இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலின் புதிய முயற்சியாலும், ரத்ன வேலுவின் புதிய பரிணாமத்தாலும் உருவாகியுள்ளது ஹரிதாஸ். பெற்றோரின் கண்காணிப்புடன் புத்தி சுவாதீனம் இல்லாத குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கலாம் என்பதே பலருக்கு தெரியாதது. திருந்துரவன் ஒருமுறை தான் மன்னிப்பு கேப்பான். திரும்ப திரும்ப கேக்குறவன் திருந்தவே மாட்டாமன்”, ”மீன் வித்த காசு நாறவா போகுது” என்ற வசனங்கள் அருமை! விஜய் ஆண்டனியின் ஒரு பாடலும் எடுபடவில்லை. கம்பீரமான கேரக்டரில், அற்புதமாக நடித்திருக்கிறார் கிஷோர். உண்மையான அமுதவல்லி டீச்சராகவே நடித்திருக்கிறார் சினேகா. ஆனால் என்கவுண்டர் டீமில் வரும் போலீசில் வெண்ணிலா கபடி குழுவில் வரும் டீம் தலைவர் இதில் என்கவுண்டர் டீமில் போலிஸ் கட்டிங் இல்லாமல் ரவுடியான தோற்றம் கவனக்குறைவு. ஏதோ படத்தின் கிளைமாக்ஸ் ஏன் இப்படி தெரியவில்லை? தியேட்டருக்கு போறதே பெருசு இதுல ஒரு நேர்மையான என்கவுண்டர் ஸ்பலிஸ்ட் இப்படி குறைபாடு உள்ள குழந்தை இருதியில் ஜெயிக்கும் போது கத்தியால் குத்தி சாகடித்திருப்பது அதுவும் ரவுடி எல்லாம் செத்துபோய் கடைசியாய் ஒரு ஆல் காட்டி கையில் கத்தி குத்துபடுவது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
No comments:
Post a Comment