- வெனிசுவேலா கொடிநாள்
- நைஜர் விடுதலை தினம்(1960)
- காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)
- தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
02 August, 2011
இதே நாள்..
ராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவுக்கு அமெரிக்காவில் தூதர் பதவியா?- திருமா!
சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய அரசு வரவேற்று உபசரித்ததன் மூலம் தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படு்த்தியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கெளரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.
இனப் படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.
இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர். ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.
ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
தொடர்ந்து தமிழினத்துக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு-திருமா:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே போர்க்குற்றம் புரிந்த சிங்கள எம்.பிக்களை வரவழைத்து விருந்தினர்களாக கெளரவப்படுத்தி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்துள்ளது மத்திய அரசு என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினத்துக்கு விரோதமான நடவடிக்கையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாள் அன்றே சிங்கள நாடாளுமன்றப் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அனுமதித்து தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு அவமதித்துள்ளது. சிங்கள நாடாளுமன்ற பேரவைத் தலைவர் சமல் ராஜபக்சே தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
01.08.2011 மக்களவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் திருமதி மீராகுமார், ""இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் நமது மக்களவை நடவடிக்கைகளை கவனிக்க வந்திருக்கிறார்கள்!'' என்று அறிவிப்புச் செய்திருக்கிறார். இந்த நடவடிக்கை கோடானுகோடித் தமிழர்களைக் காயப்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் குழு தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க இருப்பதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது.
சிங்கள ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியளிப்பது, இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தன்னுடைய பதவி ஓய்வுபெறும் நிலையில் ராஜபக்சேவோடு விருந்தில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான உறவில் உள்ள இணக்கத்தையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இது தமிழர்களை அவமதிப்பதாக இருக்கும், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது என்ற கருத்து உருவாகும் என்கிற அச்சம் இல்லாமல் இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
பதவி ஓய்வு பெற்றுவிட்ட நிலையிலும் ராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருப்பதை, தமிழினத்துக்கெதிராகச் செயல்பட்டதற்காகவே நிருபமா ராவுக்கு பாராட்டிப் பரிசு வழங்கியிருப்பதாகவே உணர முடிகிறது.
இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமல் ராஜபக்சே தலைமையிலான பிரதிநிதிகளை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்!
தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கு ஆடுகள் தரப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் பேருக்கு தலா நான்கு ஆடுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏழை விவசாயிகளுக்கு ஆடுகள்: பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. ஏழு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 1.5 லட்சம் பேருக்கும் இலவசமாக ஆடுகள் வழங்கப்படும்.
நடப்பாண்டில் ரூ. 135 கோடி: நான்கு ஆடுகள் ரூ.10 ஆயிரம் விலையில் வழங்கப்படும். அதாவது ஒரு ஆடு ரூ.2,500 விலை; தீவனச் செலவு ரூ.500 சேர்த்து ஒரு ஆட்டுக்கு ரூ.3 ஆயிரம் செலவிடப்படும். அதன்படி நான்கு ஆடுகளுக்கு ரூ.12 ஆயிரம் செலவிடப்படும். ஆடுகள் காப்பீடு செய்யப்படும். காப்பீடு, ஆடுகளை வாங்கி வருவதற்கான போக்குவரத்துச் செலவு என தனியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.500 ஒதுக்கப்படும். நடப்பாண்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளைக் கிராம அளவிலான குழு மேற்கொள்ளும். இந்தக் குழு பரிந்துரைக்கும் பயனாளிகளின் பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை, கிராமங்களில் உள்ள கிராம சபைகள் செய்யும். ஏழை விவசாயக் குடும்பங்களில் உள்ள பெண்களே பயனாளிகளே இருப்பார்கள்.
விவசாயக் கூலிகளுக்கு மட்டுமே: இலவச ஆடுகளைப்பெற விவசாயிகள், நிலங்கள் இல்லாத ஏழை விவசாயக் கூலிகளாக இருக்க வேண்டும். கிராமங்களில் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பசு, ஆடுகளைச் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. அரசுப் பணியில் இருக்கக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் கூட அரசுப் பணியில் இருந்திடக் கூடாது.
மாடு வாங்கினால் ஆடு கிடையாது: இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட மாட்டாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட (29 சதவீதம் பேர்) மற்றும் பழங்குடியின (1 சதவீதம்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.
இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தும் அதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியர்கள் இருப்பர். மாவட்ட அளவிலான குழுவில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) இருப்பர். பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான கிராம அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் அமைப்பார். இந்த கிராம அளவிலான குழுவில் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு வார்டின் மூத்த தலைவர் உள்ளிட்டோர் இருப்பர்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் விவரங்களைக் கால்நடை உதவி மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரும் சரிபார்ப்பர். பயனாளிகள் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளா என்கிற விவரம் கிராம நிர்வாக அலுவலரின் துணையுடன் உறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
ஒரு ஆண் ஆடு, 3 பெண் ஆடு
செம்மறி அல்லது வெள்ளாடாக வழங்கப்படும். ஒரு ஆண் ஆடும், மூன்று பெண் ஆடுகளும் அளிக்கப்படும். ஆடுகளை வாங்கும்போது, பயனாளிகள் ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர். அரசுப் பண்ணைகளில் ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் அவை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் விற்பனைக்கு இருந்தாலும் அவை கொள்முதல் செய்யப்படும்.
ஆடுகளின் காதில் ஐடி கார்டு: இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடு என்பதைக் குறிக்கும் வகையில், கொள்முதல் செய்யப்படும் ஆடுகளின் இடது காதில் ஓட்டை போடப்படும் அல்லது கயிறு தொங்கவிடப்படும். ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். இந்த எண் பெரிதாக தெரியும் வகையில் புகைப்படம் எடுக்கப்படும். பயனாளிகள் இலவச திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசு மாடு வாங்க ரூ. 232 கோடி: இதேபோல அரசின் இலவச பசுக்கள் திட்டத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 60,000 பசு மாடுகள் கொள் முதல் செய்யப்படும். அதில் நடப்பாண்டில் மட்டும் ரூ. 56 கோடியில் 12,000 பசுக்கள் வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு தரப்படும்.
கலப்பின ஜெர்சி பசுக்கள் இத்திட்டத்திற்காக வாங்கப்படும். இந்த மாடுகள், 5 வயதுக்கு உட்பட்டவையாக இருக்கும். இலவச திட்டத்தின் கீழ் மாடுகளைப் பெறும் விவசாயிகள் அதை நான்கு ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. இலவச ஆடுகள் திட்டத்துக்கு என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ அதுவே இந்தத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ரூ 4500 கோடியை அள்ளிய ஹாரி பாட்டர்!!
முதல் ஹாரி பாட்டர் கதை 2001ல் வெளியானது. வசூலில் புதிய சரித்திரம் படைத்தது அந்தப் படம். பத்தாண்டுகளுக்கு முன்பே ரூ 4386 கோடியை குவித்தது அந்தப் படம். அதற்கடுத்து 7 பாகங்கள் வந்துவிட்டன. சிறுவர் முதல் பெரியவர் வரை அத்தனை ரசிகர்களையும் மயக்கி கட்டிப் போட்டது இந்த ஹாரிபாட்டர் என்றால் மிகையல்ல.
சமீபத்தில் இந்த வரிசையில் எட்டாவது படமாக ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ள இந்தப் படம் பரபரப்பாக ஓடி உலகெங்கும் வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.4500 கோடி வசூல் செய்து 'பாக்ஸ் ஆப் கிட்' பட்டியலில் இடம் பெற்றுவிட்டது.
சர்வதேச பாக்ஸ் ஆபீஸில், இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் - 3 என்ற படம் முதலிடம் வகிக்கிறது. இது ரூ.4635 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ஹாரிபாட்டர் ரூ.4,500 கோடி வசூல் செய்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அவதார் இதைவிட அதிகமாக வசூலித்திருந்தாலும், இந்த ஆண்டில் மிக அதிக வசூலைப் பெற்றுள்ளது ஹாரிபாட்டர்.
மிஸ் சின்னத்திரை அழகியாக லீலாவதி தேர்வு!
மிஸ் சின்னத்திரை அழகியாக டிவி நடிகையும் தொகுப்பாளருமான லீலாவதி தேர்வு பெற்றார். மிஸ் சின்னத்திரை என்ற பெயரில் ஆண்டுதோறும் டிவி நடிகைகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்டும் காஸ்மிக் டவுனும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன.
'விவெல் ஆக்டிவ் பேர் சின்னத்திரை விருது 2011' என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான போட்டி சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜூலி, ஸ்ரவாணி, தரிஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தினி, லீலாவதி என 10 சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் பங்கேற்றனர்.
ஆடல், பாடல், கேட் வாக்கிங், அறிவுத்திறன் போட்டி என பல சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் முதலிடம் பிடித்து மிஸ் சின்னத்திரை 2011 ஆக தேர்வு பெற்றார் லீலாவதி. அவருக்கு சென்ன ஆண்டின் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாம் இடத்தை ஸ்ரவாணியும் மூன்றாம் இடத்தை சபர்ணாவும் பெற்றனர். விஜய் ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி கேடிவியில் ஒளிபரப்பாகும்.

எஸ்சிவி மீது புகார்! ரூ 5 கோடி சாதனங்கள் பறிமுதல்!!
சன் டிவி குழுமத்தின் முக்கிய நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலின் நிர்வாகிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகளை துண்டித்ததுடன் ரூ.5 கோடி மதிப்புள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்ததாக மீது கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். கோவை அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் சங்க மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் கோவை மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் மனுவை அளித்தனர்.
எஸ்.சி.வி. நிறுவனத்தினர் கடந்த ஆட்சியின் போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி இணைப்புக்களை துண்டித்ததுடன் 100க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பயன்படுத்திய சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மின்னணு பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் அதை திரும்ப தங்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
எஸ்.சி.வி. நிறுவனத்தின் மேலாளர் நடேசன் தூண்டுதலின் பேரில் கே டிவி நிறுவனத்தை சேர்ந்த குமார், ராஜேந்திரன் மற்றும் சேலம் முருகேஷ், யூனிகான் பாஸ்கர் ஆகியோர்தான் இணைப்புகளை துண்டித்து பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலும் புகார்: இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் மத்திய அமைச்சர் காந்தி செல்வனின் தம்பி அரசு கேபிள் டிவி இணைப்புகளைத் துண்டிப்பதாகவும், அவர் நடத்தி வரும் கேபிள் டிவி இணைப்புகளை மட்டுமே பயன்படுத்த வலியுறுத்துவதாகவும் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

ஆகஸ்டில் 13 படங்கள்...!
இந்த ஆகஸ்ட் மாதம் மட்டுமே 13 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. இவற்றோடு வெளியாகவிருந்த மங்காத்தா, வேலாயுதம் படங்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்த்க குறையைப் போக்கும் விதத்தில், இந்த ஒரு மாதம் மட்டுமே 15 புதிய படங்கள் வெளியாகப் போவதாக கூறப்பட்டது.
இவற்றில் விஜய்யின் வேலாயுதம், அஜீத்தின் மங்காத்தா ஆகிய இரு பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும். மங்காத்தா படம் ஆகஸ்ட் 19-ம் தேதி வரும் என்றார்கள். ஆனால் இன்னும் உறுதியான தகவல் இல்லை. வேலாயுதம் ஆகஸ்ட் 30-ம் தேதி என்கிறார்கள். ஆனால் இந்தப் படங்களின் ஆடியோ கூட இன்னும் வெளியாகவில்லை.
அதே நேரம், ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரதினம் என்பதால் 12-ந்தேதி வெள்ளிக்கிழமைக்கு பின் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினங்களாக வருகின்றன.
எனவே அன்று முடிந்த வரை அதிக படங்களை வெளியிட தயாராகி வருகிறார்கள். மங்காத்தா, வேலாயுதம் தவிர, 13 படங்கள் வெளியாக உள்ளன. ஆகஸ்டு 5-ல் டூ, பட்டா பட்டி, ராமநாதபுரம், அர்ஜூன் நடித்த சிங்க கோட்டை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
ஆகஸ்டு 12-ந்தேதி ஜீவாவின் ரௌத்திரம், சகாக்கள், சங்கரன்கோவில், யுவன் ஆகிய படங்கள் வருகின்றன.ஆகஸ்டு 19-ல் ஏவிஎம்மின் முதல் இடம், ஆர்கேவின் புலிவேஷம், தேனி மாவட்டம் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன. முதல் படத்தில் மைனா வித்தார்த் நாயகனாக நடித்துள்ளார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. புலிவேஷம் படத்தை பி. வாசு இயக்கி உள்ளார். ஆர்.கே., சதா ஜோடியாக நடித்துள்ளனர்.
