆர்வலர்களையும், உலக தமிழர்களையும் கடும் அதிர்ச்சி
அடைய வைத்துள்ளது.
இலங்கை அரசு செய்த இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. மனித
உரிமை கவுன்சிலில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும்,
போர்க்குற்றம் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும், தனித்
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகம் முழுவதும்
கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின்
உலகளாவிய காலமுறை அறிக்கை (யு.பி.ஆர்) குறித்து இந்தியா இலங்கை அரசைப்
பாராட்டியும், வாழ்த்தியும் பேசியுள்ளது.
இந்தியாவின் இந்த செயல் உலகத் தமிழர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும்
கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியன? தமிழனா? நீயே முடிவெடு என நமது அரசாங்கம் நமக்கு விடப்படும் சவால்தான் இந்த வாழ்த்து பேச்சு தமிழன் இளிச்சவாயன், தமிழனிடம் ஒற்றுமை இல்லை, தமிழன் கேனையன் என்ற எண்ணம் இன்னும் இந்த மத்திய அரசாங்கம் நினைக்குமேயானால் தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் காரனும் உயிரோடு இருக்க மாட்டான்.
Subscribe to:
Posts (Atom)