|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2013

பார்க்க முடியவில்லை மனம் வலித்தது!


பார்த்ததில் பிடித்தது!


எங்கே சரியா சொல்லுங்க?

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பெருமாளை தரிசிக்கவரும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில் போர்டு எழுதி வைத்துள்ளனர்,கூட்டிக்கழித்து கொஞ்சம் மூளையை கசக்கிக்கொண்டால் என்ன எழுதிவைத்துள்ளனர் என்பது புரியும், ஆனாலும் சில வார்த்தைகள் புரியவே புரியாது, இந்த வார்த்தை அதில் சேர்ந்ததாக்கும்!இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .

உலக சிறுநீரக தினம்.



தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை சிறுநீரகம் செய்து கொண்டிருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகம் உண்டு. அபூர்வமாக சிலருக்கு இயற்கையிலோ அல்லது சூழ்நிலையின் காரணமாகவோ ஒரு சிறுநீரகம் அமைந்து விடுவதுண்டு. நிஜத்தில் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதை அறியாமலேயே தங்கள் முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இதில் சிலரே எதேச்சையாக வேறு காரணங்களுக்காக பரிசோதிக்கப்படும் போது அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளது என்பதை அறிகின்றனர். இனி ஒரு சிறுநீரகத்துடன் தன் வாழ்நாளை வாழ வேண்டியுள்ளது குறித்து அவர்களுக்கு பல கவலைகள் இருக்கலாம். இக்கட்டுரை இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும். ஆயிரத்தில் ஒருவருக்கு பிறக்கும் போதே ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமே பிறக்க வாய்ப்பு உண்டு. பலருக்கு இதனால எந்த தொந்திரவும் இல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் வயிற்றுக்கு ஸ்கேன் செய்யும் போது எதேச்சையாக கண்டுபிடிக்கப்படுவது உண்டு. சிலருக்கு சிறுநீரகத்தில் கட்டி அல்லது சிறுநீரகக் குழாயில் கல், மற்ற காரணங்களால் அடைப்பு கிருமித் தாக்கம், விபத்தில் சிறுநீரகம் சிதைவு ஆகிய காரணங்களால் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். 

தங்கள் உறவினர் அல்லது நண்பர்களுக்கு, அவர்களின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால் தங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகத்தைத் தானமாக தந்தவர்களும் உண்டு. இரண்டு சிறுநீரகங்களும் நன்கு ஆரோக்கியமாக இயங்கும் ஒரு நபர் ஒன்றை இன்னொருவர் உயிர் காக்க தானமாக தந்த பிறகு அவர்களுடைய மற்ற சிறுநீரகம் அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நன்கு இயங்கி அவரை ஆரோக்யமாகவே வைத்திருக்கின்றது. உண்மையில் ஒரு ஆய்வு சிறுநீரக தானம் கொடுத்தவர்கள் அவரது வயதொத்தவர்களை விட அதிக காலம் உயிர் வாழ்வதாக சொல்கின்றது. இப்படிப்பட்டவர்களில் மிகச்சிலருக்கு 10-15 வருடங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகிய சில சிறிய எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடிய தொந்திரவுகள் வரலாம். ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளதாக சிறுவயதிலேயோ பின்னாளிலோ கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர் இந்த ஒரு சிறுநீரகத்தின் முழு ஆரோக்யத்தை எளிய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார். சிறுநீரகம் நன்றாகவே இருந்தாலும் முறையான இடைவெளிகளில் (6வருடம் ஒரு முறை) தொடர்ந்து சிறுநீரக மருத்துவரை கலந்து கொள்வது சிறந்தது. இது சிறுநீரக தானம் கொடுத்தவர்களுக்கும் வேறு காரணங்களுக்காக ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டி வந்தவர்களுக்கும் பொருந்தும். அபூர்வமாக ஒற்றை சிறுநீரகத்தில் பாதிப்பு ஏதும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஒற்றை சிறுநீரகம் ஆரோக்யமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. குழந்தை பெறுவதிலும் எந்த சிக்கலும் கிடையாது.


ஒரு லைக் போதும் நீங்கள் யார் என்று தெரிய?



ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுறோமோ இல்லையோ நண்பர்கள் போடும் ஸ்டேட்டஸ், படங்களுக்கு லைக் போடுவது பேஷனாகிவிட்டது. சாதாரணமாக புக் படிக்காதவர்கள் கூட ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகின்றனர். லைக் போடுகின்றனர். இது மாதிரி லைக் போடுபவர்களின் ரசனையை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்தி எட்டாயிரம் ஃபேஸ்புக் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும் உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.

அடுத்ததாக, இந்த இவர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள். உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள். இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற ஃபேஸ்புக் பக்கத்தில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்ததாம்.அதேபோல ஃபேஸ்புக்கில் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் ஒருவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்பதையும் லைக் போடுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த கணக்கீடு விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளிக்கிறது. உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும். இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம். 

அதேசமயம், தனிமனிதரின் ஃபேஸ்புக் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன. இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஃபேஸ்புக்கில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஃபேஸ்புக்கில் இருக்கும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்களுக்கு தெரியாதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், ஃ பேஸ்புக்கில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும். 

இன்னும் நாம் இந்த்தியர்தான?


கச்சத்தீவு அருகே மீன்பிடித்து்க கொண்டிருந்த 60 பாம்பன் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர். இதனால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இன்று காலை இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. நேற்றுதான் 19 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று 60 பேரை பிடித்துப் போயுள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிடித்துச் செல்லப்பட்டுள் 60 பேரையும் நெடுந்தீவு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று இலங்கைப் படையினர் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் 11 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாம்பன் மீவர் சங்கத் தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் அனைவரும் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கைக் கடற்படையினர் அனைவரையும் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். மீனவர்களை சுற்றி வளைத்தபோது சிங்களப் படையினர் தமிழக மீனவர்களை கயிறுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...