ஆகஸ்டு 26-ல் வாகை சூடவா, யுவன் யுவதி ஆகிய படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. யுவன் யுவதியில் பரத் நாயகனாக நடித்துள்ளார். புதிய களம், வித்தியாசமான படமாக்கம் போன்றவற்றால் வாகை சூடவா எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து விதி எண் 193 கீழ் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, உண்ணாவிரத நாடகம் போட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்தப் போருக்கு வேண்டிய ஆயுதங்களை இந்தியா தான் தருகிறது என்ற உண்மையை வெளியில் சொல்ல பயந்தார். காரணம், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் கோபித்துக் கொள்வார்கள், கூட்டணியி்ல் சிக்கல் வரும் என்ற பயம்.
இப்போது தேர்தலில் தோற்று, கூட்டணியிலிருந்து திமுகவை கழற்றிவிட காங்கிரசும் தயாராகி வரும் நிலையில், இலங்கையில் நடந்த போர் குறித்தும், அப்பாவித் தமிழர்கள் பலியானது குறித்தும் திடீரென திமுகவுக்கு கவலை வந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் திமுக, அதை திசை திருப்ப மீண்டும் இலங்கைப் பிரச்சனையை கையில் எடுக்க முயல்கிறது.
அந்த வகையில் தான் நேற்று மக்களவைத் தலைவரிடம் டி.ஆர்.பாலு மூலம் நோட்டீஸ் கொடுத்துள்ளது திமுக. மேலும் கச்சத் தீவு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய-இலங்கை எம்.பிக்கள் குழு கூட்டம்-திருச்சி சிவா வெளிநடப்பு: இந் நிலையில் இந்திய-இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழு கூட்டத்தில் இருந்து திமுக எம்பி திருச்சி சிவா வெளிநடப்பு செய்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63ல் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழுவை கெளரவிக்கும் வகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநிலங்களவை எம்பிக்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.
திமுகவின் சார்பில் இக் கூட்டத்தில் திருச்சி சிவா கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியவுடன் சிவா எழுந்து தனது கருத்தை தெரிவிக்க முயன்றார். அவருக்கு அனுமதி மறுத்த அன்சாரி, உங்களுக்கு நேரம் அளிக்கும் போது உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்றார்.
ஆனாலும் அதை நிராகரித்துவிட்டு சிவா பேசுகையில், திங்கள்கிழமை காலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழு மாநிலங்களவைக்கு வந்த போது, அவையின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் அமைதியாக கையை கட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது. ஆனால் இப்போது என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இலங்கை அரசு உள் நாட்டு போர் என்ற பேரில் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தமிழக பெண்கள் கற்பழிக்கப்பட்டும் பல துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முழு பொறுப்பும் இலங்கை அதிபர் ராஜபக்சேதான். இந் நிலையில் தன்னால் இரு நாடுகளுக்கு இடையேயான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழுவில் பங்கு கொள்ள இயலாது என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக கலந்து கொண்ட சுதர்ஷன் நாச்சியப்பன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இலங்கை விவகாரத்தில் இப்போது செய்வதை திமுக முன்பே செய்திருந்தால், எம்.கே.நாராயணன், நிருபமா ராவ், சிவசங்கர் மேனன் ஆகியோர் மத்திய அரசுக்கு உதவுவதற்காக செய்த தவறுகளை தட்டிக் கேட்டிருந்தால், இலங்கையில் அத்தனை உயிர்கள் அநியாயமாய் பலியாகி இருக்க மாட்டார்கள்.
தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தோம்-அதிமுக: மத்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு மக்களவையில் ஆட்சேபத்தை தெரிவித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எம்.பிக்கள் பிரதிபலித்துள்ளதாக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மக்களவை நிகழ்வுகளைக் காண வந்தபோது அவர்களுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை, கெளரவம் அளிக்க வேண்டியது நமது கடமை என்றார்.
கூட்டம் முடிந்தவுடன் தம்பிதுரையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீரா குமார் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் மீரா குமாரைச் சந்தித்தனர். அப்போது, எம்பிக்கள் நடந்துகொண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக மீரா குமார் கூற, அதற்கு தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர் என்று கூறிவிட்டுத் திரும்பி வந்துள்ளார்.
இலங்கை குழுவிடம் மன்னிப்பு கேட்ட மீரா குமார்: இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதற்கு சபாநாயகர் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மக்களவைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகார வர்க்கத்தினருக்கு பத்ம விருதுகள் கிடையாது மத்திய அரசு!
இன்று மக்களவையில் ஏற்பட்ட விவாதத்தின்போது, அரசாங்க அதிகாரிகள், அரசு சார்ந்து இயங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்ம விருதுகளுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியவர்களைப் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவினை அரசு எடுத்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், பத்ம விருதுகள் பெறுவதற்கான தகுதி வரம்பில் அரசு ஊழியராகப் பணிசெய்பவர்கள் வரமாட்டார்கள் என்றார்.
அப்படி அரசு அதிகாரிகள், அரசுக் குழுக்கள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களின் பணிக்கு அங்கீகாரமும் ஊக்கமும் கொடுப்பதாக இருந்தால் அதற்கு, பிரதமரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரிந்துரைப்போம் என்றார். இத்தகைய விருதுகள் 2007 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாநில, மத்திய அரசுப் பணியாளர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர் என்றார் அவர்.

இலங்கை தமிழர்களுக்கு ஓய்வூதியம் ஜெ!
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத்திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறநாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது

ஈழத் தமிழர் பிரச்னையை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி: பழ.நெடுமாறன் !
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர் பிரச்னை எழுப்பப்படும் என்பதால் எதிர்க்கட்சிகளை திசைதிருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபட்சே தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கொழும்பு சென்று ராஜபட்சேவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு அனுப்பப்பட்டுள்ளது. மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சினை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபட்சே குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோமன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன். இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம் பொன். ராதாகிருஷ்ணன்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இனிமேலும் தாக்குதல் நடத்தினால் கச்சத்தீவில் இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக பாஜக தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்களை தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதன் பிறகும் இலங்கை தமிழக மீனவர்களை தாக்கினால் கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பா.ஜ., சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.
நடிகர் சந்தானத்துக்கு எதிர்ப்பு!
வழக்குகளுக்காக அலையும் நடிகர் சந்தானத்திடம், வில்லன் நடிகர் ஒருவர் நான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறுவார். என்ன வழக்கு என்று சந்தானம் கேட்பார். பதிலுக்கு அவர் கொலை வழக்கு என்பார். யாரை கொலை செய்துவிட்டீர்கள் என்று சந்தானம் கேட்க, என் வழக்கில் வாதாடிய வக்கீலைத்தான் என்று அவர் கூறுவார். நடிகர் விக்ரம் - அனுஷ்கா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தெய்வதிருமகள். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக 'நான் லாயர் இல்லீங்க... டீக்கடை நாயர்' என்று கூறி எஸ்கேப் ஆவார். அப்போது வில்லன் நடிகர், கோர்ட் போட்டிருக்கியே என்பார். உடனே சந்தானம் அய்யயோ நான் குளிருக்காக கோர்ட் போட்டிருக்கிறேன் என்று சொல்லி டீ, காபி, டீ, காபி என்று டீக்கடைக்காரரைப்போல் வில்லன் நடிகரிடம் இருந்து தப்பித்து ஓடுவார். இதேபோல் சில காட்சிகளில் அவர் நடித்திருப்பார்.
இந்த காட்சிகள் வழக்கறிர்களை இழிவுப்படுத்துவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்

ரஜினி ரசிகர்கள் 1008 பேர் பழனியில் மொட்டை!
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் திரும்பியதால், மகிழ்ச்சி அடைந்த அவருடைய ரசிகர்க்ள 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தி பழனி சண்முக நதியில் நீராடினர். பின்னர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கோயிலுக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் ஒருவர், எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு !
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு அவர் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
நேற்று அழகிரி டெல்லி சென்றிருக்கும் நிலையில் இன்று காந்தி அழகிரி மீது வழக்கு பாய்ந்துள்ளது. இதையடுத்து காந்திஅழகிரி மீது வழக்கு தொடரப்படுள்ளது. இன்று இரவு 8மணிக்கு காந்தி அழகிரி கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாம் கூறூவதால் மதுரையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!
கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைத்த ஐ.டி. பூங்காக்கள் சிறுவர் பூங்கா அமைப்பதற்குக்கூட லாயக்கற்றவைகளாக உள்ளது என்று ஐ.டி. வளாகங்களை ஆய்வு செய்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் பாண்டிகோயில் அருகே உள்ள இலந்தைக்குளம்,பல்கலைக்கழகம் எதிரே உள்ள வடபழஞ்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகங்களை நேற்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த வளாகத்திலேயே அதிகாரிகளுடன் நடந்து சென்று சுற்றிப்பார்த்தார். அதுபற்றி அதிகாரிகளிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 7 மாவட்டங்களில் 8 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்கள் முழு வடிவம் பெறாமல் விளம்பரத்திற்காகவும் அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்ததைப்போல பெயரளவில் மட்டுமே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக உள்ளது. இந்த வளாகங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை துவங்க முடியாத நிலையில் உள்ளது. மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்கட்டமைப்பு வசதிகளே இன்னும் முடிக்கப்படவில்லை. அந்தநிலையிலேயே இந்த பூங்கா கடந்த தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி.பூஙகாக்கள் சிறுவர் பூங்காக்கள் அமைப்பதற்குக்கூட லாயக்கற்ற நிலையிலேயே உள்ளது.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் ஐ.டி. பூங்காவை மேம்படுத்துவதற்காகவும் இதை சுற்றியுள்ள தி.மு.க. வினரின் நிலங்களை மேம்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எதற்காக இந்த பூங்காக்கள் உருவாக்கப்பட்டது என்பதே யாருக்கும் தெரியவில்லை. பன்னாட்டு தொழில் வணிகத்தை பெருக்க வேண்டிய இந்த பூங்காக்களில் நில ஒதுக்கீட்டை பெற்ற எந்த நிறுவனமும் தங்களது தொழில் நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. இது பொதுமக்களுக்கும் படித்து வேலைக்காக காத்திருக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெயரளவில் மட்டுமே சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒதுக்கீட்டை பெற்று எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்கு கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் நிர்ப்பந்தித்த கமிஷன் தொகையே காரணம். கத்தரிக்காய் வியாபாரம் முதல் பெரிய கடை வியாபாரம் வரை தொடங்குபவர்கள் மு.க. அழகிரிக்கு கப்பம் கட்ட வேண்டிய சூழ்நிலை கடந்த ஆட்சியில் இருந்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்பட்டன. இதனால் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஏதோ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாகக்கூறி கடந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்து இளைய சமுதாயத்தினரை முட்டாளாக்கி உள்ளனர்.
எனவே இதுபற்றியெல்லாம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் இந்த பூங்காக்கள் மேம்படுத்தப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஐ.டி. வளாகங்களில் தங்களது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இளைய சமுதாயத்தினர்களுக்கு பயன்படும் வகையில் ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உலக அளவில் முன்னேறி வரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு புரட்சியை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி அளிக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இளைய சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மிக விரைவில் சீர்படுத்தப்பட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் துரித முனைப்போடு செயல்படுத்தப்பட்டு உண்மையான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக செயல்படுத்தப்படும். அதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கும் சிறப்பு சேவை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் சாதாரண பக்தர்களும் சிறப்புசேவை தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் வாய்ப்பு பெறும் அதிர்ஷ்டசாலிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மின்னணு சீட்டு மூலம் தேர்வு செய்கிறது. திருப்பதி திருமலையில் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்வதற்கான தோமாலை சேவை, அர்ச்சனை சேவை, வஸ்த்திர அலங்கார சேவை, சிறப்பு அபிஷேகம் போன்றவை முன்பெல்லாம் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கிடைத்து வந்தது. இப்போது சாதாரண பக்தர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ஜித சேவைகளுக்கு அனுமதி கோரும் பக்தர்கள் திருமலையில் மத்திய தகவல் தொடர்பு நிலையத்தில் வாளகத்தில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை அனுமதிக்கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பபடிவத்தில் தனிப்பட்ட தம்பதியரா என்ற விவரத்தை பதிவு செய்யவேண்டும். இவ்வாறு பதிவு செய்து கொள்ளும் பக்தர்கள் அவர்கள் மூலமாகவே பொத்தானை அழுத்தவிட்டு மின்னணு சீட்டு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த 5 நிமிடத்திற்குள் மின்னணு சீட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் பெயர்கள் மின்னணு திரையில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு அடுத்த 15 நிமிடங்களில் பக்தர்கள் அனுமதி சீட்டுக்களை அதற்குரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வஸ்திர அலங்கார சேவைக்கு ரூ.5,000, அபிஷேகத்திற்கு ரூ.2,500 ,தோமாலை சேவை, அர்ச்சனை சேவை ஒன்றுக்கு தலா ரூ440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிர்ஷட குலுக்கல் மூலம் ஏழுமலையான் சேவைக்கு அனுமதி கிடைத்த போதிலும் அடையாள அட்டை இல்லாதவர்கள் மின்னணு சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படமாட்டாகள். ஆதனால் பக்தர்கள் அவசியம் புகைப்படம் வைத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் ஆர்ஜித சேவைக்கான அனுமதி சீட்டுக்கள் தோமாலை சேவையில் 142 டிக்கெட்டுகளும், அர்ச்சனை சேவையில் 95 டிக்கெட்களும், வஸ்திர அலங்கார சேவைக்கு 10 டிக்கெட்டுகளும் அபிஷேகத்திற்கு 9 டிக்கெட்டுகளும் உள்ளன
சர்வர் வேலைக்கு கூட நான் தகுதியில்லை பாக்கியராஜ்! YUVAN AUDIO LAUNCH!!N
ஹோட்டலில் சர்வர் வேலைக்குகூட நான் தகுதியில்லை என்பதை புரிந்துக்கொண்டேன் என்று நடிகர் பாக்கியராஜ் கூறினார். நேற்று சென்னையில் யுவன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைப்பெற்றது. நடிகர் பாக்கியராஜ் வெளியிட இயக்குநர் பிரபு சாலேமன் பெற்றுக்கொண்டார். படஅதிபர் தனசெயன், நடிகர் ராகுல், பிரம்பிலா ஜெகதீஷ் மற்றும் படத்தின் கதாநாயகன், இசைமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடல் ஆசிரியர் விவேகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பரதநாட்டியமும், மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. விழாவில் நடிகர் பாக்கியராஜ் பேசும்போது, இங்கு இளைஞர்களுக்கு பாடம் செல்லும் ஒருபடமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் சரவணன் என்னிடம் உதவியாளராக பணிபுரிந்தார் என்பதைவிட அவர் ஆரம்பத்தில் எனது அலுவலகத்தில் டீ, காப்பிதான் கொடுத்தார். ஆரம்பத்தில் படவாய்ப்பு தேடி வரும்போது ஐதாராபாத் சென்றேன். அங்கு சுற்றிவிட்டு விஜயவாடா வந்தபோது பசி மயக்கத்தில் இருந்தேன். அப்போது ஒரு ஹோட்டலில் வேலைகேட்டு சென்றேன். அந்த முதலாளி சாப்பாடு போட்டு, பணமும் கொடுத்து, ஊர் போய் சேறு, சர்வர் வேலையில் உன்னால் சரியாக பணிபுரிய முடியாது. அதற்கு ஞாபகம் அதிக வேண்டும். ஒரு பில்லை ஒருவரிடம் மாற்றி கொடுத்துவிட்டாலோ, அல்லது கேட்ட உணவை தராவிட்டாலும் மரியாதையில்லாமல் திட்டுவார்கள். அதனால் ஊருக்குபோய் வேறு வேலைபார் என்றார். எந்த வேலை பார்ப்பது என்பது முக்கியமல்ல, அந்த வேலைக்கு நாம் தகுதியானவரா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் ஜெயிக்கமுடியும். இயக்குநராக ஆவதற்கு சரவணக்கு தகுதி உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கைக்கு பொருளாதார தடை: இ.கம்யூனிஸ்டு!
