|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2011

ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்: திமுக தேர்தல் அறிக்கை

ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்: திமுக தேர்தல் அறிக்கை

 இதுவரை  ஒண்றும் செய்யாத  திமுக அரசு ஓட்டுக்காக நீலிக் கண்ணீர்!    

முத்துக்கு முத்தாக..திரை விமர்சனம்


இளவரசு, சரண்யா, இவர்களுக்கு ஐந்து ஆம்புளைப் புள்ளைக, அல்லாரும் ஒண்ணு மண்ணா ஒருத்தருக்கு ஒருத்தர் வுட்டுக் கொடுக்காம பயபுள்ளைக பாசத்தில விளையாடுதுங்க, குளிக்குதுங்க, ததும்பி வழியுதுங்க. இப்படி பட்ட நேரத்தில ஒவ்வொரு புள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து வைக்க, அதது தனிக்குடித்தனம் போவுதுங்க. தனிதனித் குடும்பம்னு ஆனப்புறம்

மருமகளுங்க சுயநலமியா மாற ஆரம்பிச்சிடுறாங்க. பொறவு என்னங்கிறதை மனசை உருக்குற மாரி ஒரு க்ளைமாக்ஸுல சொல்லியிருக்காங்க
சரண்யா,இளவரசும் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலம். மூத்த பையன் நட்ராஜ் தன் மனைவியிடம் கையாலாகாமல் நிற்கும் காட்சியிலும், அவளுடன் சண்டை போடும் காட்சியில் பேசும் வசனம் அருமை. அடுத்த ஜென்மத்திலேயாவது நீ ஆம்பளை பொறக்கணும்டி.. அப்பத்தான் ஒரு ஆம்பளையோட வலி தெரியும்ங்கிற வசனத்துக்கு தியேட்டரில் கிடைக்கும் கைத்தட்டலே சாட்சி.

நிச்சயம் முப்பது வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுக்கு தங்களைப் பற்றி எண்ணங்களை அசைப் போட இந்த படம் ஏதுவாக இருக்கும்.  வழக்கமாய் இம்மாதிரி படங்களை டிவி சீரியல்கள் தான் குத்தகைக்கு எடுத்திருந்தது. இப்போதெல்லாம் அவர்கள் ஒரு ஹீரோயினுக்கு மூன்று புருஷன், ரெண்டு கள்ளக் காதலன், இன்னொருத்தன் பொண்டாட்டிய தன் புருஷனுக்கு கூட்டிக் கொடுக்கிறது போன்ற குடும்ப கதைகளில் போய்விட்டதால். இதை டிவி சீரியல் என்றும் சொல்ல முடியவில்லை.  

நன்றி; கேபிள் சங்கர்

ஆப்பிளின் ஐபோன் 4-ஐ மிஞ்சிவிட்டது கூகுளின் ஆண்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன்

செல்போன் உலகில் மிக உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்து வருகிறது ஆப்பிளின் ஐ போன் 4 மாடல். ஆனால் இந்த செல்போனை விட சிறந்ததாக கூகுளின் ஆன்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது.

இதுகுறித்து கனடாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான பிளேஸ் சாப்ட் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் ஐபோனை விட, ஆன்ட்ராய்ட் போன் இன்டர்நெட் செயல்பாட்டில் அதிக வேகம் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஐபோனை விட ஆன்ட்ராய்ட் போன் 84 சதவீதம் அதிக வேகமாக இன்டர்நெட் பக்கங்களைத் திறப்பதாக ப்ளேஸ் தெரிவித்துள்ளது.



வயர்லெஸ் நெட்வொர்க்கில் ஆப்பிள் போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

வேகமான இன்டர்நெட் செயல்பாடு குறித்து ஆப்பிள் கவலைப்படவில்லை. ஆனால் கூகுள் அந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என மேலும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல, இணையதள இயங்கிகளில், ஆப்பிளின் சபாரியைவிட, கூகுள் க்ரோம் பல மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய்க்கு குஷ்பு எச்சரிக்கை!!


அரசியலுக்கு வந்தால் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, நடிகை குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை மட்டுமே விடுப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ... இந்த தேர்தலுக்கு பிறகு விஜய் தனிக்கட்சி தொடங்கி, முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான், என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் 14வது பட்டமளிப்பு விழா,

பல்கலை நூற்றாண்டு கலையரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில், பி.வி. எஸ்சி., - பி.டெக்., ( எப்.பி.டி.,) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 461 பேருக்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்லையில், பி.வி.எஸ்சி., பட்டம்பெற்ற அனுஷா பாலகிருஷ்ணனுக்கு, பாடவாரியாக சிறந்து விளங்கியதற்காக 29 தங்கப் பதக்கங்களையும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.வி.எஸ்சி., பயின்ற ரேவதிக்கு, 11 தங்கப் பதக்கங்களையும், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்கினார்.

சேது சமுத்திரம் திட்டம் சாப்பிட்டாச்சு அடுத்து ?


தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
‌தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையி்ல், கல்வியை மாநில பட்டிய‌லில் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தும், தமிழகத்தில் மேல் முறையீட்டு மையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், நுழைவு தேர்வு கூடாது என்பதை தி.மு.க., வலியுறுத்தும், நதிகளை தேசியமயமாக்கவும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழில் எழுத அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருக்குறளை தேசய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறத்துவோம், ஈழத்தமிழர் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். கரும்பு பருத்தி, காய்கறி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்போம். நகர்புறங்களில் நுகர்வோம் யைம் அமைக்க நடவடிககை எடுக்கப்படும். சிறப்பாக இயங்கும் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, பணப்பயிர் போன்றவற்றிற்க்கும் விரிவு படுத்துவோம். விவசாய நிலங்‌களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம், சொட்டு நீர் இல்லா விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.       

ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதி,ஒரு ராஜ்யசபா சீட்

நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என்றும் இது தொடர்பாக ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதித்து வருகின்றனர்.மாலையில் மாவட்ட செயலர்களுடன் வைகோ கலந்து பேசுகிறார். எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து முக்கிய முடிவுகள் செய்யப்படும் கூட்டமாக இது இருக்கும்.

இதற்கிடையில் அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர். இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர்.

புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் காலிறுதிக்குள் நுழைகிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 206 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிகா அணி அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 39வது லீக் ஆட்டம் வங்காள தேசத்தில் உள்ள மிர்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் சுமித் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அவரும், ஹசிம் அம்லாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்காள தேச அணி 28 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்கள் எடுத்து. இதனால் 206 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது


இந்த படு தோல்வியின் மூ்லம் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது வங்கதேசம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...