ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
01 May, 2012
இதே நாள்...
- சர்வதேச உழைப்பாளர் தினம்
- இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)
- நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(1931)
- புளூட்டோவின் பெயர அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)
- கிரிக்கெட் விளையாட்டு முதன் முறையாக அமெரிக்காவில் விளையாடப்பட்டது(1751)
எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என சிங்களவன் சுவரொட்டி...
யாழ்ப்பாணத்தின் பல்வேறு சாலைகளில் 'தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து நடத்த உள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இந்த நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.யாழ்ப்பாண மக்கள் என்ற குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்' என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டு பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
நடிகை சண்முக சுந்தரி மரணம்!
மூத்த நடிகையும், நடிகை - பின்னணி பாடகி டி கே கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.கடந்த 45 ஆண்டுகளாக 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் தமிழ் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.சிவாஜியுடன் 'லட்சுமி கல்யாணம்,' 'வடிவுக்கு வளைகாப்பு' படங்களிலும், ஜெமினியுடன் 'மாலதி' படத்திலும் நடித்துள்ளார்.காமெடி கிங் கவுண்டமணியின் மாமியாராக ஒரு படத்தில் அவர் நடித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்தார்.டி.பி.கஜேந்திரன் இயக்கிய 'மிடில் கிளாஸ் மாதவன்', வீ சேகர் இயக்கிய காலம் மாறிப்போச்சு படங்களில் வடிவேலுவின் தாய் கேரக்டரில் நடித்தார். அந்த இரு படங்களிலும் வடிவேலு - சண்முக சுந்தரி காட்சிகள் மிகப் பிரபலமாகின.
ஏராளமான படங்களுக்கு 'டப்பிங்' குரலும் கொடுத்துள்ளார். சண்முகசுந்தரிக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள். டி.கே.கலா பிரபல பாடகி. கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.சண்முகசுந்தரி உடல் சாலிகிராமம் மதியழகன் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் சார்பில் வாகை சந்திரசேகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வளசரவாக்கம் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது.
எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார்?
சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.
ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.
ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக
ஹரினி "மிஸ் கூவாகம்!
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெரு விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) அரவாணிகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடக்கிறது.இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அரவாணிகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.விழாவையொட்டி நேற்று காலை விழுப்புரத்தில் அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம்-2012-க்கான அழகிப்போட்டி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக நல வாரியத்துறை தலைவி நடிகை சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டு பேசும்போது, இந்த திருவிழாவை காண பல ஊர்களில் இருந்து,
மாவட்டங்களில் இருந்து, நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களது விழா. இதில் நானும் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.நிகழ்ச்சியில் அரவாணிகளுக்கு விளையாட்டு போட்டி, வினாடி-வினா போட்டி, நடன போட்டி, அழகிப்போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. இந்த விளையாட்டு போட்டிகளை முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான அரவாணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.அழகிப்போட்டியில் விழுப்புரம், மும்பை, பெங்களூர், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தர்மபுரி, புதுச்சேரி, ஐதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அரவாணிகள் கலந்துகொண்டு விதவிதமான கண்ணை கவரும் வகையிலான வண்ண, வண்ண உடைகளில் மேடையில் கவர்ச்சியாக தோன்றி ஒய்யாரமாக நடந்துவந்து பார்வையாளர்களை அசத்தினர்.
அழகிப்போட்டியில் பங்கேற்றவர்களில் நடை, உடை, பாவணையின் அடிப்படையில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பொது அறிவுத்திறன், எய்ட்ஸ், எச்.ஐ.வி.யின் அறிகுறிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதில் அளித்த திருவண்ணாமலையை சேர்ந்த ஹரினி "மிஸ் கூவாகம்- 2012'' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையை சேர்ந்த தீபிகா 2-வது இடத்தையும், தர்மபுரியை சேர்ந்த சாயாசிங் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
உலகிலேயே மிக உயரமான கட்டிடம் மீண்டும் அந்தஸ்தை!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘எம்பயர் ஸ்டேட் பில்டிங்’ என்ற பெயரில் உலக வர்த்தக மைய கட்டிடம் இருந்தது. இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்று இருந்தது.கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அந்த கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோத வைத்து தகர்த்து தரை மட்டமாக்கினர். இதில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலக பெருமை வாய்ந்த அந்த கட்டிடத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நியூயார்க்கில் மீண்டும் இரட்டை கோபுரங்களுடன் வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில், ஒரு கட்டிடம் 1250அடி (381 மீட்டர்) உயரத்திலும், மற்றொன்று 1,776 அடி (541.3 மீட்டர்) உயரத்திலும் கட்டப்படுகிறது.அதில் 1250 அடி உயர கோபுரம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது. மற்றொரு கோபுரம் அடுத்த ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடம் 104 அடுக்குமாடிகளை கொண்டதாக கட்டப் படுகிறது. இதன் மூலம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எந்த அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது.
பலி வாங்கிய தகப்பன்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மெத்த பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ் (ராணுவ வீரர்). இவரது மனைவி விஜயலட்சுமி. கணவரின் சித்ரவதையால் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். சங்கர் ராவ் மீது வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொன்னவர்களை பழிவாங்க சங்கர் ராவ் திட்டம் போட்டார். இதன்படி அவர் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தார்.
பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த தனது மகள் மவுனசா (7), மகன் திவாகர் (5) ஆகியோரை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார்.அந்த குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார். அவர்கள் மயங்கியதும் தலையை துண்டாக வெட்டினார். பின்னர் அந்த தலைகளை வீட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்தார்.பின்னர் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி ராவ் என்பவருடன் நைசாக பேசி தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை அரிவாளால் வெட்டினார். பின்னர் வெங்கட்ராவ் என்பவரை கோவிலுக்கு வரும்படி கூறினார்.
சோபேஸ்வரர் கோவிலுக்கு வந்த அவரை அங்கு வைத்து வெட்டிக் கொன்றார். பின்னர் வெடிகுண்டுடன் கணபதி என்பவருக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகை மீது வீசி தீ வைத்தார். இதில் மாட்டுக் கொட்டகை எரிந்ததுடன் மாடுகளும் கருகி செத்தது.இது தவிர பார்வதி, தமயந்தி உள்பட 3 பேரை தூங்கிக்கொண்டு இருந்தவர்களை தட்டி எழுப்பி கொலை செய்தார். ஒரே இரவில் 7 பேரை கொலை செய்த பின் மறுநாள் போலீசில் சரண் அடைந்தான். இந்த கொலை சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இந்த கொலை வழக்கு ஸ்ரீகாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. 11 மாதமாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.சங்கர் ராவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ராமனாஜி ராவ் தீர்ப்பு வழங்கினார்
Subscribe to:
Posts (Atom)