தற்போது திட்டக்குழு புதுவை மாநிலத்திற்கு, இந்த நிதி ஆண்டிற்கு ரூ.2750 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். இது ஏற்புடையது அல்ல. அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ரூ.4 ஆயிரத்து 440 கோடி புதுவை அரசுக்கு கடன் தொகையாக உள்ளது. இதை தள்ளுபடி செய்ய முதல்வர் பிரதமருக்கு கடிதம் கொடுத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து கட்சியினரையும் கூட்டி மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.எங்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் டி.ராஜா எம்.பி. பங்கேற்றார். புதுவை அரசியல் நிலை, கட்டி மாநாடு நடத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
புதுவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ரெயில்வே திட்டங்கள் பல முடக்கப்பட்டு நிற்கிறது. இவைகளை தீர்க்க முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்த எம்.எல்.ஏ.க்களை கூட்டி விவாதிக்க வேண்டும். பஞ்சாலைகளை நவீனப்படுத்தி லாபத்தில் இயக்க முயற்சி எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையரை உடனடியாக நியமித்து தேர்தலை நடத்த முன்வர வேண்டும். அதில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
விளை நிலங்களை காக்க சட்டம் கொண்டு வர வேண்டும். சமச்சீர் கல்வி பற்றி தெளிவு படுத்த வேண்டும். புதுவைக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும். குற்ற நிகழ்ச்சிகள் புதுவையில் பெருகி வருகிறது. எனவே சட்டம் ஒழுங்கை சீரமைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 20--வது மாநில மாநாட்டை வருகிற ஜனவரி மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் புதுவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் நாரா.கலைநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தைப் போல புதுவை சட்டசபையிலும் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்கள், வெளிமாநிலத்தில் இருந்து குடியேறிய தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்கள் நலன் காக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
புதுவையில் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. 2002-ம் ஆண்டு நகர் புறத்ததை அழகு படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை ஆட்சியாளர்களே மீறி நடந்து கொள்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி முன் உதாரணமாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில மோசடியில் நடிகர் வடிவேல்!
இது பற்றி வபரம் வருமாறு:- சென்னை அஷோக்நகரில் வசிப்பவர் பழனியப்பன் (60). இவர் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் துணை பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் அமைந்துள்ள 34 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். 2006-ம் ஆண்டு கடன் முடிக்கப்பட்டு பழனியப்பன் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலமோசடி விவகாரத்தில் நடிகர் வடிவேலு சிக்குகிறார். ரூ.2 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளதாகவும், இது பற்றி நியாயம் கேட்ட தன்னை மிரட்டியதாகவும், நடிகர் வடிவேலு மீது முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் புறநகர் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது பற்றி விசாரித்தபோது மேற்படி இடத்தை போலியாக வடிவேலு தனது பெயருக்கு பவர் மாற்றியுள்ளதும் பின்பு அதே இடத்தை தனது மனைவிக்கு தானமாக வழங்கியதாக பத்திரப்பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் வடிவேலுவின் மனைவி தனது மகன் சுப்ரமணி பெயரில் மாற்றியுள்ளனர். இந்த இடம் ஓம் சக்தி கார்மெண்ட் என்ற நிறுவனம் ஏற்கனவே வாங்கி கடனை கட்ட முடியாததால் மீண்டும் தொழில் முதலீட்டு நிறுவனம் அந்த இடத்தை கையகப்படுத்தி ஏலம் விட்டுள்ளது. ஆனால் ஏலம் எடுத்த இடத்தை உரிமையாளர் பழனியப்பன் சென்று பார்த்தபோது அந்த இடத்தை சுற்றி சிலர் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர். இது பற்றி கேட்டபோது இடத்தை வடிவேலு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது பற்றி கடந்த 2009-ம் ஆண்டு புறநகர் ஆணையர் ஜாங்கிட்டிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது முதல்வர் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதால் தனக்கு நம்பிக்கை வந்து புகார் அளித்தாக பழனியப்பன் தெரிவித்தார். 2009-ம் ஆண்டு இடத்தை சுற்றிலும் வடிவேலு தரப்பினர் காம்பவுண்ட் சுவர் எழுப்பி உள்ளனர். இது பற்றி பழனியப்பன் கேட்டபோது வடிவேலுவின் மேனேஜர் மற்றும் அடியாட்கள் அவரை மிரட்டி உள்ளனர். உன்னால் ஆனதை பார் என்று விரட்டி அடித்துள்ளனர். வடிவேலு ஆக்கிரமித்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
Subscribe to:
Posts (Atom)