தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத்திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறநாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment