சன் டிவி குழுமத்தின் முக்கிய நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலின் நிர்வாகிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகளை துண்டித்ததுடன் ரூ.5 கோடி மதிப்புள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்ததாக மீது கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். கோவை அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் சங்க மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் கோவை மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் மனுவை அளித்தனர்.
எஸ்.சி.வி. நிறுவனத்தினர் கடந்த ஆட்சியின் போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி இணைப்புக்களை துண்டித்ததுடன் 100க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பயன்படுத்திய சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மின்னணு பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் அதை திரும்ப தங்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
எஸ்.சி.வி. நிறுவனத்தின் மேலாளர் நடேசன் தூண்டுதலின் பேரில் கே டிவி நிறுவனத்தை சேர்ந்த குமார், ராஜேந்திரன் மற்றும் சேலம் முருகேஷ், யூனிகான் பாஸ்கர் ஆகியோர்தான் இணைப்புகளை துண்டித்து பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்திலும் புகார்: இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் மத்திய அமைச்சர் காந்தி செல்வனின் தம்பி அரசு கேபிள் டிவி இணைப்புகளைத் துண்டிப்பதாகவும், அவர் நடத்தி வரும் கேபிள் டிவி இணைப்புகளை மட்டுமே பயன்படுத்த வலியுறுத்துவதாகவும் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment